ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – ஓரி
வார்த்தை : ஓரி
பொருள்
- கிழநரி
- ஆண்நரி
- ஆண்முசு
- ஆண் விலங்குகள் (பொதுவாக)
- ஆண்மயிர்
- புறமயிர்
- காளிவாகனம்
- கொல்லிமலையை ஆண்ட கொடைவள்ளல்களில் ஒருவரான ஓரி என்ற மன்னன்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
முதுவாய் ஓரி கதற முதுகாட்
டெரிகொண் டாடல் முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவீ சூடும்
மலையான் மகள்தன் மணவாளா
கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்
கண்டால் அடியார் கவலாரே
அதுவே யாமா றிதுவோ கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.
தேவாரம் – 7ம் திருமுறை – சுந்தரர்
கருத்து உரை
பெரிய வாயை உடைய நரிகள் ஊளையிடும் இடத்திற்கு அருகினில் புறங் காட்டில் தீயை ஏந்தி ஆடுதலைச் செய்பவனே, கொன்றை பூவினில் இருந்து தேன் ஒழுகுகின்ற புதிய பூவைச் சூடுகின்ற மலையான் மகள் மணவாளனே, திருக்கச்சூரில் உள்ள ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, நீ சென்று முரிந்த வாயையுடைய ஓட்டில் பிச்சை ஏற்றலைக் கண்டால் உன் அடியவர் கவலைகொள்ளாரோ?