ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – நொந்துதல்
வார்த்தை : நொந்துதல்
பொருள்
- அழிதல்
- தூண்டுதல்.
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை *நொந்தக்கால்*
எய்த வருமோ இருநிதியம்-வையத்து
அறும்பாவம் என்னவறிந்து அன்றிடார்க் கின்று
வெறும்பானை பொங்குமோ மேல்
நல்வழி – ஒளவையார் (தீவினையே வறுமைக்கு வித்து)
கருத்து உரை
வெறும் பானையை (அடுப்பிலே வைத்து எரித்தால்) மேலே பொங்குமோ; (பொங்காது.) அது போல பூமியிலே (அறஞ்செய்தலினாலே) பாவம் நீங்கும் என்று உணர்ந்து, அக்காலத்திலே அறம் செய்யாதவருக்கு , செய்த அப்பாவம் (வறுமைக்கு வித்தாய்) இருக்கும் ; இப்பொழுது கடவுளை வெறுத்தால், பெரிய திரவியம் பொருந்த வருமோ? (வராது.)
விளக்கம்
வறியவர் அவ்வறுமைக்கு வித்தாகிய தீவினையைச் செய்த தம்மை நோவாது, தெய்வத்தை நோதலிற் பயன் இல்லை