ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – துளைக்கை
வார்த்தை : துளைக்கை
பொருள்
- தும்பிக்கை
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
துளைக்கை வேழத்து உரி உடல் போர்த்தவர்;
வளைக்கை யாளை ஓர்பாகம் மகிழ்வு எய்தி
திளைக்கும் திங்கள் சடையின்திசைமுழுது
அளக்கும் சிந்தையர் போலும்-ஆரூரரே.
தேவாரம் – 5 ம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து உரை
திருவாரூர்ப் பெருமான், துதிக்கை உடைய யானையின் தோலை உரித்தப் ஆடையாக அணிந்து கொண்டவர். வளையணிந்த கைகளை உடைய உமையம்மையை ஒருபாகமாக மகிழ்ந்து ஏற்றுக் கொண்டவர். அவர் தமது பிறை பொருந்திய சடையினால், எட்டுத் திசைகளையும் அளந்தறியும் சிந்தை உடையவர் போலும்.
விளக்கம்
எட்டுத் திசைகளையும் அளந்தறியும் சிந்தை உடையவர் – விச்சுவரூபி