ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – கொழுவு
வார்த்தை : கொழுவு
பொருள்
- கோபப்படல்
- மாட்டி வைத்தல்
- இணைத்து வைத்தல்
- சண்டை பிடித்தல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
அழகிய உடல்மேல் சாம்பலைப் பூசி
அருவருப் பாக்கலும், மகளிர்
கொழுவிய குழலை மொட்டையாய் மழித்துக்
குரங்கெனத் தோன்றலும், அறியா
மழலையர் கையிலுட் காவடி கொடுத்து
மலையின் மேல் ஏற்றலும், இவைதாம்
வழிபடு முறையோ? இதுகொலோ சமயம்?
மடமைகண் டிரங்குமென் நெஞ்சே.
தடங்கண் சித்தர்
கருத்து உரை
அழகிய உடல் மேல் சாம்பலைப் பூசி அருவறுக்கத்தக்க வகையினில் உடலினை ஆக்கிக் கொள்வார்கள்; மகளிருக்கு என தலையுடன் இணைந்து இருக்கும் முடியினை நீக்கி மொட்டையாக மழித்து அவர்களை குரங்கு போன்ற தோற்றத்தை உண்டாக்கியும்; என்ன என்று அறியாத சிறுவர்கள் கையில் காவடி கொடுத்தும் அவர்களை மலை எறச்செய்தும் இவ்வாறான செய்கைகள் உடையது தான் வழிபாட்டு முறையா? இதற்கான நேரமா இது? இவ்வாறான மூடத்தனங்களை கண்டு அவர்களுக்குக்காக இறங்குவாய் என் மட நெஞ்சே!
விளக்கம்
புற வழிபாட்டு முறைகளை நீக்க வலியுறுத்துல் பொருட்டு