ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – கமை
வார்த்தை : கமை
பொருள்
- பொறுமை.
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
இமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறு
சமயங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி
யமையறிந் தோமென்ப ராதிப் பிரானுங்
கமையறிந் தாருட் கலந்துநின் றானே
திருமூலர் – திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம்
கருத்து உரை
(தனது வைராக்கியத்தினால்) இமையமலைபோன்று அசைவற நின்ற தேவர்கள் அவர்கள் நிலைமைக்கேற்றவாறு ஆறு சமயங்கள் பெற்றனர். அவற்றிற்குரிய சாத்திரங்களாகிய பொருள் நூல்களை ஓதி, அடையக் கூடியதாக அமைந்த நிலையினை அறிந்தோம் என்பர். ஆதிப்பிரானாகிய சிவபெருமானும் பிழைபொறுக்கும் தன்மை உடையவராகி பொறுமையுடன் அவ்வாறு ஒழுகுவாருடன் கலந்து நின்று அருள் செய்வான்.
விளக்க உரை
‘அடையக் கூடியதாக அமைந்த நிலையினை அறிந்தோம்’ என்பது ஆணவ மாயையினை குறிக்கும். இவ்வாறு குற்றம் இருப்பினும் பிழைபொறுக்கும் தன்மை உடையவன் ஈசன்