ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – வௌவுதல்
வார்த்தை : வௌவுதல்
பொருள்
- கைப்பற்றுதல்
- திருடுதல்
- கவர்தல்
- பேய்முதலியனபற்றிக்கொள்ளுதல்
- மேற்கொள்ளுதல்.
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
நன்றிப் பயன் தூக்கி வாழ்தல் நனி இனிதே;
மன்றக் கொடும்பாடு உரையாத மாண்பு இனிதே;
‘அன்று அறிவார் யார்?’ என்று அடைக்கலம் *வெளவாத*
நன்றியின், நன்கு இனியது இல்.
இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்
கருத்து உரை
ஒருவர் செய்த உதவியினை நினைத்து வாழ்தல் மிக இனிது. நீதி சபையில் நடுநிலை தவறாமல் இருத்தலின் பெருமை இனிது. யாருக்கும் தெரியாது என்று அடைக்கலமாய் வந்த பொருளை அபகரிக்காமல் இருத்தல் இனிதின் இனிது.