ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – அடும்பு
வார்த்தை : அடும்பு
பொருள்
- அடும்பு அல்லது அடம்பு – ஒருவகையான படரும் கொடி
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
நெடுங்காலம் வந்தார் நெறியின்மை கண்டு
நடுங்கிப் பெரிதும் நலிவார் பெரியர்
அடும்பார் அணிகானற் சேர்ப்ப கெடுமே
கொடும்பாடு உடையான் குடி.
பழமொழி நானூறு
கருத்து உரை
அடும்பின் மென்கொடிகள் நிறைந்து அழகு செய்கின்ற சோலைகள் சூழ்ந்த கடல் நாடனே! நெடுங்காலமாகவே தம்மோடுதொடர்பு கொண்டுவந்தவர்கள், தீயதன்மையிலே இருப்பக் கண்டு, பெரியோர்கள் தம் உள்ளம் நடுக்கமுற்றுப் பெரிதும் வருந்துவார்கள். அவர்கள் வருந்தியதும் கொடுஞ்செயலை உடைய அவனுடைய குடும்பமே அழிந்து போகும்.
விளக்க உரை
- சான்றோர்களின் மனம் வருந்துமாறு செய்வது ஒருவனுடைய குடும்பத்தை வேருடன் அழித்துவிடும் என்பது கருத்து
- கெடுமே கொடும்பாடு உடையான் குடி என்பது பழமொழி.