![]()
மகேசுவரமூர்த்தங்கள் 2/25 நடராஜர்
வடிவம்
கேசாதி பாதமாக
முகம் – சாந்த சொருபம்
கூந்தல் அருகினில் நாகம் – கால சக்கரம்
கங்கை – அருளுதலை முடிவறச் செய்பவன்.
பிறைச் சந்திரன் – தீங்கு இழைத்தவர்களையும் மன்னித்து அருளுதல்
வலப்புற மேற்கை – டக்கா என்ற உடுக்கை(ப்ரணவ நாதம் தோற்றம்) – படைத்தல்
இடப்புற மேற்கை – தீச்சுவாலை – அழித்தல்
வலப்புற கீழ்க்கை – அபய முத்திரை – காத்தல்
இடப்புற கீழ்க்கை – தும்பிக்கை நிலை (கஜ ஹஸ்தம்) – மறைத்தல்
சில இடங்களில் கைகளில் மான் – மனம் நிலையற்று இறைவனிடத்தில் மட்டும் ஒடுங்குதலைக் குறிக்கும்.
ஊற்றிய வலது கால் – த்ரோதண சக்தி – உயர் ஞானத் தேடல்
வலது கால் கீழ் – அபஸ்மாரன் அசுரன்(முயலகன் என்றும் கூறுவாரும் உண்டு) – முற்றுப்பெறா காமம்
தூக்கிய இடது கால் – ஆணவம் மற்றும் மாயை
குண்டலி சக்தி என்று குறிப்பிடப்படுவதும் உண்டு.
புலித்தோல் – இயற்கையை அணிதல்
நெருப்பு வட்டம் – ப்ரபஞ்ச நடனம்
நெருப்பு வட்டம் ஒவ்வொன்றும் மூன்று சிறு ஜ்வாலைகள் கொண்டது. அவை முறையே தோற்றம், இருப்பு மற்றும் முடிவு.
நெருப்பு வட்டத்திற்கும் எண்ணிக்கை உண்டு.
உடுக்கை ஒலி முனிவர்களுக்கு ஏற்றவாறு
பரதமுனி – நாட்டியம்
நாரதமுனி – சங்கீதம்
பாணினிமுனி – வியாகரணம்
பதஞ்சலிமுனி – யோகம்
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
திருவாலங்காடு – ரத்தின சபை –கால் மாற்றி நடனம்
சிதம்பரம் – கனகசபை
மதுரை – ரஜிதசபை (வெள்ளி சபை) – கால் மாற்றி நடனம்(பாண்டிய மன்னன் வேண்டுகோளுக்கு இணங்கி)
திருநெல்வேலி – தாமிரசபை – திருநெல்வேலி
சித்திரசபை – திருக்குற்றாலம்
திரு உத்திரகோச மங்கை – மரகதத்திருமேனி
ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் விளாகம் – ஒரே கல்லில் செய்யப்பட்ட நடராஜர்
பேரூர் பட்டீஸ்வரர்
தஞ்சை பெரிய கோவில்
மற்றும் எல்லா சிவாலயங்கள் ((பட்டியல் முடிவற்றதாகிறது)
சிறப்புகள்
கூத்தன் – கூத்துக்களை செய்பவன்
அம்பல வாணன் – அம்பலத்தில் ஆடுபவன்
நட ராஜன் – ஆடல் கலையில் அரசன்
சபேசன் – சபைகளில் ஆடுபவன்.(5 சபைகள் )
இதரக் குறிப்புகள்
அருணகிரி நாதருக்கு திருச்செந்தூரில் காட்சி
ஒன்றி இருந்து நினைமின்கள்! உம் தமக்கு ஊனம் இல்லை;
கன்றிய காலனைக் காலால் கடிந்தான், அடியவற்கா;
சென்று தொழுமின்கள், தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்!-
“என்று வந்தாய்?” என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே.
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!
Image : Internet
உதவி : சைவ சித்தாந்தம் மற்றும் வலைத் தளங்கள்
![]()
இற(ர)த்தல்
மகேசுவரமூர்த்தங்கள் 1/25 சோமாஸ்கந்தர்
வடிவம்
இறைவனான சிவனுக்கும், இறைவியாகிய பார்வதிக்கும் இடையே முருகப் பெருமான் வீற்றிருக்கும் திருக்கோலத்தை குறிப்பிடுவதே இது
அடர்ந்த திருக்கோலம். இடது கால் மடித்து, வலது கால் தொங்கவிட்டு.
நான்கு திருக்கரங்கள் –
பின் இரு திருக்கரங்களில் மான், மழு.
முன் இரு திருக்கரங்களில் அபய முத்திரை, வரத முத்திரை
அம்பிகை – எதிர் மறை கால் மடித்து
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
- திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில்
- காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்
- குமரக்கோட்டம்
- காமாட்சியம்மன் கோயில்
- தென்காசி காசி விஸ்வநாதர் கோயில்
- திருக்கேதீஸ்வரம் – இலங்கை
- திருக்கருகாவூர்
- திருக்கள்ளில்
சிறப்புகள்
இல்லற வாழ்வினையும் அதன் சிறப்புகளையும் மக்கட்பேறு முதலியவற்றை குறிக்கும்.
இதரக் குறிப்புகள்
சிறு தொண்டருக்கு இவ்வடிவ காட்சி
1.
“ஏவலார் குழல் இறைவிக்கும் எம்பிரான் தனக்கும்
பாலன் ஆகிய குமரவேள் நடுவுறும் பான்மை
ஞால மேலுறும் இரவோடு பகலுக்கும் நடுவே
மாலை யானதொன்று அழிவின்றி வைகுமாறதொக்கும்“
– கந்தபுராணம்
2.
“தம்மேனி வெண்பொடியால் தண்ணளியால் ஆரூரர்
செம்மேனி கங்கைத் திருநதியே – அம்மேனி
மானே யமுனை; அந்த வாணி நதியும் குமரன்
தானே குடைவேம் தனித்து“
திருவாரூர் நான்மணிமாலை – குமர குருபர சுவாமிகள்
Image : Internet
![]()
பூக்கள் முளைத்த பாதைகள்
மாலைச் சூரியன்
செந் நெருப்பாகிக்
கொண்டிருக்கிறது.
முடிவற்ற ஒரு பயணத்திற்கான
தொடக்கத்தில் நீயும் நானும்.
உனக்கான மௌனத்தில் நீயும்
எனக்கான மௌனத்தில் நீயும்.
வார்த்தைகளை உடைத்து
கடைசியான ஒரு கவிதை கேட்கிறாய்.
‘அஸ்தமனத்திற்கான பின் விடியல் ஏது‘ என்கிறேன்.
உடைப்பட்ட வார்தைகளில் வலி
உன் கண்களில்.
என்றோ ஒரு நாளின்பயணத்தில்
உனக்கான சூரிய அஸ்தமனம்தெரியலாம்.
எனக்கான சூரிய அஸ்தமனம்தெரியலாம்.
அந்த நாளில் நம் இருவருக்கும்
மௌனம் பொதுவாக இருக்கலாம்
அழகிய கனவுகளையும்
சலனம் கொண்ட நிஜங்களையும்
தனித்தனியே சுமந்து
புகைப்படம் & Model : Stri
![]()
மகேசுவரமூர்த்தங்கள் – முன்னுரை
சிவன் என்ற சொல் சிவந்தவன் என்ற பொருளில் ஆளப்படுகிறது. ஆதி சித்தன், ஆதி தேவன், ஆதி நாதன், ஊழி முதல்வன் என்று எந்தப் பெயர் இட்டு அழைத்தாலும் அது முழுவதும் சிவன் பெயரே ஆகும்.
சிவன் பெரும்பாலும் அழித்தல் தொழிலுக்கு உரியவன் என்று கூறப்படுகிறது. அது நிச்சம்தான். ஊழ் வினைகளை அழிப்பவன்.
ருத்ரன், மகாதேவன் சதாசிவம் என்று பல பெயர்களில் அழைத்தாலும் அது வேறு வேறு வடிவங்களையே குறிக்கிறது.
சிவனுக்கான தொழில்கள் 5.
ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் அருளுதல்.
சிவபெருமானின் இருபத்து ஐந்து சிவமூர்த்தங்கள் மகேசுவரமூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
சிவனுக்கான வடிவங்களும் பெயர்களும் எண்ணிக்கையில் வேறுபட்டாலும் சைவ சித்தாந்தக் கருத்துப்படி 25 ஆகும்.
அவையாவன (தருமை ஆதீனம் – சைவ சித்தாந்தப்படி)
- சோமாஸ்கந்தர்
- நடராஜர்
- ரிஷபாரூடர்
- கல்யாணசுந்தரர்
- சந்திரசேகரர்
- பிட்சாடனர்
- லிங்கோற்பவர்
- சுகாசனர்
- சக்திதரமூர்த்தி
- அர்த்தநாரீஸ்வரர்
- சக்ரவரதர்
- திரிமூர்த்தி
- ஹரிஹர்த்தர்
- தட்சிணாமூர்த்தி
- கங்காளர்
- காமாரி
- காலசம்ஹார மூர்த்தி
- சலந்தாரி
- திரிபுராரி
- சரபமூர்த்தி
- நீலகண்டர்
- திரிபாதர்
- ஏகபாதர்
- பைரவர்
- கங்காதர மூர்த்தி
ஒவ்வொரு கட்டுரையிலும் இறைவனின் வடிவங்கள் அதற்குரிய ஊர் , சிறப்புகள் போன்ற விஷயங்களை எழுத உள்ளேன்.
‘அவன் அருளாளே அவன் தாள் வணங்கி’ என்பதற்கு ஏற்ப அவன் துணை கொண்டு அவன் பற்றிய வடிவங்களை அவனே அருளட்டும்.
![]()
சைவத் திருத்தலங்கள் 274 – திருப்பாச்சூர்
- சிவன் சுயம்பு மூர்த்தி – சதுர வடிவ பீடம்
- மூலவர் – தீண்டா திருமேனி
- அர்த்த மண்டபத்தில் ஸ்ரீசக்கரம் – ஆதிசங்கரர் பிரதிஷ்டை
- மூங்கில் வனத்தில் தோன்றியதால் பாசுரநாதர். பாசுர் – மூங்கில்
- விஷ்ணு துர்க்கை மகிஷாசூரன் இல்லாமல்
- தாழம்பூ தன் தவறு உணர்ந்து வேண்டியதால் மன்னித்து சிவராத்திரியில் ஒரு கால பூஜைக்கு மட்டும் பரிகாரம் பெற்ற தலம்.
- தட்ச யாகத்திற்கு சென்ற அம்பாளை சாதாரண பெண்ணாக பிறக்கச் செய்து, தவம் செய்ய வைத்து ‘தன் காதலியே‘ என்று அழைத்த இடம்.
- விஷ்ணு அசுரர்களை அழித்த தோஷத்தால் 16 செல்வங்களில் 11ஐஇழந்து சிவனை வணங்கி 11 விநாயர்களை பிரதிஷ்டை செய்து மீண்டும் அனைத்து செல்வங்களும் பெற்ற இடம்திரிபுராந்த தகனத்தில் தன்னை மதியாமல் சென்றதால் தேரின் அச்சு முறித்து சபை அமைத்து காரணங்களை சிவனிடம் வினாயகப் பெருமான் வினவிய இடம்
- மேய்சலுக்கு வந்த பசுக்களில் ஒன்று பால் சொரிந்தது கண்டு வாசி என்னும் கருவியால் தோண்டி வெட்டுப்பட்டு தானே மூங்கில் காட்டில் இருப்பதை மன்னனுக்கு உணர்த்திய இடம்
- கஜபிருஷ்ட விமானம்
|
தலம்
|
திருப்பாசூர்,
|
|
பிற பெயர்கள்
|
தங்காதலிபுரம்
|
|
இறைவன்
|
வாசீஸ்வரர், பசுபதீஸ்வரர், உடையவர், பாசூர்நாதர், சோமாஸ்கந்தர், வினை தீர்த்த ஈஸ்வரன்
|
|
இறைவி
|
தங்காதளி, பசுபதிநாயகி, மோகனாம்பாள், பணைமுலை
|
|
தல விருட்சம்
|
மூங்கில்
|
|
தீர்த்தம்
|
சோம தீர்த்தம், மங்கள தீர்த்தம்
|
|
விழாக்கள்
|
வைகாசி பிரம்மோற்ஸவம்,
மார்கழி திருவாதிரை
|
|
மாவட்டம்
|
திருவள்ளுர்
|
|
திறந்திருக்கும் நேரம் / முகவரி
|
காலை 6 மணி முதல் 12 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
அருள்மிகு வாசீஸ்வர சுவாமி திருக்கோயில்,
திருப்பாசூர் – 631 203,
+91- 98944 – 86890
|
|
பாடியவர்கள்
|
அப்பர், சுந்தரர், திருஞான சம்மந்தர்
|
|
நிர்வாகம்
|
|
|
இருப்பிடம்
|
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து – 7 கி.மி.
திருவள்ளூர் நகர பேருந்து நிலையத்தில் இருந்து -3 கி.மி.
|
|
இதர குறிப்புகள்
|
தேவாரத் தலங்களில் 249 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது 16 வது தலம்.
அம்பிகை, திருமால் மற்றும் சந்திரன் ஆகியவர்கள் வழிபட்ட தலம்
|
வாசீஸ்வரர்
தங்காதளி
பாடியவர் திருஞானசம்மந்தர்
திருமுறை 2ம் திருமுறை
பதிக எண் 060
திருமுறை எண் 8
பாடல்
தேசு குன்றாத் தெண்ணீ ரிலங்கைக் கோமானைக்
கூச வடர்த்துக் கூர்வாள் கொடுப்பார் தம்மையே
பேசிப் பிதற்றப் பெருமை தருவா ரூர்போலும்
பாசித் தடமும் வயலுஞ் சூழ்ந்த பாசூரே.
கூச வடர்த்துக் கூர்வாள் கொடுப்பார் தம்மையே
பேசிப் பிதற்றப் பெருமை தருவா ரூர்போலும்
பாசித் தடமும் வயலுஞ் சூழ்ந்த பாசூரே.
பொருள்
புகழ் குறையாத, தெளிந்த நீரை உடைய கடலால் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனை அவன் மனம் கூசுமாறு செய்து அவனுக்கு வாளைப் பரிசாகக் கொடுத்தவர். தம்மைப் பற்றி பேசி, பிதற்றும் அடியவர்களுக்கு அருள் தருபவர். அது மூங்கில் மரங்களும் வயல்களும் சூழ்ந்த பாசூர் ஆகும்.
கருத்து
· தவறு செய்தாலும் அவற்றை விலக்கி அருள் செய்பவர் என்பது இராவணனுக்கு அருளிய நிகழ்வு உணர்த்தும்.
· குன்றா – குறையாத
· தம்மைப்பற்றி பேசுதல் என்பது இழிவானது. அது அதிகமாகும் போது பிதற்றல் ஆகிறது. அதாவது பொருள் அற்றதாகிறது. அவர்களுக்கும் அருள்பவர் சிவன்.
· பாசித்தடம் – நீர்ப்பாசியை வைத்து நீர் நிறைந்த குளங்களை உடைய என்று பல விளக்கங்களிலும் எடுத்தாளப்பட்டிருக்கிறது. பாசு என்பது மூங்கிலைக் குறிப்பதால் மூங்கில் காடுகளை உடைய என்று இப்பாடலில் என் பொருளாக விளக்கப்பட்டிருக்கிறது.
பாடல்
பாடியவர் அப்பர்
திருமுறை 6ம் திருமுறை
பதிக எண் 083
திருமுறை எண் 1
|
விண்ணாகி நிலனாகி விசும்பு மாகி
வேலைசூழ் ஞாலத்தார் விரும்பு கின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மாகி ஏழுலகுந் தொழுதேத்திக் காண நின்ற கண்ணாகி மணியாகிக் காட்சி யாகிக் காதலித்தங் கடியார்கள் பரவ நின்ற பண்ணாகி இன்னமுதாம் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே. |
பொருள்
பாசூரில் உறையும் இறைவன் விண்ணாகவும், நிலமாகவும், மேகமாகவும், கடல் சூழ் உலகில் உள்ள பூமியில் உள்ளவர்கள் விரும்பும் எண்ணாகவும், எழுத்தாகவும், இவை அனைத்தும் இயல்பாகவும், ஏழ் உலகத்தில் இருப்பவர்களாலும் வணங்கப்படுவனாகவும், காட்சிக்கு உரிய கண்ணாகவும், அக் கண்ணுள் இருக்கும் மணியாகவும், அதனால் உணர்த்தப்படும் காட்சியாகவும், காதல் கொண்டு அடியார்கள் பாடும் பண் நிறைந்த பாடலாகவும், இனிய அமுதமாகவும் இருக்கிறான். இப்படிப்பட இறைவனை கண்டு அடியேன் உய்ந்தேன்.
கருத்து
விசும்பு – மேகம்,
வேலை – கடல்
காட்சி, காண்பவர், காணப்படும் பொருள் என்ற சைவ சித்தாந்தக் கருத்து இப்பாடலோடு ஒப்பு நோக்கக் கூடியது.
புகைப்பட உதவி : Internet
![]()
2038 – Love-Anti-Love Pill
1.
சார் எனக்கு 10 மாத்திர வேணும். ஏன்னா நான் அழகா இருக்கேன்னு(அட பிக்காளிப் பயலே..) பல பேர் சொல்லி இருக்காங்க. நான் 1st year Aero – Z படிக்கிறேன். Areo – B ல ரெண்டு பொண்ணுங்க, Mechanical – AZ ல ஒருபொண்ணு, 2nd year CSE AZ ல ஒருபொண்ணு, 3 year ECE- C ல ரெண்டு பொண்ணுங்க, Final year IT ல ரெண்டு பொண்ணுங்க, Passed out CSE – H ல மூணு பொண்ணுங்க அழகா இருக்காங்க. அவங்களுக்கு குடுக்கணும்
2.
Pre KG Students.
1 : டேய் மச்சான் எனக்கு 5 anti love tablet சொல்லுடா.
2 : ஏண்டா என்னடா ஆச்சு.
1 : பின்ன என்னடா நயந்தாரா, சமந்தா, அஞ்சலி யாருமே திரும்பி கூட பாக்க மாட்டேங்கிறாங்க.
3.
Love/Anti-Love Pill கண்டுபிடித்தவனும் ஒரு நாள் காதலில் தோற்றிருப்பான்.
இப்படிக்கு Love/Anti-Love Pill வாங்க காசில்லாமல் தத்துவம் பேசுவோர் சங்கம்
4.
Lover : டேய் இன்னாடா பேஜார் பண்ர. ரொம்ப பேஸ்ன 8 anti love pill போட்டு உட்டு போய்டே இருப்பேன்.
5.
இந்த மிஷின் புது கண்டுபிடிப்பு சார். Love சினிமா பாட்டு எழுத 5 tablet சார். அதே மாதிரி anti Love சினிமா பாட்டு எழுத 5 tablet சார். ரொம்ப சிம்பிள் சார்.
புகைப்படம் : SLKumar
![]()
ஜனித்தல் – நினைவுகளுக்கு மட்டும்
புனிதத்துவம்
மௌன நாதம்
வெண் நிலவு காய்ந்து கொண்டிருக்கிறது.
ஆற்றில் நீர் சலசலக்கிறது.
அருகருகே நீயும் நானும்.
அறிதல் பற்றிய வாதங்கள் தொடர்கின்றன.
நிலத்தை அறிய நிலமாக மாறு;
நீர் அறிய நீராக மாறு;
தீ அறிய தீயாக மாறு;
காற்றை அறிய காற்றாக மாறு;
ஆகாயம் அறிய ஆகாயமாக மாறு;
என்று உரைக்கிறாய்.
‘எனில் உன்னை அறிவது எப்படி‘ என்கிறேன்.
என்றைக்கும் ஆன விழி அசைவு காட்டி
புன்னகைத்து
மௌனத்தைக் கற்றுத் தருகிறாய்.
பிறிதொரு நாளில்
வெண் நிலவு காய்ந்து கொண்டிருக்கிறது.
ஆற்றில் நீர் சலசலக்கிறது.
புகைப்பட உதவி : R.s.s.K. Clicks
![]()
சைவத் திருத்தலங்கள் 274 – திருவிற்கோலம்
தல வரலாறு(சுருக்கம்)/சிறப்புகள் – கூவம்
· சிவன் சுயம்பு மூர்த்தி
· மூலவர் – தீண்டா திருமேனி
· இறைவன் மேருவை கையால் வில்லாக பிடித்த தலம் – திரு+வில்+கோலம்
· சிவன் – காளிக்காக ரக்க்ஷா(காத்தல்) நடனம் ஆடிய இடம்
· சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகன், வித்யுன்மாலி – துவார பாலகர்கள்
· கஜபிருஷ்ட விமானம்
· இயற்கை பேரழிவுகளான மழை, வெள்ளம் வரும் போது சுவாமி வெண்மையாகவும், போர்நிகழும் காலத்தில் செம்மை நிறம் உடையதாகவும் மாறும் அதிசயம் நிகழும்..
· அம்பாளுக்கு முன் புறத்தில் ஸ்ரீசக்கரம்
· கூரம்(ஏர்க்கால்) முறிந்த இடமாதலால் இது கூரம். பின்னாளில் மருவி கூவம் என்றானது.
· பைரவர் – நாய் வாகனம் இல்லாமல் காட்சி
|
தலம்
|
கூவம்
|
|
பிற பெயர்கள்
|
கூவரம், திருவிற்கோலம், கூபாக்னபுரி
|
|
இறைவன்
|
திரிபுராந்தகர், சோமாஸ்கந்தர், புராந்தகேசுவரர்
|
|
இறைவி
|
திரிபுராந்த நாயகி, புராந்தரியம்மை
|
|
தல விருட்சம்
|
தனியாக ஏதுமில்லை. நைமிசாரண்ய ஷேத்திரம்
|
|
தீர்த்தம்
|
அக்னி, அச்சிறுகேணி மற்றும் கூபாக்கினி தீர்த்தம்
|
|
விழாக்கள்
|
· சித்திரை – பிரம்மோற்ஸவம்
· ஆடி – பூ பாவாடை திருவிழா
· சிவராத்திரி
· ஆருத்ரா தரிசனம்
|
|
மாவட்டம்
|
திருவள்ளுர்
|
|
திறந்திருக்கும் நேரம் / முகவரி
|
காலை 6 மணி முதல் 12 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை
அருள்மிகு திரிபுராந்தகேஸ்வரர் திருக்கோயில்,
கூவம் – . பேரம்பாக்கம் வழி,திருவள்ளூர் மாவட்டம்.
|
|
பாடியவர்கள்
|
திரு ஞான சம்பந்தர், கூவப்புராணம்
|
|
நிர்வாகம்
|
திரு ராஜேந்திரன் – 93818-65515
|
|
இருப்பிடம்
|
சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து 9 கி,மீ தூரத்தில் உள்ளது
|
|
இதர குறிப்புகள்
|
தேவாரத் தலங்களில் வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது 14 வது தலம்.
|
திரிபுராந்தகர்
திரிபுராந்த நாயகி
(இப்பதிகத்தில் 8வது பாடல் இல்லாததால் 5வது பாடலும், 9வது பாடலும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது)
பாடியவர் திருஞானசம்மந்தர்
திருமுறை 3ம் திருமுறை
பதிக எண் 023
திருமுறை எண் 5
பாடல்
முந்தினான் மூவருள் முதல்வன் ஆயினான்
கொந்துலா மலர்ப்பொழிற் கூக மேவினான்
அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை
சிந்துவான் உறைவிடம் திருவிற் கோலமே
கொந்துலா மலர்ப்பொழிற் கூக மேவினான்
அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை
சிந்துவான் உறைவிடம் திருவிற் கோலமே
பொருள்
இறைவன் எல்லாவற்றிக்கும் முற்பட்டவன்.படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் தொழிகளை உடைய மூவருக்கு முதலாவது ஆனவன். கொத்தாக பூக்கும் சோலைகளை உடைய கூகம் என்ற ஊரில் உறைபவன். அந்தி வானத்தில் தோன்றும் பிறை சந்திரனை தன் தலையில் சூடியவன். அடியவர்களுடைய வினைகளை முழுவதுமாக நீக்குபவன். அவன் உறையும் இடம் திருவிற்கோலம் ஆகும்.
* * * * * * * * * * * * * * * * * * * *
பாடியவர் திருஞானசம்மந்தர்
திருமுறை 3ம் திருமுறை
பதிக எண் 023
திருமுறை எண் 9
பாடல்
திரிதரு புரம்எரி செய்த சேவகன்
வரியர வொடுமதி சடையில் வைத்தவன்
வரியர வொடுமதி சடையில் வைத்தவன்
அரியொடு பிரமனதாற்ற லால் உருத்
தெரியலன் உறைவிடம் திருவிற் கோலமே
தெரியலன் உறைவிடம் திருவிற் கோலமே
பொருள்
இறைவன் முப்புரங்களை அழித்து தேவர்களைக் காத்தவன். வரிகள் உடைய பாம்பினையும் சந்திரனையும் தலையில் தரித்தவன். தங்களது கர்வத்தால் தங்களை பெரிதாக்கிக் கொண்டதால் ப்ரம்மா மற்றும் திருமால் இவர்களால் காணமுடியாதவன். இப்படிப்பட்ட இறைவன் வீற்றிருக்கும் இடம் திருவிற்கோலம்.
கருத்து
திருதரு – வானத்தில் பறந்து திருந்து கொண்டிருந்த; அட்டவீரட்டானத்தில் ஒன்று – திரிபுர தகனம்
சேவகன் – சிவன் எளிமையானவன் என்பதைக் குறிக்கிறது.
வரி அரவோடு – வரிகள் உடைய பாம்பு(மிகுந்த நஞ்சு உடையது)
புகைப்பட உதவி : தினமலர்
புகைப்பட உதவி : தினமலர்
![]()
என்றைக்குமான குளம்
2038 – DNA
(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)
DNA library
உங்க library-ல எவ்வளவு samples இருக்கு
20000
அடச்சே, என்னவோ 1000000 இருக்குற மாதிரி பேசறயே.
* * * *
You really can change your DNA
மச்சான் கவலப் படாத இதெல்லாம் ஒரு பொண்ணா, விடு. என் ஃப்ரண்டு ஒரு டாக்டர், அவன்ட போவோம். ஒரே ஒரு DNA change தான். அப்புறம் அந்த பொண்ண மறந்துடலாம்.
* * * *
DNA doesn’t lie
டேய் ஏண்டா, டென்சனா இருக்கே,
என் பொண்டாட்டி ஊருக்கு போய்டான்னு சந்தோஷமா இருந்தேன். அவ வந்த உடனே DNA டெஸ்ட் பண்ணுணுமாம். நான் சந்தோஷமா இருந்து தெரிஞ்சுடுமா?
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மச்சான், நீ உண்மையான டாக்டர் தானே?
அதுல உனக்கு என்னடா சந்தேகம்.
நீ சொன்னேன் தானே அந்த 23க்கும் 24க்கும் இடையில இருக்கிறDNA-வ மாத்தி வச்சேன். அதுக்கு அப்புறம் கோவப்பட மாட்டேன்னு சொன்ன. ஆன அப்படி நடக்லயே.
எதுக்கும் எண்கணித மேதைக்கிட ஒரு வார்த்தை கேட்டுடுவோமா?
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
யோவ், சொன்னா கேளுயா, நீ வேல இல்லாதவன். உனக்கு 20 வயது வேற ஆயிடுத்து. உனக்கு எப்படி DNA insurance பண்ணமுடியும்.
Image : Internet
![]()
குப்பாச வாழ்க்கை
அவசர அவசரமாக பொத்தேரி புகை வண்டி நிலையத்தில் இருந்து கிண்டிக்கு பயணச் சீட்டுப் பெற்றேன். அடுத்த வண்டி 12.36 என்று எழுதி இருந்தது. கடிகாரத்தில் மணி பார்த்தேன்.
12.53. அப்பாடா புகைவண்டி சீக்கிரம் வந்துவிடும் என்று அவசர அவசரமாக ஒடினேன்.
1.23க்கு புகைவண்டி வந்தது.
ஒரு நிகழ்வினை எதிர்பார்ப்புகள் இல்லாமல் பதிவு செய்ய எண்ணம் உண்டானது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பயணம் செய்பவர்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.
குழந்தைகள் – பெரும்பாலும் பெரியவர்கள் ஏதாவது சொல்லிவிடுவார்கள் என்று பயத்துடன் பயணிக்கிறார்கள்.
கல்லூரிமாணவர்கள்– அவர்கள்உலகத்தில்அவர்கள்
வயதானவர்கள் – கவலைகளோடுபயணிக்கிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பெரும்பாலானவர்கள் இரண்டு mobile வைத்திருக்கிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கல்லூரிவயதுக்காரர்கள் பெரும்பாலும் Temple run விளையாடுகிறார்கள் அல்லது FB பார்க்கிறார்கள்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கும் நடுத்தர வயது உடையவர்கள் ‘நீ என்ன அப்பா டக்கரா’ வகையரா பாட்டுக்களைக் கேட்கிறார்கள். புகைவண்டி இரைச்சலை தாண்டி பாட்டு வெளியே கேட்கிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
இன்னைக்கு புதன் கிழகை வேற பார்ட்டி இல்ல. 12.5 லட்சத்துக்கு கேக்கிறான். திங்க கிழமை ரிஜிஸ்ட்ரேஷன் வச்சிக்கலாம்.பார்ட்டிய முடிச்சிடு.எனது பக்கத்து இருக்கைக் காரர். (நேரே போய் சொல்லி வந்திருக்கலாம்)
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
திருநங்கைகளின் கைத்தட்டல் ஓசை ஒரே விதமாக இருக்கிறது. பணம் கொடுப்பவர்களை மனமாற வாழ்த்துக்கிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பெரும்பாலான பொருள் ஏற்பவர்கள்(பிச்சைக்காரகள் என்று அழைக்க மனம் விழையவில்லை) பாத்திரம் ஒற்றை நாணயம் மட்டும் கொண்டிருக்கிறது. சிலர் பாடி பொருள் கேட்கிறார்கள். சிலர் ஏதுவும் பேசாமல் கேட்கிறார்கள். அவர்களின் பாத்திரம் நிரம்புவதே இல்லை. அதுவே மிகப் பெரிய வலி உண்டாக்குகிறது
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பெண்மணிகளே வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம். மாதம் Rs.30000 என்ற விளம்பரம் பெரும்பாலான இடங்களில் தென்படுகிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மிக அதிகமாக கசங்கிய ஆடைகளை உடையவர்கள் நுழைவு வாயில் அருகிலே அமர்ந்து விடுகிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பூர்விகா மொபைல் விளம்பரத்தில் இருக்கும் ஸ்ரீதிவ்யாவை சிலர் ஓரக் கண்ணால் பார்க்கிறார்கள். சிலர் வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
இரண்டு பேர் இருக்கையில் மற்றும் ஒருவர் நகர்ந்து கொள்ளச் சொல்லி இடம் கேட்டால் தி. நகரில் இருக்கும் பத்து க்ரௌண்ட் இடம் கேட்டது போல் முறைக்கிறார்கள்.
* * * * *
சில குழுக்கள் புகைவண்டியில் கதவருகே நின்று selfie எடுத்துக் கொண்டிருக்கிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மச்சான் அந்த மஞ்ச கலர் மைனாவ பார்தா த்ரிஷா மாதிரி இல்ல.
போடா டேய், த்ரிஷா எல்லாம் பாட்டி அவள போய் கம்பேர் பண்ரியே. சொல்லுவது ஆசை அஜித்(ஹா ஹா)
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தாய்மை உடையவர்கள் மிக அதிக கனமான இதயத்துடன் பயணிக்கிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கனத்த மௌனத்துடனே பெரும்பாலான பயணம் தொடர்கிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
இலக்கை அடைந்த பின் வேறொரு பயணத்திகு தயாராகி விடுகிறார்கள்.
குப்பாசவாழ்க்கை–நிலைஅற்றவாழ்வு
நன்றி : கந்தர் அலங்காரம்
புகைப்படஉதவி : Karthik Pasupathi
![]()
கசியும் நினைவுகள்
சொற்கள் அற்ற இரவு
விளையாட்டாய் ஆரம்பிக்கிறது
உனக்கும் எனக்குமான சண்டை.
உன் கோபங்கள் என்னை
மகிழ்வு கொள்ளச் செய்கின்றன.
மகிழ்வான நிமிடங்கள்
முற்றுப் பெறும் முன் உரைக்கிறாய்
‘நான் உன்னுடன் பேசப் போவதில்லை‘
கண்ணீருடன் கலக்கின்றன
எனக்கான கவிதைகள்.
உறக்கத்தில் கைகளால்
எதையோ தேடுகிறாய்.
‘என்ன இருந்தாலும் நீ என் அப்பா
உன்னை பிடிக்காமல் இருக்குமா‘
என்கிறாய்.
பிறிதொரு நாளில்
இதை நீ உணர்ந்து சிரிக்க
கவிதையாக்கி வைத்திருக்கிறேன்
என்னையும் நினைவுகளையும்.
புகைப்படம் மற்றும் இருப்பு : ராதா கிருஷ்ணன்
![]()
உள் ஒலி
ஜகத்பதி
நேற்று காலை
நகரின் பிரதான இடம் அது. தொகுப்பு வீடுகளும் தனி வீடுகளும் அமைந்திருக்கும் பகுதி.
பிளாட்பாரம் வழியாக பயணம்.
பிளாட்பாரத்தில் மலம் கழிக்கப் பட்டிருந்தது.
‘மனுஷனா இல்ல மாடா இவனுக, இப்படி இருந்தா எப்படி நடக்கறவன் நடப்பான்‘.
நேற்று மாலை.
அந்தி சாயும் பொழுது. வாகனத்தில் பயணம்
கண் அற்றவன் ஒருவன் குச்சியை வைத்து நடந்து கொண்டிருந்தான்.
‘சார், சார் – பார்த்து போங்க, இடிச்சிக்காதிங்க‘
ரொம்ப நன்றி சார்‘
உங்க பேரு என்னாங்க?
ஜகத்பதி
அது என்னாங்க அப்படி ஒரு பேரு
வடக்குத்தி சாமிங்க. நான் காசி போயிருந்தப்ப அங்க இருந்தவங்க எல்லாம் சொன்னாங்க. அதாலெ எம் பேர அப்படி மாத்திக்கிட்டேன். அதாவது உலகத்திற்கு அதிபதியாம்.
‘உட்காருங்க சார், நீங்க எங்க போவணும்ணு சொல்லுங்க இறக்கி விடறேன்‘,
தனக்கான நாளின் முடிவில் ஜகத்பதி.அப்போது மணி மாலை 6.30
‘எங்கியாவது இறக்கி விடுங்க சார், நான் தூங்கனும்‘, ஜகத்பதி.
‘எத்தனை நாளா இந்த பென்சில் பேனா, ரேஷன் காடு விக்கிறீங்க‘,
‘எனக்கு கண்ணு தெரியாம போனதில் இருந்து‘, ஜகத்பதி
‘என்ன ஆச்சு உங்களுக்கு‘, அவன்
‘உடம்பு சரியில்லன்னு டாக்டர்ட போனேன். அவரு ஊசி போட்டார். அப்புறமா கொஞ்ச நால்ல ருந்து கண்ணு தெரியல‘, ஜகத்பதி
‘உங்களுக்கு சொந்த ஊர் எது‘,
‘குன்னூர் பக்கங்க‘, ஜகத்பதி
‘இங்க எப்படி வந்தீங்க‘,
‘ரயில்ல தான். நான் எம்.ஏ இங்கிலிஷ் லிட்ரச்சர் படிச்சிருக்கிறேங்க‘, ஜகத்பதி. வார்த்தைகளில் நிதானமான கத்தி சொருகல்.
‘ஏன் நீங்க வேலைக்கு போகலையா‘, அவன்
‘சர்டிபிகேட் எல்லாம் பஸ்ல தொலைஞ்சு போச்சுங்க‘, ஜகத்பதி. கத்தி இன்னும் எடுக்கப்படாமல் ரத்தம்.
‘சாப்பிடீங்களா‘
‘டீயும் பன்னும் சாப்டேன்‘ – ஜகத்பதி.
‘சார் ராத்திரி சாப்பாடு பத்தி கேட்டேன்‘
‘அதெல்லாம் சாப்டா ராத்திரி வயத்தை கலக்கும் சார்‘- ஜகத்பதி. மெல்லிய இளம் சூடான மைசூர் பாகினை தட்டினில் கொட்டி, கத்தியால் நறுவிசாக நறுக்கப்பட்டதைப் போல் வார்த்தைகள்.
‘காலையும் மதியமும்?’
‘ஒரு நாளைக்கு 80ரூ வருமானம் வரும் சார். காலைக் கடனுக்கு 5ரூ சார். குளியலும் காலைக்கடனும் அப்படீன்னா 10ரூ சார். அதுல எப்படி எல்லா வேளையும் சாப்பிட முடியும்‘ – ஜகத்பதி. வார்த்தைகளில் துப்பாக்கி சூடு குறிபார்த்து.
‘இங்க எறங்கிங்க‘
‘ரொம்ப நன்றி சார்‘, ஜகத்பதி
இன்று காலை.
ஜகத்பதியை இறக்கி விட்ட இடத்தின் வழியாக செல்ல நேர்ந்தது. அப்போது பிளாட்பாரத்தில் மலம் கழிக்கப் பட்டிருந்தது.
புகைப்பட உதவி : R.s.s.KClicks
![]()























