சைவத் திருத்தலங்கள் 274 – திருப்பாச்சூர்

  • சிவன் சுயம்பு மூர்த்திசதுர வடிவ பீடம்
  • மூலவர்தீண்டா திருமேனி
  • அர்த்த மண்டபத்தில் ஸ்ரீசக்கரம்ஆதிசங்கரர் பிரதிஷ்டை
  • மூங்கில் வனத்தில் தோன்றியதால் பாசுரநாதர். பாசுர் – மூங்கில்
  • விஷ்ணு துர்க்கை மகிஷாசூரன் இல்லாமல்
  • தாழம்பூ தன் தவறு உணர்ந்து வேண்டியதால் மன்னித்து சிவராத்திரியில் ஒரு கால பூஜைக்கு மட்டும் பரிகாரம் பெற்ற தலம்.
  • தட்ச யாகத்திற்கு சென்ற அம்பாளை சாதாரண பெண்ணாக பிறக்கச் செய்து, தவம் செய்ய வைத்துதன் காதலியேஎன்று அழைத்த இடம்.
  • விஷ்ணு அசுரர்களை அழித்த தோஷத்தால் 16 செல்வங்களில் 11இழந்து சிவனை வணங்கி 11 விநாயர்களை பிரதிஷ்டை செய்து மீண்டும் அனைத்து செல்வங்களும் பெற்ற இடம்திரிபுராந்த தகனத்தில் தன்னை மதியாமல் சென்றதால் தேரின் அச்சு முறித்து சபை அமைத்து காரணங்களை சிவனிடம் வினாயகப் பெருமான் வினவிய இடம்
  • மேய்சலுக்கு வந்த பசுக்களில் ஒன்று பால் சொரிந்தது கண்டு வாசி என்னும் கருவியால் தோண்டி வெட்டுப்பட்டு தானே மூங்கில் காட்டில் இருப்பதை மன்னனுக்கு உணர்த்திய இடம்
  • கஜபிருஷ்ட விமானம்
தலம்
திருப்பாசூர்,
பிற பெயர்கள்
தங்காதலிபுரம்
இறைவன்
வாசீஸ்வரர், பசுபதீஸ்வரர், உடையவர், பாசூர்நாதர், சோமாஸ்கந்தர், வினை தீர்த்த ஈஸ்வரன்
இறைவி
தங்காதளி, பசுபதிநாயகி, மோகனாம்பாள், பணைமுலை
தல விருட்சம்
மூங்கில்
தீர்த்தம்
சோம தீர்த்தம்மங்கள தீர்த்தம்
விழாக்கள்
வைகாசி பிரம்மோற்ஸவம்,
 மார்கழி திருவாதிரை
மாவட்டம்
திருவள்ளுர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 12 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
அருள்மிகு வாசீஸ்வர சுவாமி திருக்கோயில்,
திருப்பாசூர் – 631 203,  
+91- 98944 – 86890
பாடியவர்கள்
அப்பர்சுந்தரர்திருஞான சம்மந்தர்
நிர்வாகம்
இருப்பிடம்
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து – 7 கி.மி.
திருவள்ளூர் நகர பேருந்து நிலையத்தில் இருந்து -3 கி.மி.
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 249 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   16 வது தலம்.
அம்பிகைதிருமால் மற்றும் சந்திரன் ஆகியவர்கள் வழிபட்ட தலம்
வாசீஸ்வரர்
 
தங்காதளி
பாடியவர்                     திருஞானசம்மந்தர்
திருமுறை                    2ம் திருமுறை 
பதிக எண்                    060
திருமுறை எண்               8
பாடல்
தேசு குன்றாத் தெண்ணீ ரிலங்கைக் கோமானைக்
கூச வடர்த்துக் கூர்வாள் கொடுப்பார் தம்மையே
பேசிப் பிதற்றப் பெருமை தருவா ரூர்போலும்
பாசித் தடமும் வயலுஞ் சூழ்ந்த பாசூரே.


பொருள்
புகழ் குறையாத, தெளிந்த நீரை உடைய கடலால் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனை அவன் மனம் கூசுமாறு செய்து அவனுக்கு வாளைப் பரிசாகக் கொடுத்தவர். தம்மைப் பற்றி பேசி, பிதற்றும் அடியவர்களுக்கு அருள் தருபவர். அது மூங்கில் மரங்களும் வயல்களும் சூழ்ந்த பாசூர் ஆகும்.
கருத்து
·         தவறு செய்தாலும் அவற்றை விலக்கி அருள் செய்பவர் என்பது இராவணனுக்கு அருளிய நிகழ்வு உணர்த்தும்.
·         குன்றா – குறையாத
·         தம்மைப்பற்றி பேசுதல் என்பது இழிவானது. அது அதிகமாகும் போது பிதற்றல் ஆகிறது. அதாவது பொருள் அற்றதாகிறது. அவர்களுக்கும் அருள்பவர் சிவன்.
·         பாசித்தடம் – நீர்ப்பாசியை வைத்து நீர் நிறைந்த குளங்களை உடைய என்று பல விளக்கங்களிலும் எடுத்தாளப்பட்டிருக்கிறது. பாசு என்பது மூங்கிலைக் குறிப்பதால் மூங்கில் காடுகளை உடைய என்று இப்பாடலில் என் பொருளாக விளக்கப்பட்டிருக்கிறது.
 
பாடல்
 
பாடியவர்                     அப்பர்
திருமுறை                    6ம் திருமுறை 
பதிக எண்                    083
திருமுறை எண்               1
விண்ணாகி நிலனாகி விசும்பு மாகி
வேலைசூழ் ஞாலத்தார் விரும்பு கின்ற
எண்ணாகி எழுத்தாகி இயல்பு மாகி
ஏழுலகுந் தொழுதேத்திக் காண நின்ற
கண்ணாகி மணியாகிக் காட்சி யாகிக்
காதலித்தங் கடியார்கள் பரவ நின்ற
பண்ணாகி இன்னமுதாம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.


பொருள்
பாசூரில் உறையும் இறைவன் விண்ணாகவும், நிலமாகவும், மேகமாகவும், கடல் சூழ் உலகில் உள்ள பூமியில் உள்ளவர்கள் விரும்பும் எண்ணாகவும், எழுத்தாகவும், இவை அனைத்தும் இயல்பாகவும், ஏழ் உலகத்தில் இருப்பவர்களாலும் வணங்கப்படுவனாகவும், காட்சிக்கு உரிய கண்ணாகவும், அக் கண்ணுள் இருக்கும் மணியாகவும், அதனால் உணர்த்தப்படும் காட்சியாகவும், காதல் கொண்டு அடியார்கள்  பாடும்  பண் நிறைந்த  பாடலாகவும், இனிய அமுதமாகவும் இருக்கிறான். இப்படிப்பட இறைவனை கண்டு அடியேன் உய்ந்தேன்.
கருத்து
விசும்பு – மேகம்,
வேலை – கடல்
காட்சி, காண்பவர், காணப்படும் பொருள் என்ற சைவ சித்தாந்தக் கருத்து இப்பாடலோடு ஒப்பு நோக்கக் கூடியது.
புகைப்பட உதவி :  Internet
 
 
 
 

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *