அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – செய்ய

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  செய்ய

பொருள்

  • சிவந்த
  • செப்பமான

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

செய்ய தெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல்
ஐயன் வந்து என்னுளம் அமர்ந்து கோயில் கொண்டனன்;
ஐயன் வந்து என்னுளம் அமர்ந்து கோயில் கொண்டபின்
வையகத்து மாந்தர்முன் வாய்திறப்ப தில்லையே

சிவவாக்கியர்

கருத்து உரை

செம்மையான தேங்காய் உள்ளே இளநீர் சேரும் காரணம் போல், ஐயனானவன் என் உள்ளத்தில் கோயிலில் இருப்பது  போல் அமர்ந்து கொண்டான். அந்த ஐயனானவன் என் உள்ளத்தில் கோயிலில் இருப்பது  போல் அமர்ந்து கொண்டப் பின் இந்த உலகத்து மனிதர்களிடம் நான் வாய் திறந்து பேசுவது இல்லை.

விளக்க உரை

  • மரத்தில் காய் எத்தனை உயரத்தில் இருந்தாலும், நீரானது மேலே சென்று இயல்பாக முயற்சிகள் இல்லாமல் அடைந்து விடும். அதுபோல் இயல்பாக என்னுள் ஐயன் அமர்ந்து கொண்டான்.
  • வையகத்து மாந்தர்முன் வாய்திறப்ப தில்லையே – ஆகையால் மாயைக்கு உட்படாத மனிதர்களிடம் / தேவர்களிடம் மட்டுமே பேசுகிறேன்.
  • மாயைக்கு உட்படாத மனிதர்களிடம் / தேவர்களிடம் உரைத்த பாடல்களை மனிதர்களுக்கு மேம்பட்டவர்கள் கேட்டு இப்பாடல்களை எழுதி இருக்கலாம். (இது என் தனிக் கருத்து)

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – திருகு

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  திருகு

பொருள்

  • முறுக்கு
  • பின்னு
  • பறி
  • முறுகு
  • மாறுபடு
  • முறுக்கு
  • கோணல்
  • சுரி
  • அணியின் திருகுமரை
  • மாறுபாடு
  • ஏமாற்றுப்பேச்சு
  • குற்றம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஒரு கோட்டன் இரு செவியன் மும்மதத்தன்
   நால்வாய் ஐங்கரத்தன் ஆறு
தரு கோட்டம் பிறைஇதழித் தாழ்சடையான்
   தரும் ஒரு வாரணத்தின் தாள்கள்
உருகோட்டு அன்பொடும் வணங்கி ஓவாதே
   இரவுபகல் உணரவோர் சிந்தைத்
திருகு ஓட்டும் அயன்திருமால் செல்வமும்ஒன்
   றோஎன்னச் செய்யும் தேவே.

சிவஞானசித்தியார் – பரபக்கம் பாடல்

கருத்து உரை

ஒற்றைக் கொம்பினை உடையவன்; இரு காதுகளை உடையவன்; கன்னமதம், கைம்மதம், கோசமதம் என்ற மூவகைப்பட்ட மதயானையின் மதநீர் கொண்டவன்; நான்காவதான தொங்கும் வாயினை உடையவன்; ஐந்து கைகளை உடையவன்; வளைந்த ஓடும் ஆறு(கங்கை) பிறை நிலவு, கொன்றை மாலை சூடிகொண்டிருக்கும், நீண்ட தாழ் சடையுடையவன் நமக்கு தந்தருளிய ஒருவனாகிய யானை முகத்தினை உடையவரின்  பாதங்களை இரவு பகல் பாராது பேரன்போடு வணங்கி உணர்வோரின் சிந்தைத்  தரும் குற்றத்தை  நீக்கும்  பிரம்மனும், திருமாலும் கொடுக்கும் செல்வம்  எல்லாம்  ஒரு பொருளாக நின்று உணர்த்தி தருபவன்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – முன்னை

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  முன்னை

பொருள்

  • பழமை
  • தமக்கை
  • தமையன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான்
பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன்- தென்னன்
பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன்
வருந்துயரந் தீர்க்கும் மருந்து

தேவாரம் – 8ம் திருமுறை – மாணிக்கவாசகர்

கருத்து உரை

இனி வரும் பிறவிகளை நீக்கும் பெரியோனும், தென் திசை அரசனும், திருப்பெருந்துறையை உடையவனும், பெருங் கருணையாளனும், வரும் துன்பங்களைத் தீர்க்கும் மருந்தாய் இருப்பவனும் ஆகிய சிவபெருமான், நான் முன்செய்தவினைகள் இரண்டையும் வேரறுத்து எனக்கு எதிரே நின்றான்.

விளக்க உரை

சஞ்சீதம் எனும் இறந்த கால கர்மாக்கள், பிரார்ப்தம் எனும் நிகழ் கால கர்மாக்கள் ஆகியவற்றை அழித்துவிட்டான். அவ்வாறு அழித்து என் முன் நின்றான் என்பதில் இருந்து ஆகாமியம் எனும் எதிர்கால கர்மாக்கள் அழிந்து விட்டன என்பது மறை பொருள். (நல்வினை, தீவினை என்று தவறான பொருள் கொண்டு இடர்படுவாரும் உண்டு).

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – கோமான்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  கோமான்

பொருள்

  • அரசன்
  • கோ
  • மன்னன்
  • பெருமையில் சிறந்தவன்
  • பிரபு
  • குரு
  • மூத்தோன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கருவரைசூழ் கடலிலங்கைக் கோமானைக் கருத்தழியத்
திருவிரலா லுதைகரணஞ் செய்துகந்த சிவமூர்த்தி
பெருவரைசூழ் வையகத்தார் பேர்நந்தி யென்றேத்தும்
அருவரைசூ ழையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.

தேவாரம் – 4ம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

எல்லாப் பக்கங்களிலும் கடல் உடையதாகவும் மற்றும் பெரிய மலைகளால் சூழப்பட்ட இலங்கை நகரத்து அரசனாகிய இராவணனை அவன் கர்வ எண்ணம் அழியுமாறு தனது திருவிரலால் அழுத்தி உதைத்தலாகிய செயலைச்செய்து அவன் செருக்கை அடக்கி மகிழ்ந்தவர் சிவமூர்த்தி. அவ்வாறான பெரிய கடலால் சூழப்பட்ட இந்நில உலகத்தவர் நந்தி என்று பெயரிட்டு வழிபடும், பெரிய மூங்கில் காடுகள் சூழ்ந்த ஐயாற்று எம்பெருமானுக்கு, அடியேன் அடிமையாகிக் (பிறவித் தளைகளில் இருந்து) தப்பினேன்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அகைதல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  அகைதல்

பொருள்

  • எரிதல்
  • ஒடிதல்
  • வருந்துதல்
  • தளிர்த்தல்
  • மலர்தல்
  • தாழ்தல்
  • காலந்தாழ்த்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மூலம்

பதைத்தொழிந் தேன்பர மாஉனை நாடி
அகைத்தொழிந் தேன் இனி ஆரொடுங் கூடேன்
சிதைத்தடி யேன்வினை சிந்தின தீர
உதைத்துடை யாய்உகந் தாண்டரு ளாயே.

பதம் பிரித்து

பதைத்து ஒழிந்தேன் பரமா உனை நாடி
அதைத்து ஒழிந்தேன் இனி யாரொடும் கூடேன்
சிதைத்து அடியேன் வினை சிந்தனை தீர
உதைத்து உடையாய் உகந்து ஆண்டருளாயே

திரு அருட்பா – 6ம் திருமுறை – வள்ளலார்

கருத்து உரை

யாவர்க்கும் மேலானவரே, உம்மை அடைய விரும்பிய அடியவனாக யான் துடித்தேன் அவ்விருப்பதின் படி உம்மை அடைந்து இனி ஒருவரோடும் சேரமாட்டேன் அவர்களது சேர்க்கையை எல்லாம் அறுத்து விட்டேன். ஆகையால் அடியேனது வினைகள் அழிந்தொழியும்படி போக்கி என்னை ஏற்று, என் தலையிலும், உள்ளத்திலும் உமது திருவடிகளைச் சூட்டி என்னை ஆட்கொண்டருள்வீர்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஈண்டு

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  ஈண்டு

பொருள்

  • இங்கு
  • இவ்விடத்தில்
  • இம்மையில்
  • இவ்வாறு
  • இப்பொழுது

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால் தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால்
பிடித்தொரு தந்தை அணைப்பன்இங் கெனக்குப் பேசிய தந்தையும் தாயும்
பொடித்திரு மேனி அம்பலத் தாடும் புனிதநீ ஆதலால் என்னை
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மைஅப் பாஇனிஆற்றேன்

திரு அருட்பா – 6ம் திருமுறை – வள்ளலார்

கருத்து உரை

அம்மையும் அப்பனுமாகிய பெருமானே, உடல் வளர்ச்சியால் தடித்த மகன் செய்த தவறு செய்வது கண்டு தந்தை அவனை அடித்தால், உடனே தாய் அவ்விடம் போய் தடுத்துத் தன் மகனை அணைத்துக் கொள்வாள்; தாய் அடித்தால், தன் கையில் பற்றிக்  கொண்டு தந்தை தன்னோடு அணைத்துக் கொள்வான்; திருநீறணிந்த திருமேனியை உடையனாக தில்லையம்பலத்தில் திருக்கூத்தாடும் தூயவனே, எனக்கு தந்தையும் தாயும் நீயாதலால் இதுவரை உலகியல் துன்பங்களால் என்னை வருத்தியது போதும்; இனி உன்னுடைய அருளால் என்னை அணைத்து ஆதரிக்க வேண்டும்.

விளக்க உரை

  • இனிமேல் இத்துன்பத்தைப் பொறுக்க மாட்டேன் எனும் பொருளில்
  • தடித்த மகன் – உடல் வளர்ச்சி மட்டும் பெற்ற ஒருவன் எனும் பொருளில்.( புற விஷயங்களில் மட்டும் வளர்ச்சி பெற்ற ஒருவன்)
  • அம்மைஅப்பன் – சிவன் – அம்மையும் அப்பனுமாகி (இரண்டாகவும்) எனும் பொருளில்
  • பிறவி ஆன்மாக்கள் மீது தாயும் தந்தையும் ஆகிய அம்மையப்பன் ஒத்த அன்புடையவர்.
  • அடித்தல் துன்ப நுகர்ச்சி, அணைத்தல் இன்ப நுகர்ச்சி. இரண்டும் இறைவனால் ஏற்படுத்தப்பட்டது. ஆதலால் ஒரு பகுதியை கண்ட எனக்கு மறுபகுதியை காணச் செய் எனும் பொருளில்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – இலாடம்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  இலாடம்

பொருள்

  • நெற்றி

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

எவரேனுந் தாமாக விலாடத் திட்ட
  திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி
உவராதே யவரவரைக் கண்ட போதே
  உகந்தடிமைத் திறம்நினைந்தங் குவந்து நோக்கி
இவர்தேவர் அவர்தேவ ரென்று சொல்லி
  இரண்டாட்டா தொழிந்தீசன் திறமே பேணிக்
கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
  கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

தேவாரம் – 6ம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

எவராக இருப்பினும் நெற்றியில் திருநீறு அணிந்து, உருத்திராக்கம் பூண்டு இருப்பவரைக் கண்டால், அந்த திருவேடத்தின் பெருமையை நினைத்து, வெறுப்பில்லாமல், அவர்களைக் கண்ட போதே விரும்பி அடிமைத் திறத்தை நினைத்து,  `இவர்கள் நம்மால் வழிபடத்தக்க தேவரா,  அவர்கள் நம்மால் வழிபடத்தக்க தேவரா’ என உள்ளத்தை இருவகையாகச் செலுத்தாமல் இருக்க வேண்டும். இறைவன் வேறு, அடியவர் வேறு எனும் இருவேறு மனநிலையில் இல்லாமல் ஒரே மன நிலையில்  இறைவனிடத்தில் செய்யும் செயல்களையே அவ்வாறான அடியவரிடத்தும்   விரும்பிச் செய்ய வேண்டும். இவ்வாறு தொழும், அடியவர் உள்ளத்தில் கன்றாப்பூர் சிவனைக் காணலாம்.

விளக்க உரை

  • எவரேனும் – எவ்வகையானக் குற்றமுடையராயினும்.
  • திருவேடமுடையாரைத் தொழும் அடியார் நெஞ்சினுள் சிவ பிரானைக் காணலாம்`. அப்பெருமான் அத்திருவேடமே தானாய் நின்று அருளுவன் என்பது குறித்தது. திருவேடம் தொழுதல் சிறந்து எனும் பொருள் பற்றி.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – நம்பான்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  நம்பான்

பொருள்

  • ஆணிற்சிறந்தோன்
  • கடவுள்
  • சிவன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

நின்றுநினைந் திருந்துகிடந் தெழுந்துதொழும்
   தொழும்பனேன்
ஒன்றிஒரு கால்நினையா திருந்தாலும்
   இருக்கவொட்டாய்
கன்றுபிரி கற்றாப்போல் கதறுவித்தி
   வரவுநில்லாய்
நன்றிதுவோ திருத்தில்லை நடம்பயிலும்
   நம்பானே

ஒன்பதாம் திருமுறை – திருவிசைபா – திருப்பல்லாண்டு

கருத்து உரை

தில்லையில் நடம்பயிலும் சிவனே! நின்ற இடத்தும், அமர்ந்த இடத்தும், கிடந்த இடத்தும் நினைந்து, எழுந்த இடத்தில் தொழுகின்ற அடியவனாகிய நான், மனம் பொருந்தி ஒரு நேரத்தில் உன்னை விருப்புற்று நினைக்காமல் இருந்தாலும் நீ அவ்வாறு இருக்கவிடாமல் கன்றைப் பிரிந்த தாய்ப்பசுவைப் போலக் கதறச் செய்கின்றாயே ஒழிய நீ என் எதிரில் வந்து நிற்கவில்லை. இவ்வாறு நீ செய்யும் இச்செயல் உனக்கு ஏற்புடைய நல்ல செயல் ஆகுமா?

விளக்க உரை

  • கன்றும், தாய்ப்பசுவும் என்றும் பிரியாது. ஆகவே நீ அவ்வாறு பிரியாது நிற்பாய் எனும் பொருள் பற்றி.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மாலாதல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  மாலாதல்

பொருள்

  • மிகப் பற்றுக் கொள்ளுதல்
  • மயங்குதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஆமயன் மாலரன் ஈசன்மா லாங்கதி
ஓமய மாகிய ஒன்பதும் ஒன்றிடத்
தேமய னாளுந் தெனாதென என்றிடும்
மாமய மானது வந்தெய்த லாமே.

திருமந்திரம் – நான்காம் தந்திரம் – திருமூலர்

கருத்து உரை

திருவருள் ஆணைபெற்றுத் தொழில்புரியும் பிரம்மன், மால், உருத்திரன், மகேசன் என்னும் இவர்கள் விரும்பும் நிலையினை. அருளவும் மிகவும் சிறப்புத் தன்மை பிரணவம் பொருந்திய ஒன்பது ஆற்றல்களும் ஒன்றுகூடவும், தீரா இன்பவடிவினனாகிய சிவபெருமான் திருநோக்கம் கொண்டனன். அத்தருணத்தில் இன்பமயமான ஆன்மா ‘தென்னாதெனா’ என ஒலித்து தேனுண்ணவந்து மொய்க்கும் ஆருயிர் வண்டினங்களின் நிலைக்களமாகிய ஒலிமெய் வடிவம் எய்தியது.

விளக்க உரை

  • அயன் மால் அரன் – மெய் (சுத்தவித்தை) யின்கண் உறைவோர். பிரம்மன் – மூலாதாரம், மால் – சுவாதிட்டானம், உருத்திரன் – மணிபூரகம், மகேசன் – விசுக்தி
  • மேற்கூறிய நிலை முதல் துவாத சாந்தம் வரை (9 நிலைகள்)
  • ஆன்மாவானது தேன் உண்டுகளிக்கும் ரீங்கார சப்தத்துடன் விளங்கும்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – இச்சித்தல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  இச்சித்தல்

பொருள்

  • விரும்புதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மனமது நினைய வாக்கு வழுத்த மந்திரங்கள் சொல்ல
இனமலர் கையில் கொண்டு அங்கு, இச்சித்த தெய்வம் போற்றிச்
சினம் முதல் அகற்றி வாழும் செயல் அறம் ஆனால் யார்க்கும்
மனம் ஒரு தெய்வம் எங்கும் செய்தற்கு முன் நிலையாம் அன்றே

திருநெறி 2 – சிவஞானசித்தியார்

கருத்து உரை

ஒருவனுக்குத் தன் கருத்திற்கு இயைந்த ஒரு கடவுளை மனம், மொழி மற்றும் மெய்களால் வழிபட்டு, சொல்லப்பட்டவாறு தீமைகளை விலக்கி,  வாழும் செயலாகிய அறம், விதிக்கப்பட்ட ஒழுக்கம் முதலிய நன்மைகளை உடையனாய் சினம் முதலியவற்றை விலக்கி விளங்கும் ஒருவனுக்கு சிவபிரானே அத்தெய்வத்தினிடமாக நின்று அச்செயலை ஏற்றுக் கொண்டு பயன் உதவுவார்.

விளக்க உரை

எந்த தெய்வத்தை வழிபாடு செய்தாலும் அவ்வடிவாக இருந்து அருளுபவர் சிவன் எனும் பொருள் பற்றி.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – துஞ்சல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  துஞ்சல்

பொருள்

  • மலரடி சேர்தல்
  • காலமாதல்
  • காலப்போக்கு
  • காலத்தின் நடை
  • இயற்கையான மரணம்;மூப்பு இறப்பு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.

தேவாரம் – 3ம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

உறங்கும் பொழுதும், விழித்திருக்கும் பொழுதும், மனம் கசிந்து உருகி நாள்தோறும் திருவைந்தெழுத்தை நினைத்துப் போற்றுங்கள். பல வழிகளில் திரிந்து செல்லும் வஞ்சகத் தன்மையுடைய மனத்தை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து இறைவனையே நினைத்து அவன் திருவடிகளை வாழ்த்திப் போற்றிய மார்க்கண்டேயரின் உயிரை அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் இறுதியில் கவர வந்த கூற்றுவனை உதைத்து காப்பாற்றியது திருவைந்தெழுத்தே.

விளக்க உரை

  • உறங்கும் பொழுதும், விழித்திருக்கும் பொழுதும் என்பது பொதுவாக சொல்லப்பட்டாலும் மாயையால் உலகில் வாழ்வு கொள்ளுதல் என்பது உறங்குதலுக்கு சமமாகவும், ஞான மார்க்கத்தால் உயர் நிலை அடைந்த பிறகு விழிப்பு நிலை என்பதும் பொதுக்கருத்து. (ஆன்றோரும், இறை அன்பர்களும் கருத்துரைக்க). ‘உறங்குவது போலும் சாக்காடு’ எனும் குறள் யாண்டும் சிந்திக்கத்தக்கது.
  • திருவைந்தெழுத்தை ஓதுவார் எமனால் துன்பப்படார் என்பது கருத்து.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மதலை

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  மதலை

பொருள்

  • மழலை மொழி
  • குழந்தை
  • மகன்
  • பாவை
  • பற்றுக்கோடு
  • தூண்
  • யூப ஸ்தம்பம்
  • வீட்டின் கொடுங்கை
  • பற்று
  • மரக்கலம்
  • கொன்றை
  • சரக்கொன்றை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

முதல்வன் வகுத்த மதலை மாடத்து
இடவரை ஊன்றிய கடவுட் பாண்டிற்
பள்ளிச் செம்புயல் உள்விழு துறீஇப்
புத்தேள் நிவந்த முத்த மாச்சுடர்
எறிவளி எடுப்பினும் சிறுநடுக் குறாநின்
அடிநிழல் அளியவோ வைத்த முடிமிசை
இலங்குவளைத் தனிப்போது விரித்த
அலங்குகதிர் ஒலியல்நீ அணிந்ததென் மாறே.

11ம் திருமுறை – இளம்பெருமான் அடிகள் – சிவபெருமான் திருமும்மணிக்கோவை

கருத்து உரை

நான்முகன் படைத்த தூண்களை உடைய மாடத்தில் இடப் பக்கத்திலுள்ள மலையில் பொருந்திய தெய்வத்தன்மையுள்ள தகழியில் மாலைக் காலத்தில் காணப்படுகின்ற சிவந்த மேகம் விழுந்த தேவருலகம், உயர்ந்த முத்தமாகிய பேரொளி. காற்று வீசினாலும் சிறிதும் அசையாத உன் பாத நிழல் அளியுமாறு வைத்த உச்சியின்மீது விளங்குகின்ற வளைந்த திங்களாகிய மலர்மாலையை நீ அணிந்ததன் காரணம் யாது?

விளக்க உரை

ஞான தீக்கை செய்யும் காலத்துக் குவளை மாலையைச் சூட்டுதல் மரபு.

 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – தலைப்படுதல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  தலைப்படுதல்

பொருள்

  • ஒன்றுகூடுதல்
  • எதிர்ப்படுதல்
  • மேற்கொள்ளுதல்
  • பெறுதல்
  • முன்னேறுதல்
  • தலைமையாதல்
  • புகுதல்
  • வழிப்படுதல்
  • தொடங்குதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

தம்மில் தலைப்பட்டார் பாலே தலைப்பட்டுத்
தம்மில் தலைப்படுதல் தாமுணரில் – தம்மில்
நிலைப்படுவர் ஓரிருவர் நீக்கிநிலை யாக்கித்
தலைப்படுவர் தாமத் தலை.

திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார்

கருத்து உரை

அம்மையாகிய சத்தியும் அப்பராகிய சிவனும் பிரபஞ்சத்துக்குக் காரணம் என்று அறிக;  அம்மையப்பராகிய சிவன் அந்தச் சத்தி வழியாக வந்து மோட்சத்தைக் கொடுப்பார்; அவர் தானே தலைமை ஏற்று அப்பரிசே வந்தளிப்பர்; அவர் எல்லா உலகிற்கும் அப்புறத்தார்.  சிவன்  அத்துவா எனப்படும் ஆறு வழியில் பொதுவியல் படி கலந்திருப்பினும் தன்னியல்பால் அப்பாற்பட்டவர்; இப்புறத்தும் அல்லார்போல் நின்றாலும் அவர் இப்படிக் கலந்திருப்பினும் கலவாதாரைப் போன்று சுட்டிக் காணப்படார் ஆவார்.

விளக்க உரை

அத்துவா – ஆறு வழிகள்

  • மந்திராத்துவா – மந்திர வடிவமான மோட்சகதி
  • பதாத்துவா – சொல் வடிவமான மோட்சகதி
  • வர்ணாத்துவா – அக்கரங்கள் வடிவிலுள்ள மோட்சகதி
  • புவனாத்துவா – மோட்சகதி
  • தத்துவாத்துவா – முப்பத்தாறு தத்துவங்களாகிய மோட்சகதி
  • கலாத்துவா – பஞ்சகலைகளாகிய மோட்சகதி

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – எயிறு

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  எயிறு

பொருள்

  • பல்
  • ஈறு
  • யானையின் கொம்பு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

உரித்திட்டா ரானை யின்றோ லுதிரவா றொழுகி யோட
விரித்திட்டா ருமையா ளஞ்சி விரல்விதிர்த் தலக்க னோக்கித்
தரித்திட்டார் சிறிது போது தரிக்கில ராகித் தாமுஞ்
சிரித்திட்டா ரெயிறு தோன்றத் திருப்பயற் றூர னாரே.

பதம் பிரித்து

உரித்திட்டார்; ஆனையின் தோல் உதிர ஆறு ஒழுகி ஓட;
விரித்திட்டார்; உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கண் நோக்கித்
தரித்திட்டார்; சிறிது போது; தரிக்கிலர் ஆகித் தாமும்
சிரித்திட்டார்; எயிறு தோன்ற;-திருப் பயற்றூரனாரே

தேவாரம் – 4ம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

திருப்பயற்றூர்ப் பெருமான், குருதிவெள்ளம் ஆறாக ஓட யானையின் தோலை உரித்துத் தம் திருமேனியில் விரித்துப் போர்த்திக் கொண்டார். யானைத்தோலை உரித்ததனையும் போர்திக் கொண்டதையும் கண்டு பார்வதிதேவியார் அஞ்சி தம் விரல்களைப் பலகாலும் உதறி வருந்தியதைக் கண்டு, சிறிதுநேரம் அத்தோலைப் போர்த்தியபின் அவ்வாறு தொடர்ந்து போர்த்திய்ம்  ஆற்றல் இல்லாதவரைப் போலக் காட்சி வழங்கித்  அம்பிகையின் அச்சம் தெளியத் தம் பல் தெரியுமாறு  சிரித்துவிட்டார்.

விளக்க உரை

வைரவர் திருக்கோலம் முன்வைத்து.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அடங்கல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  அடங்கல்

பொருள்

  • செய்யத் தக்கது

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்களப்பன்என்பிரான்
முத்தியான வித்துளே முளைத்தெழும் தவச்சுடர்
சித்தமும் தெளிந்துவேத கோயிலும் திறந்தபின்
அத்தனாடல் கண்டபின் அடங்கலாடல் காணுமே

சிவவாக்கியர்

கருத்து உரை

எல்லா திசைகளிலும் இருந்து, எல்லா உயிர்கள் இடத்திலும் உறைந்து இருந்து எங்களது தந்தையாகவும்,  முக்தியைத் தரும் தவமாகிய சுடரினுள் வித்தாக இருக்கக் கூடியவனும் ஆகியவன் என்னுடைய இறைவன் ஆவான். சித்தம் தெளிந்து, காலத்தினால் அறுதி செய்ய இயலா வேதமாகிய கோயில் திறந்தப்பின் குரு என்றும், முனிவன் என்றும், உயர்ந்தோன் என்றும், கடவுள் என்றும் கூறப்படும் அவனின் ஆடல் கண்டப்பின் செய்யத்தக்கது என்று நினைவு கொண்டிருப்பது மாறும்.

விளக்க உரை

  • புறத்தில் எல்லா இடங்களிலும் நீக்கமற நினைத்திருக்கும் இறைவனை அகத்தில் கண்டப்பின் பிறவியின் பொருட்டு செய்யத்தக்க விஷயங்கள் எது என எளிதில் விளங்கும்.

 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பயிர்ப்பு

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  பயிர்ப்பு

பொருள்

  • அருவருப்பு
  • கூச்சம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

உயிர்க்கொலையும் புலைப் பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்
உறவினத்தார் அல்லர் அவர் புறஇனத்தார் அவர்க்குப்
*பயிர்ப்புறும்ஓர்* பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக

6ம் திருமுறை – வள்ளலார்

கருத்து உரை

புலால் மறுத்தோரை அகவினத்தார் என்றும், கொலையும் புலைப் புசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர் என்றும் அவர்கள் புற இனத்தார் என்று இறைவன் எனக்கு அருளினான்.

விளக்க உரை

  • புறத்தில் இருப்பது விலகும், அகத்தில் இருப்பது பற்றி நிற்கும் என்றபடி

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஏனை

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  ஏனை

பொருள்

  • ஒழிபு
  • மற்றையெனும்இடைச்சொல்
  • ஒழிந்த
  • மற்று
  • எத்தன்மைத்து
  • மலங்குமீன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஞானத்தி னாற்பத நண்ணுஞ் சிவஞானி
தானத்தில் வைத்த தனியால யத்தனாம்
மோனத்த னாதலின் முத்தனாஞ் சித்தனாம்
ஏனைத் தவசி இவனென லாகுமே.

திருமுறை 10 – திருமந்திரம் ஆறாம் தந்திரம் – திருமூலர்

கருத்து உரை

சிவஞானத்தை அடைந்தவன் அந்த ஞானத்தின் காரணமாக முடிவில் சிவனது திருவடியை அடைவான். அதற்கு முன்னேயும் தன்னைத்தான் சிவனது திருவடியிலே இருக்க வைத்த ஒப்பற்ற இருப்பிடத்தை உடையனாய் இருப்பான். சொல் மட்டுமின்றி மனமும் அடங்கிவிட்ட நிலையை உடையன் ஆனாதால் அவன் இவ்வுலகில் இருப்பினும் முத்தி பெற்றவனேயாவன். அதனால் அவன்தான் பெறவேண்டிய பேற்றை முழுவதுமாக பெற்றவன் ஆவான். சிவஞானத்தைப் பெறாது சிவ வேடத்தை மட்டும் புனைந்த மற்றையோனை இச்சிவஞானிபோல முத்தனும், சித்தனும் ஆவன் என்று சொல்லுதல் கூடுமோ! கூடாது.

விளக்க உரை

  • மோனம் – மௌனம். புறக்கருவி ஆகிய வாய் மட்டும் இல்லாமல் அந்தக்கரணத்தில் ஒன்றான மனம் அடங்கியதையும் குறித்தது.
  • அகத்தில் ஞானம் உடையவனே சீவன்முத்தன் என்றும், ஞானம் இன்றி வேட மாத்திரம் உடையவன் சீவன்முத்தன் ஆகான் என்பதும் கூறப்பட்டது.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – கலித்தல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  கலித்தல்

பொருள்

  • மேன்மேலும் பெருகுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஏற்றலிட் டார்கொடி கொண்டோய்
   விளக்கினை ஏற்றபெருங்
காற்றிலிட்ட டாலும் இடலாம்நெல்
   மாவைக் *கலித்திடுநீர்
ஆற்றலிட் டாலும் பெறலாம்உட்
   காலை அடுங்குடும்பச்
சேற்றிலிட் டால்பின் பரிதாம்
   எவர்க்கும் திருப்புவதே.

திருவருட்பா – மூன்றாம் திருமுறை – வள்ளலார்

கருத்து உரை

எருதினை கொடியாக உடையவனே, பெருங்காற்றிடையே நிறுத்தி விளக்கை ஏற்றென்றாலும் ஏற்றலாம்; அரிசிமாவை ஆற்றிலிட்டாலும் பெறலாம்; குடும்பமாகிய சேற்றில் உள்ளமாகிய காலையிட்டால் பின் திரும்புவது எவர்க்கும் அரிது.

விளக்க உரை

  • பெருங்காற்றில் விளக்கை ஏற்றுதலும், அரிசி மாவு ஆற்றில் இருந்து பெறுதல் இரண்டும் மீண்டும் பெறலாகாத செயல்
  • குடும்பச்சேறு தன்கண் அழுந்திய உள்ளத்தை மேன்மேலும் ஆழ்த்துவதேயன்றிப் பல்வேறு ஆசைகளை எழுப்பி அதில் இருந்து வெளிவராமல் தடுக்கும் என்ற கருத்துத் தோன்ற, “ஆடும் குடும்பச்சேறு”

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – தெண்ணீர்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  தெண்ணீர்

பொருள்

  • தெளிநீர்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

சாத்திரத்தை ஓதினர்க்குச் சற்குருவின் தன்வசன
மாத்திரத்தே வாய்க்குநலம் வந்துறுமோ – ஆர்த்தகடல்
தண்ணீர் குடித்தவர்க்குத் தாகந் தணிந்திடுமோ
தெண்ணீர்மை யாய்இதனைச் செப்பு.

திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார்

கருத்து உரை

சமுத்திரத்து நீரைப் எவ்வளவு பருகினாலும் தாகம் தணியாது; அதுபோல, நல்ல குருவினுடைய சில வார்த்தைகளினாலே உள்ளம் தெளிவுறுதல் போல வெகுநூல்களைக் கற்றாலும் உள்ளம் தெளியாது; அவ்வாறு தெளியுமானால், தெள்ளிய அறிவினையுடைய சீடனே, சொல்லுவாயாக.

விளக்க உரை

குரு இல்லாமல் நூல்களைக் கற்றுப் பயனில்லை என்று கண்டு கொள்க. அஃதாவது உண்மை ஞானம் அருள்பவர் குருவே.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பத்தா

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  பத்தா

பொருள்

  • கணவன், பர்த்தா
  • துப்பு
  • வழி
  • படிப்பணம்
  • முகவரி
  • விலாசம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

*பத்தாவுக்* கேற்ற பதிவிரதை உண்டானால்
எத்தாலும் கூடி வாழலாம் – சற்றேனும்
ஏறுமா றாக இருப்பாளே யாமாகில்
கூறாமல் சந்நியாசம் கொள்.

ஔவையார் தனிப்பாடல்கள்

கருத்து உரை

கணவனுக்கு ஏற்ற மனைவியாயின் எந்த நிலையிலும் அவளுடன் கூடி வாழலாம். அவ்வாறு இல்லாமல் மனைவி ஏறுமாறாக நடந்தால் கணவன் எவரிடத்தும் எதுவும் கூறாமல் துறவி ஆகுவதே கொள்ளத் தக்கநெறி.

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!