ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – பத்தா
பொருள்
- கணவன், பர்த்தா
- துப்பு
- வழி
- படிப்பணம்
- முகவரி
- விலாசம்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
*பத்தாவுக்* கேற்ற பதிவிரதை உண்டானால்
எத்தாலும் கூடி வாழலாம் – சற்றேனும்
ஏறுமா றாக இருப்பாளே யாமாகில்
கூறாமல் சந்நியாசம் கொள்.
ஔவையார் தனிப்பாடல்கள்
கருத்து உரை
கணவனுக்கு ஏற்ற மனைவியாயின் எந்த நிலையிலும் அவளுடன் கூடி வாழலாம். அவ்வாறு இல்லாமல் மனைவி ஏறுமாறாக நடந்தால் கணவன் எவரிடத்தும் எதுவும் கூறாமல் துறவி ஆகுவதே கொள்ளத் தக்கநெறி.