ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – முன்னை
பொருள்
- பழமை
- தமக்கை
- தமையன்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான்
பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன்- தென்னன்
பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன்
வருந்துயரந் தீர்க்கும் மருந்து
தேவாரம் – 8ம் திருமுறை – மாணிக்கவாசகர்
கருத்து உரை
இனி வரும் பிறவிகளை நீக்கும் பெரியோனும், தென் திசை அரசனும், திருப்பெருந்துறையை உடையவனும், பெருங் கருணையாளனும், வரும் துன்பங்களைத் தீர்க்கும் மருந்தாய் இருப்பவனும் ஆகிய சிவபெருமான், நான் முன்செய்தவினைகள் இரண்டையும் வேரறுத்து எனக்கு எதிரே நின்றான்.
விளக்க உரை
சஞ்சீதம் எனும் இறந்த கால கர்மாக்கள், பிரார்ப்தம் எனும் நிகழ் கால கர்மாக்கள் ஆகியவற்றை அழித்துவிட்டான். அவ்வாறு அழித்து என் முன் நின்றான் என்பதில் இருந்து ஆகாமியம் எனும் எதிர்கால கர்மாக்கள் அழிந்து விட்டன என்பது மறை பொருள். (நல்வினை, தீவினை என்று தவறான பொருள் கொண்டு இடர்படுவாரும் உண்டு).