அமுதமொழி – விசுவாவசு – பங்குனி – 2 (2026)


பாடல்

சேவிக்கு மந்திரஞ் செல்லுந் திசைபெற
ஆவிக்குள் மந்திரம் ஆதார மாவன
பூவுக்குள் மந்திரம் போக்கற நோக்கிடில்
ஆவிக்குள் மந்திரம் அங்குச மாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துபிரணவக் காட்சிக்கு இன்றியமையாத பிராணாயாமம் மந்திரத்தோடு செய்தலின் இன்றியமையாமையை கூறும் பாடல்.

பதவுரை

நம்மால் வணங்கப்படுகின்ற மந்திரங்கள் எல்லா திசைகளிலும் வியாபித்துச் செல்லும். உயிரை மேன்மை செய்யும் மந்திரங்களுக்கு ஆதாரங்கள் ஆறும் கரங்கள் ஆகும். நான்கு இதழ் தாமரை முதல் ஆயிரம் இதழ் தாமரை வரை உள்ள மந்திரங்களை குற்றமற்று ஆராந்தால் ஆன்மாவிற்கு சாதகமான உயிருக்குள்ளே உயிராக விளங்கும் பிரணவ எழுத்தே மலக் களிற்றை அடக்கும் அங்குசம் ஆகும். நினைப்பும் மறப்பும் மாறி மாறி வராதபடி, நம்மால் தியானிக்கப்படும் மந்திரம் உருவேற்றம் பெற்று நமக்கு வெற்றியைத் தரும். எனவே ஆதார தளங்களில் பிரணவத்தை மேற்கூறியவாறு குற்றமறக் காணவேண்டுமானால், அந்தப் பிராணாயாம மந்திரங்களே ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கும் அங்குசமாய் நின்று, மனத்தை ஒருமைப்படுத்தி வழிப்படுத்தும்.

விளக்கஉரை

  • செல்லுதல் – முறையாக விளங்குதல்.
  • திசை – இடம்.
  • செல்லும் திசைபெற – திசைகளில் செல்லும் நிலையினைப் பெற
  • காற்று – ஆவி. நெறிப்படுத்தப்படும் காற்று
  • உள் மந்திரம் – நினைக்கப் படுகின்ற மந்திரம், தியானிக்கப்படும் மந்திரம்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

error: Content is protected !!