ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – திருகு
பொருள்
- முறுக்கு
- பின்னு
- பறி
- முறுகு
- மாறுபடு
- முறுக்கு
- கோணல்
- சுரி
- அணியின் திருகுமரை
- மாறுபாடு
- ஏமாற்றுப்பேச்சு
- குற்றம்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
ஒரு கோட்டன் இரு செவியன் மும்மதத்தன்
நால்வாய் ஐங்கரத்தன் ஆறு
தரு கோட்டம் பிறைஇதழித் தாழ்சடையான்
தரும் ஒரு வாரணத்தின் தாள்கள்
உருகோட்டு அன்பொடும் வணங்கி ஓவாதே
இரவுபகல் உணரவோர் சிந்தைத்
திருகு ஓட்டும் அயன்திருமால் செல்வமும்ஒன்
றோஎன்னச் செய்யும் தேவே.
சிவஞானசித்தியார் – பரபக்கம் பாடல்
கருத்து உரை
ஒற்றைக் கொம்பினை உடையவன்; இரு காதுகளை உடையவன்; கன்னமதம், கைம்மதம், கோசமதம் என்ற மூவகைப்பட்ட மதயானையின் மதநீர் கொண்டவன்; நான்காவதான தொங்கும் வாயினை உடையவன்; ஐந்து கைகளை உடையவன்; வளைந்த ஓடும் ஆறு(கங்கை) பிறை நிலவு, கொன்றை மாலை சூடிகொண்டிருக்கும், நீண்ட தாழ் சடையுடையவன் நமக்கு தந்தருளிய ஒருவனாகிய யானை முகத்தினை உடையவரின் பாதங்களை இரவு பகல் பாராது பேரன்போடு வணங்கி உணர்வோரின் சிந்தைத் தரும் குற்றத்தை நீக்கும் பிரம்மனும், திருமாலும் கொடுக்கும் செல்வம் எல்லாம் ஒரு பொருளாக நின்று உணர்த்தி தருபவன்.