மகேசுவரமூர்த்தங்கள் 5/25 சந்திரசேகரர்

வடிவம்
சந்திரனை தலையில் தரித்த கோலம்(சேகரன் – காப்பாற்றுபவன். சந்திரனைக் காப்பவன்)
உருவத்திருமேனி
போக வடிவம்
திருக்கரங்கள் – மான், மழு,அபய ஹஸ்தம், ஊரு(தொடை) ஹஸ்த முத்திரை. கையைத் தொடையில் பதிந்த வண்ணம் காட்சி
கேவல சந்திரசேகர் –  தனித்த நிலையில் சிவபெருமான் தலையில் சந்திரன்.
உமா சந்திரசேகர் – உமையுடன் சிவபெருமான் தலையில் சந்திரன்.
ஆலிங்கண சந்திரசேகர்- சிவபெருமான் தலையில் சந்திரனைச் சூடி உமையை தழுவியநிலை
வேறு பெயர்கள்
பிறையோன்
பிறை சூடிய பெம்மான்
தூவெண்மதிசூடி
பிறையன்
மதிசெஞ்சடையோன்
இந்து சேகரன்
பிறைசூடி
மாமதிசூடி
சந்திர மௌலீஸ்வரர்,
சசிதரர் ,
சோம சுந்தரர்,
சசி மௌலீஸ்வரர்,
சோமநாதர்,
சசாங்க சேகரர்,
சசிசேகரர்
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
திருவீழிமிழலை
திருவான்மியூர்
வேங்கீஸ்வரம்
திருச்செந்துறை
திருப்புகலூர்- அக்னி பகவான் தவம் செய்து பாப விமோசனம் பெற்ற இடம்.
கம்பத்தடி மண்டபம், மீனாட்சி அம்மன் கோயில், மதுரை
அரம் பையங்கோட்டூர் (இலம்பையங்கோட்டூர்)
வவுனியா செட்டிக்குளம், இலங்கை
பெரும்பாலான சிவாலயங்களில் உற்சவ மூர்த்தி
மார்க்கண்டேயர் இயற்றியது –  சந்திரசேகர அஷ்டகம்
Image : Internet
உதவி : சைவ சித்தாந்தம் மற்றும் வலைத் தளங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

பிம்பங்கள்

காற்றில் ஆடும்
குமிழிகளை உடைத்து
விளையாடுகிறது குழந்தை
தன் தோழமையும்
தன்னைப் போல் இருப்பதாய்
மகிழ்வுறுகிறார் கடவுள்.







புகைப்படம் : Karthik Pasupathi

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருவெண்பாக்கம்

தல வரலாறு(சுருக்கம்)/சிறப்புகள் – திருவெண்பாக்கம்
·   கிழக்கு நோக்கிய சுயம்பு மூர்த்தி
·   சுந்தரருக்கு ஊன்றுகோல் ஈந்ததால் ஊன்றீஸ்வரர்
·   கருவறைக்கு முன்புறம் உள்ள நந்தியின் வலது கொம்பு ஒடிந்த காட்சி
·   சுந்தரரின் கண்பார்வைக்கு ஊழ்வினையே என்று கூறி மின்னல் கீற்று போல் ஒளி காட்டியவள் – மின்னொளி அம்பாள்
·   பைரவர் எட்டு கைகளுடன்
 
 
 
 
தலம்
திருவெண்பாக்கம் (பூண்டி)
பிற பெயர்கள்
பழம்பதி, திருவெண்பாக்கம்
இறைவன்
ஊன்றீஸ்வரர். ஆதாரதாண்டேசுவரர் ,சோமாஸ்கந்தர்
இறைவி
மின்னொளி அம்பாள், கடிவாய்மொழியம்மை, . தடித் கௌரி அம்பாள்
தல விருட்சம்
இலந்தை
தீர்த்தம்
குசஸ்தலை நதி, கைலாய தீர்த்தம்
விழாக்கள்
சிவராத்திரி, கார்த்திகைச் சோமவாரங்கள், ஆருத்ரா தரிசனம்
மாவட்டம்
திருவள்ளுர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 11 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோயில்,
பூண்டி – 602 023,  
+91- 44 – 2763 9725, 2763 9895. – 9245886900
பாடியவர்கள்
சுந்தரர்,
நிர்வாகம்
இருப்பிடம்
திருவள்ளூரில் இருந்து – 12 கி.மி.
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 250 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   17 வது தலம்.
ஊன்றீஸ்வரர்
 
 
மின்னொளி அம்பாள்
 
 
 
பாடியவர்                     சுந்தரர்
திருமுறை                    7ம் திருமுறை 
பதிக எண்                    089
திருமுறை எண்               1
 
பாடல்
பிழையுளன பொறுத்திடுவர்
    என்றடியேன் பிழைத்தக்கால்
பழியதனைப் பாராதே
    படலம்என்கண் மறைப்பித்தாய்
குழைவிரவு வடிகாதா
    கோயிலுளா யேஎன்ன
உழையுடையான் உள்ளிருந்
    துளோம்போகீர் என்றானே

பொருள்
குழை என்ற காதணிகலன்களை அணிந்த உடையவனே, உலகியல் வழக்கால் பிழைகள் எனப்படுகின்றவைகளை பிழை என்று எண்ணாமல் நம் பிழைகளை பெருமானார் பொருத்துக் கொள்வார் என்று எண்ணி நான் அவைகளை செய்தேன். அவ்வாறு இல்லாமல் பிழைகளை நீ பொறாததால் உனக்கு உண்டாகும் பழியை பற்றி கவலைப்படாமல் என் கண்களை மறைத்து விட்டாய். பார்வை இல்லாததால் ‘இக்கோயிலில் இருக்கிறாயா’ என்று வினவ, மானை கரங்களில் ஏந்தியவன் ‘உள்ளோம், போகீர்’  என்றானே. இது தானே அவனது கருணை.
கருத்து
திருவாரூர் வாழ்ந்து போதீரே – வடிவம்
படலம் –  கண்ணில் படர்ந்து ஒளியை மறைப்பதொன்று
மறைப் பித்தாய் – மறைவித்தாய்
உளாயே – வினா ஏகாரம்
போகீர் ` என்றது இறைவர் அருளிச்செய்த சொல்லை அவ்வாறே சுந்தரர் கூறியது.
பாடியவர்                     சுந்தரர்
திருமுறை                    7ம் திருமுறை 
பதிக எண்                    089
திருமுறை எண்               10
 
பாடல்
மான்றிகழுஞ் சங்கிலியைத்
தந்துவரு பயன்களெல்லாம்
தோன்றஅருள் செய்தளித்தாய்
என்றுரைக்க உலகமெலாம்
ஈன்றவனே வெண்கோயில்
இங்கிருந்தா யோஎன்ன
ஊன்றுவதோர் கோலருளி
உளோம்போகீர் என்றானே


பொருள்
மான் போன்ற கழுத்தினை உடைய சங்கிலியை எனக்கு தந்து, அதனால் விளையும் பயன்களை நான் புரிந்து கொள்ளுமாறு அருள் செய்தாய். உலகத்தை ஈன்றவனே, நீ இங்கி இருக்கிறாயா என்று நான் வினவ, ஊன்றுவதற்கு ஒரு கோலை அருளி, ‘உள்ளோம், போகீர்’  என்றானே. இது தானே அவனது கருணை.
கருத்து
அருள் செய்தளித்தாய் – அருளுதல் + செய்தல்+ அளித்தல், மற்றொரு பொருளில் அருளிச் செய்தல்+அளித்தல்,
வருபயன்கள் – கன்மானுபவம்
 
புகைப்படம் – இணைய தளங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 4/25 கல்யாணசுந்தரர்

வடிவம்
பார்வதி தேவியை மணக்க சிவன் எடுத்த வடிவம் – திருமண நாள் –  பங்குனி உத்திரம்
போக வடிவம்
உருவத் திருமேனி
இடங்களுக்கு ஏற்றவாறு சிவன் மேற்கரங்களில் மான், மழு. கீழ் கரங்கள் உமை அம்மை கைகள் பற்றி. மற்றொரு கரம் அருளல்.
அம்மை தலை வணங்கிய கோலம்.
சில இடங்களில்  சிவன், பார்வதி அருகினில் பெருமாள்
இஃது ஈசான்யத்தால் குறிப்பிடப்படுகிறது.
வடிவம் அமையப் பெற்ற சில திருக்கோயில்கள்
திருவேள்விக்குடி,குத்தாலம்,மயிலாடுதுறை வட்டம்
திருமணஞ்சேரி, ,குத்தாலம்,மயிலாடுதுறை வட்டம்
பவநாசம், விக்கரமசிங்கபுரம், அம்பா சமுத்திரம்
திருநல்லம் (கோனேரி ராஜபுரம்), தஞ்சாவூர் மாவட்டம்
திருவெண்காடு
திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்
திருவொற்றியூர், சென்னை
திருச்சுழி, விருதுநகர்
Image : Internet
உதவி : சைவ சித்தாந்தம் மற்றும் வலைத் தளங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

சொர்க்கம் – வீடும் வீடு சார்ந்த இடமும்

அலை கழிக்கப்படும் வாழ்வின் படகுகளில் அனுதினமும் நாம் சார்ந்திருக்கும் மனிதர்கள் நம்மைக் கொண்டாடினால்….
யட்ஷன் : உலகின் ஒவ்வொருவருக்கும் மிகச் சிறந்த நண்பன் யார்?
தருமன் : அவனது மனைவி.
மகாபாரதம் : யட்ச பர்வம்
எனக்கான கனவுகளையும், கவிதைகளையும் கொண்டாடியவள் நீ.

நீ நிஜம்
நீ காற்று
நீ ஆகாயம்
நீ ஆதார ஸ்ருதி.
அபஸ்வரத்திற்கு முன்பாகவே என்னை மாற்றியவள் நீ.
உன்னை அன்றி என்னை யார் முழுமையாக மாற்றி இருக்க முடியும்.
12 வருட காலம், காதல், தனிமை, வலிமை, அழுகை, வரம். சந்தோஷம், விருப்பங்கள், வலிகள், மாற்பட்ட கருத்துக்கள், மாறாத ஒற்றுமைகள், ஒற்றுமை, அன்பு. தமிழின் அனைத்து வார்த்தைகளுக்குள்ளும் அடைபட்டுக் கிடக்கிறது நம் வாழ்வு.
உன் பாடல் நம் பாடலாகி இருக்கிறது.
என் பாடல் நம் பாடலாகி இருக்கிறது.
காலம் இன்னமும் பாடலகளை எழுதிக் கொண்டிருக்கிறது.
தேர்தெடுக்கப்பட்டவைகள் உரிமையாளருக்கு சொந்தம் எனில், நான் தேர்ந்தெடுக்கப்பட்டவன் உன் உரிமையாக.
உனக்கான கோபங்கள் குழந்தை தன்மை உடையவை என்பதை எப்போதோ உணர்ந்தவன். அதுவே உன் கோபங்களை ரசிக்கச் செய்கிறது.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். ஆம் எனக்கு வரம் கிடைத்து விட்டது.
எனக்கான அனைத்து தருணங்களிலும் நீ இருக்கிறாய் என் ஆச்சாரியனைப் போல், ஆச்சாரியனாகவும்.

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

சிவாகமம் என்பது என்ன?
ஆன்மாக்களுக்கு (மும்) மல நாசம் செய்து சிவஞானம் புகட்டி மோஷத்தை கொடுத்தல். இது பதியாகிய இறைவனிடத்தில் இருந்து வந்த கட்டளை.
சிவாகம எதனை உணர்த்தும்?
பதி, பசு மற்றும் பாசங்களின் இலக்கணத்தையும், சரியை, கிரியை, யோகம்  ஞானம்  ஆகியவற்றின் முறைமையையும், சாலோக, சாமிப, சாரூப, சாயுச்சியம்(முக்தி நிலையின் பல்வேறு நிலைகள்) ஆகிய சதுர் மூர்த்திகளையும் தெளிவாக உணர்த்தும்.
சிவாகமங்கள் எவை எவை?
சிவனின் ஐந்து திரு முகங்களில் இருந்தும் தோன்றியவையே சிவாகமங்கள். (சிவ பேதம் – 10 ஆகமங்கள், ருத்ர பேதம் – 18 ஆகமங்கள்)
காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அஜிதம், தீப்தம், சூக்ஷ்மம், சகஸ்ரம், அம்சுமான், சுப்ரபேதம், விஜயம், நிச்வாசம், ஸ்வாயம்பு, அநலம் ( ஆக்னேயம் ), வீரம், ரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகபிம்பம், புரோக்கீதம், லளிதம், ஸித்தம், சந்தானம், சர்வோக்தம், பாரமேச்வரம், கிரணம், வாதுளம்.
சரியை, கிரியை, யோகம், ஞானம் – விளக்கம்
வழிபாடு முறை
நிலை
யோக உறுப்புக்கள்
வழிபட்டவர்கள்
சரியை
உடல் தொண்டு
பூசைப் பொருட்களைத் திரட்டல்
இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம்
திருநாவுக்கரசர்
கிரியை
ஒரு மூர்த்தியை வழிபடல்
புறப் பூசை
பிரத்தியாகாரம், தாரணை
திருஞானசம்பந்தர்
யோகம்
வழிபடும் மூர்த்தியை த்யானித்தல்
அகப் பூசை
தியானம்
சுந்தரர்
ஞானம்
அனுபவம்
அனுபவம்
சமாதி
மாணிக்கவாசகர்

* விளக்கம் முழுமை பெறவே வழிபட்டவர்கள் பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.

Loading

சமூக ஊடகங்கள்

ஸர்வமந்த்ர ஸ்வரூபிணீ

ஒரு விடியலின் பொழுதுகளில்
விருப்பத்தோடு என்னை எழுப்புகிறாய்.
நேற்றைக்கான என் கனவில்
ஆயிரம் முத்தங்கள் தந்தாய் என்கிறாய்.
கனவினை நிஜமாக்கி
தருவதில் மகிழ்வுறும்
தகப்பனாகவே 
நானும் என் நினைவுகளும்.
ஸர்வமந்த்ர  ஸ்வரூபிணீ * – லலிதா சகஸ்ரநாமம்
புகைப்படம் : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 10

தனது மகளை கல்லூரி அனுப்ப காத்திருக்கும் வேளையில் மகளை வாகனத்தில் இருத்தி தான் தரையில்நின்று   பேசும் தந்தையில் கண்களில்  மாறுதல் இல்லா ஒரு சந்தோஷம் தெரிகிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தேகத்தின் பணி தேகம் நீக்குதல் என்று உணர்பவன் மயானம் அடையான்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
அம்மா என்று அழைத்தால் எவ்வாறு தாய் மகிழ்வாளோ, அவ்வாறே நாம் குருவினை அழைக்க அவர்கள்         பிரியப்பட்டு நம்மிடம் வந்து உறைகிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
(மகா)சந்தோஷம்
மனைவி :  ஏங்க, நான் மௌன விரதம் இருக்கலாம்ன்னு இருக்கேன்.
கணவன் : நான் இப்ப பூமியிலே இல்லையே. வானத்துல இருக்கேன்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மௌனத்திருப்பவன் மயானம் அடையான்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
வினைகளை அறுப்பவனையே பெரு வலிகள் வந்து சேர்கின்றன.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பெண்கள் தங்கத்தை நேசிப்பதை விட தந்தைகள் மகள்களை நேசிக்கிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கர்வம் அழித்தலில் மருத்துவ மனைகளின் பங்கு மகத்தானது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கற்றல் தாண்டி அறிதலை கொள்பவன் மயானம் அடையான்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மூச்சுக்காற்றில் சிக்கனம் காட்டுபவன் மயானம் அடையான்.

Loading

சமூக ஊடகங்கள்

இரட்சித்தல்

பல பறவைகள்
காற்றை கிழித்து
சென்ற பின்னும்
தடயங்கள் அற்று இருக்கிறது வானம்.

நிழற்படம் – சித்திரம் நிழற்படம்

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 3/25 இடபாரூட மூர்த்தி

மகேசுவரமூர்த்தங்கள் 3/25 இடபாரூட மூர்த்தி
 
வடிவம் 
 
காளை மீது அமர்ந்த திருக்கோலம் –  ரிஷபாரூடர்
காளை அருகில் நிற்கும் திருக்கோலம் –  ரிஷபாந்திகர்
காளை(ரிஷபம்) மீது அமர்ந்து இருக்கும் திருமேனி.
நான்கு கரங்கள்.
வலது மேல் கரம் –  மழு
இடது மேல் கரம் – மான்
வலது கீழ் கரம் – அபய முத்திரை
இடது கீழ் கரம் – வரத முத்திரை
பிறை சந்திரன் – தலையில்
உமை அம்மை இடப்புறம்
காளையாக மகாவிஷ்ணு
யோக வடிவத்தால் குறிப்பிடப்படும்
சிவனில் பஞ்ச முகத்தில் ஒன்றான ஈசான்ய முகத்தில் இருந்து தோற்றம்.
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் – மூலவர் – விராதனூர் (மதுரை)
சிதம்பரம்
திருவாவடுதுறை
திருலோக்கி – திருவிடை மருதூர் அருகில்
விசயமங்கை – கோவந்த புத்தூர் – (கோவிந்தபுத்தூர்) – சுதை
திருத்துறையூர் – பண்ருட்டி
திருக்கோலக்கா – நாகப்பட்டினம் – சுதை
திருப்பழுவூர் –  தற்போது (கீழைப் பழுவூர்) – அரியலூர் –  சுதை
திருவான்மியூர் – சென்னை –  சுதை
திருவேற்காடு – – சென்னை –  சுதை
குடுமியான்மலை – புதுக்கோட்டை
சங்கரன் கோவில் –  சங்கர நாராயணர் கோவில்
பெரும்பால சிவன் கோவில்களில் இந்த வடிவம் கற் சிற்பமாகவே காணப்படுகிறது.
 
Image : Internet

Loading

சமூக ஊடகங்கள்

அனுட்டானம் செய்வது ஏன்?




அனுட்டானம்செய்வது ஏன்?











ஆன்மீகம்: இறைவனை அடையும் முதல் வகைப்பயிற்சி
அறிவியல்:
1. தலைமுதல் கால் வரை உடலில்திருநீறு பூசுவதால், உடலில் இருக்கும் நீர்நீக்கப்படும்.
2. அனுட்டானம்செய்வதற்கு செப்பு பாத்திரங்களே அதிகம்பயன்படுத்தபடும். இவை உடலில் இருக்கும்மாசுக்களை நீக்க வல்லவை. இதனால்உடற் பிணிகள் நீங்கும்.
3. அனுட்டானம்  முறைகளுக்குதக்கவாறு 12 முதல் 16 இடங்களில் திருநீறு அணிவர். இதனால் அந்தஇடங்களில் இருக்கும் வலிகள் நீக்கப்படும். (தொடுவர்மம்போன்றவை)
4. மந்திரஉச்சாடன ஒலிகள் குறிப்பிட்ட காலமாத்திரைகளில் நிகழ்வதால், மூச்சுக் காற்று சீராகி மனஇறுக்கம் மற்றும் அதன் சார்ந்தவியாதிகள் தடுக்கப்படும்.
மற்ற விஷயங்களை குரு முகமாக அறிக.
Image : Internet

Loading

சமூக ஊடகங்கள்

கரை ஏற்றம்

குளித்துக் கரை ஏறிய
பின்னும் இருக்கின்றன
நீரும் சில நினைவுகளும்.









புகைப்படம் : Bragadeesh Prasanna

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 2/25 நடராஜர்

வடிவம்
கேசாதி பாதமாக
முகம் – சாந்த சொருபம்
கூந்தல் அருகினில் நாகம் – கால சக்கரம்
கங்கை – அருளுதலை முடிவறச் செய்பவன்.
பிறைச் சந்திரன் – தீங்கு இழைத்தவர்களையும் மன்னித்து அருளுதல்
வலப்புற மேற்கை – டக்கா என்ற உடுக்கை(ப்ரணவ நாதம் தோற்றம்) – படைத்தல் 
இடப்புற மேற்கை – தீச்சுவாலை – அழித்தல் 
வலப்புற கீழ்க்கை – அபய முத்திரை – காத்தல் 
இடப்புற  கீழ்க்கை  – தும்பிக்கை நிலை (கஜ ஹஸ்தம்) – மறைத்தல்
சில இடங்களில் கைகளில் மான் – மனம் நிலையற்று இறைவனிடத்தில் மட்டும் ஒடுங்குதலைக் குறிக்கும்.
ஊற்றிய வலது கால் – த்ரோதண சக்தி – உயர் ஞானத் தேடல்
வலது கால் கீழ் – அபஸ்மாரன் அசுரன்(முயலகன் என்றும் கூறுவாரும் உண்டு) – முற்றுப்பெறா காமம்
தூக்கிய இடது கால் – ஆணவம் மற்றும் மாயை
குண்டலி சக்தி என்று குறிப்பிடப்படுவதும் உண்டு.
புலித்தோல் – இயற்கையை அணிதல்
நெருப்பு வட்டம் – ப்ரபஞ்ச நடனம்
நெருப்பு வட்டம் ஒவ்வொன்றும் மூன்று சிறு ஜ்வாலைகள் கொண்டது. அவை முறையே தோற்றம், இருப்பு மற்றும் முடிவு.
நெருப்பு வட்டத்திற்கும் எண்ணிக்கை உண்டு.
உடுக்கை ஒலி முனிவர்களுக்கு ஏற்றவாறு
பரதமுனி – நாட்டியம்
நாரதமுனி – சங்கீதம்
பாணினிமுனி – வியாகரணம்
பதஞ்சலிமுனி – யோகம்
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
திருவாலங்காடு  – ரத்தின சபை –கால் மாற்றி நடனம்
சிதம்பரம் – கனகசபை 
மதுரை  – ரஜிதசபை (வெள்ளி சபை) – கால் மாற்றி நடனம்(பாண்டிய மன்னன் வேண்டுகோளுக்கு இணங்கி)
திருநெல்வேலி – தாமிரசபை – திருநெல்வேலி
சித்திரசபை – திருக்குற்றாலம்
திரு உத்திரகோச மங்கை – மரகதத்திருமேனி
ஸ்ரீவில்லிபுத்தூர்  மடவார் விளாகம் –  ஒரே கல்லில் செய்யப்பட்ட நடராஜர்
பேரூர் பட்டீஸ்வரர்
தஞ்சை பெரிய கோவில்
மற்றும் எல்லா சிவாலயங்கள் ((பட்டியல் முடிவற்றதாகிறது)
சிறப்புகள்
கூத்தன் – கூத்துக்களை செய்பவன்
அம்பல வாணன் – அம்பலத்தில் ஆடுபவன்
நட ராஜன் – ஆடல் கலையில் அரசன்
சபேசன் – சபைகளில் ஆடுபவன்.(5 சபைகள் )
இதரக் குறிப்புகள்
அருணகிரி நாதருக்கு திருச்செந்தூரில் காட்சி
ஒன்றி இருந்து நினைமின்கள்! உம் தமக்கு ஊனம் இல்லை; 
கன்றிய காலனைக் காலால் கடிந்தான், அடியவற்கா; 
சென்று தொழுமின்கள், தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்!-
“என்று வந்தாய்?” என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே.
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும், 
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால் 
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!
Image : Internet
உதவி : சைவ சித்தாந்தம் மற்றும் வலைத் தளங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

இற(ர)த்தல்

கடைக்காரனிடம்
கடன் சொல்லி வாங்கிவந்த
காகிதத்தில் கர்ணன்.
புகைப்படம் :  Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 1/25 சோமாஸ்கந்தர்

 
வடிவம்
இறைவனான சிவனுக்கும், இறைவியாகிய பார்வதிக்கும் இடையே முருகப் பெருமான் வீற்றிருக்கும் திருக்கோலத்தை குறிப்பிடுவதே இது
அடர்ந்த திருக்கோலம். இடது கால் மடித்து, வலது கால் தொங்கவிட்டு.
நான்கு திருக்கரங்கள்
பின் இரு திருக்கரங்களில் மான், மழு.
முன் இரு திருக்கரங்களில் அபய முத்திரை, வரத முத்திரை
அம்பிகைஎதிர் மறை கால் மடித்து
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
  • திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில்
  • காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்
  • குமரக்கோட்டம்
  • காமாட்சியம்மன் கோயில்
  • தென்காசி காசி விஸ்வநாதர் கோயில்
  • திருக்கேதீஸ்வரம்இலங்கை
  • திருக்கருகாவூர்
  • திருக்கள்ளில்
சிறப்புகள்
இல்லற வாழ்வினையும் அதன் சிறப்புகளையும் மக்கட்பேறு முதலியவற்றை குறிக்கும்.
இதரக் குறிப்புகள்
சிறு தொண்டருக்கு இவ்வடிவ காட்சி
1.
ஏவலார் குழல் இறைவிக்கும் எம்பிரான் தனக்கும்
பாலன் ஆகிய குமரவேள் நடுவுறும் பான்மை
ஞால மேலுறும் இரவோடு பகலுக்கும் நடுவே
மாலை யானதொன்று அழிவின்றி வைகுமாறதொக்கும்
 – கந்தபுராணம்
2.
தம்மேனி வெண்பொடியால் தண்ணளியால் ஆரூரர்
செம்மேனி கங்கைத் திருநதியேஅம்மேனி
மானே யமுனை; அந்த வாணி நதியும் குமரன்
தானே குடைவேம் தனித்து
திருவாரூர் நான்மணிமாலைகுமர குருபர சுவாமிகள்
 
Image : Internet

Loading

சமூக ஊடகங்கள்

பூக்கள் முளைத்த பாதைகள்

மாலைச் சூரியன்
செந் நெருப்பாகிக்
கொண்டிருக்கிறது.
முடிவற்ற ஒரு பயணத்திற்கான
தொடக்கத்தில் நீயும் நானும்.
உனக்கான மௌனத்தில் நீயும்
எனக்கான மௌனத்தில் நீயும்.
வார்த்தைகளை உடைத்து
கடைசியான ஒரு கவிதை கேட்கிறாய்.
அஸ்தமனத்திற்கான பின் விடியல் ஏதுஎன்கிறேன்.
உடைப்பட்ட வார்தைகளில் வலி
உன் கண்களில்.
என்றோ ஒரு நாளின்பயணத்தில்
உனக்கான சூரிய அஸ்தமனம்தெரியலாம்.
எனக்கான சூரிய அஸ்தமனம்தெரியலாம்.
அந்த நாளில் நம் இருவருக்கும்
மௌனம் பொதுவாக இருக்கலாம்
அழகிய கனவுகளையும்
சலனம் கொண்ட நிஜங்களையும்
தனித்தனியே சுமந்து

புகைப்படம் & Model : Stri

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் – முன்னுரை

சிவன் என்ற சொல் சிவந்தவன் என்ற பொருளில் ஆளப்படுகிறது. ஆதி சித்தன், ஆதி தேவன், ஆதி நாதன், ஊழி முதல்வன் என்று எந்தப் பெயர் இட்டு அழைத்தாலும் அது முழுவதும் சிவன் பெயரே ஆகும்.
 
சிவன் பெரும்பாலும் அழித்தல் தொழிலுக்கு உரியவன் என்று கூறப்படுகிறது. அது நிச்சம்தான். ஊழ் வினைகளை அழிப்பவன்.
ருத்ரன், மகாதேவன் சதாசிவம் என்று பல பெயர்களில் அழைத்தாலும் அது வேறு வேறு வடிவங்களையே குறிக்கிறது.
சிவனுக்கான தொழில்கள் 5.
ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் அருளுதல்.
சிவபெருமானின் இருபத்து ஐந்து சிவமூர்த்தங்கள் மகேசுவரமூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
சிவனுக்கான வடிவங்களும் பெயர்களும் எண்ணிக்கையில் வேறுபட்டாலும் சைவ சித்தாந்தக் கருத்துப்படி 25 ஆகும்.
அவையாவன (தருமை ஆதீனம் – சைவ சித்தாந்தப்படி)
  1. சோமாஸ்கந்தர்
  2. நடராஜர்
  3. ரிஷபாரூடர்
  4. கல்யாணசுந்தரர்
  5. சந்திரசேகரர்
  6. பிட்சாடனர்
  7. லிங்கோற்பவர்
  8. சுகாசனர்
  9. சக்திதரமூர்த்தி
  10. அர்த்தநாரீஸ்வரர்
  11. சக்ரவரதர்
  12. திரிமூர்த்தி
  13. ஹரிஹர்த்தர்
  14. தட்சிணாமூர்த்தி
  15. கங்காளர்
  16. காமாரி
  17. காலசம்ஹார மூர்த்தி
  18. சலந்தாரி
  19. திரிபுராரி
  20. சரபமூர்த்தி
  21. நீலகண்டர்
  22. திரிபாதர்
  23. ஏகபாதர்
  24. பைரவர்
  25. கங்காதர மூர்த்தி
ஒவ்வொரு கட்டுரையிலும் இறைவனின் வடிவங்கள் அதற்குரிய ஊர் , சிறப்புகள் போன்ற விஷயங்களை எழுத உள்ளேன்.
‘அவன் அருளாளே அவன் தாள் வணங்கி’  என்பதற்கு ஏற்ப அவன் துணை கொண்டு அவன் பற்றிய வடிவங்களை அவனே அருளட்டும்.

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருப்பாச்சூர்

  • சிவன் சுயம்பு மூர்த்திசதுர வடிவ பீடம்
  • மூலவர்தீண்டா திருமேனி
  • அர்த்த மண்டபத்தில் ஸ்ரீசக்கரம்ஆதிசங்கரர் பிரதிஷ்டை
  • மூங்கில் வனத்தில் தோன்றியதால் பாசுரநாதர். பாசுர் – மூங்கில்
  • விஷ்ணு துர்க்கை மகிஷாசூரன் இல்லாமல்
  • தாழம்பூ தன் தவறு உணர்ந்து வேண்டியதால் மன்னித்து சிவராத்திரியில் ஒரு கால பூஜைக்கு மட்டும் பரிகாரம் பெற்ற தலம்.
  • தட்ச யாகத்திற்கு சென்ற அம்பாளை சாதாரண பெண்ணாக பிறக்கச் செய்து, தவம் செய்ய வைத்துதன் காதலியேஎன்று அழைத்த இடம்.
  • விஷ்ணு அசுரர்களை அழித்த தோஷத்தால் 16 செல்வங்களில் 11இழந்து சிவனை வணங்கி 11 விநாயர்களை பிரதிஷ்டை செய்து மீண்டும் அனைத்து செல்வங்களும் பெற்ற இடம்திரிபுராந்த தகனத்தில் தன்னை மதியாமல் சென்றதால் தேரின் அச்சு முறித்து சபை அமைத்து காரணங்களை சிவனிடம் வினாயகப் பெருமான் வினவிய இடம்
  • மேய்சலுக்கு வந்த பசுக்களில் ஒன்று பால் சொரிந்தது கண்டு வாசி என்னும் கருவியால் தோண்டி வெட்டுப்பட்டு தானே மூங்கில் காட்டில் இருப்பதை மன்னனுக்கு உணர்த்திய இடம்
  • கஜபிருஷ்ட விமானம்
தலம்
திருப்பாசூர்,
பிற பெயர்கள்
தங்காதலிபுரம்
இறைவன்
வாசீஸ்வரர், பசுபதீஸ்வரர், உடையவர், பாசூர்நாதர், சோமாஸ்கந்தர், வினை தீர்த்த ஈஸ்வரன்
இறைவி
தங்காதளி, பசுபதிநாயகி, மோகனாம்பாள், பணைமுலை
தல விருட்சம்
மூங்கில்
தீர்த்தம்
சோம தீர்த்தம்மங்கள தீர்த்தம்
விழாக்கள்
வைகாசி பிரம்மோற்ஸவம்,
 மார்கழி திருவாதிரை
மாவட்டம்
திருவள்ளுர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 12 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
அருள்மிகு வாசீஸ்வர சுவாமி திருக்கோயில்,
திருப்பாசூர் – 631 203,  
+91- 98944 – 86890
பாடியவர்கள்
அப்பர்சுந்தரர்திருஞான சம்மந்தர்
நிர்வாகம்
இருப்பிடம்
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து – 7 கி.மி.
திருவள்ளூர் நகர பேருந்து நிலையத்தில் இருந்து -3 கி.மி.
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 249 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   16 வது தலம்.
அம்பிகைதிருமால் மற்றும் சந்திரன் ஆகியவர்கள் வழிபட்ட தலம்
வாசீஸ்வரர்
 
தங்காதளி
பாடியவர்                     திருஞானசம்மந்தர்
திருமுறை                    2ம் திருமுறை 
பதிக எண்                    060
திருமுறை எண்               8
பாடல்
தேசு குன்றாத் தெண்ணீ ரிலங்கைக் கோமானைக்
கூச வடர்த்துக் கூர்வாள் கொடுப்பார் தம்மையே
பேசிப் பிதற்றப் பெருமை தருவா ரூர்போலும்
பாசித் தடமும் வயலுஞ் சூழ்ந்த பாசூரே.


பொருள்
புகழ் குறையாத, தெளிந்த நீரை உடைய கடலால் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனை அவன் மனம் கூசுமாறு செய்து அவனுக்கு வாளைப் பரிசாகக் கொடுத்தவர். தம்மைப் பற்றி பேசி, பிதற்றும் அடியவர்களுக்கு அருள் தருபவர். அது மூங்கில் மரங்களும் வயல்களும் சூழ்ந்த பாசூர் ஆகும்.
கருத்து
·         தவறு செய்தாலும் அவற்றை விலக்கி அருள் செய்பவர் என்பது இராவணனுக்கு அருளிய நிகழ்வு உணர்த்தும்.
·         குன்றா – குறையாத
·         தம்மைப்பற்றி பேசுதல் என்பது இழிவானது. அது அதிகமாகும் போது பிதற்றல் ஆகிறது. அதாவது பொருள் அற்றதாகிறது. அவர்களுக்கும் அருள்பவர் சிவன்.
·         பாசித்தடம் – நீர்ப்பாசியை வைத்து நீர் நிறைந்த குளங்களை உடைய என்று பல விளக்கங்களிலும் எடுத்தாளப்பட்டிருக்கிறது. பாசு என்பது மூங்கிலைக் குறிப்பதால் மூங்கில் காடுகளை உடைய என்று இப்பாடலில் என் பொருளாக விளக்கப்பட்டிருக்கிறது.
 
பாடல்
 
பாடியவர்                     அப்பர்
திருமுறை                    6ம் திருமுறை 
பதிக எண்                    083
திருமுறை எண்               1
விண்ணாகி நிலனாகி விசும்பு மாகி
வேலைசூழ் ஞாலத்தார் விரும்பு கின்ற
எண்ணாகி எழுத்தாகி இயல்பு மாகி
ஏழுலகுந் தொழுதேத்திக் காண நின்ற
கண்ணாகி மணியாகிக் காட்சி யாகிக்
காதலித்தங் கடியார்கள் பரவ நின்ற
பண்ணாகி இன்னமுதாம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.


பொருள்
பாசூரில் உறையும் இறைவன் விண்ணாகவும், நிலமாகவும், மேகமாகவும், கடல் சூழ் உலகில் உள்ள பூமியில் உள்ளவர்கள் விரும்பும் எண்ணாகவும், எழுத்தாகவும், இவை அனைத்தும் இயல்பாகவும், ஏழ் உலகத்தில் இருப்பவர்களாலும் வணங்கப்படுவனாகவும், காட்சிக்கு உரிய கண்ணாகவும், அக் கண்ணுள் இருக்கும் மணியாகவும், அதனால் உணர்த்தப்படும் காட்சியாகவும், காதல் கொண்டு அடியார்கள்  பாடும்  பண் நிறைந்த  பாடலாகவும், இனிய அமுதமாகவும் இருக்கிறான். இப்படிப்பட இறைவனை கண்டு அடியேன் உய்ந்தேன்.
கருத்து
விசும்பு – மேகம்,
வேலை – கடல்
காட்சி, காண்பவர், காணப்படும் பொருள் என்ற சைவ சித்தாந்தக் கருத்து இப்பாடலோடு ஒப்பு நோக்கக் கூடியது.
புகைப்பட உதவி :  Internet
 
 
 
 

Loading

சமூக ஊடகங்கள்

2038 – Love-Anti-Love Pill

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

1.
சார் எனக்கு 10 மாத்திர வேணும். ஏன்னா நான் அழகா இருக்கேன்னு(அட பிக்காளிப் பயலே..) பல பேர்  சொல்லி இருக்காங்க. நான் 1st year Aero – Z படிக்கிறேன். Areo – B ரெண்டு பொண்ணுங்க, Mechanical – AZ    ஒருபொண்ணு, 2nd year CSE AZ    ஒருபொண்ணு, 3 year ECE- C ல ரெண்டு பொண்ணுங்க, Final year IT ல ரெண்டு பொண்ணுங்க, Passed out CSE – H ல மூணு பொண்ணுங்க அழகா இருக்காங்க. அவங்களுக்கு குடுக்கணும்
2.
Pre KG Students.
1 : டேய் மச்சான் எனக்கு 5 anti love tablet சொல்லுடா.
2 : ஏண்டா என்னடா ஆச்சு.
1 : பின்ன என்னடா நயந்தாரா, சமந்தா, அஞ்சலி யாருமே திரும்பி கூட பாக்க மாட்டேங்கிறாங்க.
3.
Love/Anti-Love Pill கண்டுபிடித்தவனும் ஒரு நாள் காதலில் தோற்றிருப்பான்.
இப்படிக்கு Love/Anti-Love Pill வாங்க காசில்லாமல் தத்துவம் பேசுவோர் சங்கம்
4.
Lover : டேய் இன்னாடா பேஜார் பண்ர. ரொம்ப பேஸ்ன 8 anti love pill போட்டு உட்டு போய்டே இருப்பேன்.
5.

இந்த மிஷின் புது கண்டுபிடிப்பு சார். Love  சினிமா பாட்டு எழுத 5 tablet சார். அதே மாதிரி anti Love  சினிமா பாட்டு எழுத 5 tablet சார். ரொம்ப சிம்பிள் சார்.

புகைப்படம் : SLKumar

Loading

சமூக ஊடகங்கள்

ஜனித்தல் – நினைவுகளுக்கு மட்டும்

பாதம் தொடும்
எல்லா அலைகளும்
இழுத்து வருகின்றன
பழைய நினைவுகளை.













புகைப்பட உதவி: Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்