காற்றில் ஆடும் சருகுகள் – 18

Ethnic and party wear for your infants.  உங்க வியாபார அழிச்சாட்டியத்துக்கு அளவே இல்லையாடா?
———————————————————————————————————————————————————————–
ஆசிரியர்:  பிரளய காலம் – உதாரணம் தருக.
மாணவன் : சமையல் குறிப்பை TVல் பார்த்து எங்க அம்மா எழுத ஆரம்பிக்கும் தருணங்கள்.
செத்தாண்டா சேகரு.
———————————————————————————————————————————————————————–
சில மாதங்களுக்கு முன்
உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா?
சில தினங்களுக்கு முன்
உங்க பேஸ்ட்ல ஸுகர் இருக்கா?
சில மாதங்களுக்கு பின்
ஏங்க, வீட்ட உப்பு மொளா, புளீ இல்லீங்க.
இருடி, பேஸ்ட் கம்பெனி காரணுக்கு சொல்லி அனுப்புறேன்.
உங்க கண்டுபிடிப்புல தீய போட்டு கொளுத்த.
———————————————————————————————————————————————————————–
கிளினிக் வாசல் board -ல்
தொல்காப்பியன், தொண்டை சிகிச்சை நிபுணர்(தங்க மெடல் பெற்றவர்)
உங்க அழிச்சாட்டியத்துக்கு அளவே இல்லையாடா?
———————————————————————————————————————————————————————–
Coca Cola – Train Advert 2015
ஒரு மனிதன் ரயில் ஏற முயற்சிக்கிறான். இடம் பிடிக்கிறான். அருகில் இருப்பவர்கள் தொல்லை செய்கிறார்கள். பல கஷ்டங்களுக்கு பிறகு குளிர் பானம் அருந்த செல்கிறான். அங்கும் அவனுக்கு அவன் விரும்பியது கிடைக்கவில்லை.
கடைசியாக தான் விரும்பிய பானத்தை குடித்துவிட்டு ஏப்பம் விட்டுச் செல்கிறான்.
1.   பன்னாட்டு குளிர் பானங்கள் குடித்த பிறகு இப்படித்தான் ஏப்பம் வருமா?
2.   இதே விளம்பரத்தை தனது தாய் திருநாட்டில் இதை போன்றே வெளியிடுவார்களா?
3.   இந்தியாவில் மட்டும் தான் இப்படி இந்த பானம் குடித்தபிறகு ஏப்பம் வருமா?
இதை விட coca cola தன்னைத்தானே அசிங்கப்படுத்திக் கொள்ள முடியாது.
———————————————————————————————————————————————————————–
குழந்தைகள் வளர்கிறார்கள் என்பதே பயத்தின் முதன்னைக் காரணமாக இருக்கிறது.
———————————————————————————————————————————————————————–
எனது மகன் வீட்டில் நுழைகிறான். நோயுற்று படுத்திருக்கிறேன்.
மிகக் கலவரமாக  என்னா ஆச்சு’
இயலாமையை கைகளால் காண்பிக்கிறேன். ‘பேச முடியவில்லை’
அவன் கண்களில் ஒளிக்கீற்று.
அப்ப இன்னைக்கு ஜாலியா  T.V பாக்கலாம், system எடுத்துக்கிட்டு games விளையாடலாம், tab வச்சி விளையாடலாம். உங்க மொபைல்லயும்  games ஆடலாம். Thank you GOD.
———————————————————————————————————————————————————————–
மனைவி:
இன்னைக்கு ஞாயிற்று கிழம. அதால நீங்க என்ன செய்றீங்கன்னா துணி எல்லாம் தொவைக்கிறீங்க, வீட்ட க்ளீன் பண்றீங்க……….
என்னங்க, சொல்லி முடிக்கிறத்துக்குள்ள சாயங்காலம் ஆகிடுச்சி.
கணவன்: ????

சமூக ஊடகங்கள்

சொர்க்கம் – வீடும் வீடு சார்ந்த இடமும்

அலை கழிக்கப்படும் வாழ்வின் படகுகளில் அனுதினமும் நாம் சார்ந்திருக்கும் மனிதர்கள் நம்மைக் கொண்டாடினால்….
யட்ஷன் : உலகின் ஒவ்வொருவருக்கும் மிகச் சிறந்த நண்பன் யார்?
தருமன் : அவனது மனைவி.
மகாபாரதம் : யட்ச பர்வம்
எனக்கான கனவுகளையும், கவிதைகளையும் கொண்டாடியவள் நீ.

நீ நிஜம்
நீ காற்று
நீ ஆகாயம்
நீ ஆதார ஸ்ருதி.
அபஸ்வரத்திற்கு முன்பாகவே என்னை மாற்றியவள் நீ.
உன்னை அன்றி என்னை யார் முழுமையாக மாற்றி இருக்க முடியும்.
12 வருட காலம், காதல், தனிமை, வலிமை, அழுகை, வரம். சந்தோஷம், விருப்பங்கள், வலிகள், மாற்பட்ட கருத்துக்கள், மாறாத ஒற்றுமைகள், ஒற்றுமை, அன்பு. தமிழின் அனைத்து வார்த்தைகளுக்குள்ளும் அடைபட்டுக் கிடக்கிறது நம் வாழ்வு.
உன் பாடல் நம் பாடலாகி இருக்கிறது.
என் பாடல் நம் பாடலாகி இருக்கிறது.
காலம் இன்னமும் பாடலகளை எழுதிக் கொண்டிருக்கிறது.
தேர்தெடுக்கப்பட்டவைகள் உரிமையாளருக்கு சொந்தம் எனில், நான் தேர்ந்தெடுக்கப்பட்டவன் உன் உரிமையாக.
உனக்கான கோபங்கள் குழந்தை தன்மை உடையவை என்பதை எப்போதோ உணர்ந்தவன். அதுவே உன் கோபங்களை ரசிக்கச் செய்கிறது.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். ஆம் எனக்கு வரம் கிடைத்து விட்டது.
எனக்கான அனைத்து தருணங்களிலும் நீ இருக்கிறாய் என் ஆச்சாரியனைப் போல், ஆச்சாரியனாகவும்.

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 9

போராட்டங்களில் முடிவு மௌனத்தில் நிறைவு பெறுகிறது.
———————————————————————————————- 
சந்நியாசிகள் உருவாவதில்லை. உருவாக்கப் படுகிறார்கள்.
———————————————————————————————- 
இரு பெண் குழந்தையின் தகப்பனின் கண்களில் ஒரு கர்வம் இருக்கத்தான் செய்கிறது. முன்று பெண் குழந்தைகளை கொண்டிருப்பவனின் கண்களில் கர்வமும், கவலையும் தெரிகிறது.
———————————————————————————————- 
பேருந்து நிலையத்தில் மனைவியிடம் பணம் பெறும் கணவனின் கண்கள் எப்போதும் மண் நோக்கியே இருக்கின்றன. கண்கள் நீர் கோத்தே இருக்கின்றன.
—————————————————————————————————————————————————————- 
நேசித்தல் இயல்பாகும் வரையினில் வலிகள் இருக்கும்.
—————————————————————————————————————————————————————-
யாரும் அற்ற பேருந்து நிழற் குடையில் உறங்கும் மனிதனின் சந்தோஷங்கள் நிலையானவையா?
—————————————————————————————————————————————————————-
தனது மகனை முத்தமிடும் தாயின் கண்கள் எப்போதும் பனித்திருக்கின்றன.
—————————————————————————————————————————————————————-
பெண்ணைத் துறக்கும் எந்த ஆணிற்கும், தன் பெண்ணைத் துறத்தல் அரிதாகவே இருக்கிறது.
—————————————————————————————————————————————————————-
காரினில் முன்னிருக்கையில் தாயில் மடியில் அமர்ந்து வாயில் விரல் வைத்து செல்லும் குழந்தையின் கனவுகளும் ஏக்கங்களும் என்று நிஜமாகும்?
—————————————————————————————————————————————————————-திருமண கோலத்தில் இருப்பவர்களைப் பார்த்து மற்றவர்கள் ஏன் சிரிக்கிறார்கள் என்று இப்போழுது 
தான்  தெரிகிறது. (டேய், போடா, போடா)

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 8

நம் குழந்தைகள் நம் முன்னே வளர்தல் தான் உலகின் மிகப் பெரிய அதிசயம்.
——————————————————————————————————————————————————————-
மறுத்தலில் மகிழ்வுறுபவன் மயானம்அடையான்.
——————————————————————————————————————————————————————-
மிகக் குறைந்த தூரம் ஷேர் ஆட்டோவில் பயணிக்கும் மிக வயதானவனில் அருகில் அமரும் இளம்   பெண்கள், யாரும் அறியாமல் ஒரு இதழ் வழி புன்னகையை வயதானவனிடம் ஏற்படுத்துகிறார்கள்.
——————————————————————————————————————————————————————-
விளக்கில் இருந்து எடுத்த பின்னும் நூல் திரியில் இருக்கும் எண்ணை தீரும் வரை அது எரியும்.  அதுபோல்  ஆன்மாக்கள் பக்குவம் பெறாமல் ஆசைகள் இருக்கும் வரை பழைய வாசனையின் காரணமாக பிறப்பு தொடர்ந்து கொண்டிருக்கும்.
——————————————————————————————————————————————————————-
சிறு மழையில்தாயின் குடையில் வராமல் தலையை குடைக்குள் வைத்து கைகளை மழையில்   நனைந்து செல்லும் சிறார்களில் சந்தோஷங்கள் வலிமையானவை.
——————————————————————————————————————————————————————-
மனைவி :  இன்னைக்கு லீவுஇன்னைக்கு முக்கியமா…. என்னங்க பேசாம இருக்கீங்க.
கணவன் : கையால் சைகை காட்டி – மௌனம் (எப்புடி)
மனைவி :  எல்லா நாளும் அப்படித் தான் பேசாம இருக்கீங்கஇது என்ன புதுசா (எப்புடி
——————————————————————————————————————————————————————-வாசிப்புக்கு உரிய கைகள் யாசித்தலே வாழ்வின் மகத்தான வலிகளில் ஒன்று.
——————————————————————————————————————————————————————-புகைவண்டியில் பயணிக்கும் போது பொருள் வேண்டி பாடும் கண்கள் அற்றவனின் ‘முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்‘ என்ற பாடல் அதிக வலி உண்டாக்குகிறது.
——————————————————————————————————————————————————————-
தனது முதல் நரையைகாணும்ஆணின்மனவலிகள் அதிகமானவை. பெண்ணின் மனவலிகள் அதைவிடஅதிகமானவை.
——————————————————————————————————————————————————————-மனைவியின்பயண்பாட்டிற்குஏற்றவாறு கணவன் நேசிக்கப்படுகிறான்.

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 6

மனிதர்களை விட வீடுகள் அதிகமாக வலிகளைஉள்வாங்குகின்றன.
——————————————————————————-விடுமுறை தினத்தில் எழுப்பப்படும் குழந்தைகளின் ‘5 மினிட்ஸ் ப்ளிஸ்‘ என்ற வார்த்தைகள் நூறு   ஆயிரம் சிறகசைப்புகளை தோற்றுவிக்கிறது.
—————————————————————————————————————————————————————–
ஒவ்வொரு பனித்திருக்கும்  கண்களும் உணர்த்துகின்றன தனதுப்ராத்தனையை இறைவன்ஏற்றுக் கொண்டதை.
—————————————————————————————————————————————————————–
இருக்கை முன்அமர்த்து செல்லும் 3 வயதுபெண்குழந்தைவெவ்வேஎன்றுபழிப்பு காட்டுவதில் பயணம்முடிந்து விடுகிறது. நினைவுகள் மட்டும் தொடர்கிறது.
—————————————————————————————————————————————————————–
உதிரும் சொற்களை விட உலரா கண்ணீரும், அதன் சார்ந்த மௌனமும் பெரும் காயம் ஏற்படுத்துகின்றன.
—————————————————————————————————————————————————————–
காலைநேரத்தில் வெற்றுகாகிதத்தை விரட்டி சிறுநாயின்சந்தோஷம் மனிதசந்தோஷங்களை விடமிகஅதிகமாக தெரிகிறது.
—————————————————————————————————————————————————————–
பேருந்தில் பயணம்செல்பவர்களை விடஅவர்களின் கனவுகள் அதிகமாக இருக்கின்றன. அக்கனவுகள் முதல்இழப்பைவிடஅதிகவலியுடன் இருக்கின்றன.
—————————————————————————————————————————————————————–
வித்தை தெரிந்த வீரன் மரணத்தின் போது மட்டும் போராடுவதில்லைமரணம் வரும் வரை   போராடுவான்நான் வீரன்
—————————————————————————————————————————————————————–
தனி மனித வாழ்வு எப்போதும் பிறரால் தீர்மானிக்கப் படுகிறது. உ.ம் பேருந்தில் ஜன்னல் அருகில் இருப்பவன் நமக்கும் சேர்த்து முடிவு செய்கிறான் நமக்கு காற்று வேண்டுமா இல்லையா என்று.
—————————————————————————————————————————————————————–

மறுதலித்தலும் நிராகரிக்கப்படுவதும் வீட்டில் இருந்து தொடங்கப்பட வேண்டும். ஏன்எனில்அவைகள்உலகங்களால் கற்றுக் கற்றுத்தரும் போதுவலிகள்அதிகமாக இருக்கும்.

சமூக ஊடகங்கள்

நகர மறுக்கும் நினைவுகள் – 6 – உன் கண்ணில் நீர் வழிந்தால்..

படம் :வியட்நாம் வீடு
இன்றைக்குஇருப்பதுபோல் மிகப் பெரிய காட்சி அமைப்புகள் இல்லாமல் கவிதையும் இசை சார்ந்த வடிவங்களும் கொண்ட ஒரு பாடல்.
ஒரு நிஜமான கணவன் மனைவியின் வாழ்வுகள் பதிவு செய்யப்பட்ட பாடல். பாரதியின் சாயலில் கண்ணம்மா என்று அழைத்தலும் உண்டு.
மிகவும்கைத் தேர்ந்த மருத்துவரின் கத்தி நோயாளின் காயத்தை சுற்றி அறுப்பது போல், இசையின் முன்னறிவிப்பு இன்றி TMSன் குரலில் பாடல் ஆரம்பம் ஆகிறது.
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணின் பாவை அன்றோ கண்ணம்மா
என்னுயிர்நின்னதன்றோ..
தலைவனின்நிலை கண்டு கலங்குகிறாள் தலைவி. மண் நோக்கிய அழுகை. (தலைவன் கண்டு விடுவானோ என்ன? ).
திருமண நிகழ்வு தொடங்குகிறது. அக்னி வலம் வருதல் தொடர்கிறது.
வார்த்தகளின் ஆரம்பங்களில் நிகழ்காலம்.
தலைவன் அமர்ந்திருக்கிறான். தலைவி அவன் காலடியில்.
உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கைஒளிமயமானதடி
தலைவி கண்ணில் மகிழ்வுடன் கூடிய கண்ணீர். (நவ ரசங்களையும் காட்டிய நாயகி அல்லவா)
பொன்னை மணந்ததினால்
உலகில் புகழும் வளர்ந்ததடி
கம்பீரத்துடன் கூடிய தலையாட்டல் (ஒரு சூரியன், ஒரு சிவாஜி)
தலைவியின்அழுகையினைதுண்டால்துடைத்துவிடுகிறான்.
மரமும் அதன் வேர்களாக குழந்தைகளும். கண நேரத்தில் வேர்கள் மறைகின்றன. மாபெரும் வலியினை உள் வாங்கி தலைவன். நிலை குலைந்து விழுகிறான் தலைவன். தாங்கிப் பிடிக்கிறாள் தலைவி.
தலைவனும்தலைவியும்ஊஞ்சலில்.
கால சுமைதாங்கி போலே
மார்பில்எனை தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய்
அதில் என் விம்மல் தணியுமடி
ஆலம் விழுதினை போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன
என் வேரென நீ இருந்தாய் ‍‍
அதில் வீழ்ந்து விடாதிருந்தேன்.
பார்வை அற்றவர்களின் பாத்திரத்தில் உருளும் ஒற்றை நாணயமாய் காட்சிகளும், பாடல் வரிகளும்.
காட்சி மாறுகிறது.
தலைவி மடியினில் தலைவன். தலை கோதுகிறாள். காட்சி மாறுகிறது.
காலம் மாறி இருக்கிறது. தலைவி மடியினில் தலைவன். தலை கோதுகிறாள்.
முள்ளில்படுக்கையிட்டு
இமையை மூடவிடாதிருக்கும்
பிள்ளை குலமடியோ
என்னை பேதைமை செய்ததடி
பேருக்குபிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
பேருக்குபிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
தலையை நிமிர்ந்து பார்க்கிறான் தலைவன்.

என் தேவையை யார் அறிவார்
வினாக்குறி தலைவி கண்களில்.
என் தேவையை யார் அறிவார் உன்னை போல்
தெய்வம்ஒன்றே அறியும்
தலைவி தலைவனின் கைகளை கன்னத்தில் வைத்துக் கொள்கிறாள்.
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் வரையில் தில்லானா மோகனாம்பாள் படத்தில் இருவருக்கும் போட்டி இல்லை. இப்பாடலே அப்படம் முழுவதையும் காட்டி விடுகிறது.

காலம் கடந்து கணவன் மனைவி அன்னியோனத்தை காட்டும் மிக அழகான பாடல்

இன்னமும் நீர் வழிந்து கொண்டிருப்பதே பாடலின் வெற்றிக்கு சாட்சி.

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 4

ஏங்க, இன்னைக்கு லீவுதான, கொஞ்சம் கடைக்கி போய்மளிகைசாமான்வாங்கிவந்திடுங்க,உங்கடிரஸ்எல்லாம் அயர்ன்கொடுத்து வாங்கிவச்சிருங்க, காலைலசாப்டமாட்டீங்க தானே(நான் எங்க சொன்னேன்), ஒரேதடவையாமதியம்சாப்டுக்கலாம், ரேஷன்போய்ட்டு வந்துடுங்க, பசங்கசட்டைஎல்லாம் வாஷிங்மிஷின்ல போட்டுதொவச்சி அயன்பண்ணிடுங்க, என்வண்டிக்கு பெட்ரோல் போட்டுகாத்துஅடிச்சிட்டு வந்துடுங்க., நேந்துநீங்ககாயவச்சதுணிஎல்லாம் மாடிலகாயுதுஅதெல்லாம் எடுத்து வந்துடுங்க, இன்னைக்கு(ம்) டீவிஉங்களுக்கு கிடையாது. இப்பவேகண்ணகட்டுதே…..
மாலை: என்னன்னே தெரில, இன்னைக்கு ஒரேடயர்டாஇருக்கு.
அடிப்பாவி நான்பேசவேண்டிய வசனத்தை எல்லாம் இவபேசறாளே
——————————————————————————————————————————————————————-
யாரும்அற்றபொழுதுகளில் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டேதோழமைகளுடன் மனம்விட்டுசிரித்துப் பேசும்வாய்ப்பு எப்பொழுதாவது தான்வாய்க்கிறது.
——————————————————————————————————————————————————————-
மனிதன்கர்வம்அழித்தலில் மருத்துவ மனைகளில் பங்குமகத்தானது.
——————————————————————————————————————————————————————-
தனதுமகளைபிறந்தஉடன்தீண்டும் தந்தையின் கண்கள்எவரும்அறியாமல் எப்போதும் பனித்திருக்கின்றன. அதுஆயுட்காலம்முழுவதும் தொடர்கிறது.
——————————————————————————————————————————————————————-
திருமணம் ஆனஉடன்மனைவியுடன் வெளியில் செல்கையில்இந்தாம்மா மல்லிகை பூ5 முழம்கொடுஎன்றுகடையில் கேட்பவனிடம் ஒருபுன்னகை கலந்தவெட்கம் தெரிகிறது.
——————————————————————————————————————————————————————-
யாருமற்ற இரவில்கணவனைஒருகண்ணால் கண்டுவிட்டு, மகனுக்கு போர்வைபோர்த்தி, அவனின்தலைகோதிகன்னத்தில் முத்தமிட்டு ஒருநிண்டபெருமூச்சுடன் உறங்கஒருதாயால்மட்டுமே முடிகிறது.
——————————————————————————————————————————————————————-
தன்மனைவியுடன் கைகோர்த்து நடக்கும் வாய்ப்பு ஒருசிலபுண்ணியவான்களுக்கே கிடைக்கிறது.
——————————————————————————————————————————————————————-
 வேலைக்கு செல்லும் பெண்ணைப் பார்த்துஅவளுக்கு என்னஎனும்பொழுதுகளில் அவளதுகண்களில் தெரிகிறது உயிரின் வலிகள்.
——————————————————————————————————————————————————————-
மனிதமனதின்பெரும்பாரம்குறைத்தலில் இறைமைக்கு அடுத்தநிலையில் குளியல் அறைகள்.
——————————————————————————————————————————————————————-
மிகஅதிகசந்தோஷத்தையும், மிகஅதிகவலியையும் கொடுத்து இதயத்தை ஈரமாக்கும் நிகழ்வு தந்தைக்குதன்மகள்ருதுவாகும் போது.

சமூக ஊடகங்கள்