சைவத் திருத்தலங்கள் 274 – திருவோத்தூர்

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருவோத்தூர்
சதுர ஆவுடையார்
இறைவன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதத்திற்குப் பொருள் சொன்ன இடமாதலின் ஓத்தூர் – ‘திரு’ அடைமொழி சேர்ந்து ‘திருஓத்தூர் ‘ – திருவோத்தூர்
சிவபெருமான் வீரநடனம் புரிந்த தலம்
ரத ஸப்தமி அன்று சூரிய ஒளி சுவாமி மீது விழும்.
முருகப் பெருமான் இறைவனை பூஜித்த தலங்களில் இத்தலமும் ஒன்று
திருஞானசம்பந்தர் பதிகம் பாடி, ஆண்பனை, பெண்பனையான தலம்
தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதத்தை கற்றுத்தரும் போது அவர்கள் தவிர வேறு யாரும் உள்ளே வராமல் தடுக்கவே இவ்வாறு நந்தி திரும்பி இருப்பதாக வரலாறு
தொண்டைமான் விசுவாவசு என்னும் மன்னனிடம் தோற்ற பொழுது அவன் வெற்றிபெறுவதற்காக நந்தியை படைத் துணையாக அனுப்பிய இடம். இதன் பொருட்டு நந்தி முன் கோபுரம் நோக்கியவாறு.

தலம்
திருவோத்தூர்
பிற பெயர்கள்
செய்யாறு, திருவத்திபுரம், திருவத்தூர்
இறைவன்
வேதபுரீஸ்வரர், வேதநாதர்
இறைவி
பாலகுஜாம்பிகை, இளமுலைநாயகி
தல விருட்சம்
பனை
தீர்த்தம்
ஆலயத்திற்கு வெளியே சேயாறு, வெளிப் பிராகாரத்தில் கல்யாணகோடி தீர்த்தம், மானச தீர்த்தம்,
விழாக்கள்
தை மாதம்பிரம்மோற்சவம், ஆடி மாதம்லட்ச தீபம், ஆடி விசாகம்ஞானசம்பந்தர் விழா, சுந்தரர் மோட்சம் சித்ரா பவுர்ணமி, பங்குனி உத்திரம்,
மாசி மகம், அப்பாத்துரை தோப்பு திருவிழா பிரதோஷம்
மாவட்டம்
திருவண்ணாமலை
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 12 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரை
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில்
திருவத்திபுரம்
செய்யாறு வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம்
PIN – 604407
04182 – 224387
வழிபட்டவர்கள்
தொண்டைமான்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர் – 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 2கி.மீ
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 250 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   8 வது தலம்.
வேதபுரீஸ்வரர்
 
 
 
இளமுலைநாயகி
 
 
 
பாடியவர்            திருஞானசம்பந்தர்        
திருமுறை           1         
பதிக எண்           54       
திருமுறை எண்      8        
பாடல்
என்றா னிம்மலை யென்ற வரக்கனை
வென்றார் போலும் விரலினால்
ஒன்றார் மும்மதி லெய்தவ னோத்தூர்
என்றார் மேல்வினை யேகுமே.
பொருள்
கயிலை மலை குறித்து குறைவாக மதிப்பிட்டு செறுக்கு கொண்ட இராவணனை தனது கால் பெருவிரலால் வென்றவரும், தனது மனதில் இருந்து மாறுபட்டவர்களான மூன்று கோட்டைகள் கொண்ட மூன்று  அசுரர்களை திரிபுர தகனம் அழித்தவரும் ஆகிய ஈசன் உறையும் தலமாகிய திருவோத்தும் எனும் ஊர்ப் பெயரைச் சொன்ன அளவில் அவர்களிடத்து இருக்கும் வினைகள் நீங்கும்.
கருத்து
என்தான் – எம்மாத்திரம். ஒன்னார் – பகைவர்
பாடியவர்            திருஞானசம்பந்தர்        
திருமுறை           1         
பதிக எண்           54       
திருமுறை எண்      9        
பாடல்
நன்றா நான்மறை யானொடு மாலுமாய்ச்
சென்றார் போலுந் திசையெலாம்
ஒன்றா யொள்ளெரி யாய்மிக வோத்தூர்
நின்றீ ரேயுமை நேடியே.
பொருள்
திருவோத்தூரில் விளங்கும் இறைவரே!  நான்கு வேதங்களை அதன் பொருள் உணர்ந்து ஓதுபவனாகிய பிரமன், திருமால் ஆகியோர் நீ ஏக உருவில் தீப்பிழம்பாய் இருத்தலை கண்டு அறியாமையினால் திசைகள் எல்லாம் தேடி அலைந்தனர். அவர்களது அறிவுநிலை யாது?
கருத்து
நன்றாம் நான் மறையான்நல்லன செய்யும் நான்மறைகளை ஓதியும்
Reference
தவர்வாள் தோமர சூலம் காதிய சூருந்எனத் தொடங்கும் திருப்புகழ்
‘ உலகியலின் உறுமயலின் அடைவுபெறும் எனதிதயம்  ‘ எனத் தொடங்கும் திருஅருட்பிரக்காச வள்ளளாரின் ஐந்தாம் திருமுறை
புகைப்படம் : தினமலர்
 
இக் கோயில் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்.
 

Loading

சமூக ஊடகங்கள்

ஆதி சித்தனின் அரங்கேற்றம்

நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க

சம்பவம்

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது வாசுகி ஆலகால விஷத்தை வெளிப்படுத்தியது. அதனை ஈசன் உண்டான். சத்தி தடுத்து நிறுத்தியதால் அது கழுத்தில் தங்கி விட்டது.
விளக்கம்

ஈசனானவர் எங்கும் நிறைந்தவர், பிறப்பிலி. மனித வாழ்வின் பிறப்பு மற்றும் இறப்பினை அவர்களின் மூச்சுக் காற்றே தீர்மானிக்கிறது.கழுத்தின் கண்டத்திற்கு மேல் வாசி பயில்பவர்கள் இறை தன்மையினை அடைவார்கள். இவர்களுக்கு பிறப்பில்லை. கழுத்துக்கு கீழே வாசி பயில்பவர்கள் உடல் ரீதியான மற்றும் மனரீதியான முன்னேற்றம் அடைவார்கள். இவர்களுக்கு பிறப்பு உண்டு.

இறை தன் நிலையிருந்து என்றும் வழுவாதிருக்க வாசியோகத்தின் முழுமையினை வெளிப்படுத்த ஈசனும் இறைவியும் நடத்திய நாடகம் அது.

மேலும் அறிய விரும்புவர்கள் குரு முகமாக அறிந்து கொள்க.

புகைப்படம் : இணையம்

Loading

சமூக ஊடகங்கள்

ஆதி ஆகுதி

தன் மீது அமரும்
வண்ணத்துப் பூச்சியின்
வலிஅறிந்து இருக்குமா அம்மலர்கள்

புகைப்படம் :  SLKumar

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருகுரங்கணில் முட்டம்

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருகுரங்கணில் முட்டம்
இறைவன் சுயம்பு மூர்த்தி
வாலி குரங்கு உருவிலும், இந்திரன் அணில் உருவிலும், எமன் காகம் (முட்டம்) உருவிலும் இறைவனை தனித்தனியே வழிபட்டு தங்களது சாபம் நிவர்த்தியடையப் பெற்ற தலம்
விஷ்ணு துர்க்கை – வலது கையில் பிரயோகச் சக்கரம்,இடக்கையில் சக்கர முத்திரை, காலுக்கு கீழே மகிஷாசுரனும் அற்று.
சித்திரை மாதத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது
 
 
தலம்
திருகுரங்கணில் முட்டம்
பிற பெயர்கள்
கொய்யாமலை
இறைவன்
வாலீஸ்வரர், கொய்யாமலைநாதர், திருக்குரங்கணில் முட்டமுடைய நாயனார், கொய்யாமலர் ஈசுவரதேவர்
இறைவி
இறையார் வளையம்மை, இளையாளம்மன், ஸ்ரீ பூரணகங்கணதாரணி
தல விருட்சம்
இலந்தை மரம்
தீர்த்தம்
காக்கை தீர்த்தம், வாயசை தீர்த்தம்
விழாக்கள்
மாவட்டம்
திருவண்ணாமலை
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 7 மணி முதல் 9 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை
அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோவில்
குரங்கனில் முட்டம் கிராமம்
தூசி அஞ்சல்
செய்யாறு வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் – 631703
ஸ்ரீதர் குருக்கள், கைபேசி:9629050143, 9600787419
வழிபட்டவர்கள்
வாலி, இந்திரன், யமன்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர் – 1
நிர்வாகம்
இருப்பிடம்
காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் காஞ்சீபுரத்திலிருந்து சுமார் 11 கி.மி
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 238 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   6 வது தலம்.
வாலீஸ்வரர்



 
இறையார் வளையம்மை



 
பாடியவர்              திருஞானசம்பந்தர்      
திருமுறை             1        
பதிக எண்             31    
திருமுறை எண்        8    
பாடல்
மையார்நிற மேனி யரக்கர்தங் கோனை
உய்யாவகை யாலடர்த் தின்னருள் செய்த
கொய்யாமலர் சூடி குரங்கணின் முட்டங்
கையால்தொழு வார்வினை காண்ட லரிதே.

பொருள்
மையின் நிறத்தை ஒத்து இருக்கும் கரிய  நிறமுடைய மேனியை உடையவனாகிய அரக்கர்களின் தலைவனாகிய இராவணை பிழைக்க முடியாதபடி செய்து, அவனது கர்வத்தை அடக்கி, அவனுக்கு இனிய அருளைச் செய்தவனும், அடியவர் அணிவித்த மலர் மாலைகளை சூடி குரங்கணில்முட்டத்தில் எழுந்தருளிக்கும் சிவபெருமானை கைகளால் தொழுபவர்களின் வினைப்பயன்கள் இல்லாது போகும். அஃதாவது இத்தலம் கண்டவர்களின் வினைகள் நீங்கும்
கருத்து
மையார்மேனி – கரியமேனி.
அரக்கன் – இராவணன். .
கொய் ஆர் மலர் – கொய்தலைப் பொருந்திய மலர்.
பாடியவர்              திருஞானசம்பந்தர்      
திருமுறை             1        
பதிக எண்             31    
திருமுறை எண்        9    
பாடல்

வெறியார்மலர்த் தாமரை யானொடு மாலும்
அறியாதசைந் தேத்தவோர் ஆரழ லாகுங்
குறியால்நிமிர்ந் தான்றன் குரங்கணின் முட்டம்
நெறியால்தொழு வார்வினை நிற்ககி லாவே.
பொருள்
மணம் உடைய தாமரை மலரில் உறையும் நான்முகனும், திருமாலும் முறையே திருமுடியையும், திருவடியையும் அறிய முடியாது வருந்தி நிற்க தீயின் உருவமாய் நிற்கும் சிவபெருமான் விளங்கும் குரங்கணில் முட்டத்தை முறையாக தொழுபவர்களது வினைகள் முற்றிலும் நீங்கப் பெறும்.
கருத்து
அறியாது அசைந்து – முதற்கண் இறைவன் பெருமையையறியாமல் சோம்பி இருந்து
ஏத்த – பின்னர் அறிந்து துதிக்க
ஓர் ஆர் – தனக்கு ஒப்பில்லாதவன்
நெறி – ஆகமவிதி – தனக்கு விதிக்கப்பட்டவாறு தொழுதல்

புகைப்படம் : தினமலர்

Loading

சமூக ஊடகங்கள்

2038 – மருத்துவமனைகள் – ஒரு வழிப் பாதை

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

1.

ABC மருத்துவமனை
சார் என் பையனுக்கு தலைய வலிக்குது. ஏதாவது மருந்து குடுங்க சார்.
உங்களுக்கு எந்த ஏரியால வீடு இருக்கு, அண்ணாநகர், அசோக் நகர், திண்டிவனம்?
சார் நான் என்ன பேசரேன், நீங்க என்ன பேசுறீங்க.
அண்ணாநகர்ல வீடுன்னா Suit ல வச்சி பாப்போம். அசோக் நகர்னா ICU ல வச்சி பாப்போம், திண்டிவனம்னா OP ல வச்சி பாப்போம். எப்படியும் நீங்க சொத்த எழுதி கொடுத்துத்தானே ஆவணும்
2.
என்னா சார் இது சளி புடுச்சி இருக்கின்னு வந்தேன். அதுக்கு பில் Rs..144,50,00,000 போட்டு இருகீங்க.

அதுவா ஒரு Lamborghini Aventador book பண்ண காசு இல்லாம இருந்தேன். நீங்க வந்துடீங்க. (Current price Lamborghini Aventador at Rs.4,50,00,000)

3.

சார் இந்த வருஷம் நம்ம மருத்துவமனைக்கு நல்ல income  வந்திருக்கு. IT மாட்டாம இருக்க என்ன செய்யறது சார்

வர மாசத்தில் இருந்து X-Ray தனி யூனிட், Blood test தனி யூனிட். மெடிக்கல் ஷாப்பை லஷ்மி மெடிக்கல்னு மாத்திடுவோம். பாவம் எல்லாம் சாமிக்கு போயிடும். அந்த ICU உள் வாடகைக்கு விட்டுடுவோம். ஏன்னா அது பிரச்சனை புடிச்சது ஒரு பேஷன்ட் கிட்டே இருந்து நமக்கு 1 கோடி நமக்கு வரணும் அப்படீன்னு மட்டும் சொல்லிடுவோம்.

4.சார் உங்க மெடிக்கல் இன்சூரன்ஸ்ல என்ன வசதி?

ஹாஸ்பிட்டல்ல எல்லா செலவையும் ஏத்துப்போம். உசுரு போச்சுன்னா சுடுகாட்டு செலவையும் நாங்களே செஞ்சிடுவோம். அதுல பாருங்க இப்ப சுடுகாட்டுச் செலவெல்லாம் இப்போ ரொம்ப அதிகம் பாருங்க.

5.

சார் எப்படி பாத்தாலும் பில் 50,00,000 வரலயே சார், என்ன செய்ய?
இதெல்லாம் ஒரு மேட்ரே இல்ல,ரூம் சார்ஜ் 10,00,000 போடு. செலைன் ஊசி போட 10,00,000 போடு. ஊசி எடுக்க 10,00,000 போடு. டுயுட்டி டாக்டர் சார்ஜ்  5,00,000 போடு, டுயுட்டி நர்ஸ் சார்ஜ்  3,00,000 போடுடுயுட்டிஆயா சார்ஜ்  2,00,000 போடு, பெட் சார்ஜ் 7,00,000 போடுஎல்லா டாக்டருக்கும் விசிட் சார்ஜ்ன்னு போட்டு ஒரு 12,00,000 போடுஅப்படியே அட்மிஷன் சார்ஜ்  2,00,000 போடுமொத்தம் எவ்வளவு ஆச்சு.
மொத்தம் எவ்வளவு ஆச்சு.
சார் 61,00,000 வருது சார்.
சூப்பர் பில்ல போட்டு அவன் கையில கொடு.

புகைப்படம் : SLKumar





Loading

சமூக ஊடகங்கள்

மௌனக் கண்ணீர்

உயிர் வாழ்தலில்
மரணம் என்பது இயற்கையானது அல்ல
மரணம் என்பது நிலையானதும் அல்ல
என்று தானே அறிந்த தருணமாக இருக்கலாம்.
அழும் குழந்தையினை தாய் திகட்ட திகட்ட
திட்டுகையில் அறிந்திருக்கலாம்.
இருந்து உயிர எடுக்கறத்துக்கு போய் தொலைந்திருக்கலாம்
எனும் மனைவியின் வார்த்தைகளில் இருக்கலாம்.
ஒட்டு பீடி கேட்கிறத்துக்கு உசிர விட்டிருக்கலாம்
எனும் நண்பனின் வார்த்தைகளில் இருக்கலாம்.
பணம் இல்லா பயலுகளுக்கு
பணக்கார சாமி எதுக்குஎன்னும் வாசகங்களில் தொக்கி நிக்கலாம்
ஒரு வேலைய உருப்படியா செய்யத் தெரியல
எனும் மேலதிகாரியின் வார்த்தைகளில் இருக்கலாம்.
நினைவுகளையும் ஏக்கங்களையும்
நித்தமும் தொலைக்கும் தருணங்களாக இருக்கலாம்.
தொக்கி நிற்கும் இளைமையின் வடிங்கங்ளை வாங்கி
கண்ணீரில் கரைதலில் இருக்கலாம்,
யாசகத்துக்கு கையேந்தி
வெற்று கைகளுடன் திரும்புகையில் இருக்கலாம்.
மனிதர்களால் புறக்கணிக்கப்பட்டு
மீண்டும் மனிதகளுடன் கூடிக் குலாவும் காலமாக இருந்திருக்கலாம்
இன்னும் என்ன இருக்கிறது
மரணம் அறிந்து மரணம் தாண்டி
நித்தமும் உயிர் வாழ்தலில் அதீதத்தின் ருசி

புகைப்படம் :  SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 20/25 சரபமூர்த்தி

மகேசுவரமூர்த்தங்கள் 20/25 சரபமூர்த்தி
வடிவம்(பொது)
·   நரசிம்ம மூர்த்தியாக அவதாரம் எடுத்த திருமாலின் கோபம் இரண்ய  சம்ஹாரத்திற்குப் பிறகும் குறையவில்லை. அதன் பொருட்டு  சிவபெருமான் எடுத்த அவதாரம் `சரபமூர்த்தி’
·   சரபம் என்பது மனிதன், யாளி, பட்சி, இம்மூன்றும் கலந்த உருவம். .
·   உடல் அமைப்பு  – சிம்ம முகம், சிம்ம உடல், எட்டுக்கால், எட்டுக்கை, ஆயுதமாக மான், மழு, சூலினி, ப்ரத்யங்கிரா தேவியர் – இறக்கைகள், சூரியன், சந்திரன், அக்னி –  கண்கள்,துடிக்கும் நாக்கு, தூக்கிய  காதுகள், கருடமூக்கு, நான்கு கரங்கள், எட்டு கால்கள், அதில் காந்தசக்தி கொண்ட நகங்கள்
·   உத்திர காமிகாகமத்தின்படி இவ்வடிவம் ஆகாச பைரவர்
·   சில இடங்களில் 32 கைகளுடன் விவரிக்கப்பட்டுள்ளார்.
·   சில இடங்களில் இம் மூர்த்தம் மகேசுவர பேதமாக குறிப்பிடப்படுகிறது.
வேறு பெயர்கள்
·         ஸ்ரீ சரபேஸ்வரர்
·         ஸ்ரீ சரப மூர்த்தி
·         புள்ளுருவன்
·         எண்காற் புள்ளுருவன்
·         சிம்புள்
·         நடுக்கந்தீர்த்த பெருமான்
·         சிம்ஹாரி
·         நரசிம்ம சம்ஹாரர்
·         ஸிம்ஹக்னர்
·         சாலுவேசர்
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்

·         திருபுவனம், மயிலாடுதுறை
·         தாராசுரம், கும்பகோணம்
·         ஆபத்சகாயேசுவரர் கோயில்,துக்காச்சி,கும்பகோணம்
·         தேனுபுரீஸ்வரர் ஆலயம்,மாடம்பாக்கம், சென்னை
·         ஆலய மூலவர் – ஸ்தம்ப சரபேஸ்வரர்,திரிசூலம், சென்னை
·         ஸ்ரீ வெள்ளீஸ்வரர் ஆலயம்,மயிலாப்பூர்
·         குறுங்காலீஸ்வரர் கோயில்,கோயம்பேடு
·         தாமல் நகர், காஞ்சிபுரம்  –  லிங்க உருவ சரபேஸ்வரர்
·         மதுரை, சிதம்பரம், காரைக்குடி –
·         சராவு சரபேஸ்வரர் ஆலயம், மங்களூர்
இதரக் குறிப்புகள்

·         16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் திருமலைநாதர் என்பவரால் இயற்றப்பட்ட  சரப புராணம்

புகைப்படம் : இணையம்
 

Loading

சமூக ஊடகங்கள்

மோன வசி

மழை வருவதாக கூறி
கண்ணாடிக் கதவுகளை சாத்துகிறான் தகப்பன்.
புன்னகைத்து காற்று வரவில்லை எனக் கூறி
கதவுகளைத் திறக்கிறது பெண் குழந்தை ஒன்று.
பாம்பின் வாய்ப்பட்ட தேரையாய்
காலம் விழுங்கிக் கொண்டிருக்கிறது
ரயிலின் சில நிகழ்வுகளை

புகைப்படம் :  Bragadeesh Prasanna

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருக்கச்சூர்

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருக்கச்சூர்
இறைவன் சுயம்பு மூர்த்தி
பாற்கடல் கடையும் பொழுது, விஷ்ணு (கச்சபம்) ஆமையாக உருவெடுத்து இத்தலத்து சிவனை பூஜை செய்து மந்தார மலையை தாங்கும் வலிமை பெற்ற தலம்.
இறைவனின் திருப்பாதங்கள் படிந்த தலம்
இந்திரனின் சாபம் நீங்க அஸ்வினி தேவர்களுக்கு மருந்து காட்டிய இடம்(மருந்தீஸ்வரர்)
சரியான மருந்தை ஒளி மூலம் காட்டிக் கொடுத்தமையினால் இருள்நீக்கி அம்பாள்.
சுந்தரரின் பசிப் பிணி போக்குவதற்காக சிவன் முதியவர் வேடம் கொண்டு (இரந்து) பிச்சை ஏற்று அவருக்கு அளித்ததால் இரந்தீஸ்வரர்
விருந்து படைத்ததால் விருந்தீஸ்வர்
நான்கு முகங்களுடன் சண்டேஸ்வரர் – சதுர்முக சண்டேசுவரர்
உபயவிட தலங்களில் ஒன்று
கஜ பிருஷ்ட விமானம்
 
 
கச்சபேஸ்வரர்
 
 
 
அஞ்சனாட்சி
 
 
தலம்
திருக்கச்சூர்
பிற பெயர்கள்
நடனவினோதநல்லூர், ஆதிகாஞ்சி, திருக்கச்சூர் ஆலக்கோயில், ஔஷத கிரி, கச்சபவூர்
இறைவன்
கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர், அமிர்த தியாகராஜர்
இறைவி
அஞ்சனாட்சியம்பாள், இருள்நீக்கியம்பாள், அந்தக நிவாரணி,
தல விருட்சம்
கல்லால மரம், வேர்ப்பலா
தீர்த்தம்
ஔஷதி தீர்த்தம், கூர்ம தீர்த்தம்
விழாக்கள்
சித்திரை,மாசிபிரம்மோற்ஸவம், சோமவாரங்களில் படிபூஜை, திருக்கார்த்திகை
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
கச்சபேஸ்வரர் திருக்கோயில்
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை
மருந்தீஸ்வரர் திருக்கோயில்காலை 7 – 9 மணி வரை மட்டும்
அருள்மிகு கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கோயில்,திருக்கச்சூர்- 603 204, காஞ்சிபுரம் மாவட்டம்
+91- 44 – 2746 4325,2746 3514,2723 3384, திரு. முரளி – +91 94453 56399
வழிபட்டவர்கள்
திருமால்
பாடியவர்கள்
சுந்தரர், அருணகிரி நாதர்
நிர்வாகம்
இருப்பிடம்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 2கி.மீ
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 258 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   26 வது தலம்.
பாடியவர்                     சுந்தரர்
திருமுறை                    7
பதிக எண்                    41
திருமுறை எண்               7
பாடல்

பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால் அதுவும் பொருளாக் கொள்வானே
மெய்யே எங்கள் பெருமான் உன்னை நினைவா ரவரை நினைகண்டாய்
மையார் தடங்கண் மடந்தை பங்கா கங்கார் மதியஞ் சடைவைத்த
ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே.
பொருள்
மை பொருந்திய பெரிய கண்களை உடைய உமா தேவியை தனது ஒரு பாகமாக கொண்டவனே, கங்கையையும், பிறை சந்திரனையும் தனது திருமுடி மேல் வைத்துள்ள ஐயனே, செம்மை நிறமும், வெண்மை நிறமும் கொண்டவனே, திருக்கச்சூர் ஆலக் கோயிலில் எழுந்தருளும் பெருமானே, பொய்யாக உனை ஒருவர் புகழ்ந்தால் அதனையும் ஒரு பொருளாய் கொண்டு அவர்களுக்கு உண்மையாக அருள் செய்யும்  எங்கள் பெருமானே உன்னை உண்மையாகவே நினைக்கும் அடியவர்களை நினை.
கருத்து
பொய்யே உன்னைப் புகழ்வார் – மனதில் அன்பு இன்றி பலன் கருதி புகழ்தல். இது இழிநிலை மனிதர்களுக்கு உரியது. அந்த நிலையில் இருந்தாலும் கூட  என்பதே இதன் சிறப்பு
சிவன் வேறு சக்தி வேறு என்ற பேதம் அறுபடுகிறது என்பதை கீழ்கண்ட இரு உதாரணங்களால் அறியலாம்.
1.பெரிய கண்களை உடைய உமா தேவியை தனது ஒரு பாகமாக கொண்டவனே
2.செம்மை நிறமும், வெண்மை நிறமும் கொண்டவனே
வெண்மை நிறம் சிவனாரைக் குறிப்பதாகும். செம்மை நிறம் சக்தியை குறிப்பதாகும்
பாடியவர்                  சுந்தரர் 
திருமுறை                 7 
பதிக எண்                 41   
திருமுறை எண்            8  
பாடல்
ஊனைப் பெருக்கி உன்னை நினையா தொழிந்தேன் செடியேன் உணர்வில்லேன்
கானக் கொன்றை கமழ மலருங் கடிநா றுடையாய் கச்சூராய்
மானைப் புரையு மடமென் னோக்கி மடவா ளஞ்ச மறைத்திட்ட
ஆனைத் தோலாய் ஞானக் கண்ணாய் ஆலக் கோயில் அம்மானே.
பொருள்
காட்டில் புதியதாக மலர்ந்திருக்கும் கொன்றை மலரின் வீசுதலை உடையவனே, மான் போன்ற மெல்லிய பார்வை உடைய உமை அஞ்சும்படி பெரியதான யானைத் தோலைப் போர்த்தியவனே,ஞானக்கண்ணாய் விளங்குபவனே ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, கீழ்மை நிலையில் இருக்கும் யான் அதுபற்றி உணர்வு எதுவும் இல்லாமல் உடம்பு வளர்க்கும் காரணம் பற்றி உன்னை நினையாது ஒழிந்தேன்.
கருத்து
செடியேன் உணர்வில்லேன் – செடி போன்றவைகள் ஓரறிவு உயிர்கள். எனவே உன்னை நினைத்தல் என்பது பற்றி உணர்வு கூட இல்லை.
குறை உடைய உயிர்களின் நிலை அறிய அவைகளின் அனைத்து வினைகளைப் பற்றியும் அறிய அறிவு வேண்டும். அதனை காண ஞானக் கண் அவசியமாகிறது. உயிரின் வினைகளைக் களைபவன் என்பதனால் அவன் ஞானக் கண் உடையவனாகிறான்.
புகைப்படம் : தினமலர்
 

Loading

சமூக ஊடகங்கள்

முதிர் ஞாபகங்கள்

தேகம் முழுவதும் பூச்சுக்கள் என்றாலும்
தன்னியல்பாய் வெளிப்பட்டு விடுகின்றன
பழைய வாசனைகள்.

புகைப்படம் :  Ravi Shankar

Loading

சமூக ஊடகங்கள்

சொல்லின் வழி மௌனம்

யாருமற்ற இரவு
உன்னையும் என்னையும்
இணைத்து வைக்கிறது.
கொஞ்சமாய் அகிலின் வாசம்
நம் இருவருக்கும் பொதுவானதாக இருக்கிறது.
உடைபடும் மௌனம் உடைக்கிறேன்.
மானஸ ரூபின்யை நமஹ,
..
மகாரப் பிரியை நமஹ
பிறிதொரு பொழுதுகளில்
எந்தப் பொருளிலும் நான் இல்லை
எல்லாப் பொருள்களிலும் நீ இருக்கிறாய்.
எந்த ஒலிகளையும் நான் கேட்கவில்லை
எல்லா ஒலிகளுக்கும்  நீ காரணமாக இருக்கிறாய்.
எந்த உருவங்களையும் நான் காணவில்லை
எல்லா உருவங்களுக்கும்  நீ சாட்சியாக இருக்கிறாய்.
மூலக் கனலொன்று கனவினை உடைக்கிறது.

புகைப்படம் : இணையம்

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 19/25 திரிபுராரி


 
 
மகேசுவரமூர்த்தங்கள் 20/25 திரிபுராரி
வடிவம்
·          உருவத்திருமேனி
·          பாவ நிவர்த்தி மூர்த்தம்
·  பொன்வெள்ளிஇரும்பாலாகிய மூன்று கோட்டை களையுடைய திரிபுராதியரான   தாரகாட்சன்கமலாட்சன்வித்யுன்மாலி ஆகிய  மூன்று அசுரர்கள்களை புன்சிரிப்பால் அழித்த வடிவம்அவர்களை எரித்தப்பின் ஒருவரை மத்தளம் வாசிப்பவனாகவும், மற்றஇருவரையும் வாயிற் காப்பாளனாகவும் மாற்றிக் கொண்டார்.
·          மேரு –  வில், வாசுகிநாண், தேவர்கள்  – படைகள்சூரியசந்திரர்கள்  – சக்கரம்உலகம் – தேர் , வேதங்கள் –  தேர்க் குதிரைகள், விஷ்ணு – அம்பு , வாயு –  அலகு, அக்கினிஅம்பின் நுனி ,பிரம்மா – தேரோட்டி
·          புரம் எரித்த சம்பவம் நிகழ்ந்த இடம் திருஅதிகை.
·        முப்புரம் என்பது மூன்று மலங்கள் (ஆணவம்மாயை மற்றும் கண்மம்என்று திருமந்திரம்   மூலம் அறியலாம்
 
வேறு பெயர்கள்
 
திரிபுர அந்தகர்
முப்புராரி
புரரிபு
முப்புர மெரித்தோன்
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
 
·  மாமல்லபுர சிற்பம் வடக்குச்சுவர்
·  தஞ்சைக்கோயில் கருவறை
·  திருவிற்கோலம் – திரிபுராந்தகர் கோயில் – கூவம்
·  திருநல்லம் கோணேரிராசபுரம்
·  சிதம்பரம்
·  கொடும்பாளூர் விமானம்
·  காஞ்சி கைலாசநாதர் கோயில்
இதரக் குறிப்புகள்
 
1.
எரியார் கணையால் எயிலெய் தவனே   – திருக்கழிப்பாலை
 
2.
கரி புராரி காமாரி திரிபுராரி தீயாடி
கயிலையாளி காபாலி            கழியோனி
கரவு தாசன் ஆசாரி பரசு பாணி பானாளி
கணமொடாடி காயோகி           சிவயோகி
விராலிமலை திருப்புகழ்
 
3.
பொருப்புச் சிலையில் வாசுகிநாண் பூட்டி அரிகோல் வளிஈர்க்கு
நெருப்புக் கூராம் படைதொடுத்துப் பிரம வலவன் நெடுமறைமா
விருப்பிற் செலுத்து நிலத்தேர்மேல் நின்று தெவ்வூர் வெந்தவிய
அருப்புக் குறுவெண் ணகைமுகிழ்த்த அந்த ணாளன் திருவுருவம்.
மேருவை வில்லாகவும், வாசுகியை நாணியாகவும் கொண்டு பூட்டித் திருமாலை
அம்பாகவும், வாயுவை அலகாகவும், அக்கினியை அம்பின் நுதியாகவும் படை
அமைத்துக் கொண்டு பிரமனைத் தேர்ப் பாகனாகவும் வேதங்களைத் தேர்க்
குதிரையாகவும் கொண்டு பூமியாகிய தேர்மிசை நின்று பகைவர் ஊராகிய
முப்புரம் வெந்தழியும்படி அரும்பு தலையுடைய புன்முறுவல் பூத்த
அறவோராகிய திருபுராரி திருவுருவம்.
–      காஞ்சிப் புராணம்
சைவ சித்தாந்தம், சைவம், மகேசுவரமூர்த்தங்கள், திரிபுராரி.

புகைப்படம் : இணையம்

Loading

சமூக ஊடகங்கள்

சாதக விளைவு

இழப்பதற்கு என்று வந்து
எல்லாவற்றையும்
ஏற்றப்பின் வருகிறது
ஞானத்தின் அடையாளங்கள்.
புகைப்படம் : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

2038 – Digital Amnesia – உயர் தொழில் நுட்பம் சார்ந்த மறதிகள்

Reality

·   The continuous progress and evolution of technology in terms of hardware, software, operating systems and methods of digital encoding guarantees the possibility that digital amnesia will become a problem in the near future. There are many versions of programs and applications that have been considered as a standard for some time, but in the end they will always be replaced by newer versions with upgraded functions. The files that are meant to be edited or read by an old program will become unreadable if used with newer programs.
·   Smart phones and tablets are eroding our ability to remember.
·   Could be called as massive destruction of information!
·   Study conducted – UK, France, Germany, Italy, Spain, Belgium, the Netherlands and Luxembourg
·   Total adults – 6000

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

Proof

1.
Doctor : சார், உங்களுக்கு வந்திருக்கிறது digital amnesia
Patient  : அப்டீன்னா என்னா சார்
Doctor : The continuous progress and evolution of technology, technology technology
Patient  : சொல்லுங்க சார்
Doctor : இருப்பா எனக்கும் மறந்து போச்சு

2.
Employee : சார் எனக்கு எட்டு மாசமா சம்பளம் குடுக்கல சார்.
IT Manager : எனக்கு  Digital Amnesia இருக்கு. அதால உனக்கு கடைசியா எப்ப சம்பளம் குடுத்தேன்னு தெரியல

3.
மனைவி : போன மாசம், செலவுக்கு 121.37 காசு குடுத்தீங்க. இந்த மாசம் 23.57 காசு தான் குடுக்குறீங்க. கேட்டா உங்களுக்கு Digital Amnesia அப்படீன்னு சொன்னா எப்படி?

4.
Digital Amnesia தொல்லையில் இருந்து விடுபட எங்களிடம் உங்கள் மூளைத் தகவல்களை சேகரியுங்கள். For 1 TB – just Rs.100/- P/M. 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு discount போக Rs. 250/- P/M.. ஆயுள் சந்தாவிற்கு நேரடியாக தொடர்பு கொள்ளவும்.

5.
‘நான் யார்’ என்று விடை அளிக்க முடியா கேள்விக்கு விடை தேடுகிறது மதம். ‘நான் யார்’  என்று அறிய முடியாதவர்களை   Digital Amnesia வால் பாதிக்கப்பட்டவர்கள் என்கிறது மருத்துவத்துறை. எனில் நாம் முடிவை நெருங்கிக் கொண்டு இருக்கிறோம் என்பதே இதன் பொருள். – இது போன்று நிறைய பயன் உள்ள தகவல்களைப் பெற அணுகவும். மருத்துவராக இருந்து சாமியாக மாறிய செல்வி சூர்பணகை.

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 19

மனைவிஏங்கஇனிமே நான் உங்களோட சண்டையே போட மாட்டேன்.
கணவன் : ????
சற்று நேரத்திற்கு பிறகு
மனைவி : நீ எல்லாம் மனுஷனாகடலை பருப்பு வாங்கிகிட்டு வரசொன்னாதொவரம் பருப்பு வாங்கி கிட்டு வந்து இருக்கியேஎன்னாஉங்க ஆத்தா உன்னை பெத்து வச்சிருக்கிருகாளோ?
கணவன் : கொஞ்சம் நேரத்துக்கு முன்னால தானே சண்ட போட மாட்டேன்னு சொன்ன?
மனைவி : ஆமாசொன்னந்தான்இன்னைக்கு தேதிய பாரு. 01-Apr-2015
செத்தாண்டா சேகரு.
———————————————————————————————————————————————————
கன்னியாக்குமரி – 15 வது மொட்டை மாடியில் 2 நண்பர்கள்
வீட்ல ரொம்ப பிரச்சனடா
என்னடா ஆச்சு
மொத நாளு தண்ணி பிரச்சனைபக்கெட்ல தண்ணி புடிச்சி வைங்க அப்படீங்கறாஅடுத்த நாளு பக்கெட் தண்ணில கொசு முட்டை போடுதுபுடிக்காதீங்க அப்படீங்கறாஎன்னடா செய்யறது.
செத்தாண்டா சேகரு.
———————————————————————————————————————————————————
சார்உக்காருங்கஅந்த கம்பில உக்காரலம் வா சார் வா. 5 பேர் தான் —உள்ள உக்காந்து கீராங்கஇவன் ஆட்டோவில் மினி பேருந்து 
கூட்டத்தை ஏற்ற முயற்சிப்போர் சங்க தலைவன்.
———————————————————————————————————————————————————
உலகின் உன்னதமான நிமிடங்கள்
ATM ல் எல்லா details ம் enter செய்து மிஷினில் பணம் count செய்து வெளியே வரும் நிமிடங்கள்.
———————————————————————————————————————————————————
பூரி மசால்ல மசால் இருக்குமசால் தோசைல மசால் இருக்குஆனா மசால் வடைல மசால் இல்லையேஇவன் 10 மசால் வடையை ஒரே நேரத்தில் சாப்பிடுவோர் சங்கம்,
———————————————————————————————————————————————————
சந்தோஷத்த கொண்டாடுரத்துக்கும் காசு தேவையா இருக்கு., கஷ்டத்த கொண்டாடுரத்துக்கும்  காசு தேவையா இருக்கு.
.ம் – சரவணபவன் 2 காபி – 56 ரூ
Chandra park 2 பீர் – ரூ 450(Including tips).
என்னடா வாழ்க்கை இது?
———————————————————————————————————————————————————
எனக்கும் ஜூஸ் கடையில் இருக்கும் பெண்ணுக்கும் நடைபெற்ற உரையாடல்
தர்பூசணி ஜீஸ் ஒன்னு கொடுங்க
புரிலங்க.
தர்பூசணி ஜீஸ் ஒன்னு கொடுங்க
தெளிவா சொல்லுங்க
தர்பூசணி ஜீஸ் ஒன்னு கொடுங்க
….
Watermelon ஜீஸ் ஒன்னு கொடுங்க.
 Watermelon ஜீஸ்சாஅப்படி தெளிவா கேளுங்க சார்.
அட பிக்காளிப்பயலுகளா.
———————————————————————————————————————————————————
வண்டலூரில் இருந்து பெருங்களத்தூர் வரை எந்த வாகனமும் செல்ல இயலா நிலை. 1 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கிறேன்எரிச்சலாக திரும்பி வெளியே பார்க்கிறேன்.
வெளியே நிற்கும் லாரியில் எழுதப்பட்டிருக்கிறது ‘தனிக்காட்டு ராஜா‘.
என் மனசுல இருந்த பாரம் எல்லாம் இறங்கி போச்சு.
———————————————————————————————————————————————————
IT ல் வேலை பார்ப்பவர்களை எளிதாக கண்டறியும் வழி(General)
31st : Lets go to Saravanabhavan machi
1st : மச்சான் ஒரு டீ சொல்லுடாகைல காசு இல்ல
———————————————————————————————————————————————————
ரயிலில் பயணம் செய்ய மிக வேகமாக  நடை மேடை மேல் நடந்து கொண்டிருக்கிறேன்.
முதலாவது பிளாட்ஃபாமில் இருந்து இன்னும் சில நிமிடங்களில்….ஒலித்துக் கொண்டிருக்கிறது.
டோய்ங்.,,, டோய்ங்.,,,  (Doppler effect )
ஓட்டமும் வேகமும் குறைகிறது.
யாருடைய தொலை பேசியிலோ Ring tone. அழகிய கண்ணேஉறவுகள் நீயே
வினாடிக்குள் உலகம் நிலைபெறுகிறது.
அந்த மனிதர் நகர்ந்து விட்டார்.
சுய நினைவு திரும்புவதற்குள் ரயில் சென்றிருந்தது.

Loading

சமூக ஊடகங்கள்

மௌனவாடை

மனிதர்கள் வீசிச் சென்ற
அத்தனை வார்த்தைகளையும்
உள்வாங்கி
அமைதியாக இருக்கிறது
கடற்கரை மணல்கள்.


புகைப்படம் :  Karthik Pasupathi

Loading

சமூக ஊடகங்கள்

கடந்து போதல்

வழிந்தோடும் நீரில்
விளையாடுகின்றன மீன்கள்.
இரை குறித்த இலக்கோடு
பறந்துவந்து கொத்திச் செல்கிறது
மீன்கொத்தி ஒன்று.
உயிர் வாழ்தலும், உணவு குறித்த
எண்ணங்களோடும்
வாகனத்தில் விரைந்து விரைகிறது

மற்றொரு உயிர்.

புகைப்படம் :  R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

2038 – Identity-Shifting Brain Cells

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

Identity-Shifting Brain Cells

Reality

•         The electrical activity of a neuron is considered a fundamental feature of its identity. But new research reveals this attribute is not necessarily fixed, at least in murine cortical inhibitory inter neurons
•         Fast-spiking (FS)  PV cells with a firing delay tended to express high levels of a transcription factor called Er81

•         In the past, the identities and properties of neurons – determined by genetic programs.  It is now identified that neurons are regulated by experience-driven and activity-dependent mechanisms in the adult brain.

Proof

1.
மனைவி – கணவன்
இங்க பாருங்க, உங்க மூளையில 237 * 457 * 528 நியூரான் சரியா ஒர்க் ஆகல, அதால காப்பித்தூள் வாங்கிகிட்டு வரலேன்னு சாக்கு சொல்றீங்க. இப்ப ஒங்களுக்கு தான் காபி கட்.

2.
Team Member – Manager
சார் என் ப்ரென் ல 581 & 645 நியூரான்  சரியா ஒர்க் ஆகல அதால தான் லீவ் சொல்லன்னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்.

 3.
அப்பா – மகன்
அப்பா என் ப்ரெய்ன் connectivity ல electrical activity சரியா இல்ல, அதால தான் Maths ல 99.9 எடுத்தேன்னு சொல்றத நான் ஒத்துக்க மாட்டேன்.

4.
காதலி – காதலன்
டேய் டார்லிங், Brain cell shifting left ஆ right ஆ இருக்கட்டும் டா, வண்டிய நேரா பாத்து ஒட்டுடா

5.
நண்பன்  – Electricity board
சார் இது என் ப்ரெண்ட், இவன் brain use பண்ணி கரண்ட் எடுக்க முடியுமான்னு பாருங்க சார். எங்க வீட்ல night lamp எரியல



Loading

சமூக ஊடகங்கள்

பிறவி வாடை

தன்னின் இருப்பை உறுதி செய்ய
இறகு ஒன்றினை
உதிர்த்துச் செல்கிறது
பறவை ஒன்று.
புகைப்படம் :  SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

ஏமாப்பு

செந்நிற சூரியனை
எதிர் கொண்டு செல்லும்
தனிப்பறவை
எப்பொழுது தன் கூடு அடையும்?


*ஏமாப்பு – பாதுகாப்பு,  ஆதாரம்
புகைப்படம் : SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!