அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பெரும்பாரக்கோடு 

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  பெரும்பாரக்கோடு 

பொருள்

  • வயிற்றினையும் இடுப்பையும் பிரிக்கும் வயிற்றுக்கு கீழே இருக்கும் கோடு.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

விநாயகர் அகவல் – ஔவையார்

கருத்து உரை

வினாயகர் அகவல் முழுவதும் யோக மார்க்கங்களுடன் தொடர்பு உடையது. அது தன்னுள் பல சித்த பரிபாஷைகளை உள்ளடக்கியது.  உடலில் பஞ்ச பூதங்களில் தலையாயதான நெருப்பு சோதியாக மெய்ப்பொருளாக இருக்கிறது.  பேழை என்பது வினைகளின் மற்றும் மும்மலங்களின் வடிவமாக பானையை ஒத்து இருக்கிறது. வினைகளின் காரணமாக மாயைகளுக்கு உட்பட்டு அலையும் உயிர்கள் மூலாதாரத்தின் இருப்பிடத்தை உணர விடாமல் மாயை எனும் பாரம் தடுக்கிறது. எவ்வாறு காற்று ஊதுகுழல் வழியாக செலுத்தப் பட்டு குமுட்டி அடுப்பில் அக்கினி உருவாகிறதோ அது போல வாசியின் உதவியுடன் மூலாதாரத்தை உணர்ந்தால் வாசியானது மேலெழும்பி மெய்ப்பொருள் ஸ்தானத்தையடைந்து அங்கு நிலைகொண்ட அக்கினியை ஒளிர வைக்கும். அக்கினி ஒளிர்வின் அசைவே சித்தர்கள் பரிபாசையில் சோதிநடனம் எனப்படும்.  மலங்களான பாரங்கள் மூலாதார ஸ்தானத்தை அறியவிடாது நம்மை பொய்மையில் ஆழ்த்தும். இப்பிரிவினையைக் குறிப்பதே பெரும்பாரக் கோடு.

விளக்க உரை

  •  ‘மிகவும் கனமான, உறுதிமிக்க ஒற்றை தந்தம்’ என்று பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

காரியத்துக்கு உரிய மூவகைக் காரணங்கள் எவை எவை?
முதற் காரணம், துணைக் காரணம், நிமித்தக் காரணம்

 

கருத்துரைக்கு விளக்கம் அளித்த மதனா அண்ணா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

(குரு நாதரின் உத்தரவிற்கு பிறவே இப்பாடலுக்கு இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இச்சொல் சித்தர்கள் பாடலில் இடம் பெற்று இருப்பதால் பாடலை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்)

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஆற்றுதல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  ஆற்றுதல் 

பொருள்

  • வலியடைதல்
  • கூடியதாதல்
  • போதியதாதல்
  • உய்தல்
  • உவமையாதல்
  • செய்தல்
  • தேடுதல்
  • உதவுதல்
  • நடத்துதல்
  • கூட்டுதல்
  • சுமத்தல்
  • பசிமுதலியன தணித்தல்
  • துன்பம்முதலியன தணித்தல்
  • சூடுதணித்தல்
  • ஈரமுலர்த்துதல்
  • நூல்முறுக்காற்றுதல்
  • நீக்குதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பத்தில னேனும் பணிந்தில னேனும்உன்
உயர்ந்தபைங் கழல்காணப்
பித்தில னேனும் பிதற்றில னேனும்
பிறப்பறுப் பாய்எம் பெருமானே
முத்தனை யானே மணியனை யானே
முதல்வனே முறையோஎன்
றெத்தனை யானும் யான்தொடர்ந் துன்னை
இனிப்பிரிந் தாற்றேனே.

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்து உரை

எம்முடைய பெருமானே! முத்துப் போன்றவனே! மாணிக்கத்தைப் போன்றவனே! எம் தலைவனே! ‘இது முறையோ’ என்று எவ்வாறாயினும் நான் உன்னைப் பற்றித் தொடர்ந்து இனிமேல் பிரிந்திருக்கப் பொறுக்க இயலாதவன் ஆனேன். ஆதலின் உன் மேல் பற்று இல்லாதவனாயினும், உன்னை வணங்குதல் எனும் தொழிலை இல்லாதவனாயினும், உனது மேலான பசுமையான கழலை அணிந்த திருவடிகளைக் காண்பதற்கு விருப்பம் இல்லாதவனாயினும், உன்னைத் துதித்தலை செய்யாதவன் ஆயினும் என் பிறவியைப் போக்கி அருள்வாயாக.

விளக்க உரை

  •  ‘நின் திருவடிக்கு அன்பு இல்லாதவன் மண்ணில் ஏன் பிறந்தேன் கச்சியேகம்பனே!’ எனும் பட்டினத்தாரின் பாடல் வரிகள் இங்கு ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – விரிதாரண

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  விரிதாரண 

பொருள்

  • மிகவும் உறுதியான
  • நிலையானதான

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா
விரிதாரண, விக்ரம வேள், இமையோர்
புரிதாரக, நாக புரந்தரனே.

கந்தர் அநுபூதி – அருணகிரிநாதர்

கருத்து உரை

எங்கும் விரிந்து எதையும் தாங்கும் வலிமை பெற்றவனே, இமைத்தல் எனும் தொழில் இல்லா தேவர்கள் சதா தியானம் செய்யும் பிரவண சொரூபமானவனே, விண்ணுலகத்தைக் காப்பவனே, தன் முயற்சியில் கிடைப்பதற்கு அரிதாகிய மெய்யுணர்வாகிய சிவஞானத்தை, அடியவன் ஆகிய எனக்கு, நீ வந்து உரியதாகும்படி எனக்கு உபதேசம் செய்த பெருமையை என்னவென்று சொல்வது?

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

காரியம் உண்டாக காரணமாக இருப்பது எது?
காரணம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – தவஉறுதல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  தவஉறுதல் 

பொருள்

  • பயின்று வருதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

துவம்தத்தசியே தொந்தத் தசியும்
அவைமன்னா அந்நு வயத்(து) ஏகம்ஆன
தவவுறு தத்வ மசிவேதாந் தத்துச்
சிவமாம் அதுவும்சித் தாந்தவே தாந்தமே.

தேவாரம் – பத்தாம் திருமுறை – திருமூலர்

கருத்து உரை

சாம வேதத்தின் மகாவாக்கிய தத்துவம்  ‘நீ அதுவாக இருக்கின்றாய்’ . இதுவே தொந்தத்தசி என்பது மேலே சொல்லப்பட்டது. இது மாயைக்கு உட்பட்ட குற்றங்கள் நீங்கப்பெற்று சீவன் சிவமாதலையே குறிப்பதாகும். நீ, அது  ஆகிய பேதம் உடைய இரண்டுமே நீக்கப்படாது நிலை பெற்று நின்று, ஒன்றாய் சேருகின்ற இயைபினால் ஒன்றேயாகின்றன.  இது மகாவாக்கியம் வேதாந்தம் . எனவே, இதனை, சித்தாந்த மகா வாக்கியம்` என்றும் வேதாந்த மகாவாக்கியந்தான்` என்றும் சொல்லலாம்.

விளக்க உரை

  • சித்தாந்த மகாவாக்கியமாகிய `சிவத்துவமசி` என்பது திருவைந்தெழுத்தே ஆகும். இதும் இப்பொருளை தரும்
  • மகாவாக்கியங்கள் ஆகிய
  1. பிரக்ஞானம் பிரம்ம – “அறிவுணவாகிய பிரக்ஞையே பிரம்மன் (ரிக் வேதத்தின் ஐதரேய உபநிடதம்) என்பதும்,
  2. அயம்ஆத்மா பிரம்ம – “இந்த ஆத்மா பிரம்மன்”(அதர்வண வேதத்தின் மாண்டூக்ய உபநிடதம்) என்பதும்,
  3. தத்த்வம் அஸி – “பிரம்மம் ஆகிய அதுவே நீ” (சாம வேதத்தின் சாந்தோக்கிய உபநிடதம்) என்பதும்,
  4. அஹம் பிரம்மாஸ்மி – “நானே பிரம்மன்” (யஜுர் வேதத்தின் பிரகதாரண்யக உபநிடதம்) ஆகிய

சொல்வேற்றுமை பற்றி மாறுபாடுதல் கொள்ள வேண்டாம்; அவையெல்லாம் பொருளால் ஒன்றே என்பது கூறப்பட்டது.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

சற்காரியவாதம் என்பதின் எதிர் கொள்கை எது?
அசற்காரியவாதம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – விரவுதல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  விரவுதல் 

பொருள்

  • பரப்பி வைத்தல்
  • கலத்தல்
  • அடைதல்
  • ஒத்தல்
  • பொருந்துதல்
  • நட்புக்கொள்ளுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

வெப்பொடு விரவி ஓர் வினை வரினும்,
அப்பா! உன் அடி அலால் அரற்றாது, என் நா;
ஒப்பு உடை ஒருவனை உரு அழிய
அப்படி அழல் எழ விழித்தவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே!  அழகில் தனக்கு நிகராக தன்னைத் தவிர ஒருவரையும் சொல்ல முடியாத மன்மதனை, நெற்றிக் கண்ணைத் திறந்து, நெருப்புத் தோன்றச் செய்து  விழியால் அவனுடைய வடிவம் அழியுமாறு  செய்தவனே! கொடிய வினைகளால் துன்பம் நெருப்பை போல வந்து தாக்கினாலும், அனைத்து உயிர்களுக்கும் தந்தையான உன் திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் எனது நா வேறொன்றையும் கூறாது. இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும்முறை இதுவோ? உலக நன்மைக்காகத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனது இன்னருளுக்கு அழகாகுமா?

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

சற்காரியவாதம் என்பது என்ன?
இல்லாதது தோன்றாது. உள்ளது அழியாதது எனும் கொள்கை

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஆனியம்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  ஆனியம் 

பொருள்

  • கேட்டைக் குறிக்கும் ஒரு கடைநிலை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

சூனியனா யுருவமின்றி யரூபமின்றி
  சொற்குணங்கள் மூன்றுமின்றி
நடுவிற் தோன்றி ஆனிய மலனான்கு
  மென்று மலமின்றி
ஆவியது காயத்துடன் அடங்கிருப்பதுபோல்
  மோனமேயெவ்வுயிர்க்கு முயிராய்நிற்பன்
முதுமையின்றி யிளமையின்றுப் போக்குவரவின்றி
  ஞானஉரு வாயெங்கு
நிறைந்துநின்ற நாதனுரு யின்னதென்று
  விளம்புதற்கு மரிதே!

அகத்தியர் தத்துவம் 300

கருத்து உரை

சூரியனைப் போல் உருவமின்றி, அரூபம் இன்றி, சாத்விகம், இராட்சதம், மற்றும் தாமச குணம் இன்றி, மனிதப் பிறவியில் ஆடவர்களுக்கு தோன்றும்  கடைநிலை கேட்டைக் குறிக்கும் குணங்களாகிய அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி ஆகியவை மட்டும் இல்லாமல், ஆணவ மலம், மாயை மலம், கண்ம மலம் ஆகிய மலங்களும் இல்லாமல், உயிரானது உடலில் எவரும் அறியாமல் அடங்கி இருப்பது போல், மௌனமாகிய மோன வடிவத்தில்  எல்லா உயிரிலும் உயிராகி நின்று முதுமை இல்லாமல், இளமை இல்லாமல், அதன் காரணங்களாகிய பிறப்பு இறப்பு இல்லாமல், ஞான உருவாக எங்கும் நிறைந்து நிற்கும் நாதனின் உருவம் இவ்வாறானது என்று கூறுவதற்கு இயலாதவாறு இருக்கிறது.

விளக்க உரை

  • அகத்தியர், சிவ லட்சணம் பற்றி கூறும் பாடல்
  • இனிமையும், மெய்ம்மையும் முதலாய சொற்குணங்கள் எனும் திருக்குறள் விளக்கம் இவ்விடம் பொருந்தாது, ஏனெனில் முதலில் சூரியனின் இரண்டு ரூபங்கள் விளக்கம் தரப்பட்டுள்ளன. ஆனிய மலம் நான்கு என்று எண்ணிக்கை நான்காக விளக்கப்பட்டுள்ளதால் சொற்குணங்கள் மூன்று என்று எண்ணிக்கை அடிப்படையில் பொருள் விளக்கப்பட்டுள்ளது.
  • எண்குணங்கள் ஆகிய தன் வயம் உடைமை, தூய உடம்பு உடைமை, இயற்கை உணர்வு உடைமை, முற்றுணர்வு உடைமை, இயல்பாகவே பாசமின்மை, பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை ஆகியவை இவற்றில் பொருந்தி நிற்பது அறிக.
  • அருணகிரிநாதர் அருளிய ‘தேன் என்று பாகு என்று உவமிக்க ஒணா’ தொடங்கும் கந்தர் அலங்கார பாடலில் மெய்ப்பொருள் பற்றிய விளக்கத்தில் ஆகாயம் அன்று, காற்று அன்று, நெருப்பு அன்று, தண்ணீர் அன்று, மண்ணும் அன்று, தான் அன்று, நான் அன்று, உருவமில்லாதது அன்று, உருவத்தை உடையதும் அன்று.  ஒன்றும் அற்ற ஒன்று எனும் பொருள் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

சைவ சித்தாந்தக் கொள்கைகள் எதன் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளன?
சற்காரியவாதம்

 

(இச்சொல் சித்தர்கள் பாடலில் இடம் பெற்று இருப்பதால் பாடலை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – நல்குதல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  நல்குதல்

பொருள்

  • கொடுத்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

நல்கா தொழியான் நமக்கென்றுன் நாமம் பிதற்றி நயனநீர்
மல்கா வாழ்த்தா வாய்குழறா வணங்கா மனத்தால் நினைந்துருகிப்
பல்கா லுன்னைப் பாவித்துப் பரவிப் பொன்னம் பலமென்றே
ஒல்கா நிற்கும் உயிர்க்கிரங்கி அருளாய் என்னை உடையானே.

தேவாரம் – எட்டாம் திருமுறை – மாணிக்கவாசகர்

கருத்து உரை

என்னை உடையவனாக கொண்டவனே, நமக்கு இறைவன் அருள் புரியாது இருக்க மாட்டான் என்று எண்ணி உனது திருநாமமாகிய அஞ்செழுத்தைப் பல காலம் கூறி, அதன் காரணமாக கண்களில் நீர் பெருகி, வாயால் குழறிய வார்த்தையால் வாழ்த்தி, உடலால் வணங்கி, மனத்தினாலே எண்ணிக் கனிந்து, பலகாலும் உனது உருவத்தைத் தியானித்து பொற்சபை என்றே துதித்து தளர்வுற்றிருக்கும் உயிராகிய எனக்கு இரங்கி அருள்புரிவாயாக.

விளக்க உரை

  • இறைவனை வழிபடும் முறையும், இறை அனுபவமும் குறித்தது இப்பாடல்
  • நாமம் பிதற்றுதல், கண்கள் நீர் பெருதல், வாயால் குழறிறிய வார்த்தையால் வாழ்த்துதல் – இறை அனுபவங்கள்

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

உமாபதி சிவம் குறித்த ஆறு அநாதிப் பொருள்கள் எவை?
இறை, உயிர், ஆணவம், மூலகன்மம்,சுத்த மாயை, அசுத்த மாயை

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அட்டுதல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  அட்டுதல் 

பொருள்

  • வார்த்தல்
  • அடுப்பிலிட்டு சமைத்தல்
  • கொண்டுவருதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

நீள நினைந்தடியேன் உனை நித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மடவா ளவள் வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
ஆளிலை எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே.

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

கருத்து உரை

திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கும் எம் பெருமானே, வாள் போன்ற  கண்களை உடைய மடவாளாகிய என் இல்லாளுடன் வாழ்க்கையை நடத்த இயலாமை கருதி மெலிந்து வருந்தாதபடி குண்டையூரிலே குண்டையூர் கிழார் மூலமாகத் யான் நெல்லை பெற்றேன் . அவைகளை அவளிடத்தில் சேர்ப்பிக்க எனக்கு ஆளில்லை; அடியேன், எப்பொழுதும் உன்னையே நினைத்து நாள்தோறும் வணங்கும் தொழிலை உடையவனானதால் வேறு யாரை வேண்டுவேன்! அவைகளை அங்குச் சேர்ப்பித்து உதவ, நீ எவருக்கேனும் கட்டளையிட்டு அருளவேண்டும்!

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

அநாதிப் பொருள்களை ஆறு என கணக்கிட்டவர்
உமாபதி சிவம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மலங்குதல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  மலங்குதல் 

பொருள்

  • சாய்ந்துவிழுதல்
  • மருளுதல்
  • பரவசமாதல்
  • மாறுபடுதல்
  • நிலையழிதல்
  • வருந்துதல்
  • தாக்கப்படுதல்
  • சந்தேகமடைதல்
  • தயங்குதல்
  • கலத்தல்
  • நெருங்குதல்
  • கைகலத்தல்
  • அறிவு கெடுதல்
  • கலக்கமுறுதல்
  • உணர்ச்சியிழத்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மலங்கி னேன்கண்ணின் நீரை மாற்றி
மலங்கெ டுத்தபெ ருந்துறை
விலங்கி னேன்வினைக் கேட னேன்இனி
மேல்வி ளைவ தறிந்திலேன்
இலங்கு கின்றநின் சேவ டிகள்
இரண்டும் வைப்பிட மின்றியே
கலங்கி னேன்கலங் காமலே வந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே.

தேவாரம் – 8ம் திருமுறை – மாணிக்கவாசகர்

கருத்து உரை

எனது கண்ணீரை துடைத்து என் மலத்தை அழித்து ஆட்கொண்ட திருப்பெருந்துறைப் பெருமானே! வினைகளின் காரணமாக நான் உன்னை விட்டு நீங்கினேன்; அதனால் விளையும் காரியத்தை அறிந்திருக்கவில்லை; உன் திருவடிகளை  வைக்கத் தூய்மையான இடம் இல்லாமல் கலங்கினேன்; நான் கலங்காதபடி நீ திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி, உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய்; என்னே உன் பெருங்கருணை!

 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – சங்கை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  சங்கை 

பொருள்

  • அச்சம்
  • அளவு
  • ஐயம்
  • களம்
  • சுக்கு
  • சுண்டி
  • மதிப்பு
  • வழக்கம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அயன் முதற்கொண்டு ஐவருடல் உயிருஞ் சத்தி
ஆதியந்த சிவனாரும் உயிருக்குயிராய் நின்று
தயவுபெற வெடுத்துவுயிர் ஆண்பெண் கோடிச்
சங்கையில்லா மூப்பிளமை சாக்காடன்றி
ஐயம்பெறவே வொருகோடி காலம் வாழ்ந்து
தீர்க்கமுடன் இருக்கையிலே மைந்தாகேளு
நயம்பெறவே சிவனுமையை நோக்கி மைந்தா
நமை வணங்க அனுக்கிரகஞ் செய் என்றாரே

அகத்தியர் சௌமிய சாகரம்

கருத்து உரை

உடல் என்பது பஞ்ச கர்த்தாக்கள் எனப்படும் சதாசிவன், மகேஸ்வரன், ருத்திரன், விஷ்ணு, பிரம்மா என்ற ஐந்து தெய்வங்களின் கலவை; அதனுள் உறையும் உயிர் சக்தி; அந்த உயிருக்கு உயிராக இருப்பது சிவன்; இவ்வாறு உடலும் உயிருமான வஸ்து கணக்கற்ற கோடி ஆண்டுகள் மாறுபாடு இல்லாதவாறும், மூப்பு, இளமை மற்றும் சாக்காடு இன்றியும் இருந்தது; அப்போது மேன்மை பெறுவதற்காக சிவ சக்தியிடம் நமை வணங்க அனுகிரகம் செய் என்று கூறினார் என்றும் இப்பாடலில் சொல்கிறார் அகத்தியர்.

விளக்க உரை

  • நமது உடலில் இந்த அட்சரங்களின் இருப்பிடம் – ந எனும் எழுத்து இரு கால்களையும், ம எனும் எழுத்து வயிற்றினையும் குறிக்கும்.
  • பஞ்சாட்சர மந்திரத்தில் ந எனும் எழுத்து பிரம்மனையும், ம எனும் எழுத்து விஷ்ணுவையும் குறிப்பதாகும். அதோடு பிரம்மன் விழிப்புநிலையையும், விஷ்ணு கனவுநிலையையும் குறிக்கின்றனர். இதை கடக்க வேணும் என்பதாகவும் பொருள் கொள்ளலாம். (தூங்காமல் தூங்கி கிடப்பது எக்காலம் எனும் வரிகள் இங்கு சிந்திக்கத் தக்கவை.
  • இச் சொல் நம்மை சிவ சக்தியை வணங்க அருள் செய் என்று கூறுவதாகவும் நம எனப்படும் மாயையை போற்றச் செய் என்று கூறுவதாகவும் பொருள் கொள்வார் உளர்.
  • அஃதாவது மாயையை வழிபடுவது என்பது அதனை செயலாற்ற அனுமதித்து அசுத்த மாயையை செயல்படச் செய்து உலகை இயங்கச் செய்யவேண்டும் என்றும் பொருள் கொள்வார் உளர்.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

அநாதி என்பது என்ன?
தோற்றம் என்பதை கண்டறியா முடியாதது

 

(இச்சொல் சித்தர்கள் பாடலில் இடம் பெற்று இருப்பதால் பாடலை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அறுபகை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  அறுபகை   

பொருள்

  • காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் எனும் ஆறு வகையான குற்றங்கள்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஒழித்தேன் பிறவியை ஊர்ந்தேன்
  அறுபகை ஒங்கிற்றுள்ளம்
இழித்தேன் உடம்பினை ஏலேன்
  பிறரிடை இம்மனையும்
பழித்தேன் பழியே விளைக்கும்பஞ்
  சேந்தியக் குஞ்சரமும்
தெழித்தேன் சிவனடி சேர்ந்தேன்
  இனிமிகத் தெள்ளியனே

11ம் திருமுறை – சேரமான்பெருமாள் நாயனார்

கருத்து உரை

சிவனது திருவடிகளையே சேர்ந்தேன்; எனது உள்ளம் உயர்நிலையை அடைந்தது. அதனால் யான் இனி வர கூடியதாக இருக்கும் பிறவி யாதொன்றும் இல்லாமல் ஒழித்துவிட்டேன். காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் எனும் அகப்பகை  ஆறினையும் விலக்கி அடுத்த நிலைக்கு செல்லத் துணிந்தேன். உடம்பின் இழிவை உணராது பற்றியிருந்த நிலையைவிட்டும் அதன் இழிவை அறிந்தும் இனிப் பிறரிடம் சென்று இரத்தலைச் செய்யேன். எனக்கு உரியதானது என்றாலும், பிறராலும் மதிக்கப்பட்ட இந்த உடலாகிய இல்லத்தையும் இகழ்ந்து நீங்கினேன். குற்றங்களையே விளைவிக்கின்ற பஞ்சேந்திரியங்களாகிய யானைகளை அதட்டி அடக்கினேன். ஆகவே, யான் இப்பொழுது மயக்கங்கள் யாவும் நீங்கித் தெளிவடைந்தவனாகி விட்டேன்.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

பதி, பசு, பாசம் என்பதை எவ்வாறு தமிழில் குறிக்கலாம்?
இறை, உயிர், தளை

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – இரத்தல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  இரத்தல் 

பொருள்

  • பிச்சைகேட்டல்
  • வேண்டுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

புரமவை எரிதர வளைந்தவில் லினனவன்
மரவுரி புலியதள் அரைமிசை மருவினன்
அரவுரி நிரந்தயல் இரந்துண விரும்பிநின்
றிரவெரி யாடிதன் இடம்வலம் புரமே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

கருத்து உரை

திரிபுரங்கள் எரியுமாறு செய்தவனும், வளைந்த வில்லை உடையவனும், மரவுரியையும் புலித்தோலையும் இடையில் அணிந்தவனும், வேண்டுகோளுக்கு இணங்க பாம்பினை அணிந்தவனும், யாசித்து உண்ண விரும்புபவனும், இரவில் தீயில் நின்று ஆடுபவனும் ஆகிய இறைவனது இடம் `திருவலம்புரம்` என்னும் தலமே.

விளக்க உரை

  • ‘அரவுரி நிரந்தயல் இரந்துண விரும்பிநின்’ என்று பாடலிலும் ‘பாம்பின் தோல் பொருந்தப்பட்டவனும்’ பல இணையபதிப்புகளில் காணப்படுகிறது. ‘அரவுரி யிரந்தவன்’ என்றே மூலத்தில் காணப்படுவதால் விளக்கம் மூலத்தின் பொருட்டே தரப்பட்டுள்ளது.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

சைவ சித்தாந்தத்தின் மூன்று உட்பொருள்கள்
பதி, பசு, பாசம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – தண்ணளி

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  தண்ணளி 

பொருள்

  • கருணை
  • குளிர்ந்தஅருள்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

தண்ணளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதி வானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முக்தி வீடும் அன்றோ
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே

அபிராமி அந்தாதி

கருத்து உரை

இசையின் அடைப்படையாகிய சொற்களைக் கூறும் நறுமணம் வீசும் ஈசனின் தோழியான பைங்கிளியே அபிராமி அன்னையே, உன்னுடைய குளிர்ச்சி பொருந்திய திருவருளை பெறுவதற்காக மிகுந்த முயற்சியுடன் பல கோடி தவங்கள் செயவார்கள்; அவர்கள் இந்த மண்ணுலகம் கொடுக்கும் செல்வங்களை மட்டுமா பெறுவார்? வானவர்கள் விண்ணுலகம் தன்னில் வாழ்ந்து அனுபவிக்கும் செல்வமும், என்றும் அழியாத இன்பம் தரும் முக்தி எனும் வீடு பேறும் பெறுவார் அன்றோ!

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

சித்தர் சிவப்பிரகாசரின் மாணவர் யார்?
நமச்சியாய மூர்த்திகள் எனும் திருவாடுதுறை ஆதீன ஸ்தாபகர்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பவயோகம்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  பவயோகம் 

பொருள்

  • பிறப்புக்கு காரணமாகிய பேதைமை முதலிய குற்றங்களின் சேர்க்கை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

சிவயோக சந்திதரும் தேவிஉல குடையாள்
   சிவகாம வல்லியொடுஞ் செம்பொன்மணிப் பொதுவில்
நவயோக உருமுடிக்கண் விளங்கியநின் வடிவை
   நாய்க்கடையேன் நான்நினைத்த நாள்எனக்கே மனமும்
பவயோக இந்தியமும் இன்பமய மான
   படிஎன்றால் மெய்யறிவிற் பழுத்தபெருங் குணத்துத்
தவயோகர் கண்டவிடத் தவர்க்கிருந்த வண்ணம்
   தன்னைஇந்த வண்ணம்என என்னை உரைப்பதுவே

திருவருட்பா – ஐந்தாம் திருமுறை – வள்ளலார்

கருத்து உரை

முக்திக்கு உரித்தான சிவயோகங்களை முயல்பவர்களுக்கு அந்த பயனைக் கூட்டுவிக்கும் தேவியும், உலகுகளை உடைமையாக உடையவளுமாகிய சிவகாம வல்லி என்னும் உமாதேவியுடன் செம்பொன்னால் வேயப்பட்ட மணியொளிரும் அம்பலத்தின்கண் அறிய இயலா புதியதொரு யோக வகையில் எய்தும் காட்சி முடிவில் விளங்குவதாகிய நின்னுடைய திருஉருவை நாயினும் கடைப்பட்ட யான் நினைக்கிறபோது எனக்கே மனமும், கண் முதலிய இந்திரியங்களும் இன்பமாகின்றன என்றால், உண்மை ஞானமும் பெரிய நற்குணமும் கொண்ட தவயோகியர் காட்சிக்குத் தோன்றிய ஞானத் திருவுரு நலத்தை வாயால் எவ்வாறு உரைக்க இயலும்?

விளக்க உரை

  • ‘நவயோகம் நந்தி நமக்களித் தானே’ எனும் திருமந்திரப்பாடல் இங்கு சிந்திக்கத் தக்கது
  • பவயோக இந்தியம் (இந்திரியம்) – பிறவிப் பிணிக்கு கண் முதலியவை  வாயில்கள்
  • “மெய்யறிவில் பழுத்த பெருங்குணத்துத் தவயோகர்’ – சிவஞான யோகிகளுக்கு உண்மை உணர்வும் உயர்குணங்களும் இன்றியமையாதவை என்பதை முன்னிட்டு

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

அருள்நமச்சிவாயரின் மாணவர் யார்?
சித்தர் சிவப்பிரகாசர்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – தைவம்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  தைவம்

பொருள்

  • உடைமை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

தன்னை யறிவித்துத் தான்றானாச் செய்தானைப்
பின்னை மறத்தல் பிழையலது முன்னவனே
தானேதா னாச்செய்துந் தைவமென்றுந் தைவமே
மானே தொழுகை வலி.

சிவஞான போதம் – மெய்கண்ட தேவர்

கருத்து உரை

தன்னை அறிவித்து, எண்குணத்தானாகிய தன்னை அவன் போலவே செய்தானைப் பின்னை மறத்தல் குற்றம் எனும் உண்மையை அறியமாட்டாது குருடாய்க் கிடந்த உயிர்களுக்கு பலவகையிலும் அதனைத் தெரியப்படுத்தி அவ்வுண்மையை உணர்த்தி வினைகளை முன்னிறுத்தி எளியதாக இருக்கும் அந்த உயிரினை அத்தனை அரியதாக செய்து அளித்த பேருதவியை மறந்து போதல் பரிகாரம் செய்யமுடியா பெரும் குற்றம் ஆகும். முதல்வன், அவ்வுயிரினை அதன் தன்மை அறிந்து சுதந்திரமாக செயல்பட அனுமதி செய்தாலும் அது சுதந்திரமாகி விடாது; அவனுக்கு என்றும் அடிமையாகவே நிற்கும்.  எனவே குருவாகி வந்து நிற்கும் அருளிய பெரியோனை வழிபடுதலே சிற்றுயிர்க்கு சிறப்பு தருவதாகும்.

துக்கடா சைவ சித்தாந்தம் வினா விடை

உமாபதிசிவத்தின் மாணவர் யார்?
அருள்நமச்சிவாயம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பெட்ட

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  பெட்ட

பொருள்

  • வறிய

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாதே
பெட்டப் பிணமென்று பேரிட்டுக் – கட்டி
எடுங்களத்தா என்னாமுன் ஏழைமட நெஞ்சே
நெடுங்களத்தான் பாதம் நினை. -திருவெண்பா. 8

11-ம் திருமுறை – சேத்திரத் திருவெண்பா – ஐயடிகள் காடவர்கோன்

கருத்து உரை

கைகளால் தொட்டுப் பார்த்தும், நெஞ்சினை தடவியும் நாடியின் துடிப்பு ஒரு சிறிதும் காணாததால் வறிய பிணம் என்று அவ்வுடலுக்கு பேர் சூட்டி,  ‘கட்டி எடுங்கள் என்று சொல்வதற்கு கூட உறுதுணையில்லாத மடநெஞ்சமே, திருநெடுங்களத்தில் எழுந்தருளியுள்ள இறைவனது திருவடிகளை நினை.

விளக்க உரை

  • தொட்டு – கை நாடியின் துடிப்புப் பார்த்தல்
  • துடிப்பொன்றும் – இரத்த ஓட்டம் நிற்கும் போது இதயத் துடிப்பும் நிற்கும்
  • பெட்டப் பிணம் – வெறும் பிணம் என்பதை குறிப்பால் உணர்த்துதல். ‘பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு’ எனும் திருமந்திரம் சிந்திக்கத் தக்கது
  • கட்டுதல் – உடலை பாடையில் வைத்துக் கட்டுதல்

 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – உண்ணீர்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  உண்ணீர்

பொருள்

  • குடிநீர்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறிய ரென்றிருக்க வேண்டா-கடல்பெரிது
மண்ணீரு மாகா ததனருகே சிற்றூறல்
உண்ணீரு மாகி விடும்.

மூதுரை – ஔவையார்

கருத்து உரை

இதழ்களின் அளவினாலே தாழம்பூ பெரிதாக இருக்கிறது, மகிழம்பூ இதழ்களின் அளவினாலே சிறிதாயினும் மணத்திலே தாழம்பூவினை விடவும் இனிதாக இருக்கிறது, சமுத்திரம் பெரிதாக இருக்கிறது, ஆயினும் அதிலுள்ள நீர் (உடல்) கழுவுவதற்குத் தக்க நீராக ஆகாது; அதன் பக்கத்தே சிறிய மணல் குழியில் சுரக்கும் ஊற்றுநீர், குடிக்கத்தக்க நீராக ஆகும்; எனவே ஒருவரை உருவத்தினாலே சிறியவரென்று மதியாமல் இருக்கவேண்டா.

விளக்க உரை

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் எனும் பொருள் பற்றிய பாடல்

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

மறைஞானசம்பந்தரின் மாணாக்கர் யார்?
உமாபதி சிவம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பந்தனை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  பந்தனை

பொருள்

  • கட்டுகை
  • கட்டு
  • பற்று
  • ஆணவாதி குற்றங்கள்
  • பாலாரிஷ்டம்
  • மகள்

வாக்கிய பயன்பாடு

பொண்ணு பந்தனை இன்னும் வுடல ஓய்! விட்டு இருந்தா உசிரு என்னைக்கோ போயியிருக்குமே, அதாலதான் நீ இப்டி பேசற.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

சிந்தனை செய்ய மனம் அமைத்தேன் செப்ப நா அமைத்தேன்
வந்தனை செய்யத் தலை அமைத்தேன் கை தொழ அமைத்தேன்
பந்தனை செய்வதற்கு அன்பமைத்தேன் மெய் அரும்ப வைத்தேன்
வெந்த வெண்ணீறணி ஈசற்கு இவை யான் விதித்தனவே

பதினொன்றாம் திருமுறை – பொன் வண்ணத்து அந்தாதி – சேரமான் பெருமாள் நாயனார்

கருத்து உரை

சுட்ட வெண்ணீற்றை அணியும் எம்பெருமானாகிய ஈசன் எனக்கு நிர்ணயித்தவாறும் சிந்தனை செய்வதற்கு தக்கவாறும் மனத்தை அமைத்தேன். அவரை துதி செய்ய நாவை அமைத்தேன். எம்பெருமானாகிய ஈசனை வழிபாடு செய்யத் தலையை அமைத்தேன். அவரை வணங்குவதற்காக கையை அமைத்தேன். ஊள்ளத்தில் ஈசனை கட்டுவதற்கு அன்பை அமைத்தேன்  மலர்ச்சி பெறுவதற்காக உடம்பை வைத்தேன்.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

அருணந்தி சிவத்தின் மாணாக்கர் யார்?
மறைஞானசம்பந்தர்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – குந்திநடத்தல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  குந்திநடத்தல்

பொருள்

  • நெடுக நடந்துபோக இயலாமல் இடையிடையே அமர்ந்து அமர்ந்து எழுந்து நடத்தல்

வாக்கிய பயன்பாடு

ஏன், இவ்வளவு லேட்டு?
என்னா செய்யிறது வயசாயிடுச்சி, குந்தி குந்தி நடந்து வாரேன். மூச்சு வாங்குது.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி,
நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை .

11 ம் திருமுறை – சேத்திர வெண்பா – ஐயாறுஅடிகள் காடவர் கோன் நாயனார்

கருத்து உரை

நடக்க இயலாமல் அமர்ந்து அமர்ந்து நடந்து,  உடல் வளம் குறைந்து முதுகு வளைந்து ஒரு கையில் கோல் ஊன்றி, வலியால் நொந்து இருமி, மூச்சு விட ஏங்கி, வாந்தி அல்லது எச்சில் வாயில் இருந்து ஆறாகப் பெருகி வெளியே தள்ளும் முன்னும் ஐயாறு எனும் திருவையாறு ஊரில் உள்ள சிவனை அல்லது அந்த ஊரின் பெயரையே வாயால் அழை.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

மெய்கண்டாரின் மாணவர்களில் முக்கியமானவர்கள் யார்?
அருணந்தி சிவம், மனவாசகம் கடந்தார்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – வைத்துாறு

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  வைத்துாறு

பொருள்

  • வைக்கோல் குவியல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஒத்துறு புணர்ச்சியின் உருக்கள்பல வாகும்
வைத்துறு கடாதிபல மண்ணின்வரு மாபோற்
புத்திகுண நற்பொறி புலன்களிவை யெல்லாம்
இத்தில்வரும் நீரினில் எழுங்குமிழி ஒத்தே.

சிவஞானசித்தியார்

கருத்து உரை

ஒரே மண்ணில் இருந்து திரித்து பல குடங்கள் செய்தலைப் போல,  நீரினில் இருந்து வெளிப்படும் நீர்குமிழி போல,  பூதங்களின் சொரூபங்களும், குணங்களும்  ஒன்றாக கூடுகின்ற பொழுது அவைகளின் தன்மைக்கு ஏற்றவாறு அதன் புத்தி, குணங்கள் ஒத்து ஞானேந்திரியமாகிய பொறிபுலன்கள் இவ்வுருவில்  வடிவு  பெறும்.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

திருவியலூர் உய்ய வந்த தேவநாயனார் செய்த நூல்
திருவுந்தியார்

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!