ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – பெட்ட
பொருள்
- வறிய
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாதே
பெட்டப் பிணமென்று பேரிட்டுக் – கட்டி
எடுங்களத்தா என்னாமுன் ஏழைமட நெஞ்சே
நெடுங்களத்தான் பாதம் நினை. -திருவெண்பா. 8
11-ம் திருமுறை – சேத்திரத் திருவெண்பா – ஐயடிகள் காடவர்கோன்
கருத்து உரை
கைகளால் தொட்டுப் பார்த்தும், நெஞ்சினை தடவியும் நாடியின் துடிப்பு ஒரு சிறிதும் காணாததால் வறிய பிணம் என்று அவ்வுடலுக்கு பேர் சூட்டி, ‘கட்டி எடுங்கள்’ என்று சொல்வதற்கு கூட உறுதுணையில்லாத மடநெஞ்சமே, திருநெடுங்களத்தில் எழுந்தருளியுள்ள இறைவனது திருவடிகளை நினை.
விளக்க உரை
- தொட்டு – கை நாடியின் துடிப்புப் பார்த்தல்
- துடிப்பொன்றும் – இரத்த ஓட்டம் நிற்கும் போது இதயத் துடிப்பும் நிற்கும்
- பெட்டப் பிணம் – வெறும் பிணம் என்பதை குறிப்பால் உணர்த்துதல். ‘பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு’ எனும் திருமந்திரம் சிந்திக்கத் தக்கது
- கட்டுதல் – உடலை பாடையில் வைத்துக் கட்டுதல்