அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – தவஉறுதல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  தவஉறுதல் 

பொருள்

  • பயின்று வருதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

துவம்தத்தசியே தொந்தத் தசியும்
அவைமன்னா அந்நு வயத்(து) ஏகம்ஆன
தவவுறு தத்வ மசிவேதாந் தத்துச்
சிவமாம் அதுவும்சித் தாந்தவே தாந்தமே.

தேவாரம் – பத்தாம் திருமுறை – திருமூலர்

கருத்து உரை

சாம வேதத்தின் மகாவாக்கிய தத்துவம்  ‘நீ அதுவாக இருக்கின்றாய்’ . இதுவே தொந்தத்தசி என்பது மேலே சொல்லப்பட்டது. இது மாயைக்கு உட்பட்ட குற்றங்கள் நீங்கப்பெற்று சீவன் சிவமாதலையே குறிப்பதாகும். நீ, அது  ஆகிய பேதம் உடைய இரண்டுமே நீக்கப்படாது நிலை பெற்று நின்று, ஒன்றாய் சேருகின்ற இயைபினால் ஒன்றேயாகின்றன.  இது மகாவாக்கியம் வேதாந்தம் . எனவே, இதனை, சித்தாந்த மகா வாக்கியம்` என்றும் வேதாந்த மகாவாக்கியந்தான்` என்றும் சொல்லலாம்.

விளக்க உரை

  • சித்தாந்த மகாவாக்கியமாகிய `சிவத்துவமசி` என்பது திருவைந்தெழுத்தே ஆகும். இதும் இப்பொருளை தரும்
  • மகாவாக்கியங்கள் ஆகிய
  1. பிரக்ஞானம் பிரம்ம – “அறிவுணவாகிய பிரக்ஞையே பிரம்மன் (ரிக் வேதத்தின் ஐதரேய உபநிடதம்) என்பதும்,
  2. அயம்ஆத்மா பிரம்ம – “இந்த ஆத்மா பிரம்மன்”(அதர்வண வேதத்தின் மாண்டூக்ய உபநிடதம்) என்பதும்,
  3. தத்த்வம் அஸி – “பிரம்மம் ஆகிய அதுவே நீ” (சாம வேதத்தின் சாந்தோக்கிய உபநிடதம்) என்பதும்,
  4. அஹம் பிரம்மாஸ்மி – “நானே பிரம்மன்” (யஜுர் வேதத்தின் பிரகதாரண்யக உபநிடதம்) ஆகிய

சொல்வேற்றுமை பற்றி மாறுபாடுதல் கொள்ள வேண்டாம்; அவையெல்லாம் பொருளால் ஒன்றே என்பது கூறப்பட்டது.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

சற்காரியவாதம் என்பதின் எதிர் கொள்கை எது?
அசற்காரியவாதம்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *