ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – வைத்துாறு
பொருள்
- வைக்கோல் குவியல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
ஒத்துறு புணர்ச்சியின் உருக்கள்பல வாகும்
வைத்துறு கடாதிபல மண்ணின்வரு மாபோற்
புத்திகுண நற்பொறி புலன்களிவை யெல்லாம்
இத்தில்வரும் நீரினில் எழுங்குமிழி ஒத்தே.
சிவஞானசித்தியார்
கருத்து உரை
ஒரே மண்ணில் இருந்து திரித்து பல குடங்கள் செய்தலைப் போல, நீரினில் இருந்து வெளிப்படும் நீர்குமிழி போல, பூதங்களின் சொரூபங்களும், குணங்களும் ஒன்றாக கூடுகின்ற பொழுது அவைகளின் தன்மைக்கு ஏற்றவாறு அதன் புத்தி, குணங்கள் ஒத்து ஞானேந்திரியமாகிய பொறிபுலன்கள் இவ்வுருவில் வடிவு பெறும்.
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
திருவியலூர் உய்ய வந்த தேவநாயனார் செய்த நூல்
திருவுந்தியார்