ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – மலங்குதல்
பொருள்
- சாய்ந்துவிழுதல்
- மருளுதல்
- பரவசமாதல்
- மாறுபடுதல்
- நிலையழிதல்
- வருந்துதல்
- தாக்கப்படுதல்
- சந்தேகமடைதல்
- தயங்குதல்
- கலத்தல்
- நெருங்குதல்
- கைகலத்தல்
- அறிவு கெடுதல்
- கலக்கமுறுதல்
- உணர்ச்சியிழத்தல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
மலங்கி னேன்கண்ணின் நீரை மாற்றி
மலங்கெ டுத்தபெ ருந்துறை
விலங்கி னேன்வினைக் கேட னேன்இனி
மேல்வி ளைவ தறிந்திலேன்
இலங்கு கின்றநின் சேவ டிகள்
இரண்டும் வைப்பிட மின்றியே
கலங்கி னேன்கலங் காமலே வந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே.
தேவாரம் – 8ம் திருமுறை – மாணிக்கவாசகர்
கருத்து உரை
எனது கண்ணீரை துடைத்து என் மலத்தை அழித்து ஆட்கொண்ட திருப்பெருந்துறைப் பெருமானே! வினைகளின் காரணமாக நான் உன்னை விட்டு நீங்கினேன்; அதனால் விளையும் காரியத்தை அறிந்திருக்கவில்லை; உன் திருவடிகளை வைக்கத் தூய்மையான இடம் இல்லாமல் கலங்கினேன்; நான் கலங்காதபடி நீ திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி, உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய்; என்னே உன் பெருங்கருணை!