ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – பெரும்பாரக்கோடு
பொருள்
- வயிற்றினையும் இடுப்பையும் பிரிக்கும் வயிற்றுக்கு கீழே இருக்கும் கோடு.
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
விநாயகர் அகவல் – ஔவையார்
கருத்து உரை
வினாயகர் அகவல் முழுவதும் யோக மார்க்கங்களுடன் தொடர்பு உடையது. அது தன்னுள் பல சித்த பரிபாஷைகளை உள்ளடக்கியது. உடலில் பஞ்ச பூதங்களில் தலையாயதான நெருப்பு சோதியாக மெய்ப்பொருளாக இருக்கிறது. பேழை என்பது வினைகளின் மற்றும் மும்மலங்களின் வடிவமாக பானையை ஒத்து இருக்கிறது. வினைகளின் காரணமாக மாயைகளுக்கு உட்பட்டு அலையும் உயிர்கள் மூலாதாரத்தின் இருப்பிடத்தை உணர விடாமல் மாயை எனும் பாரம் தடுக்கிறது. எவ்வாறு காற்று ஊதுகுழல் வழியாக செலுத்தப் பட்டு குமுட்டி அடுப்பில் அக்கினி உருவாகிறதோ அது போல வாசியின் உதவியுடன் மூலாதாரத்தை உணர்ந்தால் வாசியானது மேலெழும்பி மெய்ப்பொருள் ஸ்தானத்தையடைந்து அங்கு நிலைகொண்ட அக்கினியை ஒளிர வைக்கும். அக்கினி ஒளிர்வின் அசைவே சித்தர்கள் பரிபாசையில் சோதிநடனம் எனப்படும். மலங்களான பாரங்கள் மூலாதார ஸ்தானத்தை அறியவிடாது நம்மை பொய்மையில் ஆழ்த்தும். இப்பிரிவினையைக் குறிப்பதே பெரும்பாரக் கோடு.
விளக்க உரை
- ‘மிகவும் கனமான, உறுதிமிக்க ஒற்றை தந்தம்’ என்று பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது.
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
காரியத்துக்கு உரிய மூவகைக் காரணங்கள் எவை எவை?
முதற் காரணம், துணைக் காரணம், நிமித்தக் காரணம்
கருத்துரைக்கு விளக்கம் அளித்த மதனா அண்ணா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
(குரு நாதரின் உத்தரவிற்கு பிறவே இப்பாடலுக்கு இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இச்சொல் சித்தர்கள் பாடலில் இடம் பெற்று இருப்பதால் பாடலை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்)