ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – குந்திநடத்தல்
பொருள்
- நெடுக நடந்துபோக இயலாமல் இடையிடையே அமர்ந்து அமர்ந்து எழுந்து நடத்தல்
வாக்கிய பயன்பாடு
ஏன், இவ்வளவு லேட்டு?
என்னா செய்யிறது வயசாயிடுச்சி, குந்தி குந்தி நடந்து வாரேன். மூச்சு வாங்குது.
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி,
நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை .
11 ம் திருமுறை – சேத்திர வெண்பா – ஐயாறுஅடிகள் காடவர் கோன் நாயனார்
கருத்து உரை
நடக்க இயலாமல் அமர்ந்து அமர்ந்து நடந்து, உடல் வளம் குறைந்து முதுகு வளைந்து ஒரு கையில் கோல் ஊன்றி, வலியால் நொந்து இருமி, மூச்சு விட ஏங்கி, வாந்தி அல்லது எச்சில் வாயில் இருந்து ஆறாகப் பெருகி வெளியே தள்ளும் முன்னும் ஐயாறு எனும் திருவையாறு ஊரில் உள்ள சிவனை அல்லது அந்த ஊரின் பெயரையே வாயால் அழை.
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
மெய்கண்டாரின் மாணவர்களில் முக்கியமானவர்கள் யார்?
அருணந்தி சிவம், மனவாசகம் கடந்தார்