அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அட்டுதல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  அட்டுதல் 

பொருள்

  • வார்த்தல்
  • அடுப்பிலிட்டு சமைத்தல்
  • கொண்டுவருதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

நீள நினைந்தடியேன் உனை நித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மடவா ளவள் வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
ஆளிலை எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே.

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

கருத்து உரை

திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கும் எம் பெருமானே, வாள் போன்ற  கண்களை உடைய மடவாளாகிய என் இல்லாளுடன் வாழ்க்கையை நடத்த இயலாமை கருதி மெலிந்து வருந்தாதபடி குண்டையூரிலே குண்டையூர் கிழார் மூலமாகத் யான் நெல்லை பெற்றேன் . அவைகளை அவளிடத்தில் சேர்ப்பிக்க எனக்கு ஆளில்லை; அடியேன், எப்பொழுதும் உன்னையே நினைத்து நாள்தோறும் வணங்கும் தொழிலை உடையவனானதால் வேறு யாரை வேண்டுவேன்! அவைகளை அங்குச் சேர்ப்பித்து உதவ, நீ எவருக்கேனும் கட்டளையிட்டு அருளவேண்டும்!

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

அநாதிப் பொருள்களை ஆறு என கணக்கிட்டவர்
உமாபதி சிவம்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *