நகர மறுக்கும் நினைவுகள் – 5 பூந்தளிர் ஆட

இது என் பதினெண் வயதுகளில் ஒலிக்கத் துவங்கிய பாடல்.
படம் : பன்னீர் புஷ்பங்கள்.
புகைவண்டி நகர்தலும் பேச்சுக்கள் ஆரம்பம் ஆவதும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன.
பூந்தளிர் ஆட
பொன்மலர் சூட
சிந்தும் பனி வாடை காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும் புது ராகங்கள்
இனி நாளும் சுப காலங்கள்
வாடைக்காற்று வீசத் துவங்குகிறது. நண்பர்கள் வட்டம் மெதுவாக வேடிக்கைப் பார்க்கிறது. கைகளில் இருப்பதை விளையாட்டாய் பேசிக் கொண்டே விளையாடத் துவங்குகிறாள் தலைவி. மரத்தில் தலைவன். மிதி வண்டி அருகினில் நாயகி.

உணவு படைக்கப்படும் இடத்தில் இருவரும் எழுதிக் கொண்டே இருக்கிறார்கள்.புன்னகை இருவருக்கும்.
வாகனத்தில் வருகையில் கை அசைக்கும் காட்டுப் பூப் போல இசை நகர்ந்து கொண்டிருக்கிறது.
நாயகி வாசிக்கத் துவங்குகிறாள். நாயகன் தானும் வாசிக்க முற்படுகிறான். பல முறைகள் நிகழ்கிறது.
காதலை ஏற்றும் காலையின் காற்றும்
நீரை தொட்டு பாடும் பாட்டும் காதில் பட்டதே
வாலிப நாளில் வாசனை பூவின்
வாடை பட்டு வாடும் நெஞ்சில் எண்ணம் சுட்டதே
கோடிகள் ஆசை கூடிய போது
கூடும் நெஞ்சிலே… கோலம் இட்டதே…
தேடிடுதே பெண் காற்றின் ராகம்…
புகைவண்டி நகர்தலும் பேச்சுக்கள் ஆரம்பம் ஆவதும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன.
  
தலைவி தேடுகிறாள். தோற்றுப் போகிறாள். தலைவன் ‘கொக்கு‘ காண்பிக்கிறான்.
பூமலர் தூவும் பூ மரம் யாவும்
ம் ம் ம்
போதை கொண்டு பூமி தன்னை பூஜை செய்யுதே
அ..அ..அ
பூ விரலாலும் பொன் இதழாலும்
ம் ம் ம்
பூவை எண்ணம் காதல் என்னும் இன்பம் சொல்லுதே
பூமழை தூவும் புண்ணிய மேகம்
பொன்னை அள்ளுதே எண்ணம் மிஞ்சுதே
ஏங்கிடுதே என் ஆசை எண்ணம்
  
புகை வண்டியில் பயணம் தொடர்கிறது, விளையாட்டு விளையாட்டு என நகர்ந்து கொண்டிருக்கிறது(கூடவே வாழ்வும்)

நாயகி நேரம் கழித்து ஓடி வருகிறாள். தலைவனிடம் கோபம் மட்டுமே இருக்கிறது. தலைவி கை குலுக்கி கோபத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கிறாள். தலைவன் முரண்படுகிறான். பிறகு கோபம் மறைகிறது இருவருக்கும்.
இருவரும் மீன் பிடிக்கிறார்கள். தூண்டிலில் மீன் சிக்குகிறது. ஒரு சிறிய பயமுறுத்தல் தொடங்குகிறது.
சைக்கிளில் பயணம் தொடர்கிறது. கதிரவன் சாட்ஷியாக இருக்கிறான்.

பள்ளிக் கூட வாழ்வியல் அழகாகப் படைக்கப் பட்டிருக்கிறது. 

காலம் உறைத்துவிட்ட தளிர்கள் இன்னும் இளமையாய், இனிமையாய்.

Loading

சமூக ஊடகங்கள்

வார்த்தைகளின் விடுதலை

சொல்லுக்கும் சொல் பிறக்கும்
இடத்திற்கும் இடையில் போராட்டம்
முடிவில் வென்றது மௌனம் மட்டுமே.

Click by : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 4

ஏங்க, இன்னைக்கு லீவுதான, கொஞ்சம் கடைக்கி போய்மளிகைசாமான்வாங்கிவந்திடுங்க,உங்கடிரஸ்எல்லாம் அயர்ன்கொடுத்து வாங்கிவச்சிருங்க, காலைலசாப்டமாட்டீங்க தானே(நான் எங்க சொன்னேன்), ஒரேதடவையாமதியம்சாப்டுக்கலாம், ரேஷன்போய்ட்டு வந்துடுங்க, பசங்கசட்டைஎல்லாம் வாஷிங்மிஷின்ல போட்டுதொவச்சி அயன்பண்ணிடுங்க, என்வண்டிக்கு பெட்ரோல் போட்டுகாத்துஅடிச்சிட்டு வந்துடுங்க., நேந்துநீங்ககாயவச்சதுணிஎல்லாம் மாடிலகாயுதுஅதெல்லாம் எடுத்து வந்துடுங்க, இன்னைக்கு(ம்) டீவிஉங்களுக்கு கிடையாது. இப்பவேகண்ணகட்டுதே…..
மாலை: என்னன்னே தெரில, இன்னைக்கு ஒரேடயர்டாஇருக்கு.
அடிப்பாவி நான்பேசவேண்டிய வசனத்தை எல்லாம் இவபேசறாளே…
——————————————————————————————————————————————————————-
யாரும்அற்றபொழுதுகளில் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டேதோழமைகளுடன் மனம்விட்டுசிரித்துப் பேசும்வாய்ப்பு எப்பொழுதாவது தான்வாய்க்கிறது.
——————————————————————————————————————————————————————-
மனிதன்கர்வம்அழித்தலில் மருத்துவ மனைகளில் பங்குமகத்தானது.
——————————————————————————————————————————————————————-
தனதுமகளைபிறந்தஉடன்தீண்டும் தந்தையின் கண்கள்எவரும்அறியாமல் எப்போதும் பனித்திருக்கின்றன. அதுஆயுட்காலம்முழுவதும் தொடர்கிறது.
——————————————————————————————————————————————————————-
திருமணம் ஆனஉடன்மனைவியுடன் வெளியில் செல்கையில் ‘இந்தாம்மா மல்லிகை பூ5 முழம்கொடு‘ என்றுகடையில் கேட்பவனிடம் ஒருபுன்னகை கலந்தவெட்கம் தெரிகிறது.
——————————————————————————————————————————————————————-
யாருமற்ற இரவில்கணவனைஒருகண்ணால் கண்டுவிட்டு, மகனுக்கு போர்வைபோர்த்தி, அவனின்தலைகோதிகன்னத்தில் முத்தமிட்டு ஒருநிண்டபெருமூச்சுடன் உறங்கஒருதாயால்மட்டுமே முடிகிறது.
——————————————————————————————————————————————————————-
தன்மனைவியுடன் கைகோர்த்து நடக்கும் வாய்ப்பு ஒருசில‘புண்ணியவான்‘களுக்கே கிடைக்கிறது.
——————————————————————————————————————————————————————-
 வேலைக்கு செல்லும் பெண்ணைப் பார்த்து ‘அவளுக்கு என்ன‘ எனும்பொழுதுகளில் அவளதுகண்களில் தெரிகிறது உயிரின் வலிகள்.
——————————————————————————————————————————————————————-
மனிதமனதின்பெரும்பாரம்குறைத்தலில் இறைமைக்கு அடுத்தநிலையில் குளியல் அறைகள்.
——————————————————————————————————————————————————————-
மிகஅதிகசந்தோஷத்தையும், மிகஅதிகவலியையும் கொடுத்து இதயத்தை ஈரமாக்கும் நிகழ்வு தந்தைக்கு – தன்மகள்ருதுவாகும் போது.

Loading

சமூக ஊடகங்கள்

நாடக முடிவு

வினாக்கள் பல திசைகளில்
விடைகள் மட்டும்
சூன்யத்தில்

Click by : Karthik Pasupathiy

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 3

ஒவ்வொரு மழையும் கழுவிவிடுகிறது சிலபழையநினைவுகளை. உருவாக்கிறது சிலபுதுநினைவுகளை.
——————————————————————————-
நிகழ்காலநிகழ்வுகள்
கடந்தகாலங்களில்
அபத்தமாகின்றன.
——————————————————————————-
மறுக்கப்படுவதின் வலிஅறிந்தவர்களே மன்னித்தலுக்கு தயாராகிறார்கள்.
——————————————————————————-
நெருப்பில் இடப்படும் நெய், நெருப்பினை அதிகப்படுத்துவது போல், ஒவ்வொரு இருளும் பலநட்புகளை உறுதிப்படுத்துகின்றன.
—————————————————————————————————————————————————————–
ஆற்று நீராய் வழியும் அனைத்து வலிகளும் அடங்கிவிடுகின்றன ஒருமெய்த்தீண்டலில்.
—————————————————————————————————————————————————————–
வீரன்வாள்எடுத்தபிறகுஎதிரிஎன்றும், புல்லுருவி என்றும் பார்ப்பதில்லை. இலக்குஇரத்தம் பார்த்தலுடன் கூடியவெற்றிமட்டுமே.
—————————————————————————————————————————————————————–
அழுக்கு ஆடைகளுடன் இருப்பவனைச் சுற்றிஇருக்கும் நாய்கள் அழகானவைகள். அவைகளுக்கு பொரையைகொடுத்து விட்டுஅதில்மகிழ்ச்சி அடையும் அவனதுகண்களும் அழகானது
—————————————————————————————————————————————————————–
இரு சக்கர வாகனத்தில், மனைவிமற்றும் இருகுழந்தைகளுடன் செல்பவனின் கண்களில் ஒருகர்வம்இருக்கத்தான் செய்கிறது.
—————————————————————————————————————————————————————–
முன் வாகனத்தில் செல்லும் பெண்ணின் கைப்பட்டு சரிசெய்யப்படும் அவளதுகூந்தலில் கரைகின்றன பலமனங்கள்.
—————————————————————————————————————————————————————–

வாக்கியங்கள் முழுமை பெறுகின்றன ஒருமுற்றுப் புள்ளியில்.

Loading

சமூக ஊடகங்கள்

மகிழம்பூக்கள்

மகள் கைப்பிடித்துச் செல்லும்
ஒவ்வொரு நடையிலும்
தெரிகிறது
வாழ்வின் அருமைகள்


Photo & Click by : Prakash Thiagarajan

Loading

சமூக ஊடகங்கள்

ஆத்மாவின் ராகங்கள்

(இசைஞானி பற்றிய சிறு சிறு செய்திகள். அவர் மூச்சுவிடுவது முதற்கொண்டு அவரைப்பற்றி எழுத ஆட்கள் உண்டு. என்றாலும் இது குழந்தைகள் பொம்மை வைத்து சமையல் செய்வது போன்றது இது).
சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒரு காட்சி.
சார், நீங்க இந்த 30 வருஷத்துல செய்த சாதனை ரொம்ப பெருசு சார். அதெல்லாம் தனித்தனியா எழுதி  பிரிக்கணும்னா 200 வருஷம் ஆகும் சார். வயலின் இடத்தில் வீணை, வீணை இடத்தில் வயலின், அதெப்படி சார் மாத்தி மாத்தி, எப்படி உங்களால முடியுது சார்.

ராஜா சார் : வழக்கமான புன்னகை.

நீங்க எப்படி சார், எது பத்தியும் யோசிக்காம எழுதுறீங்க. எழுதுன நோட்ஸ எப்பவாது திருப்பி பார்ப்பீங்களா?

ராஜா சார் :  எழுதுறது நான் இல்ல, அது பத்தி யோசிச்சா, எழுதுறது நானா இருப்பேன். இசை இருக்காது. இப்ப அப்படி இல்லை. இசை தன்வழியில் எழுதுகிறது.

சார் உண்மைய சொல்லுங்க சார், பத்து அவதாரம் தாண்டிய பிறவி தானே சார்.

Loading

சமூக ஊடகங்கள்

நகர மறுக்கும் நினைவுகள் – 4 பூங்காற்று திரும்புமா?

காரணங்கள்அற்று ஒரு குரலில் மயக்கம்(வேறு எப்படி வகைப்படுத்த முடியும்) உண்டு எனில் அதில் திரு. மலேஷியா வாசுதேவன் அவர்களுக்கு எப்போதும் ஒரு இடம் உண்டு.
அந்த வகையில் அவர் குரலில் இன்றைக்கும் மயங்கும் ஒரு பிறவி நான்.
பாடல் ஆரம்பமாகிறது. தலைவன் ஒரு கல்லில் அமர்ந்திருக்கிறான். மெதுவாக அவனுள் இருக்கும் வலிகள் சொற்களின் வடிவம் பெற்று காற்றுடன் கலக்க ஆரம்பிக்கின்றன.
மெதுவாகவேட்டியின் நுனிகள்காற்றில்ஆட ஆரம்பிக்கின்றன. ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன.
பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா
தாலாட்டமடியில்வெச்சுப்பாராட்ட
எனக்கொருதாய் மடி கெடைக்குமா
மெதுவாகநடை பயணம் தொடங்குகிறது.  மெதுவாக மீண்டும் காற்று அசைகிறது.
ராசாவே வருத்தமா
வார்த்தைகளில் முடிக்கும் முன்பே ஒரு குயில் கூவ ஆரம்பிக்கிறது. காற்றின் வீச்சமும் குயிலின் கீதமும் இணைய ஆரம்பிக்கின்றன.
ஆகாயம் சுருங்குமா ஏங்காதே அத ஒலகம் தாங்காதே
அடுக்குமாசூரியன்கருக்குமா
விழிகள்தேடலை ஆரம்பிக்கின்றன. பாதங்கள் நடை பயிலுகின்றன. ஆற்று நீர் வழிந்தோடுகிறது. தலைவி கரையில் அமர்ந்திருக்கிறாள்.
என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல
மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல
தலைவி பதில் உரைக்கிறாள்.
இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல
உரையாடல்தொடர்கிறது
ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி
சொல்லாதசொகத்த சொன்னேனடி
 
சோக ராகம் சொகந்தானே(சொல்லில் முடிவில் பறவை பறக்கிறது)
குயில் முகம் காட்ட மறுக்கிறது. தோணியில் குயிலில் பயணம் தொடர்கிறது. தலைவன் பயணம் தரையில் தொடர்கிறது.
உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன்
நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்
குயில் ஆறுதல் கூறுகிறது.
உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறனும்
எங்க சாமிக்கு மகுடம் ஏறனும்
தலைவன் பயணம் தொடர்கிறது
மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே
முன்னே என் பார்வைக்கு வாவா பெண்ணே
 
எசப் பாட்டு படிக்கேன் நானே
தன் மன வலிகளை குறைத்திடும் தோள்களைத் தேடுகிறான் தலைவன்.
பூங்குயில் யாரது
 
கொஞ்சம்பாருங்கபெண் குயில் நானுங்க.
இன்று வரையில் சிவாஜின் அந்த கடைவாய் புன்னகையை யாரும் நெருங்க முடியவில்லை.
அடி நீதானா அந்தக் குயில்
யார் வீட்டு சொந்தக் குயில்
ஆத்தாடிமனசுக்குள்ள காத்தாடி
பறந்ததேஒலகமே மறந்ததே
சிவாஜியின் மேலும் கீழுமான பார்வை புன்னகையுடன் (என்ன சொல்ல)
நான்தானேஅந்தக் குயில்
தானாக வந்தக் குயில்
ஆத்தாடிமனசுக்குள்ள காத்தாடி
பறந்ததாஒலகந்தான்மறந்ததா
காமம் கடந்த விஷயங்களை, இயல்பான மனித வாழ்வின் மிகப் பெரும் வலிகளை காலம் பதிவு செய்து கொண்டிருக்கிறது. அதானால் தான் பூங்காறு இன்னும் வீசிக் கொண்டிருக்கிறது.
துக்கடா:
சார் நீங்க முதல் மரியாதை படத்துட நடிச்சது பத்தி…
சிவாஜி: நான் எங்க நடிச்சேன். அந்த பய என்ன படத்துட நடக்க வச்சி படத்த முடிச்சிட்டான்.
 
Image – Internet

Loading

சமூக ஊடகங்கள்

அக்லிஷ்டா

வீடு பேறு அடையக் காத்திருக்கின்றன
தெய்வங்கள்
வீதிகளில்














அக்லிஷ்டா – உலக இன்பத்தில் இருந்து நாம் மீள உதவுகிறவை.

பதஞ்சலி யோக சூத்திரம் – 5


Click by Vinod VV

Loading

சமூக ஊடகங்கள்

நகர மறுக்கும் நினைவுகள் – 3 ஆச்சார்ய தேவோ பவ:

பள்ளி நாட்களைப் பற்றிய நினைவு எப்போதும் விலகுவதில்லை.
அப்போது எலிமன்டரி(ஆமாம் தானே) ஸ்கூலில் இருந்து பெரிய( higher secondary) ஸ்கூல் வந்த புதிது.
மீனாட்சி டீச்சர் எங்கள் கிளாஸ் மிஸ்
.
நான் நடந்து போகக் கூடாது என்பதற்காக என் அப்பா சைக்கிள் ரிக்க்ஷா வில் அனுப்புவார்கள். நான் திருவிழந்துதூர் மேட்டுத் தெரு அவர்கள் பெருமாள் கோவில் மேல வீதி.
அவர்கள் எப்போதுமே மிக அழகாக உடை உடுத்துவார்கள். (அது அம்பாளுகே உரித்தானது என்று இப்போது தான் தெரிகிறது. பாடம் நடத்துவே ஒரு கம்பீரம். சொற்கள் காத்திருந்து அப்படியா வரும்..  எத்தனை குடம் தேன் அபிஷேகமோ)
டீச்சர் : இன்னைக்கு தமிழ் பாடம். வாக்கியத்தில் அமைத்து எழுதுவது எப்ப்டீன்னு கத்துத் தரேன்.
கூட்டம் : …..(வேற யாரு நாங்க தான்)
டீச்சர் : இப்படித்தான் எழுதனும், புரிஞ்சுதோன்னோ. இப்ப எல்லாரும் ‘குறிக்கோள்‘ என்பது குறித்து வாக்கியத்தில் எழுதுங்கள்.
நான் : ‘ஒழுக்கமே உயிர்‘ என்பது நம் பள்ளியின் குறிக்கோள்.
டீச்சர் :  ரொம்ப நன்னா இருக்குடா, எல்லாரும் இவனை மாதிரி எழுதுங்க பாக்கலாம். (முதல் பாராட்டு.. )
விதி விளையாட ஆரம்பித்தது.
ரிக்க்ஷாகாரர் : இன்னைக்கு லேட், அதால டீச்சர் வீட்டுக்கு நான் வந்தேன்னு சொல்றேன். நீயும் அப்படியே சொல்லு என்னா?
நான் : சரிங்க.
இது நடந்து ஒரிரு நாள் கழித்து டீச்சர் அழைதார்கள். (பச்சை நிறப்புடவை.. மறுபடியும் அம்பாள்) குலை நடுங்க ஆரம்பித்தது.
டீச்சர் : ஏன்டா, உன்னைய நல்ல பையன்னு நினைச்சுண்டு இருந்தேன். இப்படி பண்ணிட்டையே.
நான் : 
டீச்சர் : இதுக்கு தண்டனை உண்டு தெரியுமா. இனிமே நீ எங்கிட்ட பேசக் கூடாது. (உலகம் தலையில் விழுதல் இது தானா). பசங்களா யாரும் இவனோட பேசாதீங்க. இனிமே என் சேர்ருக்கு கீழ தான் நீ உக்காரணும்.
நான் :  டீச்சர், டீச்சர் இனிமே இப்படி செய்யல டீச்சர், பேச மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதீங்க
டீச்சர்.
டீச்சர் : (தெய்வத்தின் கண்களில் ஒளிக் கீற்று), தப்பே பண்ணக் கூடாது, தெரியாம செஞ்சிருந்தா தப்ப ஒத்துண்டு இனிமே நடக்காம சரி பண்ணிக்கணும்.
வெகு நீண்ட வருடங்களுக்குப் பின் வீட்டை அடையாளம் கண்டு அவர்களை சந்திதேன்.
டீச்சர் :  நீங்க யாருன்னு தெரியலையே
நான் : நீங்கங்கறத விட்டுடுங்க. நான் உங்க பழைய மாணவன். (பழைய நினைவுகள்.. பரிமாற்றங்கள்..)
டீச்சர் : இருடா காப்பி போட்டு எடுத்துண்டு வரேன், நானே மிஷின் வச்சிருக்கேன். (காபியா –அது தேவாமிருதம்னா)
நான் : டீச்சர் நான் நம்ஸ்காரம் பண்ணனும்.
டீச்சர் : ஏன்னா சித்த இங்க வாங்கோ(அம்பாளுக்கு உரியவர் வேறு எப்படி இருக்க முடியும்). இவன் என் கிட்ட படிச்சான். நம்ஸ்காரம் பண்ணனுமாம். நன்னா இருடா. நல்லா வருவடா.
விதைகள் விருட்சங்கள் ஆகும். அந்த அடிப்படை விதைகள் அவர்களால் விதைக்கப்பட்டவை.
அனைத்தும் ஒன்றில் தோன்றி ஒன்றில் ஒடுங்குகின்றன. ‘ஆச்சார்ய தேவோ பவ:’
 
Click by : SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் – 6

முருகன் குறித்த பொருள் பேசப்படும் போது எழும் காட்சி குறித்தவை இவ்விரண்டு பாடல்களும்





1.
விளக்கம்
கிரௌஞ்சமலையை பிளந்தவன்
அவுணர்கள் தலை அற்றவனாக செய்தவன்
கடல் வற்றச் செய்தவன்
ஐந்து பூதங்களையும் நீக்கச் செய்து
உரை அற்று உணர்வு அற்று – சொற்கள் அற்று, உணர உணர்வுகள் அற்று
உடலற்று உயிரற்று – உடல் நீக்கி, உயிர் அற்று
உபாயம் அற்று –
கரையற்று –
இருளற்று – நீக்கமற நிறைந்திருக்கும் ஒளி
எனதற்று – மும்மலத்தில் முக்கியமானதான கர்வத்தால் உண்டாகும் ‘தான்‘ என்னும் அகங்காரம்.
பாடல்
வரையற் றவுணர் சிரமற்று வாரிதி வற்றச்செற்ற
புரையற்ற வேலவன் போதித் தவா, பஞ்ச பூதமுமற்
றுரையற் றுவர்வற் றுடலற் றுயிரற் றுபாயமற்றுக்
கரையற் றிருளற் றெனதற் றிருக்குமக் காட்சியதே. 61
பொருள்
சமாதி நிலையின் காட்சிகளும் அதற்கு முருகன் எவ்வாறு உதவினான் என்பதும் இங்கு விளக்கப்பட்டுள்ளது.
கருத்து
கிரௌஞ்சமலையை பிளந்தவனும், அவுணர்கள் தலை அற்றவனாக செய்தவனும், கடல் வற்றச் செய்தவனுமான முருகன் எனக்கு போதனை செய்தருளினான். இதனால் பஞ்ச பூதங்களில் செய்கைகள்(சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்ஒசை) நீங்கப் பெற்றன.அஃதாவது புறக்கருவிகள் செயல்கள் நீங்கப் பெற்றன. புறக்கருவிகளில் செயல்பாடுகள் நீங்கும் போது உணர்வு நீங்கப் பெற்றும், உடல் நீங்கப் பெற்றும், முக்தி என்கிற நிலையும் அழிந்து, கரைகாணமுடியாதும், மிக ஓளி பொருந்திய அக்காட்சியை அவன் எனக்கு அருளினான்.
2
விளக்கம்
துருத்தி – காற்றை உட்செலுத்த பயன்படும் கருவி
.
பாடல்
துருத்தி யெனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றிமுறித்
தருத்தி யுடம்பை யொறுக்கிலென் னாஞ்சிவ யோக மென்னுங்
குருத்தை யறிந்து முகமா றுடைக்குரு நாதன்சொன்ன
கருத்தை மனத்தி லிருந்துங்கண் டீர்முத்தி கைகண்டதே. 71
பொருள்
கடினமான யோக மார்கங்களால் அடையப் படும் முக்தி நிலையையும், அதற்கு மாற்றாக எளிதான வழியில் அடையும் எளிய வழியும் இப் பாடலில் குறிப்பிடப்படுகிறது.
கருத்து
துருத்தி என்ற கருவி போன்று காற்றை உட் செலுத்தி, கும்பகம் செய்து(காற்றை உள்ளே நிறுத்துதல் – பூரக கும்பம் மற்றும் ரேசக கும்பம்) உட் செல்லும் பிராண வாயுவை முறித்து, அதை உணவாக கொண்டு முக்தி அடைதலை எதற்காக செய்ய வேண்டும். ஆறு திரு முகங்களை உடைய குருநாதன் சொன்ன சொல்லின் உட் கருத்தை மனதில் பதிய வைப்பவர்கள் முக்தி அடைவார்கள்.

இத்துடல் முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் பகுதிகள் நிறைவு பெருகின்றன.

Loading

சமூக ஊடகங்கள்

நகர மறுக்கும் நினைவுகள் – 2 – செந்தாழம் பூவில்

செந்தாழம் பூவில்

 
நடிகை ஷோபா குறித்து இப்பதிவு. ராஜா சார், ஏசுதாஸ் பற்றி குறிப்பிட இனி எதுவும் இல்லை.
 
என் பதினென் பிரயாணங்களுக்கு முன்பே இப்பாடலை ரசிக்க ஆரம்பித்து விட்டேன் காரணங்கள் அற்று. என் தமிழ் மனப்பாடல் வரிகளை விட இப்பாடலை அதிகம் படித்திருக்கிறேன்.
அம்மா: என் பையன் நல்லா பாடுவான்.
விருந்தினர் : எங்க பாடு.
நான் : அப்பவே அழகிய காக்கா குரல்(இன்று வரை மாறவில்லை.) செந்தாழம் பூவில் பாடல் தொடரும்.
மெதுவாக வாகனத்தில் பயணம் தொடர ஆரம்பிக்கிறது. தலைவனும் தலைவியும் பயணம் செய்கிறார்கள். கூடவே இரு தோழிகள்.
நகரத்துவங்குகையில் ஒரு மருட்சி தெரிகிறது தலைவி கண்களில்( அட்டகாசம்)
தலைவன் இயற்கையை வர்ணித்து பாடத் துவங்குகிறான். தலைவியிடம் மீண்டும் ஒரு  புன்னகை.
இயற்கையையும் பெண்ணையும் சேர்த்து வர்ணிக்க துவங்குகிறான். வளைவான பாதையில் பயணம் தொடர்கிறது.
வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளித்தேன் கனிகளைத் தேடுது
ஆசைக் குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்
தலைவி வானத்தை வேடிக்கைப் பார்த்து வருகிறாள். ஆனாலும் அச்சம் தீரவில்லை. பயணம் தொடக்கிறது.
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி
தலைவிக்கு கொஞ்சம் அச்சம் விலகுகிறது, மெதுவாக புன்னைக்க துவங்குகிறாள். தோழிகளுக்குள் மந்தஹாசப் புன்னகை.
பூக்கள் பூத்திருக்கின்றன. மெதுவாக அவ்வழிகளில் நடக்கத்துவங்குகிறாள். இசையின் பரிணாமங்கள் மாறுகின்றன. வெள்ளைப் புடவையில் அடிக்காதப் பூப்போட்ட டிசைன். (இதற்கு எப்படி இத்தனை அழகு).
காற்று அடிக்கத் துவங்குகிறது. கையில் இருக்கும் பூக் கொத்துகளும், முடிக்கற்றைகளும் பறக்கத் துவங்குகின்றன.
இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடைக் காற்று வானுலகைக் காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக் கூட்டுது
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி
நீர் தடாகத்திற்கு அருகில் தலைவி. மெதுவாய் நதி நகர்ந்து செல்கிறது.
ஒற்றை மூக்குத்தி, காதுகளில் கூண்டு வடிவ தோடுகள்.
நிகழ்வுகள் முடிந்து நாயகன் தன் பணிகளைத் தொடர்கிறான்.
பாலு மகேந்திரா சார் வார்தைகளில் சொல்வது என்றால் ‘பல கோடி வருடங்களுக்கு ஒரு தேவதை பிறக்கிறாள். அது ஷோபா‘
அதனால் தான் இன்னும் இப்பாடல் வாசம் வீசிக் கொண்டிருக்கிறது.
 
Image : Internet

Loading

சமூக ஊடகங்கள்

பிம்பங்களின் ஜனனம்

படர்ந்து செல்லும் காற்று
மரங்களில் பட்டு
மழையாய் மாறி
இலைகளின் வழியே
வ……
       ழி……
   ய……
த்…… 
துவங்குகையில்
வாழ்வு இனிக்கத் துவங்குகிறது.










Click by : Vinod Velayudhan

Loading

சமூக ஊடகங்கள்

முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் – 5




முருகன் குறித்த பொருள் பேசப்படும் போது எழும் தத்துவம் குறித்தவை இவ்விரண்டு பாடல்களும்

பாடல்

போக்கும் வரவும் இரவும் பகலும் புறம்பும் உள்ளும்
வாக்கும் வடிவும் முடிவும் இல்லாதது ஒன்று வந்துவந்து
தாக்கும் மனோலயம்தானே தரும் எனைத் தன் வசத்தே
ஆக்கும் அறுமுகவா சொல்ல ஒணாது இந்த ஆனந்தமே. – 73

பொருள்

ஆறு திருமுகங்களை உடைய திருமுருகனே, போதல், வருதல், இரவு, பகல், புறம், உள், வாக்கு, வடிவம், இறுதி ஆகிய எதும் இல்லா ஒன்று(ப்ரம்மம்) என்னிடம் வந்து வந்து என்னைச் சேர்ந்து, மனோ லயம் தானே தந்து என்னை தன் வசத்தே ஆக்குகிறது. இப்படிப்பட்ட ஆனந்தத்தை விவரிக்க இயலாது.

கருத்து

·         மனிதன் முதலிய பிறவிகளுக்கே இருமைகள் உண்டு. இருமைகள் இல்லாதவன் முருகப் பெருமான் –
o    போதல், வருதல்
o    இரவு, பகல்
o    புறம், உள்

·         வாக்கும் வடிவும் – எண்ணங்களே வாக்காகவும் பின் அவைகள் வடிவமும் கொள்கின்றன என்பது துணிபு.இவைகள் இல்லாத ஒன்று – இவைகள் அனைத்தில் இருந்தும் விலகி இருப்பவன் (முருகன்)
·         வந்து வந்து தாக்கும் – இறைமை நம்மை (விரும்பி) அழைத்துச் செல்கிறது.
·         இது மனதினை லயப் படுத்துகிறது.  – ஜப கோடி  த்யானம், த்யான கோடி லயம் என்ற தியாகராஜ சுவாமிகளின் வரிகள் நினைவு கூறத் தக்கது.
·         எனைத் தன் வசத்தே ஆக்கும் – இறைமையே நம்மை வசப்படுத்துகிறது

2.

பாடல்

தடக்கொற்ற வேள்மயி லேயிடர் தீரத் தனிவிடில்ந
ணவடக்கிற் கிரிக்கப் புறத்துநின் றோகையின் வட்டமிட்டுக்
கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத்
திடர்க்கப் புறத்துத் திசைக்கப் புறத்துந் திரிகுவையே. 96

பொருள்

முருகனது மயிலே, உலகியல் துன்பம் நீங்க உன்னை தனியாக விடுவாராயின், வட திசையில் இருக்கும் மேரு மலையைத் தாண்டி, உனது தோகையினால் சுழன்று, கடல், சூரியன், தங்கச் சக்கரம் ஆகியவைகளைக் கடந்து, திசைகளைக் கடந்து உலவுவாயாக.

கருத்து

மயில் என்பது குறீயீடாக உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது. த்யான மார்க்க அனுபவங்கள் கூறப் பட்டிருப்பதால், குரு முகமாக அறிக.

Loading

சமூக ஊடகங்கள்

நவகண்டம்

 எல்லைகள் அற்ற ஒரு தருணத்தில்
நிகழ்ந்தது உன்னுடனான சந்திப்பு.
அகிலின் நறுமணம் எங்கும்.
நிகழ்வுகளை நியாப்படுத்தி,
இழப்பதற்கு எதுவும் இல்லை
ஏன் என்று விளக்கம் கேட்கிறேன்..
எதுவும் அற்றவனுக்கு
வாய்க்கிறது ப்ரபஞ்சமும்
வாழ்வும் என்கிறாய்.
நிர்வாணம் கொள்கின்றன
நினைவுகளும் நிஜங்களும்.
நவகண்டம் – தன்னைத்தான் பலியிட்டுக் கொள்ளுதல்
 
Click by : Bragadeesh

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 2

———————————————————————————————————
யாசிக்கையில், கைகளைவிட கண்கள் கனமாக இருக்கின்றன.
—————————————————————————————————
தனது பெண், முதல் முறை மூக்குத்தி அணியும் அழகை கண்டு ரசிக்கும் தாயின் கண்கள் சிறப்பானவை. இருவரையும் ரசிக்கும் தகப்பனின் கண்கள் அதை விட அழகானவை.
———————————————————————————————————

தனது குழந்தையை பள்ளிக்குள் அனுப்பிவிட்டு திரும்பும் தாயின் கண்ணில் யாரும் அறியாமல் இருக்கும் நீர்த்துளிகள் கனமானவையாக 

—————————————————————————————————

சித்திர குப்தன் – இவன் சிறு தவறு செய்திருக்கிறான்.
ப்ரம்மா – இவன் தமிழனாக பிறக்கட்டும்.
சித்திர குப்தன் – இவன் நிறைய தவறுகள் செய்திருக்கிறான். இவனை எப்படி தண்டிப்பது?
ப்ரம்மா – இவனை …. க்கு கணவணாக்கி விடு.
உயிர் – அது மட்டும் வேண்டாம், வேற எந்த தண்டனையும் கொடுங்கள்.

செத்தான்டா சேகர். 

————————————————————————————————————————————————————————————————————
டெம்போவில் தினக் கூலிக்கு நின்று செல்லும் மனிதர்கள், மற்றவர்களை விட சந்தோஷத்துடன்செல்கிறார்கள். 
————————————————————————————————————————————————————————————————————

குளிரில் உறங்கும் குழந்தையை கண்டு ரசித்து, குளிர் படாமல் போர்வையால் மூடி செல்லும் தாயின் ரகசிய புன்னகையுடன் கண்கள் விசித்ரமானவை.
————————————————————————————————————————————————————————————————————
‘இன்று நான் உணவு சமைக்கவா‘ என்று கணவன் கேட்கையில் மனைவியின் கண்களில் தெரிகிறது கோடி சூரியன்கள்.
————————————————————————————————————————————————————————————————————
தனது நீண்ட கருங் கூந்தலை, கைகளால் சரி செய்தபடி சூரியனை பார்க்கும் கன்னியின் கண்கள் சூரியனை விட பிரகாசிக்கின்றன.
————————————————————————————————————————————————————————————————————
மன்னிக்கப் பட்ட கண்களில் இருந்து யாரும் அறியாமல் வழியும் கண்ணீர் துளிகள் இதயத்தில் நிலைபெறுகின்றன.
————————————————————————————————————————————————————————————————————
மிகச் சிறிய குழந்தைகளின்கண்களில் ஒட்டி இருக்கிறது தெய்வங்களின் தன்மைகள்.
 
Click by : SL Kumar
 

Loading

சமூக ஊடகங்கள்

மண் கவுச்சி

‘நான் வாசனையாக இருக்கிறேனா‘
என்று கேட்டுவிட்டு மகள் சென்ற பின்னும்
குறையாமல் இருக்கிறது
வாசனைகளும் நினைவுகளும்.

Click by : SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

இச்சா மரணம் – பீஷ்மர்

எண்ணற்ற கதா பாத்திரங்களை உள்ளடக்கியது மகாபாரதம். அதில் சிறந்த தலையாய படைப்புகளில் ஒன்று பீஷ்மர்.
பீஷ்மர் சந்தனு மகாராஜாவிற்கும், கங்கைக்கும் புதல்வனாக பிறந்தவர். இவர் அஷ்ட வசுக்களில் ஒருவர். பெற்ற சாபம் தீர தேவ விரதனாக அவதாரம் செய்தவர்.
ஒரு நாள் தனது தந்தை மிக்க மனவருத்தத்துடன் இருப்பதைக் காண்கிறார். சந்தனு காரணத்தை கூற விரும்பவில்லை. எனவே சந்தனுவின் தேரோட்டியை அழைத்து உண்மையை அறிகிறார்.
தந்தை சத்யவதி என்ற மீனவப் பெண்ணின் மீது காதல் கொண்டது தெரியவருகிறது.
எனவே அவர்களின் தலைவனை சந்தித்து தனது தந்தைக்கு சத்யவதியை மணம் முடித்துத்தர கேட்கிறார்.
 
சத்யவதியின் தந்தை மறுத்து விடுகிறார். காரணம் வினவுகிறார்.
பட்டத்து அரசியே தலைமை பீடப் பொறுப்புக்கு உரியவராகவும், அவர்களில் வாரிசுகளே ஆட்சி செய்ய தகுந்தவர்கள்  என்றும் இருப்பதால் சத்தவதியை சந்தனுவுக்கு மண முடிக்க விருப்பமில்லை என்று தந்தை உரைக்கிறார்.
இந்த நாள் முதல் பிரமச்சாரிய ஒழுக்கத்திலிருந்து தவறாதவனாகவும், திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பவனாகவும் இருப்பேன், இது சத்தியம் என்று சத்தியம் செய்கிறான் தேவவிரதன்.
‘பீஷ்ம பீஷ்ம’ என்று தேவர்கள் ஒலி எழுப்புகிறார்கள். பீஷ்ம என்ற சொல்லுக்கு ‘ யாராலும் செய்ய முடியாத காரியத்தை செய்பவன்’ என்று பொருள்.
இந்த தியாகத்திற்காக சந்தனு பீஷ்மருக்கு தந்த வரம் – விரும்பிய பொழுது மரணம் .
சிகண்டியை முன்னிருத்தி அர்ஜுனன் அம்பு எய்தி பீஷ்மரை வீழ்த்தினான். அவர் தரையில் வீழ்ந்து விடக் கூடாது என்பதற்காக அம்பினால் படுக்கை செய்து(சரதல்லபம்), அவர் மரணம் வரும் வரை அதில் இருத்தினான்.
இது நடை பெற்றது, தஷ்ணாயன புண்ணிய காரம், உத்ராயண புண்ணியகாலம் வரை அவர் அம்புப் படுக்கையில் இருந்தார்.
பஞ்ச பாண்டவர்கள் அனைவரும் அக்காலம் வரை அவரை அணுகி உலகின் மிக நுட்பமாண மற்றும் சூட்சமான சாத்திரங்களையும் கற்று அறிந்தார்கள்.
விஷ்ணு சகஸ்ரநாமம் இவரால் எழுதப்பட்டது.
ரதசப்தமி – பீஷ்மாஷ்டமி – 06-02-2014/07-02-014
Image : Internet 

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 1


புழுதி எழுப்பி செல்லும் வாகனமாக ஒவ்வொரு மழைத்துளியும்எழுப்பிச் செல்கிறது சில நினைவுகளை

—————————————————————

நாணயத்தின் இரு பக்கங்கள்
அவள் – சனியன் புடிச்ச எலி இன்னைக்காவதுமாட்டுச்சே, கொண்டு போய் எங்கயாவது விட்டுட்டு வாங்க
அவன் – புண்ணியம் செய்ததால தான அது தப்பிக்கிறது.
அவள் – கால நேரத்துல என்ன தானா சிரிப்பு வேண்டி கிடக்கு?
—————————————————————
பெரும்பாலான பெண்களுக்கு தெரிந்து விடுகிறது
உள் அழுகையை மறைத்து ஆனந்தமாய் சிரிப்பதாய் காட்ட. 
—————————————————————
ஆண்களின் மன வலிகளைவிட பெண்களின் மன அழுத்தங்கள் அதிகமாக இருக்குமோ?
உ.ம் – மாலை பொழுதின் மயக்கத்திலே .. சொன்னது நீதானா, சொல் சொல் என் உயிரே..
——————————————————————————————————————————————————————-
புதுத் தாலியை விட மின்னுகிறது புது மணப் பெண்ணின் கண்கள் 
——————————————————————————————————————————————————————-
ஊமைப் பெண் பேச வேண்டுமா, அவளுக்கு திருமணம் செய்து வைத்து பாருங்கள். மாற்றம் தெரியும்
——————————————————————————————————————————————————————-
நான் ரசித்த காதல் காட்சி

அன்றலர்ந்த தாமரை போல் முகம்.வட்ட வடிவமாய் தாழம்பூ குங்குமம். சிறியதாய் வைர மூக்குத்தி. மாம்பழ நிறப் புடவை. தலைவன் கைப்பிடிக்கிறாள் தலைவி. ‘மேடும் பள்ளமுமா இருக்கோன்னோ, பாத்து வாங்கோன்னா‘. (70+ பாட்டி + 80+தாத்தா). கரம் பற்றுகையில் தெரிகிறது காதல்

——————————————————————————————————————————————————————-
நிஜங்களில் வாழ்வதை விட கற்பனையில் வாழ்வது கடினமாக இருக்கிறது.
——————————————————————————————————————————————————————-
அடிமை : தலைவா, தலைவா மக்கள் எல்லாம் படிக்க ஆரம்பிச்சிட்டாங்க. என்ன செய்யறது.
சாத்தான் : இது ஒரு மேட்டரே இல்ல. எல்லாருக்கும் கல்யாணம் செய்து வச்சிடலாம்.
——————————————————————————————————————————————————————-
தாய்மை கொண்டிருக்கும் பெண்ணின் கண்கள் கன்னியாக்குமரி அம்மனின் மூக்குத்தியை விட பிரகாசமாக மின்னுகின்றன. 
——————————————————————————————————————————————————————-

Click by : SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

பிரபஞ்ச இயக்கம்

ஏரி சலனமற்று இருந்தது
காற்றில் ஆடி சில காகிதங்கள் அதன் அருகில்
அப்போதும்
ஏரி சலனமற்று இருந்தது.
சில சிறுவர்கள் கல் எறிந்து தவளை கண்டார்கள்
அப்போதும்
ஏரி சலனமற்று இருந்தது.
மரங்கள் இலைகளை உதிர்த்தன ஏரியில்
அப்போதும்
ஏரி சலனமற்று இருந்தது.
உவகை பொங்க மழைத்துளி ஈன்றது வானம்
அப்போதும்
ஏரி சலனமற்று இருந்தது.
சிறு குழந்தைகள் கைகளை நனைத்தன.
அப்போதும்
ஏரி சலனமற்று இருந்தது.
பெரும் மாற்றங்களுக்குப் பின் பிணம் ஒன்று மிதந்தது
அப்போதும்
ஏரி நிரம்பி சலனமற்று இருந்தது.

Click by : Vinod Velayudhan

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!