![]()
Author: அரிஷ்டநேமி
எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.
காற்றில் ஆடும் சருகுகள் – 9
போராட்டங்களில் முடிவு மௌனத்தில் நிறைவு பெறுகிறது.
சந்நியாசிகள் உருவாவதில்லை. உருவாக்கப் படுகிறார்கள்.
———————————————————————————————-
இரு பெண் குழந்தையின் தகப்பனின் கண்களில் ஒரு கர்வம் இருக்கத்தான் செய்கிறது. முன்று பெண் குழந்தைகளை கொண்டிருப்பவனின் கண்களில் கர்வமும், கவலையும் தெரிகிறது.
———————————————————————————————-
பேருந்து நிலையத்தில் மனைவியிடம் பணம் பெறும் கணவனின் கண்கள் எப்போதும் மண் நோக்கியே இருக்கின்றன. கண்கள் நீர் கோத்தே இருக்கின்றன.
நேசித்தல் இயல்பாகும் வரையினில் வலிகள் இருக்கும்.
—————————————————————————————————————————————————————-
யாரும் அற்ற பேருந்து நிழற் குடையில் உறங்கும் மனிதனின் சந்தோஷங்கள் நிலையானவையா?
—————————————————————————————————————————————————————-
தனது மகனை முத்தமிடும் தாயின் கண்கள் எப்போதும் பனித்திருக்கின்றன.
—————————————————————————————————————————————————————-
பெண்ணைத் துறக்கும் எந்த ஆணிற்கும், தன் பெண்ணைத் துறத்தல் அரிதாகவே இருக்கிறது.
—————————————————————————————————————————————————————-
காரினில் முன்னிருக்கையில் தாயில் மடியில் அமர்ந்து வாயில் விரல் வைத்து செல்லும் குழந்தையின் கனவுகளும் ஏக்கங்களும் என்று நிஜமாகும்?
—————————————————————————————————————————————————————-திருமண கோலத்தில் இருப்பவர்களைப் பார்த்து மற்றவர்கள் ஏன் சிரிக்கிறார்கள் என்று இப்போழுது
தான் தெரிகிறது. (டேய், போடா, போடா)
![]()
புன்னகைக் பூக்கள்
காயம் படிந்த காயங்கள்
தொடுவானம்
சைவத் திருத்தலங்கள் 274 – வடதிருமுல்லைவாயில்
தல வரலாறு(சுருக்கம்)/சிறப்புகள்
· சிவன் சுயம்பு மூர்த்தி – தீண்டாத் திருமேனி
· வாணன், ஒணன் எனும் அசுரர்களும் முனிவர்களிக்குமான மனக்கசப்புகள். முனிவர்களுக்காக தொண்டை மன்னன் போர். அதலால் தோல்வி. பட்டத்து யானை முல்லைக் கொடியில் மாட்டிக் கொள்ளுதல். அதன் பொருட்டு மன்னன் கொடிகளை நீக்குதல். அதனால் ரத்தம் வெளியேற்றம். தன் நிலை குறித்து வருந்தி மரணம் விரும்பி மரணிக்க எண்ணுதல். இறைவன் காட்சி
· தலையில் வெட்டுப்பட்ட காயங்களுடன் காட்சி. ஆதலால் வருட முழுவதும் சந்தனக் காப்பு. சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தில் திருக்காப்பு நீக்கப் படும்
· நந்தி அசுரர்களை அழிக்க மன்னனுடன் சென்றதால் சுவாமிக்கு எதிர் திசையில் உள்ளது.
· அசுரர்கள் வைத்திருந்த வெள்ளெருக்கு மரங்கள் தூண்களாக
· ப்ரமன் வழிபட்ட தலம்
· கண்ணிழந்த சூரியன் நற்கதி அடைந்த இடம்
· சந்திரன் (ஷயரோகம்) சாபம் நீங்கப் பெற்ற இடம்
· 27 நட்சத்திரங்கள் நற்கதி அடைந்த இடம்
· வசிஷ்டர் காம தேனுவைப் பெற்ற இடம்
· பிருகு முனிவர் தவம் செய்து ரத்தினங்களை மழையாகப் பெற்ற இடம்
· துர்வாசர் கோபம் நீங்கிய இடம்
· இந்திராணி பூசை செய்து இந்திரனை அடைந்த இடம்
· ஐராவதம் துயர் நீங்கப் பெற்றத் தலம்
· தேவமித்திரன் , சம்புதாசன் , சித்திரதன்மன் – இறைவனை அடைந்து முக்தி அடைந்த தலம்
· சுந்தரர் கண்பார்வை இழந்த பின் முதலில் தரிசனம் செய்த தலம்.
· நவக்கிர சன்னதி இல்லை
· பௌர்ணமி தின வலம் வருதல் – மூன்று தேவியர்களில் ஒரு தேவி
· லவ குசர்கள் வணங்கிய சிவன் – குசலபுரேஸ்வரர்
· கஜ பிருஷ்ட விமானம்
|
தலம்
|
வடதிருமுல்லைவாயில்
|
|
பிற பெயர்கள்
|
திருமுல்லைவாயில், மணிநகர்
|
|
இறைவன்
|
மாசிலாமணீஸ்வரர், நிர்மலமணீஸ்வரர், பாசுபதேஸ்வரர்,
|
|
இறைவி
|
கொடியிடை நாயகி
|
|
தல விருட்சம்
|
முல்லை
|
|
தீர்த்தம்
|
அக்னி தீர்த்தம், கல்யாண தீர்த்தம், சுப்ரமண்ய தீர்த்தம், மானத தீர்த்தம், குகனருந்தடம், அயிராவத தீர்த்தம், இஷ்டசித்தி தீர்த்தம், மங்கல தீர்த்தம், அரதனத் தீர்தம், சிவஞான தீர்த்தம், பிரம தீர்த்தம் – தீர்த்தம் ஒன்று, பெயர்கள் பல.
|
|
விழாக்கள்
|
வைகாசி பிரம்மோற்ஸவம்,
மாசித்தெப்ப விழா,
ஆனியில் வசந்த உற்சவம்
|
|
மாவட்டம்
|
செங்கல்பட்டு
|
|
திறந்திருக்கும் நேரம் / முகவரி
|
காலை 6.30 மணி முதல் 12 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், வட திருமுல்லைவாயில், சென்னை – 609113.
+91-44- 2637 6151
|
|
பாடியவர்கள்
|
சுந்தரர், அருணகிரிநாதர், வள்ளலார், மாதவச் சிவஞானயோகிகள், இரட்டைப் புலவர்கள்
|
|
நிர்வாகம்
|
இந்து சமய அறநிலையத்துறை
|
|
இருப்பிடம்
|
சென்னையில் இருந்து 26 கி.மீ தூரம்.
சென்ட்ரலில் இருந்து மின்சார ரெயிலில் ஆவடி சென்று அங்கிருந்து பேருந்தில் செல்லலாம்.
|
|
இதர குறிப்புகள்
|
தேவாரத் தலங்களில் 255வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது 22வது தலம்.
|
கொடியிடை நாயகி உடனாகிய மாசிலாமணீஸ்வரர்
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7ம் திருமுறை
பதிக எண் 69
திருமுறை எண் 1
பாடல்
“திருவும் மெய்ப் பொருளும் செல்வமும், எனக்கு உன் சீர் உடைக் கழல்கள்” என்று எண்ணி,
ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும், ஊடியும், உறைப்பனாய்த் திரிவேன்;
முருகு அமர் சோலை சூழ் திரு முல்லை–வாயிலாய்! வாயினால் உன்னைப்
பரவிடும் அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! .
ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும், ஊடியும், உறைப்பனாய்த் திரிவேன்;
முருகு அமர் சோலை சூழ் திரு முல்லை–வாயிலாய்! வாயினால் உன்னைப்
பரவிடும் அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! .
பொருள்
தேன் பொருந்திய சோலைகளால் சூழப்படிருக்கும் திரு முல்லை வாயிலில் உறைபவனே, பாசுபதா அஸ்திரம் உடையவனே, பரம் சுடரே, வீடு பேறு, அதற்கு காரணமான மெய் பொருள், செல்வம் இவைகள் அனைத்தும் உனது திருவடியினால் அமையப் பெற்றவை என்று எண்னம் கொண்டு யாரையும் துணையாகக் கொள்ளாமல், அவர்களை விலக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இவ்வாறு உன்னை வாயால் பாடும் அடிவனாகிய நான் படும் துயரத்தினை நீ களைவாயாக.
கருத்து
· அனைத்தும் இறைவனால் அமையப் பெற்றன என்பதில் முடிவான எண்ணம் உடையவர் .
· ஒருவரை மதியாது – மற்றவர்கள் இவற்றை ஒத்துக் கொள்ளாததால் அவர்களை மதியாது
· படு துயர் – வினைத் தொகை. (எல்லாக் காலங்களுக்கும் பொதுவானதால் – துயரம் எல்லாக் காலங்களுக்கும் பொதுவானது)
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7ம் திருமுறை
பதிக எண் 69
திருமுறை எண் 8
பாடல்
பாடல்
நம்பனே! அன்று வெண்ணெய் நல்லூரில் நாயினேன் தன்னை ஆட்கொண்ட
சம்புவே! உம்பரார் தொழுது ஏத்தும் தடங்கடல் நஞ்சு உண்ட கண்டா!
செம்பொன் மாளிகை சூழ் திரு முல்லை வாயில்–தேடி, யான் திரிதர்வேன், கண்ட
பைம்பொனே! அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! .
சம்புவே! உம்பரார் தொழுது ஏத்தும் தடங்கடல் நஞ்சு உண்ட கண்டா!
செம்பொன் மாளிகை சூழ் திரு முல்லை வாயில்–தேடி, யான் திரிதர்வேன், கண்ட
பைம்பொனே! அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! .
பொருள்
ஆணில் சிறந்தவனே(சிவன்), சிறந்த பொன் போன்றவனே, அன்றைக்கு என்னை திருவெண்ணை நல்லூரில் நாய் போன்ற என்னை ஆட் கொண்ட சம்புவே, வானத்தில் உறைபவர் வணங்கி துதிக்கும் பெரிய கடலில் உண்டான நஞ்சினை உண்ட கண்டத்தை உடையவனே, செம் பொன்னால் ஆன மாளிகையால் சூழப்பட்டிருக்கும் திருமுல்லைவாயில் நான் தேடி திரிகின்றேன். இவ்வாறு திரிவதால் ஏற்படும் துன்பத்தைக் களைவாயாக.
கருத்து
நம்பன் – ஆணில் சிறந்தவன், சிவன்
பைம்பொன் – பண்புத் தொகை(பசுமை+பொன்)
Image courtesy: Internet
![]()
நகர மறுக்கும் நினைவுகள் – 9 – கொடியிலே மல்லிகைப்பூ
படம் : கடலோரக் கவிதைகள்
விடியற்காலையில் எழும் சிதம்பரம்கோயில் மணி ஓசையாய் வரிகள் ஆரம்பமாகின்றன். (ஒரு வெண்கலக் குரலுக்கு சொந்தக்காரர்– ஜெயச்சந்திரன்)
அன்பினைப் பகிர்தல் மட்டுமே அடிப்படையாக அமைக்கப்பட்ட காட்சி அமைப்புகள்.
மிகச் சிறிய குழந்தையின் தீண்டல் நம் வலிகளை எல்லாம் தீர்ப்பது போல் இப் பாடல் நம் வலிகளை தீர்க்கிறது.
தலைவன் தலைவி இருவரும் கடல் சூழ் பாறை அருகினில். தவைவனுக்கு முள் குத்திவிட்டது. தலைவி எடுத்து விடுகிறாள். பாடல் ஆரம்பமாகிறது. பின் புறத்தில் காலைச் சூரியன்.
கொடியிலேமல்லிகைப்பூ மணக்குதேமானே
எடுக்கவாதொடுக்கவாதுடிக்கிறேன் நானே
ஒரு ஆடு காண்பிக்கப்படுகிறது. தலைவி அதைத் துரத்துகிறாள். கைகளில் எடுக்கிறாள். தட்டாமாலை சுற்றுகிறாள். கடல் அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றன.
பறிக்கச்சொல்லித்தூண்டுதேபவழமல்லித் தோட்டம்
நெருங்கவிடவில்லையே நெஞ்சுக்குள்ளே கூச்சம்
தலைவி வீட்டுக்குள் நடை பழகுகிறாள். அவள் பார்ப்பது ஏசு பிரான் படம்.
கொடியிலேமல்லிகைப்பூ மணக்குதேமானே
கொடுக்கவாதடுக்கவாதவிக்கிறேன் நானே
தலைவி நினைத்துப் பார்க்கிறாள். தலைவன் புத்தகங்களுடன். அவளுக்குள் புன்னகை.
வித விதமான புகைப்படங்களுக்கு தலைவி முகம் காட்டுகிறாள்.
பின்புறத்தில் கடல் அலைந்து கொண்டிருக்கிறது.
கடற்கரைமணலில்‘ ABCD’ எழுதப்பட்டிருக்கிறது. எதிர் எதிர் திசைகளில் இருவரும். இசைக்கு ஏற்றவாறு கடல் அலை வேகமாக பாய்கிறது.
மெதுவாகநடக்க ஆரம்பிக்கிறாள். மனம் நிச்சயமில்லாமல் இருக்கிறது. கனவுக்குள் இருக்கிறாள்.
மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம்இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்.
தலைவன் பல் விளக்குகிறான். கையில் நீர்ப்பாத்திரம். கொப்பளிபதற்கு பதிலாக அருந்துகிறான்.
நித்தம்நித்தம்உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்
இது மீண்டும் நிகழ்கிறது. அன்னை வேடிக்கைப் பார்க்கிறாள். ஆச்சரியப்படுகிறாள்.
மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்.
தலைவி மிகப் பெரிய இடத்தில் நடந்து வருகிறாள்
பொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல
மேற்கே சூரியன வந்து விடுகிறது.
சொல்லத்தானே தெம்பு இல்ல இன்பதுன்பம் யாரால
தலைவி பாறை மேல் அமர்ந்திருக்கிறாள். மீன் பிடித்து வரவா என்கிறான் தலைவன். வேண்டாம் என்று மறுத்து விடுகிறாள் தலைவி. அதைக் கேட்காமல் கடலுக்குள் ஓடிச் செல்கிறான்.
மிகப் பெரிய அலையில் தலைவன் விழுகிறான்.
தலைவி திகைக்கிறாள். மீண்டும் அலைகள் மட்டும் வருகின்றன. தலைவனைக் காணோம்.
பறக்கும்திசையேதுஇந்தப் பறவை அறியாது
உறவோ தெரியாது அது உனக்கும் புரியாது
விழிகள்நாலா புறமும் அலைகின்றன. தலைவனைக் காண்வில்லை.
தலைவன் பிடித்துவந்த மீனைவைத்து பின்னால் இருந்து பயமுறுத்துகிறான்.
பாறையிலேபூ முளைச்சு பார்த்தவங்க யாரு
தலைவன் கேள்வி கேட்கிறான்.’பயந்துட்டியா‘
காட்டி அசைகிறது.
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு
இருவரும்சிரித்துமகிழ்கிறார்கள்.
காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே
மீண்டும்நிஜங்களுக்கு காட்சி வருகிறது. வீட்டில் அனைவரும் சாப்பாட்டிற்கு தயாராக இருக்கிறார்கள்.
தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே.
கணத்தில்காட்சி மாறுகிறது. சில வினாடிகளுக்கு காட்சி தொடர்கிறது.
மனித மனங்களின் விசித்திரங்களில் ஒன்று அலைப்பார்த்தல். அதை உருவமாக ஆக்கி செய்திருக்கும் காட்சி அமைப்பு மிக ஆச்சரியம்.
அதனால் தான் மல்லைகையின் வாசம் மனதையும் விட்டு அகலாமல்
![]()
சைவத் திருத்தலங்கள் 274 – திருவான்மியூர்
தல வரலாறு(சுருக்கம்)
· வான்மீகி நாதருக்கு வன்னி மரத்தடியில் காட்சி அருளிய இடம்.
· அகத்தியருக்கு நோய்களைப் பற்றியும் அதற்கான மருந்துகளையும் ஈசன் உபதேசித்த இடம்.
· அபயதீட்சிதருக்கு கடும் மழை வெள்ளப் பெருக்கால் காண முடியா முகத்தை காண்பிப்பதற்காக மேற்கு நோக்கிய தரிசனம்
· காமதேனு சிவனுக்கு பால் சுரந்து பாப விமோசனம் பெற்ற இடம் – பால்வண்ண நாதர்.
|
தலம்
|
திருவான்மியூர்
|
|
பிற பெயர்கள்
|
தியாகராஜர், வான்மீகிநாதர், வேதபுரீஸ்வர, அமுதீஸ்வரர், பால்வண்ணநாதர்
|
|
இறைவன்
|
மருந்தீஸ்வரர்
|
|
இறைவி
|
திரிபுர சுந்தரி, சொக்க நாயகி
|
|
தல விருட்சம்
|
வன்னி
|
|
தீர்த்தம்
|
பஞ்ச தீர்த்தம்
|
|
சிறப்புகள்
|
|
|
மாவட்டம்
|
சென்னை
|
|
திறந்திருக்கும் நேரம் / முகவரி
|
காலை 6மணி முதல் மணி 12வரை, மாலை 4மணி முதல் இரவு 9 மணி வரை
அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில்,
திருவான்மியூர், சென்னை-600 041.
சென்னை மாவட்டம்.
+91 – 44 – 2441 0477.
|
|
பாடியவர்கள்
|
திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர், அருணகிரியார்
|
|
நிர்வாகம்
|
இந்து சமய அறநிலையத் துறை
|
|
இதர குறிப்புகள்
|
தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் 25வது தலம்.
|
திரிபுரசுந்தரி உடனாகிய மருதீஸ்வரர்
பாடியவர் திருஞானசம்மந்தர்
திருமுறை இரண்டாம் திருமுறை
பதிக எண் 4
திருமுறை எண் 1509
பாடல்
தக்கில் வந்த தசக்கிரி வன்றலை பத்திறத்
திக்கில் வந்தல றவ்வடர்த் தீர்திரு வான்மியூர்த்
தொக்க மாதொடும் வீற்றிருந் தீரரு ளென்சொலீர்
பக்க மேபல பாரிடம் பேய்கள் பயின்றதே.
பொருள்
முறையற்ற நெறியில் பல திசைகளிலும் மலை போன்ற பத்து தலைகளை உடைய இராவணன் பெயர்க்க முற்படும் போது அவை அலறுமாறு அடர்ந்தவரே, திருவான்மியூர் திருத்தலத்தில் உமையோடு வீற்றிருந்து அருளினிர். பல பூதக் கணங்களும் பேய்களும் உங்களைச் சூழ்ந்து உங்களிடம் பயிலக் காரணம் என்ன?
கருத்து
தகு இல் – தகுதியில்லாத நெறியினில்
தசக்கிரி – மலை போன்ற பத்துத் தலைகளை
பலபாரிடம் – பூதகணம்.
பாடியவர் திருநாவுக்கரசர்
திருமுறை 5ம் திருமுறை
பதிக எண் 82
திருமுறை எண் 1881
பாடல்
பொருளுஞ் சுற்றமும் பொய்ம்மையும் விட்டுநீர்
மருளும் மாந்தரை மாற்றி மயக்கறுத்
தருளு மாவல்ல ஆதியா யென்றலும்
மருள றுத்திடும் வான்மியூ ரீசனே.
பொருள்
வான்மீகி நாதரே,,தேடிப் பெற்ற பொருள், சுற்றம், பொய் இவைகளை வியக்கும் மனிதர்கள் விலக்கி மயக்கம் நீக்கி அருள் தரும் ஆதியாய் என்று அருளும் அளித்திடுவாய்.
Image courtesy: Internet
![]()
கரையில் நீந்தும் மீன்கள்
ராமன் – என்றும் தொடரும் நிகழ்வுகள்
இது ராமனை பற்றிய ஒரு சில நிகழ்வுகளும் நினைவுகளும் – ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு.
இந்த நிகழ்வினை எப்போது நினைத்தாலும் என்னையும் அறியாமல் இதயம் கலங்குகிறது.
சத்யமான தெய்வம், நீல வர்ணத்திகே சொந்தமானவன் ராமன் தன் நிலை மறக்கிறான். அம்பினை எடுத்து கடல் அரசனை சந்திக்க தயாராகிறான். (நான் அறிந்த வரையில் இதுவே ராமன் காட்டிய கோபம்)
கடல் அரசன் எதிரில் வந்து மன்னிப்பு கோருகிறான்.
அம்பினை எடுத்த ராமன் அதை தரையில் விடுகிறான்.
கடல் அரசனுடன் பேச்சு வார்த்தை முடிகிறது.
ராமன் திரும்புகிறான். அம்பு ஒரு மண்டுகத்தில் மேல் அம்பு செருகப்பட்டிருக்கிறது.
ராமன் கதறுகிறான் மனம் பதறுகிறது.
‘ஏன் கத்தவில்லை, உரைக்க வில்லை‘ ராமன்.
‘பிறப்பிலும் இறப்பிலும் உரைத்தல் உன் நாமம், ஆனால் நீயே என் மேல் அம்பு வைக்கும் போது நான் யாரிடம் போய் சொல்வேன்‘. தவறு செய்தாலும் அது குறித்து வருந்துதல் ராமனுக்கு மட்டுமே உரித்தானது.
உருகுகிறான் ராமன். ‘உன் ஜென்மம் தீர்ந்தது. நீ மகரிஷியாக வருவாய், எம்மை பற்றி நிற்பாய்‘.
இவரே மண்டுக மகரிஷியாக பிறந்து சுந்தர் ராஜ பெருமானிடம் சேர்ந்தவர்(மதுரை – கள்ளழகர் கோயில்)
![]()
மினுமினுப்புகள்
தெருவில் பார்த்துவிட்டு
புழக்கடைக்கு திரும்பிய பின்னும்
தெரிகிறது நட்சத்திரங்கள்.
* பல நேரங்களில் வீட்டின் வாசலில் நட்சத்திரங்களை எண்ணிவிட்டு கொல்லைப் புறத்தில் வந்து சரிபார்த்திருக்கிறேன். மாற்றி அமைக்கப்பட்ட நிகழ்வுகளில் கடந்த காலங்களில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட நினைவுகள்.
Click by R.s.s.K Clicks
![]()
வாழ்வின் அர்த்தங்கள்
சைவத் திருத்தலங்கள் 274 – திருவொற்றியூர்
தல வரலாறு(சுருக்கம்)/சிறப்புகள்
· சிவன் சுயம்பு மூர்த்தி – தீண்டாத் திருமேனி
· சிவன் வடிவம் – பாணலிங்க வடிவம்
· மூலவர் – படம்பக்க நாதர் – கவச திருமேனி – கார்த்திகை பௌர்ணமி ஒட்டிய மூன்று நாட்கள் மட்டும் கவசம் விலக்கப்படும்.
· அம்பிகை ஞான சக்தி வடிவம்
· மகிஷாசூரன் அற்ற துர்க்கை
· அம்மனின் 51வது சக்தி பீடங்களில் இஷூ பீடம்
· தேவாரப் பாடல் வரிசைகளில் 253வது தலம்
· சப்த விடத் தலங்களில் ஒன்று
· கஜ பிருஷ்ட விமானம்
· பைரவர் நாய் வாகனம் இல்லாமல் காட்சி
· சிவனில் வடிவங்களில் ஒன்றான ஏகபாத மூர்த்தி – வெளிப் பிரகாரத்தில்
· சுந்தரர் சங்கிலி நாச்சியாரை திருமணம் செய்து கொண்ட இடம்
· ஏலேலே சிங்கர் மன்னருக்கு தருவதாக வைத்திருந்த மாணிக்கங்களை காசி சிவ பக்தர்களிக்கு தந்ததால் ‘மாணிக்க தியாகர்’
· உபமன்யு முனிவரின் ஆலோசனைப்படி வாசுகி முக்தி வேண்டி வழிபட்டு முக்தி அடைந்த இடம் – படம்பக்க நாதர்
· கண்ணகியின் உக்கிரம் குறைக்க சிவனும் பார்வதியும் தாயம் ஆடி, கட்டைகளை கிணற்றில் இட்டு கண்ணகியை கிணற்றினுள் இட்டு கோபம் குறைத்த இடம்
· 63 நாயன் மார்களில் ஒருவரான கலிய நாயனார் வறுமையின் காரணமாக தனது கழுத்தை அறுத்து ரத்தத்தை எடுத்து விளக்கு எரித்து முக்தி அடைந்த தலம்.(குருபூசை நாள்: ஆடி – கேட்டை)
· 63 நாயன் மார்களில் ஒருவரான ஐயடிகள் காடவர்கோன் நாயனார் பாடிய தலம்
· நுனிக் கரும்பை இனிக்க வைத்து பட்டினத்து அடிகளுக்கு முக்தி அளித்த தலம்.
· நந்திக்காக சிவன் பத்ம தாண்டவம் ஆடிய இடம்
· வட்டப்பாறை அம்மனின் உக்கிரம் குறைய ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரம் ஸ்தாபிதம் செய்த இடம்
|
தலம்
|
திருவொற்றியூர்
|
|
பிற பெயர்கள்
|
முக்தி தலம், ஆதிபுரி, பூங்கோயில், பூவுலகச் சிவலோகம்
|
|
இறைவன்
|
படம்பக்கநாதர், ஒற்றீஸ்வரர், ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர்,
|
|
இறைவி
|
வடிவுடை அம்மன், திரிபுரசுந்தரி
|
|
தல விருட்சம்
|
மகிழம், அத்தி
|
|
தீர்த்தம்
|
பிரம்ம, நந்தி தீர்த்தம்
|
|
சிறப்புகள்
|
சித்திரையில் வட்டப்பாறையம்மன் உற்சவம், வைகாசியில் வசந்தோற்ஸவம், சிவராத்திரி, திருக்கார்த்திகை, மாசி மகம்.
|
|
மாவட்டம்
|
சென்னை
|
|
திறந்திருக்கும் நேரம் / முகவரி
|
அருள்மிகு தியாகராஜர் திருக்கோவில்
திருவொற்றியூர்
சென்னை
PIN – 600019
+91-44 – 2573 3703. +91-94444-79057
வெள்ளி – காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை
பெளர்ணமி – காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை
மற்ற நாட்கள் – காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை
மாலை – 4 மணி முதல் இரவு 8 30 மணி வரை
|
|
பாடியவர்கள்
|
சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்,
|
|
நிர்வாகம்
|
இந்து அறநிலையத்துறை
|
|
இதர குறிப்புகள்
|
ஐயடிகள் காடவர்கோன், முசுகுந்தன்,, பிரமன், திருமால், நந்திதேவர், சந்திரன், வால்மீகி முனிவர், 27 நட்சத்திரங்கள் ஆகியவர்கள் வழிபட்ட தலம்.
காளமேகப்புலவர், இரட்டைப்புலவர்கள், தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், மறைமலையடிகளார் ஆகியவர்கள் பாடி உள்ளனர் |
வடிவுடைஅம்மன்
பாடியவர் திருநாவுக்கரசர்
திருமுறை 4ம் திருமுறை
பதிக எண் 45
திருமுறை எண் 7
பாடல்
பிணமுடை யுடலுக் காகப் பித்தராய்த் திரிந்து நீங்கள்
புணர்வெனும் போகம் வேண்டா போக்கலாம் பொய்யை நீங்க
நிணமுடை நெஞ்சி னுள்ளா னினைக்குமா நினைக்கின் றாருக்கு
உணர்வினோ டிருப்பர் போலு மொற்றியூ ருடைய கோவே
கருத்து
மரணம் உடையதும், விரும்பத் தக்காத நாற்றம் உடைய உடலை பாதுகாக்க பைத்தியம் போல் திரிந்து மறுமையைத் தரும் சிற்றின்பத்தை விலக்குக. நீக்குவதற்கு உரித்தான எளிதான வழி நெஞ்சில் உறையும் இறைவனையும் நினைத்தல். அவ்வாறு செய்தால் ஒற்றிவூர் உறையும் அரசனைப் போன்ற ஒற்றியூர்ப் பெருமான் அக்குறைகளை நீக்குவான்.
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7ம் திருமுறை
பதிக எண் 91
திருமுறை எண் 9
பாடல்
பற்றி வரையை யெடுத்த அரக்கன்
இற்று முரிய விரலால் அடர்த்தார்
எற்றும் வினைகள் தீர்ப்பார் ஓதம்
ஒற்றுந் திரைவாய் ஒற்றி யூரே.
பொருள்
மலையை அசைத்த அரக்கனாகிய இராவணின் உறுப்புகள் ஏதும் இல்லாதவாறு செய்தவர் சிவன். அவர் இதனை அவர் தனது பெரு விரலால் செய்தார். அவர் கடல் சூழ்ந்த இந்த திருவொற்றியூரில் இருந்து வினைகளை நீக்கி அடியவர்களுக்கு அருள் செய்கிறார்.
![]()
காற்றில் ஆடும் சருகுகள் – 8
நம் குழந்தைகள் நம் முன்னே வளர்தல் தான் உலகின் மிகப் பெரிய அதிசயம்.
——————————————————————————————————————————————————————-
மறுத்தலில் மகிழ்வுறுபவன் மயானம்அடையான்.
——————————————————————————————————————————————————————-
மிகக் குறைந்த தூரம் ஷேர் ஆட்டோவில் பயணிக்கும் மிக வயதானவனில் அருகில் அமரும் இளம் பெண்கள், யாரும் அறியாமல் ஒரு இதழ் வழி புன்னகையை வயதானவனிடம் ஏற்படுத்துகிறார்கள்.
——————————————————————————————————————————————————————-
விளக்கில் இருந்து எடுத்த பின்னும் நூல் திரியில் இருக்கும் எண்ணை தீரும் வரை அது எரியும். அதுபோல் ஆன்மாக்கள் பக்குவம் பெறாமல் ஆசைகள் இருக்கும் வரை பழைய வாசனையின் காரணமாக பிறப்பு தொடர்ந்து கொண்டிருக்கும்.
——————————————————————————————————————————————————————-
சிறு மழையில், தாயின் குடையில் வராமல் தலையை குடைக்குள் வைத்து கைகளை மழையில் நனைந்து செல்லும் சிறார்களில் சந்தோஷங்கள் வலிமையானவை.
——————————————————————————————————————————————————————-
மனைவி : இன்னைக்கு லீவு. இன்னைக்கு முக்கியமா…. என்னங்க பேசாம இருக்கீங்க.
கணவன் : கையால் சைகை காட்டி – மௌனம் (எப்புடி)
மனைவி : எல்லா நாளும் அப்படித் தான் பேசாம இருக்கீங்க. இது என்ன புதுசா (எப்புடி)
——————————————————————————————————————————————————————-வாசிப்புக்கு உரிய கைகள் யாசித்தலே வாழ்வின் மகத்தான வலிகளில் ஒன்று.
——————————————————————————————————————————————————————-புகைவண்டியில் பயணிக்கும் போது பொருள் வேண்டி பாடும் கண்கள் அற்றவனின் ‘முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்‘ என்ற பாடல் அதிக வலி உண்டாக்குகிறது.
——————————————————————————————————————————————————————-
தனது முதல் நரையைகாணும்ஆணின்மனவலிகள் அதிகமானவை. பெண்ணின் மனவலிகள் அதைவிடஅதிகமானவை.
——————————————————————————————————————————————————————-மனைவியின் ‘பயண்பாட்டிற்கு‘ ஏற்றவாறு கணவன் நேசிக்கப்படுகிறான்.
![]()
நாற்றம்
2038 – Galaxy and Universe
1.
Sir, Black hole concepts are very old and brown hole concepts was died 2014. Let us discuss about VIBGYOR holes.
2.
Galaxy Broker – Do not worry sir. This is Dead galaxy. We are providing this galaxy at very less price Rs. 10/-
3.
Galaxy Broker – ‘Namba payalgal’ identified new galaxy with 300 sextillion stars. (3 followed by 23 zeros). If you want we can show this and you could visit any time.
4.
Husband – Though I am a scientist, I could understand Dark matter. But I am unable to find Rs.5/- from kitchen
5.
Galaxy Broker – He is ‘Namba payal’. He only identified Dart flow with 700 galaxy cluster. You could choose any galaxy for rent.
![]()
நகர மறுக்கும் நினைவுகள் – 8 – நான் வரைந்து வைத்த சூரியன்
படம் : ஜெயங்கொண்டான்.
இசை : இசைஞானிக்கு அடுத்து நான் நேசிக்கும் வித்யாசாகர்
பாடல் : யுகபாரதி
ஒரு நாள் வெளிநாட்டில் இருந்து ஒரு நண்பன் தொலைபேசியில் அழைத்தான்.
நான் ஒரு ‘ஹம்மிங்‘ சொல்றேன். அது என்னா படம் என்னா பாட்டுன்னு சொல்லு.
‘தெரியலடா‘
‘இல்ல அந்த பாட்ட FM வானொலியில் கேட்டுக் கொண்டே car ஒட்டினேன். படம் பேர் தெரிஞ்சா சொல்லு.
தீடிரெனஒரு நாள் அந்தப் பாட்டைக் கேட்க நிகழ்ந்தது. அப்பாடல் வரிகளுக்காக பல முறை இப்பாடலைக் கேட்டிருக்கிறேன்.
தலைவி தலைவன் கன்னத்தில் முத்தமிடுகிறான். தலைவன் மற்றொரு கன்னத்தைக் காட்டுகிறான். தலைவி சிரித்து விட்டு நடக்க ஆரம்பிக்கிறான்.
இசை ஆரம்பமாகிறது.
தலைவன் தலைவியை பின்னால் இருந்து தழுவிக் கொள்கிறான்.
நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே
நான் துரத்தி நின்ற காக்கைகள் மயில்கள் ஆனதே
என் தலை நனைத்த மழைதுளி அமுதம் ஆனதே
நான் இழுத்து விட்ட மூச்சிலே இசைக்கசிநதே
சிறந்த கவிதைக்கான அனைத்துக் கட்டுக் கோப்புகளுடன் பிற மொழி கலவாமல் அழகிய சந்தங்களுடன் ஒரு பாடல்.
தலைவன்
ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு
வெள்ளி கம்பி என்று ஆகியதே
தலைவி
கம்பன் சக்கை உந்தன் கண்கள் தொட்டு தொட்டு
தங்க சிற்பமென்று மாறியதே
தலைவன்
பூக்கும்புன்னகையாலே என் தோள்கள் ரெக்கைகள் ஆக
மனது புன்னகைப்பதால் பறக்க ஆரம்பிக்கிறது
தலைவி
நாக்கு உன் பெயர் கூர என் நாள்கள் சக்கரை ஆக
தலைவியும்சளைத்தவல்அல்ல. பெயர் கூறுவதால் அந்த நாட்கள் இனிப்பாக ஆகின்றன.
தலைவன்
தலைகீழ்தடுமாற்றம் தந்தாய்
என்னில்என் கால்களில்
நிலை தடுமாறுதல் நிகழ்கிறது ஆனால் அது மகிழ்வாக.
தலைவன் தன் நிலை விளக்கம் தருகிறான். காதலைக் கற்றுக் கொண்டதை உணர்த்துகிறான்.
பள்ளி செல்லவில்லை பாடம் கேட்க வில்லை
அள்ளிக்கொள்ள மட்டும் நான் படித்தேன்
தலைவியும்தன்னிலைவிளக்கம்தருகிறாள். தான் முல்லைப் பூவாக தொடுக்க தயாராக இருப்பதை உணர்த்துகிறாள்.
நல்ல முல்லை இல்லை நானும் கையில் இல்லை
உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்
தலைவன் தன் தவிர்ப்பை தெரிவிக்கிறான்.
ஊஞ்சல் கயிரு இல்லாமால் என் ஊமை மனது ஆடும்
தலைவி பதில் உரைக்கிறாள்
தூங்க இடம் இல்லாமால் என் காதல் கனவை நாடும்
நொடியும் விலகாமல் கொஞ்சம்
கெஞ்சும் தஞ்சம் நெஞ்சம்
கெஞ்சும் தஞ்சம் நெஞ்சம்
எல்லா நினைவுகளுக்கு பின்னும் இருக்கின்றன இறகின் சிறகசைப்புகள். அதனால் தான் இன்னும் காலம் கடந்து சூரியன் ஒளிர்கின்றது.
![]()
காற்றில் ஆடும் சருகுகள் – 7
என்னதான்“iPhone 5s ” வைத்திருந்தாலும், 10 பைபேலன்ஸ் இல்லாவிட்டால் பேசமுடியுமா?
இப்படிக்கு நோக்கியா 1100 வைத்துiphone 5s க்குஆசைப்படுவோர் சங்கம்.
——————————————————————————-
தந்தை:
மனைவியிடம் பெற்ற காயங்கள் மருந்தாய் உருமாற்றம் கொள்கின்றன மகளால்.
——————————————————————————————————————————————————————-
வறுமை உடையவனை பெரும்பசிகள்வந்துசேர்கின்றன.
——————————————————————————————————————————————————————-
அன்பினைப் பெறுவதில் மிருகங்கள் விரும்புகின்றன. அதில் விலக்கம் கொள்ளும் மிகப்பெரியமிருகம் மனிதன்மட்டுமே.
——————————————————————————————————————————————————————-
எனக்கு 5 ரூ பொம்மைக் கார் வாங்கித் தந்தால், ஒவ்வொரு கன்னத்திற்கும் 10 முத்தம் தருவேன் என்ற மகளின் வார்த்தைகளில் மகிழ்வு கூடி தந்தையின் வாழ்வு நிலை பெறுகிறது.
——————————————————————————————————————————————————————-
நேசிப்பதை விட நேசமாய் இருப்பதாய் காட்டும் காலங்கள் அதிகமாக இருக்கின்றன.
——————————————————————————————————————————————————————-
வானவூர்தி பார்த்து கைஅசைக்கும் ஒருகுழந்தையின் மகிழ்வு, மிகஅதிகமாக சந்தோஷம் கொண்டமனிதனின் மகிழ்வினை விடஅதிகம்.
——————————————————————————————————————————————————————-
தந்தையின் கண்கள்பார்த்துப் பேசும்சிறுபெண்குழந்தையின் கண்கள்ஆயிரம்கவிதைகளைச் சொல்கின்றன. பதில்பேசும்தந்தையின் கண்கள்இன்னும் பல்ஆயிரம்கவிதைகளைச் சொல்கின்றன.
——————————————————————————————————————————————————————-
வாழ்வு நிச்சயமாக மாறாமல் இருக்கிறது. உ.ம் 31ம் தேதி இரவு வங்கிக் கணக்கும், 1ம் தேதி தேதி இரவு வங்கிக் கணக்கும்.
——————————————————————————————————————————————————————-
காதலி – நீங்க இப்படிபேசினா, இனிமேபேச்சநிறுத்திடுவேன்.
காதலன் – சரி, இனிமேஇப்படிபேசல.(இது தெரிஞ்சிருந்தா, 3 வருஷத்திற்கு முன்னமே உன்சகவாசத்தை கட்பண்ணியிருப்பேனே. வடபோச்சே.)
சத்யமாக ஒட்டு கேட்டது.
![]()
சைவத் திருத்தலங்கள் 274 – சிறு குறிப்பு
திருஞான சம்மந்தர் தனது எல்லா பாடல் அமைப்புகளிலும் ஒரு ஒழுங்கு முறையைக் கையாண்டிருக்கிறார்.
8 வது பாடல் – இராவணன் பற்றிய நிகழ்வு
9 வது பாடல் – ப்ரம்மா மற்றும் திருமால்
10 வது பாடல் – சமணர்
11 வது பாடல் – நூல் பயன்
இராவணன் சிறந்த சிவபக்தன் என்றாலும் அவனிடத்தில் அதிகமாக ஆணவமும், மாயையும், கண்மமும் இருந்தது.
இதனால் சிவத்தலங்கள் பற்றிய பாடல்கள்களில், திருஞான சம்மந்தர் பாடி இருப்பின் அதில் 8 பாடலை விளக்கப் பாடலாக எடுக்க உள்ளேன்.
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
![]()
நகர மறுக்கும் நினைவுகள் – 7 – கனவு காணும் வாழ்க்கையாவும்..
படம் : நீங்கள் கேட்டவை
கண்கள் அற்றவனின் பாத்திரத்தில் உருளும்ஒற்றை நாணயத்தின் ஒலிகளாய், மரணமும் மயானம் நோக்கி நகர்தலில் துவங்குகிறது பாடல்.
எதிர் எதிர் நிகழ்வுகளை ஒன்று படுத்தி காட்சி ஏற்படுத்தி இருக்கிறார் பாலு சார்.
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புகூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
மனிதனின்அழுகை பதிவு செய்யப்படுகிறது. மீண்டும் பிணம் எரிகிறது. நாய்கள் தனது தாயிடம் பால் அருந்துகின்றன.
மயானத்திலிந்து மனிதன் நடந்து வருகிறான்.சிறிய குழந்தை தனது கண்களை உருட்டிப் பார்க்கிறது. அடுத்த காட்சியில் கல்லறைகள்.
பிறக்கின்ற போதே, பிறக்கின்ற போதே இறக்கின்ற செய்தி இருகின்றதென்பது மெய்தானே
பாடுபவன்பாடிக் கொண்டே நடந்து வருகிறான். லாட்டரி சீட்டு வியாபாரம் நடக்கிறது. காமம் அரங்கேற்றம் கொள்கிறது.
ஆசைகள் என்ன, ஆசைகள் என்ன, ஆணவம் என்ன, உறவுகள் என்பதும் பொய் தானே
அசைவுகள்அற்று வயதானவன் படுத்திருக்கிறான்.
உடம்பு என்பது, உடம்பு என்பது உண்மையில் என்ன கனவுகள் வாங்கும் பை தானே…
மிகப் பெரிய மனித கூட்டம் நகர்ந்து கொண்டிருக்கிறது. சினிமா விளம்பரப் பலகைகள். படத்தின் பெயர் ஊமை ஜனங்கள். மீண்டும் மெல்லிய சூரிய கதிர்கள் வானில் இருந்து பிரகாசிக்கின்றன. காற்று வேகமாக அடிக்கிறது. நீர் நிலைகளில் நீர் கடந்து கொண்டிருக்கிறது. மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன. நீர் நிலைகளும் பிறகு நீர் அற்றதால் வெடிப்புற்ற நிலங்களும் காட்சிகளில்.
காலங்கள்மாறும், காலங்கள்மாறும் கோலங்கள் மாறும் வாலிபம் என்பது பொய் வேஷம்.
சிறிய குழந்தை அழும் காட்சியும், வயதான மூதாட்டியின் நிலை பெற்ற பார்வையும். கடற்கரையினில் காதலர்களும் அதைத் தொடந்து வயதானவனின் நிலை பெற்ற பார்வையும்.
தூக்கத்தில் பாதி, தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி போனது போக எது நீதம்.
வாகனத்திற்கு வெளியே காலகளை நீட்டி ஒருவன் உறங்குகிறான். குழுக்களாய் மனிதர்கள் ஏதோ ஒன்றைத் தேடுபவர்களாய்.
நட்சத்திரஒட்டலும்பின்பு உழைப்பாளர் சிலையும். பாடல் தொடர்கிறது.
பேதை மனிதனே, பேதை மனிதனே கடமையை இன்றே செய்வதில் தானே ஆனந்தம்
இசைத்துக்கொண்டே பாடுபவன் அமர்ந்திருக்கிறான்.
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புகூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
உறுத்தாதகணவன் மனைவி உறவாய் பாடலும் இசையும் மிக சரியான விகிதத்தில்.
முள்ளை முள்ளாய் எடுப்பது போல், மிக அதிக மனப் பாரங்கள் இருக்கும் காலங்களில் தனித்து இப்பாடலை கேட்கும் போது இப்பாடல் வலிகளை மருந்தாய் இட்டுச் செல்கிறது.
அருவி நம் உடலை தூய்மை செய்வது போல் பாடல் வரிகளும் இசையும் காட்சி அமைப்பும் நம் மனப் பாரங்களை நீக்குகின்றன.
நிலையாமைத் தத்துவங்களின் மிக முக்கிய பணி தன்னை உணர்தல், தன் வலி உணர்தல். அதை இப்பாடல் மிக சிறப்பாகவே செய்கிறது. அதனால் தான் இன்னும் கனவு காணும் வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது.
![]()





















