புகைப்படம் : Karthik Pasupathy
உன்கென்ன ‘ஆசை அறு’ என்று
சொல்லி சென்றுவிட்டாய்.
நானல்லவோ பீடிக் காசிற்கு அலைகிறேன்.
உருவேறத் திருவேறும்
புகைப்படம் : Karthik Pasupathy
உன்கென்ன ‘ஆசை அறு’ என்று
சொல்லி சென்றுவிட்டாய்.
நானல்லவோ பீடிக் காசிற்கு அலைகிறேன்.
தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருத்தூங்கானைமாடம்
தலம் | திருத்தூங்கானைமாடம் |
பிற பெயர்கள் | பெண்ணாகடம், பெண்ணாடம் |
இறைவன் | பிரளயகாலேஸ்வரர் ( சுடர்க்கொழுந்தீஸ்வரர் ), கைவழங்கீசர் |
இறைவி | ஆமோதனம்பாள் ( கடந்தை நாயகி , அழகிய காதலி ), விருத்தாம்பிகை |
தல விருட்சம் | செண்பக மரம் |
தீர்த்தம் | கயிலை தீர்த்தம் , பார்வதி தீர்த்தம் , இந்திர தீர்த்தம் , முக்குளம் , வெள்ளாறு |
விழாக்கள் | சித்திரையில் 12 நாட்கள் பிரம்மோற்சவம் |
மாவட்டம் | கடலூர் |
திறந்திருக்கும் நேரம் / முகவரி | காலை 6.00 மணி முதல் 11.30 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
அருள்மிகு பிரளயகாலேசுவரர் திருக்கோயில், பெண்ணாகடம் & அஞ்சல், விருத்தாச்சலம் வழி, திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம் – 608 105. தொலைபேசி : +91-9976995722, +91-98425-64768, 04143 – 222788. |
வழிபட்டவர்கள் | ஐராவதம், இந்திரன் மற்றும் பார்வதி |
பாடியவர்கள் | திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் |
நிர்வாகம் | |
இருப்பிடம் | விருத்தாசலத்தில் இருந்து சுமார் 17 கிமீ, தொழுதூரில் இருந்து சுமார் 15 கிமீ, திட்டக்குடியில் இருந்து சுமார் 15 கிமீ |
இதர குறிப்புகள் | தேவாரத் தலங்களில் 192 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 2 வது தலம். |
சுடர்க்கொழுந்தீஸ்வரர்
விருத்தாம்பிகை
புகைப்படம் : தினமலர்
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 1
பதிக எண் 59
திருமுறை எண் 9
பாடல்
நோயும் பிணியும் அருந்துயரமும்
நுகருடைய வாழ்க்கை யொழியத்தவம்
வாயும் மனங்கருதி நின்றீரெல்லாம்
மலர்மிசைய நான்முகனும் மண்ணும்விண்ணும்
தாய அடியளந்தான் காணமாட்டாத்
தலைவர்க் கிடம்போலுந் தண்சோலைவிண்
தோயுங் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடம் தொழுமின்களே
பொருள்
உடலை வருத்தும் நோய்களும், மனத்தை வருத்தும் கவலைகளும் அவற்றால் விளையும் துன்பங்களும் ஆகியவற்றை நுகர்தற்குரிய இவ்வாழ்க்கை நீங்கத் தவம்புரியும் எண்ணத்துடன் நிற்கும் நீவிர் அனைவீரும் தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும், மண்ணையும், விண்ணையும் அடியால் அளந்த திருமாலும் காண மாட்டாத தலைவனாகிய சிவபிரானுக்குரிய இடமாகிய விண் தோயும் சோலைகளால் சூழப்பட்ட கடந்தை நகரிலுள்ள திருத்தூங்கானை மாடப்பெருங்கோயிலைத் தொழுவீர்களாக.
கருத்து
நோய் – உடலைப்பற்றியனவாகி வாதபித்த சிலேட்டுமத்தால் விளைவன.
பிணி – மனத்தைப் பிணித்து நிற்கும் கவலைகள்.
அருந்துயரம் – அவற்றால் விளையும் துன்பங்கள்.
பாடியவர் திருநாவுக்கரசர்
திருமுறை 4
பதிக எண் 109
திருமுறை எண் 1
பாடல்
பொன்னார் திருவடிக் கொன்றுண்டு
விண்ணப்பம் போற்றிசெய்யும்
என்னாவி காப்பதற் கிச்சையுண்
டேலிருங் கூற்றகல
மின்னாரு மூவிலைச் சூலமென்
மேற்பொறி மேவுகொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை
மாடச் சுடர்க்கொழுந்தே.
பொருள்
விரும்பி மேகங்கள் தங்குதல் பொருந்திய பெண்ணாகடத்திலுள்ள திருக்கோயிலாகிய தூங்கு ஆனை மாடத்தில் ஒளிப் பிழம்பாய் இருக்கும் பெருமானே! உன்னுடைய பொன்போன்ற திருவடிகளில் அடியேன் செய்யும் விண்ணப்பமாகிய வேண்டுகோள் ஒன்று உளது. அஃதாவது அடியேனுடைய உயிரைப் பாதுகாக்கும் விருப்பம் உனக்கு உண்டானால், யான் சமண சமயத்தில் வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக்கினவன் என்று மக்கள் கூறும் பழிச் சொற்கள் நீங்குமாறு, உன்னுடைய அடிமையாக அடியேனை எழுதிக் கொண்டாய் என்பது புலப்பட ஒளிவீசும் முத்தலைச் சூலப் பொறியை அடியேன் உடம்பில் பொறித்து வைப்பாயாக.
(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)
யாசித்துப் பெற்ற நாணயங்களைக் கூட்டி
தேனீர் அருந்துகையில் வந்தமைகின்றது
செம்மை நிற நாய்களின் கூட்டமொன்று.
*மலிதல் – மகிழ்தல்
புகைப்படம் : காமேஷ் சிவம்
புகைப்படம் : Vinod VV
எத்தனை முயற்சித்தாலும்
இவ்வளவு தான் வாழ முடிகிறது.
பெறுவதை நோக்கமாகக் கொண்டப்பின்
கிடைக்கும் ஒரு முழு பீடியும்,
புகைக்கப்பட்ட சிறு துண்டு பீடியும்;
சிறு சண்டைகளுக்குப் பின் கிடைக்கும்
கறி இல்லா கால் பிளேட் பிரியாணி;
புன்னகைக்குப் பின் யாசித்தலை ஒத்து
கிடைக்கும் சிறு தேனீர்;
‘சும்மாதான இருக்க’ எனும் சொல்லுக்கு பின்
அழைத்துச் செல்லப்படும்
தரை டிக்கெட் திரைப்படங்கள்;
நிலை அறிந்தும் நிழலெனத்
தொடரும் உடலெங்கும் காயம் கொண்ட
கருப்பு நிற ஜிம்மியின் வாலசைப்புகள்;
யாரும் அறியா சுயத்தின் பேரொலி.
எத்தனை முயற்சித்தாலும்
இவ்வளவு தான் வாழ முடிகிறது.
புகைப்படம் : இணையம்
பஞ்ச பூதக் கவிதைகள் – பெண் தெய்வங்கள் முன்வைத்து – ஆகாயம்
யாருமற்ற இரவொன்று;
விளக்கு சுடர் மற்றும் பிரகாசிக்கின்றது.
இரவின் உறக்கம் கலைத்து
வான் முழக்கம் அருகினில்.
தோழியராய் இரு பெண்கள் அருகினில் வருகிறார்கள்.
யார் என்று வினவுகிறேன்.
நாங்களே சித்தி புத்தி;
‘பர நாதம் பரவி இருக்கும் ஆகாயமே எங்கள் நாதன்.
அவரே எம் கணவர் ஹிரண்ய கணபதி” என்கிறார்கள்.
‘சாஸ்வதமான வாக்கினை கேட்க விரும்புகிறேன்” என்கிறேன்.
‘இறப்பே சாஸ்வதம்’ என்கிறார்கள்.
விக்கித்து நிற்கிறேன்.
‘ஆகாயமும் நாதமும் தொப்புள் கொடி உறவானது
எழுத்துக்களை சொற்களாக்கி
சொற்களை வார்த்தைகளாக்கி
வார்த்தைகளை வாக்கியமாக்கி
ஆகாயத்தில் இருந்து
அடிநாத மௌனம் காண்’ என்கிறார்கள்
பின்னொரு பொழுதுகளில்
ஆதி மௌனம் படரத் தொடங்கி இருந்தது.
தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருநெல்வாயில் அரத்துறை
தலம் | திருநெல்வாயில் அரத்துறை |
பிற பெயர்கள் | தீர்த்தபுரி,திருவரத்துறை , திருவட்டுறை, திருவட்டத்துறை, நெல்வாயில் அருத்துறை, சிவபுரி |
இறைவன் | தீர்த்தபுரீஸ்வரர், ஆனந்தீஸ்வரர் , அரத்துறைநாதர் |
இறைவி | திரிபுரசுந்தரி, ஆனந்தநாயகி , அரத்துறைநாயகி |
தல விருட்சம் | ஆலமரம் |
தீர்த்தம் | நீலமலர்ப்பொய்கை , நிவாநதி (வடவெள்ளாறு நதி) |
விழாக்கள் | மகாசிவராத்திரி , மார்கழி திருவாதிரை , பங்குனி உத்திரம் |
மாவட்டம் | கடலூர் |
திறந்திருக்கும் நேரம் / முகவரி | காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் (அரத்துறைநாதர்) திருக்கோவில் திருவட்டுறை அஞ்சல் திட்டக்குடி வட்டம் கடலூர் மாவட்டம் PIN – 606111 04143-246303, 04143-246467 |
வழிபட்டவர்கள் | மகாவிஷ்ணு, ஆதிசேஷன், சனி, செவ்வாய், வால்மிகி முனிவர், அரவான்,சனகர், ஆதி சங்கரர், குகை நமச்சிவாயர், இராமலிங்க அடிகள்,சேர, சோழ, பாண்டியர்கள் |
பாடியவர்கள் | திருநாவுக்கரசர் 1 பதிகம் , திருஞானசம்பந்தர் 1 பதிகம் , சுந்தரர் 1 பதிகம், அருணகிரிநாதர் |
நிர்வாகம் | |
இருப்பிடம் | திருப்பெண்ணாகடதிற்குத் தென்மேற்கே 7-கி. மீ. தூரம். விருதாச்சலம் தொழுதூர் சாலையில் கொடிகளம் என்னும் இடத்தில் இறங்கி, தெற்கே 1-கி. மீ. தூரம் |
இதர குறிப்புகள் | தேவாரத் தலங்களில் 191 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 1 வது தலம். |
அருள்மிகு திரிபுரசுந்தரி உடனாகிய தீர்த்தபுரீஸ்வரர்
புகைப்படம் : தினமலர்
பாடியவர் திருநாவுக்கரசர்
திருமுறை 5
பதிக எண் 3
திருமுறை எண் 9
பாடல்
காழி யானைக் கனவிடை யூருமெய்
வாழி யானைவல் லோருமென் றின்னவர்
ஆழி யான்பிர மற்கும ரத்துறை
ஊழி யானைக்கண் டீர்நாந் தொழுவதே.
பொருள்
சீகாழிப்பதியில் உறைபவரும், பெருமையை உடைய இடப வாகனத்தில் செல்லும் நித்தத் திருமேனி உள்ளவரும், பிறரால் ‘வல்லோர்கள்’ என்று கூறப்படுவோராகிய திருமால் மற்றும் பிரமனும் ஊழிக் காலத்தில் ஒடுங்கும் இடமாகக் கூடியவரும் அரத்துறை மேவும் பரமனே, நாம் தொழுகின்ற இறைவனாகிய நம் சிவபெருமான் ஆவார்.
கருத்து
திருமாலும் பிரமனும் வணங்க, ஊழிதோறும் விளங்கும் அரத்துறை எனும் பொருள் பிரித்து அறிவார்களும் உளர்.
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 3
திருமுறை எண் 8
பாடல்
திண்டேர்நெடு வீதி யிலங்கையர்கோன்
திரள்தோள்இரு பஃதும்நெ ரித்தருளி
ஞெண்டாடுநெ டுவயல் சூழ்புறவின்
நெல்வாயி லரத்துறை நின்மலனே
பண்டேமிக நான்செய்த பாக்கியத்தாற்
பரஞ்சோதிநின் நாமம் பயிலப்பெற்றேன்
அண்டாஅம ரர்க்கம ரர்பெருமான்
அடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.
பொருள்
வலிமை மிக்க தோள்கள் இருபதையும் நெரித்து பின் (அவன் கர்வம் அழிந்தப்பின்) அவனுக்கு அருளி, நண்டுகள் உலாவுகின்ற நீண்ட வயல் சூழ்ந்த, முல்லை நிலத்தையுடைய திருநெல்வாயில் அரத்துறையின் கண் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றவனே, மேலான ஒளி வடிவினனே, தேவனே, தேவர்க்குத் தேவராய் உள்ளார்க்குத் தலைவனே, நான் முற்பிறவிகளில் செய்த நல்வினையினால் உனது பெயரைப் பல காலமும் சொல்லும் பேற்றினைப் பெற்றேன்; இனி, அடியேன், உலகியலினின்றும் பிழைத்துப் போவதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள்.
கருத்து
தேவர்க்குத் தேவர், காரணக் கடவுளர் – அயனும், மாலும்
நாமமாவது – திருவைந்தெழுத்து
(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)
கவலைகள் – உடல் நலம் சார்ந்து
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள்/உணவுகள் அவைகளின் பரிசோதனைக்கு தகுந்த அளவில் பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. (குறுகிய கால அளவு பக்க விளைவுகள் மற்றும் நீண்ட கால பக்க விளைவுகள்)
உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் ‘ஏம்பா அந்த 19வது குரோமேசோமை எடுத்து நமக்கு தகுந்த மாதிரி மாத்தி சேமித்துவிடு, எதுவும் ஆகாது’ . அதாவது. It is only unit testing. It is not complete testing.
மாற்றப்பட்ட பதிவுகள் உடைய டி என் ஏ மூலக்கூறுகள், பயிர்கள்/உயிர்கள் ஆகியவற்றில் நிலையற்ற தன்மை உடையனவாக இருக்கின்றன. இந்த நிலையற்ற தன்மை அது செல்லும் இடம் எங்கும் சென்று அதன் தொடர்ச்சியாக தோற்றுவிக்கப்படும் டி என் ஏவிலும் நிலையற்ற தன்மையை உண்டாக்குகிறது.
இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை உட்கொள்ளும் விலங்குகள் பெரும்பாலும் உடல் உறுப்புகள், இரைப்பை மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பு, விரைவாக முதுமை தன்மை அடைதல், மற்றும் மலட்டுத்தன்மை அடைதல் போன்றவைகளால் பாதிக்கப்படுன்றன.
Allergies ஒவ்வாமைக்களுக்கு (Allergies) அடிப்படையான காரணம்
இவ்வாறு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள்/உணவுகள் மிக அதிக அளவில் உடலில் எதிர்பாரா பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோயாவின் DNA மூலக்கூறுகள் நம் உடலில் தங்கி அதன் சுவடுகள் கர்ப்பிணி பெண்ணில் கருவரை வரையில் நீள்கின்றன.
இவ்வாறான பயிர்களை உட்கொள்ளும் சோதனை விலங்குகள் புற்று நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
அமெரிக்காவில் 1996 ஆண்டு கணக்குப்படி மரபணு மாற்றம் காரணமாக மூளைக் குறைபாடுகள், இனப்பெருக்க குறைபாடுகள், உணவு செரிமானக் கோளாறுகள் போன்றவைகள் 7% இருந்து 13% ஆக உயர்ந்திருக்கிறது.
இது உணவு சுழற்சி மற்றும் உணவு சங்கிலி தொடரில் பாதிப்பதால் அனைத்து உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பது கண்கூடு.
இங்கு குறிப்பிடபட்டுள்ள செய்திகளை உவமையில் கூறவேண்டும் எனில் கடலில் இருந்து எடுக்கப்பட்ட கூஜா நீர் அளவு மட்டுமே.
புகைப்படம் : R.s.s.K Clicks
1.
சார், எங்க ஸ்கூல என்னா வசதின்னா, நாங்க பேங்க்கோட டைஅப் வச்சி இருக்கோம். நீங்க அடகு வக்க எங்கையும் போக வேணாம். இங்க இருக்கிற பேங்க்லய அடகு வச்சி எங்க பீஸ் கட்டிடலாம்.
2.
நீங்க எத்தனாவது படிக்கிறீங்க?
4 வது
ஐயோ, உங்களுக்கு எங்க ஸ்கூல இடம் இல்லீங்க. ஏன்னா நீங்க படிச்சி கல்யாணம் ஆகி குழந்தை பொறந்து சேர்க்கும் போது உங்க குழந்தைக்கு age eligibility இருக்காதே?
3.
மேடம், எங்க பள்ளிகூடத்துக்கு மட்டும் தான் திரு. ரமணன் சார் ஆலோசகரா இருக்கிறார். அதனால மழை எப்ப பெய்யும் அப்படீங்கிறது முன்னாடியே தெரிஞ்சி, உங்களுக்கு inform பண்ணிடுவோம்.
4.
அட்மின் : பிரின்ஸ்பால் மேம், இந்த டீச்சர்ஸ்க்கு எல்லாம் மே மாசம் சம்பளம் குடுக்க வேண்டியதா இருக்கு என்ன செய்யலாம்?
பிரின்ஸ்பால் : பீஸ் கலக்க்ஷன டீச்சர்ஸ் தான் செய்யணும்னு சொல்லிடலாம். அவங்களே வாங்கி அவங்களே பேங்க்ல கட்டிட சொல்லலாம். உங்களுக்கும் வேலை குறையும் தானே.
5.
சார், நாங்க மத்த ஸ்கூல் மாதிரி இல்ல. இங்க பசங்க அடிச்சிகிட்டு கத்தியால கிழிச்சி காயம் ஆச்சின்னா, ஆர்யபட்டா ஹாஸ்பிட்ட சேர்த்துடுவோம். இதுக்குத்தான அவங்களோட டைஅப் வச்சி இருக்கோம். அப்ப செய்யுணும்ன்னா நீங்க எக்ஸ்ட்ராவா ஒரு 50 லட்சம் கட்டணும்.
6.
எங்க ஸ்கூல்ல என்ன வசதின்னா நாங்க L.K.Gல இருந்தே டியூஷன் சொல்லித்தரோம்.
ஒரு வேளை மார்க் கம்மி ஆயிட்டா இன்னாசார் செய்யறது?
அதுக்கு ஸ்பெஷல் ட்ரெய்னிங் உண்டு. அது ஃப்ரி தான். நீங்க பே பண்ண வேண்டாம்.
Major version 21
Minor version 4
Hot fix 3
Jet fix 1,00,00,000
புகைப்படம் : Karthik Pasupathy
மாணவன்
உடல் முதல் உலகம் வரை உள்ளதை கொண்டால் உடல்கண்ணால் காணப்படுவதும், அழிவதுமாகவும் இருக்கிறது. உலகம் அழியாப் பொருளாக இருக்கிறது.எனவே காட்சி மட்டுமே முதன்மை எனும் உலகாயதர்களின் வாதத்தை எவ்வாறு மறுப்பது?
ஆசிரியர்
கண்ணால் துய்து உணரும் பொருளையே உலகாயதர்கள் கொள்கின்றனர். காணப்படும் பொருள்கள் ‘தனித்தன்மை மற்றும் பொதுத்தன்மை’ ஆகிய இருவகையில் உணர்த்தப்படும். இக் குடம் இன்னகாலத்தில், இவனால், இந்த மண் கொண்டு இவ்வாறு செய்யப்பட்டது என்பது பொதுத்தன்மை. சிறுகுடம், பெருங்குடம், மண்குடம் போன்ற தனித்தன்மையாலும் விளக்கப்படும். பொதுத்தன்மை உணர காட்சித் தேவையில்லை. தனித்தன்மையை உணர மட்டுமே காட்சித் தேவை.
எனவே காட்சி தனித்தன்மையாகிய காணப்பட்ட பொருளை நோக்கி நிற்கும். பொதுத்தன்மை அதனொடு ஒத்த அனைத்து பொருள்களையும் பற்றி நிற்கும். அவ்வகையில் தோன்றிய சில உடம்பில் சில் உடனே அழிகின்றன. ‘சில காலம் நின்று’ சில உடல்கள் அழிகின்றன. நிற்றல் நிலை காணப்படும் அனைத்து பொருள்களுக்கும் (குறுகிய காலம் மற்றும் நெடுங்காலம்) இருப்பதால் உலகம் தோன்றி அழியக்கூடியது.
மாணவன்
பொதுத்தன்மையினை முன்வைத்து உடல் என்பதும் உலகம் என்பது வெவ்வேறானவை. ஒத்தப் பொருள்கள் மடுமே பொதுத்தன்மையால் பொருந்தும், அவ்வாறு இல்லாமல் பொதுத்தன்மை உடையவைகள் எவ்வாறு ஒவ்வாத பொருள்களுக்கு பொருந்தும்?
ஆசிரியர்
ஒத்திருத்தலில் அதன் தன்மைக்கேற்றவாறு சிறிது ஒத்திருத்தல், பெரிதும் ஒத்திருத்தல் எனும் இரு நிலைகள் காணப்படுகின்றன. எனவே உடலும் உலகமும் பொதுத்தன்மையில் ஒன்றாகும். உலகத்தின் தோற்ற ஒடுக்கத்தினை மறுத்தாலும் ‘நிற்றல்’ என்பது வெளிப்படை. ஒத்த பொருளின் தன்மைகளில் உடலும் உலகமும் ஒன்று எனில் உடலைப் போன்றே உலகமும் தோற்ற ஒடுக்கம் கொண்டதாகவே இருக்க வேண்டும்.
பூதாதி ஈறும் முதலும் துணையாகப்
பேதாய் திதியாகும் பெற்றிமையின் – ஓதாரோ
ஒன்றொன்றிற் றோன்றி உளதாய் இறக்கண்டும்
அன்றென்றும் உண்டென்ன ஆய்ந்து – சிவஞான போதம் சூ1 அதி1
தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருஇரும்பைமாகாளம்
தலம் | திருஇரும்பைமாகாளம் |
பிற பெயர்கள் | இரும்பை மாகாளம், திருவிரும்பை மாகாளம், இருஞ்சேரி , இலுப்பைவனம் |
இறைவன் | மாகாளநாதர், மகாகாளேஸ்வரர் |
இறைவி | மதுரசுந்தரநாயகி குயில் மொழியம்மை |
தல விருட்சம் | புன்னை |
தீர்த்தம் | மகாகாள தீர்த்தம் |
விழாக்கள் | மகாசிவராத்திரி , மாசிமகம் , திருக்கார்த்திகை , பங்குனி உத்திரம் |
மாவட்டம் | விழுப்புரம் |
திறந்திருக்கும் நேரம் / முகவரி | காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 00 மணி முதல் இரவு 8 00மணி வரை
அருள்மிகு மாகாளேஸ்வரர் திருக்கோவில் இரும்பை அஞ்சல், வானூர் வட்டம் கடலூர் மாவட்டம், PIN 605010 +91- 413 – 268 8943, 98435-26601 , 94434-65502 |
வழிபட்டவர்கள் | சுந்தரர் – ஊர்த்தொகை நூல் |
பாடியவர்கள் | திருஞானசம்பந்தர், பட்டினத்தார் |
நிர்வாகம் | |
இருப்பிடம் | திண்டிவனம் – பாண்டி ( வழி : கிளியனூர் ) சாலை-> திருச்சிற்றம்பலம் கூட்ரோடு -> இரும்பை சாலையில் இருந்து சுமார் 2 கிமீ |
இதர குறிப்புகள் | தேவாரத் தலங்களில் 274 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் 32 வது தலம். |
மாகாளநாதர்
குயில் மொழியம்மை
புகைப்படம் : தினமலர்
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 2
பதிக எண் 117
திருமுறை எண் 9
பாடல்
அட்டகாலன் றனைவவ் வினான்அவ் வரக்கன்முடி
எட்டுமற்றும் மிருபத்திரண் டும்இற வூன்றினான்
இட்டமாக விருப்பா னவன்போல் இரும்பைதனுள்
மட்டுவார்ந்த பொழில்சூழ்ந் தெழிலாரும் மாகாளமே.
பொருள்
மார்க்கண்டேய முனிவரொடு போராடிய காலனுயிரைக் கவர்ந்தவனும், இராவணன் பத்துத் தலைகளும் இருபது தோள்களும் நெரியுமாறு திருவடியை ஊன்றியவனும் ஆகிய சிவன் விருப்பமாக உறையும் இடம் தேனார்ந்த பொழில் சூழ்ந்துள்ளதுமான திருமாகாளமாகும்.
கருத்து
அட்ட – மார்க்கண்டேய முனிவரொடு போராடிய,
எட்டும் இருபத்திரண்டும்(8+22) – பத்துத் தலைகளும் இருபது கைகளுமாகிய முப்பதும்
மட்டு – தேன்
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 2
பதிக எண் 117
திருமுறை எண் 10
பாடல்
அரவமார்த்தன் றனலங்கை யேந்தி யடியும்முடி
பிரமன்மாலும் அறியாமை நின்ற பெரியோனிடம்
குரவமாரும் பொழிற்குயில்கள் சேரும் இரும்பைதனுள்
மருவிவானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே.
பொருள்
நாகத்தை தன் இடையில் அணிந்தவரும், தீயினை கையினில் ஏந்தியவரும், குயில்கள் வாழும் குரா மரங்கள் நிறைந்ததும், பிரமன், மால் ஆகியோரால் அடிமுடி அறியாதவாறு ஓங்கிநின்றதும்,வானோரும் மறையோரும் தொழும் இடம் பெரியோனின் திருமாகாளமாகும்.
கருத்து
ஆர்த்து – கட்டி ((ஆர்த்த பிறவி துயர் கெட..), குரவம் – குராமரம் (மலைவசம்பு அல்லது குரவகம்)
(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)
என்ன செய்துவிட முடியும் மத்யமரால்.
புகைப்படம் : Vinod Velayutham.
தலம்
|
திரு அரசிலி
|
பிற பெயர்கள்
|
ஒழுந்தியாப்பட்டு
|
இறைவன்
|
அரசிலிநாதர் ( அஸ்வத்தேஸ்வரர் , அரசலீஸ்வரர் )
|
இறைவி
|
பெரியநாயகி ( அழகியநாயகி )
|
தல விருட்சம்
|
அரசமரம்
|
தீர்த்தம்
|
வாமதேவ தீர்த்தம் ( அரசடித்தீர்த்தம் )
|
விழாக்கள்
|
வைகாசி விசாகம் 10 நாட்கள், மகாசிவராத்திரி , திருக்கார்த்திகை
|
மாவட்டம்
|
விழுப்புரம்
|
திறந்திருக்கும் நேரம் / முகவரி
|
காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை,
அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில்
ஒழிந்தியாப் பட்டு – அஞ்சல்
வானூர் (வழி)
வானூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம் -605 109
04147 – 235472,295376, 9994476960
|
வழிபட்டவர்கள்
|
வாமேதவ முனிவர், சாளுக்கிய மன்னனான சத்தியவிரதன்,இந்திரசேனன், இந்திரசேனனின் மகள் சுந்தரி
|
பாடியவர்கள்
|
சிரவையாதீனம் கௌமார மடாலயம் ஸ்ரீ தண்டபாணி சுவாமிகள்
|
நிர்வாகம்
|
|
இருப்பிடம்
|
திண்டிவனத்தில் இருந்து சுமார் 25 கிமீ தொலைவு, புதுச்சேரியில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவு
திண்டிவனம் – பாண்டி சாலையில் ( வழி : கிளியனூர் ) தைலாபுரம் தாண்டி , ஒழுந்தியாப்பட்டு செல்லும் இடப்புற சாலையில் இருந்து சுமார் 2 கிமீ
திருவக்கரையில் இருந்து பாண்டி செல்லும் சாலை ( வழி : மயிலம் , வானூர் ) , திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு -> திண்டிவனம் சாலை -> கீழ்ப்புத்துப்பட்டு செல்லும் வலப்புறப்பாதை
|
இதர குறிப்புகள்
|
தேவாரத் தலங்களில் 273 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் 31 வது தலம்.
|
தான் பயணிக்கும் போது குறிக்கிட்ட அழகிய கயிலை மலையை புரட்ட முற்பட்ட வலிய அரக்கனாகிய இராவணனின் கண்ணும் தோளும் நல்ல வாயும் நெரியுமாறு அவனைக் கால்விரலை ஊன்றி அடர்த்துப் பின் அவன் கைநரம்பால் வீணை செய்து பண்ணொடு கூடிய பாடல்களைப் பாட அதனைக் கேட்டுப் பெருந்தன்மையோடு அவனுக்கு அருள்கள் பலவும் செய்த அடிகளுக்கு உகந்த இடம் திருஅரசிலியேயாகும்.
உமை : நான்கு வகையான வழிமுறைகளானபிரம்மச்சாரியன், கிரகஸ்தன், வான பிரஸ்தன் மற்றும் சந்நியாசி இவர்களின் கடமைகளை கூறுங்கள்.
சிவன் :எல்லா வகையிலும் கிரகஸ்தர ஆஸ்ரமமே முதன்மையானதும் முக்கியமானதும்ஆகும். நீராடுதல், தன் மனைவியோடு திருப்தியாக இருந்தல், தானம்,யாகம் போன்றவை விட்டப்போகாமல் காத்தல், விருந்தினர்களை உபசரித்தல், மனம் வாக்கு செயல் ஆகிய எல்லாவற்றாலும் ஒன்றாக இருத்தல், பெரும் துன்பங்களையும் ஏற்றுக் கொள்ளுதல் ஆகியவை முக்கிய தர்மங்கள்.
மனவுறுதியுடன் காட்டில் இருந்தல், நல்ல பழங்களை உண்ணுதல், தரையில் படுத்தல், சடை தரித்தல், தோல் ஆடை அணிதல், தேவர்களையும் விருந்தினர்களையும் உபசரித்தல் ஆகியவை வானபிரஸ்தனின் முக்கிய கடமைகள்.
வீட்டை விட்டு வெளியே வசித்தல், பொருள் இல்லாமல் இருத்தல், பொருளீட்ட முயற்சிக்காமலும் இருத்தல், கள்ளமில்லாமல் இருத்தல், எங்கும் யாசித்து உணவு பெறுதல், எந்த தேசம் சென்றாலும் தியானத்தை கைவிடாமல் இருந்தல். பொறுமை தயையுடன் இருந்தல், எப்பொழுதும் தத்துவ ஞானத்தில் பற்று கொண்டு இருத்தல் போன்றவை சந்நியாசியின் தர்மங்கள்.
உமை : இந்த ரிஷிகள் தவம் இயற்றுதலை முதன்மையாகக் கொண்டுள்ளனர். அது குறித்து விளக்க வேண்டும்.
சிவன் : கிரகஸ்தனாக இருந்து நன் மக்களைப் பெறுவதால் பித்ரு கடன் நீங்கும். உறுதியுடன் மனதை அடக்கி மனைவியுடன் வானப்ரஸ்தத்தில் வசிக்க வேண்டும். சாஸ்திரத்தில் சொல்லப்பட்டவாறு(தன் குருவின் வழி – என்று நான் பொருள் கொள்கிறேன்) தீஷை எடுத்துக் கொள்ள வேண்டும். சிறந்த புண்ணிய நதிகளில் நீராட வேண்டும். மனம் சலியாமல் அனுட்டானம் செய்ய வேண்டும். விருந்தினர்களை அன்புடன் வரவேற்று, இருக்கை அளித்து அவர்களுக்கு அன்னம் இடவேண்டும். இது வான பிரஸ்தனின் கடமைகள்.
வனத்தை ஆச்சாரியன் போல் கருதி வசிக்க வேண்டும்.விரதங்களையும்(உணவினை விலக்குதல்), உபவாசக்களையும்(இறை நினைவோடு இருத்தல்) மிகுதியாக கொள்ளவேண்டும். ரிஷிகளில் சிலர் மனைவிகளோடு இருக்கிறார்கள். அவர்கள் விந்திய மலைச் சாரலிலும், நதிக் கரையிலும் வசிக்கிறார்கள். அவர்களும் தவ சீலர்களே. கொல்லாதிருத்தல், தீங்கு செய்யாதிருத்தல், பிற உயிர்கள் இடத்தில் அன்போடு இருத்தல், தன் மனைவியோடு மட்டும் சேர்ந்து இருத்தல் ஆகியவைகளும் இவர்களது தர்மத்தில் அடக்கம்.
உமை : மூன்று விதமான மனிதர்கள் எப்போதும் காணப்படுகிறார்கள். எவ்வித முயற்சியும் இன்றி உயர்ந்த அதிகாரத்தையும் செல்வத்தையும் அடைந்து அனுபவிக்கின்றனர், சிலர் முயற்சி செய்து உயர் நிலைகளை அடைகின்றனர். மற்றவர்கள் எந்த முயற்சி செய்தாலும் ஒன்றையும் அடைய இயலாதவராக இருக்கின்றனர், அது ஏன்?
தொடரும்..
*வாருணை – மதிமண்டலத்தில் ஊறும் அமுதம்
புகைப்படம் : இணையம்