வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 4

உமாமகேஸ்வரஸம்வாதம்

உமை :  நான்கு வகையான வழிமுறைகளானபிரம்மச்சாரியன், கிரகஸ்தன், வான பிரஸ்தன் மற்றும் சந்நியாசி இவர்களின் கடமைகளை கூறுங்கள்.

 

சிவன் :எல்லா வகையிலும் கிரகஸ்தர ஆஸ்ரமமே முதன்மையானதும்  முக்கியமானதும்ஆகும். நீராடுதல், தன் மனைவியோடு திருப்தியாக இருந்தல், தானம்,யாகம் போன்றவை விட்டப்போகாமல் காத்தல், விருந்தினர்களை உபசரித்தல், மனம் வாக்கு செயல் ஆகிய எல்லாவற்றாலும் ஒன்றாக இருத்தல், பெரும்  துன்பங்களையும் ஏற்றுக் கொள்ளுதல்  ஆகியவை முக்கிய தர்மங்கள்.

மனவுறுதியுடன் காட்டில் இருந்தல், நல்ல பழங்களை உண்ணுதல், தரையில் படுத்தல்,  சடை தரித்தல், தோல் ஆடை அணிதல், தேவர்களையும் விருந்தினர்களையும்  உபசரித்தல் ஆகியவை வானபிரஸ்தனின் முக்கிய கடமைகள்.

வீட்டை விட்டு வெளியே வசித்தல், பொருள் இல்லாமல் இருத்தல், பொருளீட்ட முயற்சிக்காமலும் இருத்தல், கள்ளமில்லாமல் இருத்தல், எங்கும்  யாசித்து  உணவு பெறுதல், எந்த தேசம் சென்றாலும் தியானத்தை கைவிடாமல் இருந்தல். பொறுமை தயையுடன்  இருந்தல், எப்பொழுதும் தத்துவ ஞானத்தில் பற்று  கொண்டு இருத்தல் போன்றவை  சந்நியாசியின் தர்மங்கள்.

 

உமை :  இந்த ரிஷிகள் தவம் இயற்றுதலை முதன்மையாகக் கொண்டுள்ளனர்.  அது குறித்து விளக்க வேண்டும்.

 

சிவன் : கிரகஸ்தனாக இருந்து நன் மக்களைப் பெறுவதால் பித்ரு கடன் நீங்கும்.  உறுதியுடன் மனதை அடக்கி மனைவியுடன் வானப்ரஸ்தத்தில்  வசிக்க வேண்டும். சாஸ்திரத்தில் சொல்லப்பட்டவாறு(தன் குருவின் வழி – என்று நான் பொருள் கொள்கிறேன்) தீஷை எடுத்துக் கொள்ள வேண்டும். சிறந்த புண்ணிய நதிகளில் நீராட வேண்டும். மனம் சலியாமல் அனுட்டானம் செய்ய வேண்டும்.  விருந்தினர்களை  அன்புடன் வரவேற்று, இருக்கை அளித்து அவர்களுக்கு  அன்னம் இடவேண்டும். இது வான பிரஸ்தனின் கடமைகள்.

வனத்தை ஆச்சாரியன் போல் கருதி வசிக்க வேண்டும்.விரதங்களையும்(உணவினை விலக்குதல்), உபவாசக்களையும்(இறை நினைவோடு இருத்தல்) மிகுதியாக கொள்ளவேண்டும். ரிஷிகளில் சிலர் மனைவிகளோடு இருக்கிறார்கள். அவர்கள் விந்திய மலைச் சாரலிலும், நதிக் கரையிலும் வசிக்கிறார்கள். அவர்களும் தவ  சீலர்களே. கொல்லாதிருத்தல், தீங்கு செய்யாதிருத்தல், பிற உயிர்கள் இடத்தில் அன்போடு இருத்தல், தன் மனைவியோடு மட்டும் சேர்ந்து இருத்தல்  ஆகியவைகளும் இவர்களது தர்மத்தில் அடக்கம்.

 

உமை :  மூன்று விதமான மனிதர்கள் எப்போதும் காணப்படுகிறார்கள். எவ்வித  முயற்சியும் இன்றி உயர்ந்த அதிகாரத்தையும் செல்வத்தையும் அடைந்து அனுபவிக்கின்றனர், சிலர் முயற்சி செய்து உயர் நிலைகளை அடைகின்றனர்.  மற்றவர்கள் எந்த முயற்சி செய்தாலும் ஒன்றையும் அடைய இயலாதவராக  இருக்கின்றனர், அது ஏன்?

 

தொடரும்..

 

*வாருணை  – மதிமண்டலத்தில் ஊறும் அமுதம்

 

புகைப்படம் : இணையம்

 

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *