IT துறை – சவால்களும் சாத்தியக் கூறுகளும்


புகைப்படம் : திரைப்பட இயக்குனர் - திரு. ஐயப்ப மாதவன்

கண்ணுக்குத் தெரியா இறைவன் இருக்கிறான் இல்லை எனும் வாதங்கள் தாண்டி கண்ணால் காண இயலா வைரஸ் என்பது நிஜமாக இருக்கிறது. மனித குலத்தில் இந்த வைரஸ் ஏற்படுத்தி இருக்கும் சிக்கல் மிக அதிகம்.

ஒவ்வொரு முறையும் இயற்கை தன்னை தானே புதிப்பிக்கும் போது நிறைய இழப்புகளை சந்திக்கும்; இம்முறை தலைமுறை தாண்டிய இழப்புகள் அதிகம்.

எத்தனையோ துறை இருக்கையில் இந்த IT துறை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் எனும் கேள்வி எழும். மிகப் பெரிய அளவில் பொருளை / செல்வத்தினை இந்தியாவிற்கு தரும் துறை பொருளாதாரத்தை துறை என்பதாலும், இந்த துறை முன்வைத்தே பல துறை துறைகள் இயங்குகின்றன என்பதாலும் இத்துறை எடுத்துக் கொள்ளப்படுகிறது

நேரடியான பாதிப்புகள், மறைமுக பாதிப்புகள் இங்கு அதிகம் என்பதும் காரணம்.

ஒவ்வொரு முறையும் இத்துறைக்கு பாதிப்பு வரும்போது இத்துறை தன்னைத் தானே வெவ்வேறு வழிகளில் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும். இத்துறை இந்த முறை எடுக்கும் முடிவுகள் எண்ணிப்பார்க்க இயலாததாகவே இருக்கும்

கீழ் கண்ட தலைப்புகளில் எழுத இருக்கிறேன்.

  • இந்திய பொருளாதாரம்
  • மனித வளம் மேம்படுத்துதலில் இருக்கும் சிக்கல்கள்
  • மீண்டு எழுதல்

சமூக ஊடகங்கள்

IT – தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள் – 5

தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள்_KP

2015 
ஆண்டு கணக்குப்படி ஆண்டு ஒன்றுக்கு 5.8 மில்லியன் பட்டதாரிகள் இருப்பில் உள்ளவர்களுடன் (வேறு எப்படி சொல்ல முடியும்சேர்க்கப்படுகிறார்கள்.
உலக சந்தையினை முன்வைத்து(அமெரிக்கா என்றே கொள்ளலாம்செலவுகள்  என்பது 3 – 4 மடங்கு வரை குறைவு
இதனால் தான், வெளிநாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் I.T நிறுவனங்கள் தாராளமயமாக்கலுக்கு பிறகு இங்கு தடம் பதித்தன. சராசரியாக 45% முதல் 50% வரையில் அனைத்து திட்டங்களையும் முடித்து விடமுடியும். மற்றவை லாபம் தான். லாபத்தில் குறையும் போது தான் நிறுவனங்கள் தாங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக சொல்லு ஜல்லியடிக்கின்றன.(நன்றி சுஜாதா சார்)
நாஸ்காம் வெளியிட்டுள்ள  மார்ச்2016 அறிக்கையின் படி தகவல் தொழில் நுட்பத் துறை எந்த வித ஏற்றம், இறக்கம் இல்லாமல் $118 பில்லியன் அளவிலே இருக்கும். வளர்ச்சி விகிதம் 11.5% – 12.0% மட்டுமே.இது எதிர்பார்க்கப்பட்ட 13% – 15% வளர்ச்சியைவிட குறைவு.
தெளிவான திட்டமும் நோக்கம் இல்லாமல் நடத்தப்படும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் வரவு செலவு திட்டம் ஆண்டு ஒன்றுக்கு 11.7%. உலக நாடுகள் இதற்கு 1% மட்டுமே செலவழிக்கின்றன.
மாறி வரும் நாணய மதிப்பு, நிலையற்ற அரசியல் நிகழ்வுகள் அனைத்தும் இத் துறையை மிக வேகமாக கீழ் நோக்கி இழுத்துக் கொண்டிருக்கின்றன. இதனால் நாஸ்காம் தனது 2016 – 2017 ஆண்டிற்கானஏறுமதி வளர்ச்சியினை 12% முதல் 14% இருந்து 10% முதல் 12% ஆக குறைத்துள்ளது.
வரும் 2017ம் ஆண்டு கணக்குப்படி இந் நிறுவனங்கள் 30% வரை  பாதுகாப்பு மற்றும் இணக்கம் (security and compliance) ஆபத்துக்கால வரவு செலவு திட்டதிற்காக செலவழிக்க இருக்கின்றன. 10% ஆட்கள் இந்த பாதுகாப்பு செய்பாடுகளுக்காக செயல்படுவார்கள். இது 2014ம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டினை விட மூன்று மடங்கு அதிகம்.
தன்னிடம் உள்ளவர்கள் இத்தனை பேர் இத்தனை விதமான சான்றிதழ்(certification)  பெற்றிருக்கிறார்கள் என்பது போன்று நிலைப்பாடுகள் கொண்ட நிறுவனங்களும் உண்டு. அவர்களுக்கு வேலை உண்டோ இல்லையே அவர்களுக்கு தரப்படும் விலை மிக அதிகம். இதை இங்கே குறிப்பிடக் காரணம் மிக மிக அதிகமாக அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம்.
இது இத்துறை சம்மந்தமான ஒரு பொதுவான பதிவு மட்டுமே. இங்கு யாரும் வேலை பார்க்கக் கூடாதா என்பவர்களுக்கு என் பதில்.
 
·   நீங்கள் சுமாராக 7 முதல் 10 வருடம் மட்டுமே இத்துறையில் வேலை பார்க்க முடியும். அதுபற்றி கவலை இல்லை எனில் இத்துறையையில் சேரலாம்.
·   மிகச் சிறந்த அறிவாளி, என்னால் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற எண்ணம் உள்ளவர்கள் சேரலாம்.
· வருங்காலத்தில் எத்தனை பெரிய வியாதி வந்தாலும் கவலை இல்லை, எனது குடும்பம் என்னை கவனித்துக் கொள்ளும் என்பவர்கள்  சேரலாம்.
·   இது எதுவும் சரியாக வராது, ஆனால், என்னால் மிக அதிகமாக சொம்பு தூக்க முடியும் என்பவர்கள் சர்வ நிச்சயமாக நீண்ட கால நோக்குடன் இத் துறையே தேர்ந்து எடுக்கலாம். ஏனெனில் மகுடம் உங்களுக்குத் தான் காத்திருக்கிறது.
முற்றும்.

புகைப்படம் : Karthik Pasupathy

சமூக ஊடகங்கள்

IT – தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள் – 4

தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள்_KP

 
தான் வாழ பிறரை கெடுக்கும் மனிதர்கள் (அனைத்து நிலைகளிலும்)
 
தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் பெரும்பாலும் மிகப் பெரிய திட்ட நோக்கம், இலக்கங்கள் இல்லாமல் தொடங்கப்படுகின்றன.(சிவாஜி  : பார்த்த வேலை – Software Solution Architect).
 
அவைகள் தொடங்கப்படும் காலங்கட்டங்களில் அந்த இடங்களில் அங்கு என்ன மாதிரியான மனிதர்களும், படிப்புகளும் இருக்கின்றன. அவைகள் எப்படி பயன்பாடு இருக்கும் போன்ற விஷயங்களை நினைப்பது இல்லை.
 
நுட்பம் – 1
 
.ம் – B.C.A படித்த ஒருவன் மென்பொருள் துறையில் நுழைவதாக வைத்துக் கொள்வோம். மேலும் அந்த நிறுவனத்தில் 10 வருடம் அந்த நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும் கொள்வோம். இக்கால கட்டங்களில் அவனுக்கு அந்த நிறுவனத்தில் அனைத்து விஷயங்களும் தெரிந்து விடும்.
 
10 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு Master Degree படித்த ஒருவன் அங்கு வரும்போது வரும் நபருக்கு அவன் அடிப்படை விஷயங்களை எதுவும் சொல்லித் தரமாட்டான். (எவனாக இருப்பினும் சொல்லித் தரமாட்டான் என்பது வேறு கதை.) இது matter of survival  என்பதை முன்வைத்தது.
 
நுட்பம் – 2
 
நிறுவனத்தில் மேல் மட்டக் குழு விரிவாக்கம் பற்றி பேச கூடும்.
நம்ம நிறுவனத்தினை எப்படி விரிவுபடுத்தலாம். நல்ல idea குடுத்தா உங்களுக்கு promotion.
சார், நான் என்ன சொல்ல வரேன்னா, நம்ம Mr.X இருக்கானே, அவன் குடுக்ற வேலையை மட்டும் செய்யறான். அவன கழட்டி விட்டா 12 லட்சம் மிச்ச மாகும். அவனுக்கு பதிலா 2 லட்சத்தில 4 பேர வேலைக்கு எடுத்துக்கலாம். நம்ம Mr.Y க்கு புரொமோஷன்னு சொல்லி அவனுக்கு 3 லட்சம் கொடுத்தா 11 லட்சத்தில எல்லாம் முடிச்சிடும் சார்.
நுட்பம் – 3
 
தற்போதைய காலங்கட்டங்களில் (பொதுவாக) 32 – 35 வயது என்பது மனிதர்கள் வாழத்துவங்கும் காலம். எல்லா நிறுவனங்களுக்கும் இது தெரியும். எல்லோரும் அங்குதான் கை வைக்கிறார்கள். ‘புடிச்சா வேலை பாருங்க, புடிக்கலைன்னா, பேப்பர் போட்டுட்டு போக வேண்டியது தானே’ இவ்வாறு மன அழுத்தம் உண்டாக்கி வெளியே தள்ளப்படும் வகைகளும் உண்டு..
நுட்பம் – 4
 
இருக்கும் இடங்களில் மிகச் சிறந்த நட்புக்கள் (வேறு என்ன சொல்ல) உண்டாவது உண்டு.
எனக்கு ஏதாவது புமோஷனுக்கு ஏற்பாடு செய்ய மாட்டீங்களா?
கவலைய விடு டியர், நம்ம Mr. X இருக்கான்ல, அவனை ‘வேலையே செய்யாதவன்’னு சொல்லி அடுத்த மாசம் தூக்றோம். அப்புறம் நீ தான் Team Leader.
அவர் 10 வருஷமா இங்க இருக்காறே?
நீ ஏன் அதப் பத்தி கவலைப்பட்ற. இப்ப ஏதாவது Treat  உண்டா?
நுட்பம் – 5
 
ஒரு நிறுவனத்தில் இருந்து ஒருவரை வெளியே தள்ள பல காரணங்களைத் தேடுவார்கள்
·      Proper in time (out time பற்றி கவலை இல்லை). சத்தியமாகச் சொல்கிறேன்.
·      வேலைகளை குறித்த காலத்தில் முடித்துக் கொடுக்கும் திறமை
·      வேலை விடுப்பு எடுத்த நாட்கள்
·      எதிர் பால் மக்களுடன் கொஞ்சம் முன்னுக்கு பின்னாக இருத்தல்
·      மற்றவர்களும் பழகும் தன்மை
மேற் கூறியவைகள் எவையும் இல்லை எனில் 10 வருடங்களுக்கு பிறகுவேலையே செய்யவில்லைஎன்று உண்மையை கண்டறிதல்.
நுட்பம் – 6
 
மச்சான்(பாசக்கார பய புள்ளங்க), அவன எப்டி வேலை விட்டு விரட்டுரதுன்னு தெரியலடா?
டேய், நம்ம கிட்ட 6 மாசத்துக்கு எல்லாருக்கும் work load details இருக்கு. DB ல work load hours ஐ குறைச்சி போடு. 2 வாரத்து milestone ஐ 1 வார milestone ஆ போடு. இத தவிர daily milestone தினமும் 2 போடு. ஓடியே போய்டுவான். 
சூப்பர் ஐடியா மச்சான். வா ஒரு பீர் சாப்டு இன்னும் பேசுவோம்.
 
இங்கு பிரதானமாக இருப்பது ‘வேலை செய்யவில்லை’ என்பதை கண்டுபிடிப்பது தான்.

அடுத்த பதிவு :பொருளாதார சீர்திருத்தம்/முன்னேற்றம்  முன்வைத்துதொடரும்…

 
புகைபடம் : Karthik Pasupathy

சமூக ஊடகங்கள்

IT – தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள் – 3

தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள்_KP
கற்பித்தல் குறைபாடுகள்
சமீபத்தில் எனது நண்பர் (பேராசிரியர்ஒருவரை சந்திக்கச்  சென்றிருந்தேன்.   அப்போது  எனது நண்பரை சந்திக்க மாணவர் ஒருவர் வந்திருந்தார்.
சரிடாநான் உனக்கு சொல்லித் தரேன்புக்ஸ் எல்லாம் எடுத்துகிட்டு வா.
இல்லஎங்களுக்கு புக்ஸ் கொடுக்கலஸ்லைடு தான்.
எத்தனை page?
22 page.
ஒரு யூனிட்க்கா?
இல்ல சார்மொத்த சிலபஸ்ம் அவ்வளவுதான்.
என்னடா சொல்ற?
ஆமாம் சார்.
(அது என்ன subject  என்பதை கடைசியில் சொல்கிறேன்.)
படிப்பதற்கு 5 Text book  3 reference book என்பது இருந்தெல்லாம் லெமுரியா கண்டத்தோடு வழக்கொழிந்து போனது.
2000 ஆரம்ப காலகட்டங்களில் யூனிட்டையும் படித்து(ம்க்கும்) 122 பக்கத்திற்கு as per Anna University syllabus   என்று வெளியிடுவார்கள்.
இப்போது அதுவும் போயிற்றுஒரு subject க்கு 22 slide என படித்து வருபவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?
கற்றல் குறைபாடுகள் – 1
 
டேய், நாளைக்கு cycle test டா. இன்னும் ஒண்ணும் படிக்கவே இல்ல. என்ன பண்றதுடா?
டேய், விடுடா, objective type தானே, 4 answer ல ஏதோ ஒண்ண click  பண்ண வேண்டியது தானே
கற்றல் குறைபாடுகள் – 2
டேய், attendance கம்மியா வரும் போல இருக்கு.  பயமா இருக்கு டா.
விடுடா, compensatory course போட்டுக்கலாம்.
கற்றுத்தருபவர்களிடமும் கற்பவர்களிடம் இருக்கும் குறைபாடுகள் ஏராளமானவை. இரண்டுமே ஜாடிக்கு ஏத்த மூடி போல் மிக அழகாக பொருந்துகின்றன.
சமீபத்திய ஒரு கட்டுரையின் படி (Economic times), இந்த வருடத்தில் campus interview   வழியாக மிகப் பெரிய நிறுவனங்கள் 30000 ஆட்களை மட்டுமே எடுக்க இருக்கின்றன. (சென்ற வருடம் 35000).
இதற்கு காரணம் automation and artificial intelligence என்று வேறு ஒரு கட்டுரையும் வந்திருந்தது.

அந்த Subject : Relational Database Management System

தான் வாழ பிறரை கெடுக்கும் மனிதர்கள் (அனைத்து நிலைகளிலும்) – அடுத்த பதிவு
தொடரும்…

புகைப்படம் : Karthik Pasupathy

சமூக ஊடகங்கள்

IT – தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள் – 2

தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள்_KP

தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள் – செயற்கையாக உருவாக்கப்படவை.
 

வாழ்வின்அனைத்து விஷயங்களும் (சந்தோஷம் துக்கம் உட்பட)  பொருளாதாரம் சார்ந்து இருப்பதே வாழ்வின் முக்கியமான வலி.

தேசத்தில்சில நிறுவனங்கள் ஏமாற்றம் செய்யும்தற்பொழுது பெரும்பாலான ஒன்றாக கூடி ஏமாற்றும் வேலையை செய்கின்றன. அதன் பொருட்டே accelerated depreciation.
<< 
Accelerated depreciation is a depreciation method whereby an asset loses book value at a faster rate than the traditional straight-line method. Generally, this method allows greater deductions in the earlier years of an asset and is used to minimize taxable income.
>> 
ஒரு நிறுவனம் ஏன் இதை மேற்கொள்கிறது?
இதன் மூலம் (உண்மை நிலை தவிர்த்து) நிறுவனத்தின் சொத்து மதிப்பு குறைத்துக் காட்டப்படுகிறது.
மேலும் இது வரிகளையும்  வருமானங்களையும் கருத்தில் கொண்டு இவ்வழி பாதுகாப்பு செய்கிறது..
இதம் மூலம் அதிக தேய்மான செலவுகள், குறைவான நிகர லாபம் தருகின்றன. உதாரணத்திற்கு 20 வருடங்களுக்கு கணக்கு காட்டி தேய்மானம் குறிப்பிடபட வேண்டிய நிறுவனங்கள் 10 வருடத்தில் அதை கணக்கில் காட்டி விடுகின்றன.

Subsequently, the government put out a draft roadmap that sought to rationalize exemptions such as those given to aid scientific expenditure, capital expenditure and the benefits of accelerated depreciation—mainly benefitting sectors like infrastructure and information technology and those who undertake research and development activities in India. [1]

2013 – 2014 ம் ஆண்டில் வரிகளின் இழப்பு தோராயமாக 57,793 கோடி. இது 2014 – 2015ம் ஆண்டில் 62,399 கோடியாகஉயர்ந்துள்ளது[2]

கடந்த 5 வருட காலங்களில்  மிகப் பெரிய நிகர லாபம் ஈட்டிய அனைத்து நிறுவங்களும் தங்களது வரவு செலவு கணக்கில் மிகப் பெரிய நஷ்டம் சந்தித்ததாகவே குறிப்பிடுகின்றன. இது இந்தியாவில் உள்ள பெரும்பாலான இந்திய தொழில் நுட்பம் சார்ந்த நிறுவங்களுக்கும்  இது பொருந்தும்.
அதாவது10 ஆண்டுகளில் பெறவேண்டிய பணம் முழுவதையும் 5 ஆண்டுகளில் சம்பாதித்து 5ம் ஆண்டு முடிவில் தாங்க முடியா நிதி நிலைமை காரணமாக மூடி விடுவதாக கூறுகின்றன நிறுவனங்கள். (அதாவது மூடிய பின் வந்த லாபத்தை கொண்டு வேறு நிறுவனம் ஆரம்பித்து விடுவார்கள். )

குறிப்புரை இணையங்கள்

 
புகைப்படம் : Karthik Pasupathi
 

சமூக ஊடகங்கள்

IT – தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள்

தகவல் தொழில் நுட்பம் – தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள்
 
தகவல் தொழில் நுட்பம் அதன் தனித் தன்மையை இழந்து வருவது அனைவரும் அறிந்ததே.
பொருளாதார போட்டிகள்
உலகெங்கிலும் பொருளாதார முரண்பாடுகளாலும், உலகமயமாக்கல் காரணமாகவும் வளர்ச்சி பெற்றது தகவல் நுட்பத் துறை. மேல் மட்டத்தில் இருக்கும் தலைவர்களாலும், போட்டி காரணமாகவும்   வியாபார நெறிமுறைகள் அனைத்தும் களைந்து போட்டி ஆரம்பம் ஆகிறது.
உதாரணமாக தொடர்ந்து 5 வருடங்களாக ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்துடன்    வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கலாம். அதில் 10% அதிகரித்து ஒவ்வொரு வருடமும் வியாபாரம் நடக்கும்.
புதியதாக சந்தையில் நுழையும் ஒரு நிறுவனம் வியாபாரம் பெருகுவதற்காக முன் குறிப்பிட்ட நிறுவனத்துடன் மிக குறைவான விலை குறிப்பிட்டு வியாபாரத்தில் பங்கெடுக்கும்.
இதில் இரண்டு பொருளாதார பாதகங்கள்
·         முதல் நிறுவனம் தனது 5 வருட வியாபார வாழ்வினை இழந்திருக்கிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் அதில் வேலை பார்ப்பவர்கள்,
·         இரண்டாவதாக புதியதாக சந்தையில் நுழைந்த நிறுவனம் இதில் ஏற்படும் குறைக்கப்பட்ட பண பரிமாற்ற அளவிற்காக இருக்கும் தனது ஆட்களிடம் மிக அதிக வேலை பளுவினை அதிகரிக்கும்.
உதாரணத்திற்கு கீழ் கணக்கினை எடுத்துக் கொள்வோம்.
முதல் நிறுவனம் வியாபாரம்
முதல் வருடம்          110000
இரண்டாம் வருடம்       121000
மூன்றாம் வருடம்        133100
நான்காம் வருடம்         146410
ஐந்தாம் வருடம்         161051
ஐந்தாவது வருடத்தில் இரண்டாவது நிறுவனம் தனது வியாபாரம் ஆரம்பிப்பதாக கொள்வோம்.
‘சார், நீங்க நம்ம கம்பெனிக்கு 100000 குடுங்க, உடனே வியாபார ஒப்பந்தம் போட்டு விடலாம்’ என்பார்கள்.
இவ்வாறான பொருளாதார போட்டிகள் இரு நிறுவனங்களில் இருந்தும் ஆட்களை குறைத்து பெரும்பாலானவர்களை வீட்டுக்கு அனுப்புகின்றன.
மற்ற துறைகளில் இது இல்லையா என்பவர்களுக்கு – தகவல் தொழில் நுட்ப துறை சார்ந்த பொருளாதார போட்டிகள் கைப்புண் கண்ணாடியாக இருக்கின்றன.
தொடரும்…
புகைப்படம் : Karthik Pasupathi

சமூக ஊடகங்கள்