21.4.3. 1,00,00,000

21-4-3-10000000

புகைவண்டி பயணத்தில்
இயல்பில்லாதவனை
எளிதில் கண்டறியக்கூடும்.
ஜன்னலுக்கு வெளியே
யாருமற்ற புல்வெளியில்
வானம் பார்த்து
ஒருவன் உறங்கிக் கொண்டிருக்கலாம்
கடந்து செல்.
அன்றைய செய்தித் தாளினை
எவரும் படிக்க இயலாமல்
எட்டாய் மடித்து
ஒருவன் வாசித்துக் கொண்டிருக்கலாம்
கடந்து செல்
யாசிக்கும் மனிதனின்
கண்ணீர் தாண்டி
மறுதலிக்கும் மனம் அறிந்து
கடந்து செல்.
இறைவனிடம் கை ஏந்துங்கள்
எனும் பாடலை
சுருதி மாறாமல் பாடும்
பார்வை அற்றவனில் பாடலை கேட்டு
கடந்து செல்.
உன் நிலை கண்டும்
மற்றொருவன்
கவிதை எழுதக் கூடும்,
அப்போது நீ
இயல்பானவனாக மாறி இருப்பாய்

Major version 21
Minor version 4
Hot fix 3
Jet fix 1,00,00,000

புகைப்படம் :  Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *