I.T என்னும் பம்மாத்து – மதிப்பீடு(சுயம்/கம்பெனி) – Appraisal

நிறுவனங்களுக்கு தகுந்தவாறு நவம்பர் (Calender year) அல்லது பிப்ரவரி/மார்ச்ல் (Financial year) நிகழும் பொய்யான கூத்துக்கள்
இவைகள் நிகழ்த்தபடும் காலகட்டங்களில் பெரும்பாலான மனித வள அதிகாரிகளுக்கு அதிக வேலைகள் கூடும்.
பத்தோடு பதினொன்றாக கடிதம் வரும். உங்களுக்கு … தேதி … இவரோடு முதல் நிலை நேர்காணல். மற்ற எல்லாநிகழ்வுகளையும் விட இது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.
அந்த நாளில் விடுமுறை கிடையாது. உறுதி செய்க. மனைவி பேச்சுக்கு எதிர் பேசா கணவன் போல் அதனை உறுதி செய்யவேண்டும்.
(நம்மை நேர்காணல் செய்பவர்கள் முதன்மை அதிகாரிகளோடு ஏற்கனவே பேசி இருப்பார்கள். (எது எப்படி பேச வேண்டும் என்பது))
காட்சி -1  நேர் முதன்மை அதிகாரிகளுடன்
1.
Welcome to first review meeting
2.
என்னாங்க, 10 நிமிடம் முன்னாலே வந்துடீங்க?
நீங்க தானே சொன்னீங்க எப்பவுமே 10 நிமிடம் முன்னாலே வரணும்னு.
கொஞ்சம் வெளியில இருங்க, நாங்களே கூப்பிட்ரோம்.
3.
என்னாங்க, 2 நிமிடம் லேட்டா வரீங்க?
கொஞ்சம் வேலை. அதான்..
அதான் ஏற்கனவே மெயில் அனுப்பி இருந்தோமே, அத கூட ஃபாலோ பண்ணலேனா எப்படி?
4

இன்னொரு மதிப்பீட்டிற்கு வருகை தந்தமைக்கு நன்றி.(நீங்க என்னா சொல்லப் போறீங்கன்னு தெரியும்டா)
 5
இது நீங்க போன வருஷம் எழுதி கொடுத்தது. இதுல எது எது நீங்க செய்திருக்கிறீங்கள்ன்னு பாப்போம்.
 5.1
நீங்க எழுதின முதல் பாய்ண்ட்  – 90% முடிச்சி இருக்கீங்க. இன்னும் நீங்க பெட்டரா செய்து இருக்கலாம்.அதால உங்களுக்கு ‘D’ கிரேட்
கொஞ்சம் தானே மிஸ் பண்ணி இருக்கேன்
அதுதான் பிரச்சனை. நீங்க மிஸ் பண்ண தால நம்ம entire Team 2 weeks delay. அதால உங்களுக்கு ‘D’ கிரேட்.
5.2
நீங்க எழுதின ரெண்டாவது பாய்ண்ட்  – 70% முடிச்சி இருக்கீங்க. இன்னும் நீங்க பெட்டரா செய்து இருக்கலாம்.அதால உங்களுக்கு ‘D’ கிரேட்
 —

அடுத்த தடவை நல்லா பண்ணுங்க.
5.3
நீங்க எழுதின மூணவது பாய்ண்ட்  – 50% முடிச்சி இருக்கீங்க. அதாவது நீங்க ஆரம்பிக்கவே இல்லை.அதால உங்களுக்கு ‘D’ கிரேட்.
அக்சுவலா இதுக்கு கிரேட் குடுக்க கூடாது. நீங்க பெட்டரா பண்ணனும் அப்படீங்கறத்துகாக உங்களுக்கு ‘D’ கிரேட்
அடுத்தவருஷத்துக்கு என்னா செய்யப்போறீங்க?
..
இது எல்லாரும் செய்றது தான். இத பெரிய விஷயமா சொல்லாதீங்க. வேற ஏதாவது எழுதுங்க.
இல்ல கம்பெனிக்கு தேவை இது தான். அதால இத நீங்க செய்வீங்க அப்படீன்னு எழுதிக்கவா(இல்லன்னா மட்டுமா உட்டுடவாப் போறீங்க)
5.4
அட்மின்லேருந்து டீட்டெய்லா info வந்து இருக்கு. நீங்க நிறைய லீவு எடுக்குறீங்கன்னு. அத குறைச்சிகீங்க.(அடேய் அது வருஷத்துக்கே 5 நாள் தானடா)
5.5 
இப்ப நீங்க சொன்னது நாம பேசினது எல்லாம் கரெட்ன்னு கையெழுத்து போட்டு குடுங்க.

Loading

சமூக ஊடகங்கள்

நண்பு

கண் முன்னே
எரியும் பிணங்கள்
குளிர் நீக்கி வெப்பம் தரும்.
சுழற்சி முறையில்
எனக்கான இடமும் மாறும்.
அப்போதும் இக்கவிதை
அரங்கேற்றம் கொள்ளும்.


நண்பு  நேசம்
*திருமந்திரம் – 992
புகைப்படம்இணையத் தளம்

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 15/25 கங்காளர்

வடிவம்(பொது)
 
·   உருவத் திருமேனி
·   வாம தேவ முகத்திலிருந்து தோன்றிய வடிவம்
·   வாமனனைக் கொன்று முதுகெலும்பை தண்டமாக வைத்துக் கொண்ட வடிவம்(கங்காளம் –  முதுகு எலும்பு)
·   கங்காளம் – வாத்தியம். உடுக்கைவிட பெரியதானது. முழவை விட சிறியதானது அதே வடிவில் இருக்கும். நடுசிறுத்திருக்கும். கையால் மீட்டப்படுவது வழக்கம். நின்ற கோலம்
·   இடக்கால் பூமியில் நன்கு ஊன்றியபடி இருக்கும்;
·   வலக்கால் சற்றே வளைந்து அவர் நடந்து செல்வதைக் காட்டியபடி.
·   ஊமத்தை மலர், சர்ப்பம், பிறை ஆகியவற்றைச் சூடிய ஜடாமகுடம்.
·   மகிழ்ச்சி நிறைந்த முகம், இனிய பாடல்களை இசைத்துக் கொண்டு, புன்முறுவல் பூத்தபடி
·   முத்துப் போன்ற பற்கள் பாதி தெரியுமாறு வாய்
·   இரு காதுகளிலும் சாதாரண குண்டலங்கள் அல்லது வலக்காதில் மகரகுண்டலமும், இடக்காதில் சங்கபத்திரம்
·   நான்கு கரங்கள்
·   முன் வலக்கரம்  – பாணத்தையும்,
·   முன் இடக்கரம்உடுக்கை
·   பின் வலக்கரம் நீண்டு வளர்ப்புப் பிராணியான மானின் வாய்க்கருகே கடக ஹஸ்தம்.
·   பின் இடக்கரத்தில் கங்காளதண்டம்அதில் இறந்தோரது எலும்புகள் கட்டப்பட்டிருக்கும்மயில் இறகாலும் கொடியாலும் அது அலங்கரிக்கப்பட்டிருக்கும்படுக்கை வாட்டில் இக்கங்காள தண்டமானது இடது தோளில் வைத்து, அதன் ஒரு முனையைப் பின் இடக்கையில் பற்றி இருப்பார்
·   ஆடைபுலியாடை
·   அரையில் கச்சமும், அதில தங்கத்தாலமைந்த ஒரு சிறுவாள் வெள்ளிப் பிடியுடன்
·   திருவடியில் மரப் பாதுகைக ள்
·   உடலெங்கும் பாம்பு அணிகலன்களாக
·   அவரைச் சுற்றிலும் எண்ணற்ற பூதகணங்களும் பெண்டிரும் ஆடியும் பாடியும் கூடியிருப்பர்ஒரு பூதம் பெரிய பாத்திரம் ஒன்றைத் தனது தலைமீது வைத்துக் கொண்டு இடப்பக்கம் நிற்கும்பிச்சை ஏற்கும் உணவு வகைகளைச் சேமித்து வைக்கவே அப்பாத்திரத்தை அப்பூதம் சுமந்து நிற்கும்
·   கங்காளமூர்த்தியிடம் கொண்ட காமத்தால் பெண்டிர் ஆடைநெகிழ நிற்பர்எண்ணற்ற முனிவர், தேவர், கந்தருவர், சித்தர், வித்தியாதரர் ஆகியோர் இவரைச் சுற்றி நின்று கைகுவித்து அஞ்சலி செய்து கொண்டிருப்பர்.
·   இவருக்கு முன்னால் வாயு தெருவைச் சுத்தம் செய்வார்;
·   வருணன் நீர் தெளிப்பார்;
·   பிறதேவர்கள் மலர் தூவிப் போற்றுவர்;
·   முனிவர்கள் வேதம் ஓதுவர்;
·   சூரியனும், சந்திரனும் குடைபிடிப்பர்;
·   நாரதரும் தும்புருவும் தம் இசைக் கருவிகளுடன் பெருமானுக்கு உகந்த பாடல்களைப் பாடுவர்.
 
வேறு பெயர்கள்
கங்காள மூர்த்தி
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
 
·         உத்திராபசுபதீஸ்வரர், திருச்செங்காட்டங்குடி,திருவாரூர் மாவட்டம்
·         கருணாசுவாமி, வசிஷ்டேஸ்வரர் – கருந்திட்டைக்குடி (கரந்தை)
·         கங்களாஞ்சேரி , திருவிற்குடி, திருவாரூர் மாவட்டம்
·         நாகேசுவர சுவாமி கோயில், கும்பகோணம்
·         சுசீந்திரம்,
·         தென்காசி,
·         தாராசுரம்
·         விரிஞ்சிபுரம்
·         திருநெல்வேலி
இதரக் குறிப்புகள்
#
பிட்சாடனர்
கங்காளர்
அந்தகாசுர சம்ஹார மூர்த்தி
1
அருகில்
அம்மை
2
வலது மேல் கை
உடுக்கை
கீழ் வரை நீண்டிருக்கும். அதில் மானுக்கு புல் இருக்கும்
சூலம்(சில விக்கிரகங்களில் சூலத்தில் அந்தகன் சடலமாக தொங்குவது போல தோற்றம்)
3
வலது கீழ் கை
மானுக்கு புல்
உடுக்கைக்குரிய கோல்
4
இடது மேல் கை
சூலம்
சூலம் அல்லது தண்டு அதில் விஷ்ணுவின் சடலம்
மான் மழு
5
இடது கீழ் கை
கபாலம்
உடுக்கை
6
மேனி
நிர்வாணக் கோலம்
ஆடையுடன் கூடிய  கோலம்
7
காலின் கீழ்
அந்தகாசுரன்
நூல்கள்
அம்சுமத் பேதாகமம்,
காமிகாமம்,
காரணாகமம்,
சில்பரத்தினம்
1.
‘வள்ளல் கையது மேவுகங்காளமே-  திருஞானசம்பந்தர்,
‘கங்காள வேடக்கருத்தர்’ – திருநாவுக்கரசர்,
‘கங்காளம் தோள் மேலே காதலித்தான்’ – மணிவாசகர் .
2.
“குறளா யணுகி மூவடிமண் கொண்டு நெடுகி மூவுலகுந்
 திறவான் அளந்து மாவலியைச் சிறையிற் படுத்து வியந்தானை
இறவேச வட்டி வெரி நெலும்பை யெழிற் கங்காளப்படையென்ன
அறவோர் வழுத்தக் கைக்கொண்ட அங்கணாணன் திருவுருவம்”
 – காஞ்சிப்புராணம்.
3
பெருங்கடல் மூடி பிரளயம் கொண்டு பிரமனும் போய்
   இருங்கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும்
கருங்கடல் வண்ண களேபர மும்கொண்டு கங்காளராய்
   வருங்கடல் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே.
அப்பர் சுவாமிகள் தேவாரம்
4.
கங்காளர் கயிலாய மலையாளர் கானப்பே ராளர்மங்கை
பங்காளர் திரிசூலப் படையாளர் விடையாளர் பயிலுங்கோயில்
கொங்காளப் பொழில்நுழைந்து கூர்வாயால் இறகுலர்த்திக் கூதல்நீங்கி
செங்கால்நன் வெண்குருகு பைங்கானல் இரைதேருந் திருவையாறே.
தேவாரம் – 1.130.3
5.
‘கங்காளர் தனி நாடகம் செய்தபோது அந்தகாரம் பிறண்டிட நெடும்’ – அருணகிரிநாதர் மயில் விருத்தம்
புகைப்பட உதவி : இணையம்

Loading

சமூக ஊடகங்கள்

மாறும் நிலைகள்

மின்கம்பிகளின் வழியே
படர்ந்து செல்லும் கொடிகளின்
அடுத்த நிலை என்ன
என்ற வினாக்களில்
கரைகிறது வாழ்வு
புகைப்படம் : Bhavia Velayudhan

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 14/25 தட்சிணாமூர்த்தி

பல இடங்களில் கோஷ்டத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்தியும், நவகிரக சன்னதிகளில் இருக்கும் குரு பகவானும் ஒன்றாகவே கருதப்படுகிறது. என் சிற்றறிவுக்கு எட்டியவரையில் இரண்டும் வேறு வேறானவை.
 
வடிவம்(பொது)
 
·         தட்சிணம் என்றால் தெற்கு, த-அறிவு, க்ஷ-தெளிவு, ண-ஞானம் என இம்மூன்றும் சேர்ந்து தட்சிணா மூர்த்தி
·         பஞ்சகுண சிவமூர்த்திகளில் சாந்த மூர்த்தி
·         பிரம்மாவின் குமார்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகியவர்களுக்கு குரு
·         நான்கு கைகள்
·         இருப்பிடம் – ஆலமரத்தின் கீழ் தென்திசையை நோக்கி
·         திருமேனி – பளிங்கு போன்ற வெண்ணிறம் – தூய்மை
·         வலதுகால்  கீழ் – ‘அபஸ்மரா’ (அறியாமையை / இருளை )என்ற அரக்கனை(முயலகன்) மிதித்த நிலையில் – அனைத்து தீமைகளையும் அடக்கி ஆளும் வலிமை
·         ஒரு மேல் கையில் ஒரு ருத்திராட்ச மாலை(36 அல்லது 96 தத்துவங்கள்) / ஒரு பாம்பு
·         அவரது மற்றொரு மேல் கையில் நெருப்பு
·         கீழ் இடது கையில் தர்பைப் புல் / ஓலைச்சுவடி(சிவஞான போதம்) / அமிர்தகலசம் –  அனைத்து உயிர்களுக்கும் பேரின்பம் அளிக்க வல்ல ஆற்றல்
·         கீழ் வலது கையில் ஞான முத்திரை(மும்மலங்களை விலக்கி இறைவன் திருவடி அடைதல்)
·         ஆடை – புலித்தோல் – தீயசக்திகளை அடக்கியாளும் பேராற்றல்
·         தாமரை மலர்மீது அமர்ந்த கோலம் – இதயதாமரையில் வீற்றிருத்தல்(ஓங்காரம்)
·         நெற்றிக்கண் –  காமனை எரித்தல்; புலனடக்கம் உடையராதல் – துறவின் சிறப்பு
·         ஆலமரமும் அதன் நிழலும் – மாயையும் அதன் காரியமாகிய உலகம்
·         அணிந்துள்ள பாம்பு – குண்டலினி சக்தி
·         வெள்விடை – தருமம்
·         சூழ்ந்துள்ள விலங்குகள் – பசுபதித்தன்மை
·         த்யான ரூபம்
·         ஆசனம் – மகாராஜலீலாசனம், அர்த்தபத்மாசனம், யோகாசனம், உத்குடிக்காசனம்
 
வேறு பெயர்கள்
 
தெக்கினான்
ஆலமர் செல்வன்
தெற்கு நோக்கி இருப்பதால் தென் திசைக் கடவுள்
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
 
·         புளியறை,செங்கோட்டை வட்டம்,    திருநெல்வேலி மாவட்டம்
·         பட்டமங்கலம் – சிவகங்கை மாவட்டம்
·         ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில்
·         சிவதட்சிணாமூர்த்தி – காசி விஸ்வநாதர் கோயில்,மதுரை பழங்காநத்தம் பஸ்ஸ்டாண்ட்
·         திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் –  சனகாதி முனிவர்களுக்கு பதில் பிரம்மா அமர்ந்த கோலம்
·         ஈசன் தட்சிணாமூர்த்தி கோலத்தில் அன்னை உமையைத் தன் மடியில் தாங்கிய கோலம் – திருகன்னீஸ்வரர் கோயில்,திருக்கண்டலம்,சென்னை ரெட்ஹில்ஸ் – பெரியபாளையம் சாலை
·         பள்ளிகொண்டீஸ்வரர் –   தட்சிணாமூர்த்தி மனைவி தாராவுடன் , சுருட்டப்பள்ளி
·         சிவபுரி எனும் திருநெல்வாயை(திருக்கழிப்பாலை), சிதம்பரம்
·         திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில், ராஜ அலங்காரத்தில் சிம்மாசனத்தில் மனைவியுடன்
·         தாயுமான சுவாமி கோயில்,திருச்சி மலைக்கோட்டை(தர்ப்பாசனம்)
·         பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில்(கிழக்கு நோக்கி),திருப்புத்தூர்,சிவகங்கை மாவட்டம்
·         திருலோக்கி, திருப்பனந்தாள் (அஞ்சலி முத்திரை)
·         புஷ்பவனநாதர் திருக்கோயில்,(காl maaRRi vadivam), தென்திருபுவனம், திருநெல்வேலி
·         பிரணவ வியாக்ரபுரீஸ்வரர்,ஓமாப்புலியூர், சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோயில் (சேலை அணிந்து)
·         ஐயாறப்பன் கோயில்,திருவையாறு ( கபாலமும் சூலமும் ஏந்திய வடிவம்)
·         திடியன் மலை கைலாசநாதர் கோயில்,மதுரை –  பதினான்கு சித்தர்களுடன். நந்தியின் மீது அமர்ந்த கோலம்
·         ஆதிரத்தினேஸ்வரர் கோயில்,திருவாடனை – வீராசன கோலம்
·         நந்தியுடன் தெட்சிணாமூர்த்தி – மயிலாடுதுறை வள்ளலார் கோயில்
·         திரிசூலம் கோயில், சென்னை – வீராசன கோலம்
·         தியாகராஜர் கோயில் (வெளியில்), திருவொற்றியூர்
·         தக்கோலம் (சாந்த தட்சிணாமூர்த்தி)-  உத்கடி ஆசனம்
·         வீணாதர தட்சிணாமூர்த்தி கோலம் – நாகலாபுரம் வேதநாராயணர் கோயில், திருப்பூந்துருத்தி, நஞ்சன்கூடு, காஞ்சிபுரம் கைலாசநாதர், தூத்துக்குடி கழுகாசலமூர்த்தி கோயில்
·         கல்யாணசுந்த ரேஸ்வரர்,நல்லூர் , தஞ்சை பாபநாசம் – இரட்டை தட்சிணாமூர்த்தி
·         ஆத்மநாதசுவாமி கோயில்,சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வடதிசை  –  யோகநிலை
·         ஹேமாவதி, அனந்தப்பூர்,ஆந்திரா – யோக மூர்த்தி
·         சுகபுரம், கேரளா மாநிலம்
இதரக் குறிப்புகள்
 
நூல்கள்
ஞான சூத்திரம்,
ஞானச் சுருக்கம்,
ஞான பஞ்சாட்சரம்,
அகஸ்த்திய சகலாதிகாரம்,
சாரஸ்வதீயசித்ரகர்மமசாஸ்த்திரம்,
சில்பரத்தினம்,
சிரிதத்துவநிதி,
காரணாகமம்,
அம்சுமத்பேதாகமம்,
லிங்கபுராணம்
ஆதிசங்கரர் இயற்றியது தட்சிணாமூர்த்தி அஷ்டகம்.
பல திருவுருவங்கள்
 
ஞான தட்சிணாமூர்த்தி,
வியாக்யான தட்சிணாமூர்த்தி,
சக்தி தட்சிணாமூர்த்தி,
மேதா தட்சிணாமூர்த்தி,
யோக தட்சிணாமூர்த்தி,
வீர தட்சிணாமூர்த்தி,
லட்சுமி தட்சிணாமூர்த்தி,
ராஜ தட்சிணாமூர்த்தி,
பிரம்ம தட்சிணாமூர்த்தி,
சுத்த தட்சிணாமூர்த்தி
கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.
(திருவிளையாடற் புராணம் – பாடல் – 13)
புகைப்பட உதவி : விக்கிபீடியா

Loading

சமூக ஊடகங்கள்

மேன்மை கொள் சைவ நீதி – விளங்க வைத்த சந்தானக் குரவர்கள்

‘சைவத்தின் மேற் சமயம் வேறில்லை’ என்ற மொழித் தொடரை வைத்து சைவத்தின் பெருமையையும் அதற்கு காரணமாக இருக்கும் அனைத்து பொருள்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் எம்பெருமான் ஈசனின் பெருமைகளையும் அறியலாம்.

அறியவொண்ணா பெருமைகள் உடையது சிவனின் பெயர்கள். அப்படிப்பட்ட சிவனை நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்கள் சந்தானக் குரவர்கள். சிவனின் பெருமைகளை பாடல்களாக அருளியவர்கள்.சைவ சித்தாந்த சாத்திரங்கள் இவர்களால் அருளப் பெற்றதே.

குருவைக் குறிக்கும் சொல்லே குரவர். இவர்கள் நால்வர் ஆவார்.

மெய்கண்டார்,
மறைஞான சம்பந்தர்,
அருணந்தி சிவாசாரியார்,
உமாபதி சிவம்
இவர்கள் குரு சீடர் மரபு கொண்டவர்கள். திரு மடங்களை ஸ்தாபிதம் செய்து அதன் மூலம் சைவ நெறி தழைக்க பங்களித்தவர்கள்.
இவர்களது காலம் 12, 13ம் நூற்றாண்டு.
இவர்களது பெயர்களும் இவர் இயற்றிய நூல்களும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
·   மெய்கண்டார்சிவஞான போதம்
·   அருள்நந்தி சிவாசாரியார்சிவஞான சித்தியார், இருபா இருபது
·   கடந்தை மறைஞான சம்பந்தர்சதமணிக் கோவைசதமணிக்கோவை
·   உமாபதி சிவாச்சாரியார்சிவப்பிரகாசம், திருவருட்பயன், சங்கற்ப நிராகரணம், கோயிற்புராணம், திருமுறை கண்ட புராணம், சேக்கிழார் புராணம்

இவர்களைப்பற்றி விரிவாக எழுத உள்ளேன். திருவருள் துணை புரியட்டும்.

Loading

சமூக ஊடகங்கள்

காலத்தின் படிமங்கள் – இன்றும் வாழும் தெருக்கூத்து

இன்றும் வாழும் தெருக்கூத்து‘ – மிகவும் நட்புடனும், நம்பிக்கையுடனும் சொல்லப்பட்ட வடிவங்களுடன் கூடிய ஒரு புதினம். (பி.ஜே. அமலதாஸ்)
காலங்களால் கடக்கப்பட்ட மற்றும் விலக்கப்பட்ட கலைகளின் வாழ்வு ஒரு கண்ணீரின் வெப்பத்தோடு கலந்தே இருக்கிறது. இந்த தெருக்கூத்துக் கலையும் அதற்கு விலக்கல்ல.
சக மனிதர்கள் பற்றிய பதிவு என்பதாலே மிக அதிக அழுத்தத்தை உண்ர முடிகிறது. கட்டை கட்டி ஆடுதல், தெருக்கூத்து கதைகள், ஒப்பனை செய்யும் முறைகள்(18 விதமான கட்டுக்கள், கட்டும் முறைகள்) என பலவாறாக விரிகிறது.
தெருக்கூத்துக் கதைகளில், இராமாயணம், மகாபாரதம், கர்ண மோட்சம் போன்றவைகளே கருப்பொருளாகி இருக்கின்றன.
மிக சொற்பமான வருமானமே வருவதாக குறிப்பிடும் போது மனது கனத்துப் போனது.(கலைஞன்ரூ. 15, ஆசிரியர்ரூ25)
அழுக்கு படிந்த ஆடைகளுடன் பெரும்பாலும் கலைஞர்கள் தோன்றுவதாக குறிக்கப்படுகிறது. இதற்கு பொருள் ஈட்ட முடியா பொருளாதார மற்றவாழ்வு காரணம் என்று வகைபடுத்தப்படுகிறது. ஆறு மாதம் மட்டுமே (இந்த) வாழ்வு என்றும், மற்ற ஆறு மாதங்களுக்கு கரும்பு வெட்ட, சூளை போட, ரிக்க்ஷா வண்டி ஓட்ட என்று தருமன், பீமன் மற்றும் பாஞ்சாலி செல்வதாக குறிப்பிடுகிறார்கள்.
பிரதமை  (பாட்டிமுகம்) குறித்து மகாபாரத்தில் வரும் அரவான் சார்ந்த கதை அனுபவம் எனக்கு புதியது.
நான் தாண்டா ஒங்கப்பன்
நல்லமுத்து பேரன்
வெள்ளிச் சிலம்பெடுத்து
விளையாட வந்தேன்…-
வந்தேன்…-
வந்தேன்…-
என்ற வரிகளை நான் வாசித்த போது என் பதினென் பிரயாத்தில் மூழ்கினேன்.
காலத்தால் நகரங்களில் பெரும்பாலும் மறக்கட்டிக்கப்பட்டு கிராமங்களில் மட்டுமே இருக்கும் பச்சைக்காளி, பவளக்காளி வடிவம் தெருக்கூத்தின் வடிவமே என்று அறிய முடிகிறது.
இரவு 8 மணிக்கு ரஜினிகாந்த், கமலஹாசன், ஸ்ரீதேவி நடித்த 16 வயதினிலே போஸ்டர் எங்கும் ஒட்டப்பட்டிருந்தது.
இன்னாடா இது, சாமிக்கு முன்னாடி சினிமா காரங்களை ஆடவுட்ரான்னுவேதனை வாய்வழியே சிந்திவிடாமல் கேட்பான் என்னும் வரிகளை வாசித்த போது நிஜங்களின் தரிசனம் தெரிந்தது. (காடு நமக்கு சொந்தம், காட்ல இருக்குற விலங்குகளும் நமக்கு சொந்தம், இவன் யாரு நமக்கு எல்லை போட்டு தரது (நன்றிசோளக்கர் தொட்டி- நாவல்).
கூத்தும் இசையும் கூற்றின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ
வரிகள் கனங்களாகி , இதயங்கள் கனத்துப் போய் இருக்கின்றன இக்கலைஞர்களுக்கு.       
பல்லாயிரக்கணக்கான வருட பாரம்பரியம் மிகுந்த கட்டிடத்தின் நிலை ஒத்து இருக்கிறது இக்கலைஞர்களின் வாழ்வு. பராமரிப்பும் நிர்வாகமும் நம் கைகளில்
புகைப்படம் : புதிய தலைமுறை

Loading

சமூக ஊடகங்கள்

I.T என்னும் பம்மாத்து – விடுமுறைகள் என்னும் நாடகங்கள் – 2

விடுமுறை மறுத்தல் – 9
வர அக்டோபர்ல நம்ம ப்ராடக்ட் மேஜர் ரீலிஸ். அதால இப்பலேருந்து யாருக்கும் சனி ஞாயிறு லீவு இல்ல. (02-Jan-2014)
விடுமுறை மறுத்தல் – 10
Continuous சா 4 சனி ஞாயிறு வந்திருக்கேன். அதான் இந்த வாரம் நான் Monday லீவு எடுக்கலாம்னு இருக்கேன்.
நீங்க,ஒங்க வேலைய முடிக்கத்தான வந்தீங்க. எனக்காகவா வந்தீங்க. Monday முக்கிய மீட்டிங் இருக்கு. வந்துடுங்க.
விடுமுறை மறுத்தல் – 11
போன வாரம் சனி, ஞாயிறு வந்தேன். Comp off உண்டா?
அப்படீன்னா?
விடுமுறை மறுத்தல் – 12
ப்ராஜக்ட் முடிச்சிட்டு  Thursday  2 PM Airport வறீங்க. அதனால Thursday ஆபீஸ் வந்துடூங்க. client meeting இருக்கு
விடுமுறை மறுத்தல் – 13
எனக்கு 1 மணி நேரம் பர்மிஷன் வேணும்.
எத்தனை மணிக்கு
ஈவினிங் 8 மணிக்கு
என்னது 8 மணிக்கேவா?
விடுமுறை மறுத்தல் – 14
என்ன, எனக்கு போன மாசம் 0.5 டேஸ் CL வந்திருக்கு?
Admin : உங்க office working hours ல 0.1 min. difference. நீங்க office ல just 14.59 hours தான் இருந்துறீக்கீங்க
விடுமுறை மறுத்தல் – 15
சார், எனக்கு 15 டேஸ் வெகேஷன் லீவு உண்டுதானே?
நீங்க, 2st Apr வேலைக்கு சேர்ந்திருக்கீங்க. இந்த 15 டேஸ் வெகேஷன் லீவு மார்ச் 31க்கு முன்னால் join பண்ணவங்களுக்கு மட்டும் தான். அதனால 10 நாட்களுக்கு மட்டும் தான் நீங்க eligible.
விடுமுறை மறுத்தல் – 16
சார், உங்களுக்கு இன்னைக்கு 33வது பிறந்த நாள். உங்களுக்கு இன்னைக்கு ஒரு கிப்ட் தரப்போறோம்.
மகிழ்வுடன்(என்னது).
நீங்க லீவு வேணும்ணு கேட்டுகிட்டு இருந்தீங்கள்ல, இன்னைலேருந்து நீங்க வேலைக்கு வர வேண்டாம்.

விதிவிலக்காக சில கம்பெனிகள் உண்டு. மருத்துவக் காரணம் எனில் விசாரிக்காமல் கூட leave கொடுத்துவிடுவார்கள். (.ம் – IBM )

Loading

சமூக ஊடகங்கள்

பரவும் மௌனம்

அலைகள் ஓய காத்திருக்கிறது மனம்
மனம் அடங்கக் காத்திருக்கிறது அலைகள்
பிறகான ஒருதருணங்களில்
ஒன்றில் ஒன்று ஒன்றி.


புகைப்படம் : வலைத்தளம்

Loading

சமூக ஊடகங்கள்

I.T என்னும் பம்மாத்து – விடுமுறைகள் என்னும் நாடகங்கள் – 1

விடுமுறை மறுத்தல் – 1

நாளைக்கு லீவு வேணும்
நாளைக்கு  முக்கியமா இத முடிக்கணும். அதனால முடியாது.
விடுமுறை மறுத்தல் – 2

அடுத்தவாரம் லோக்கல் ரிலீஸ், அதனால அடுத்தவாரம் நம்ம டீம்ல யாருக்கும் லீவு கிடையாது. அதான் இப்பவே சொல்றேன்.

விடுமுறை மறுத்தல் – 3


உடம்பு முடியல
என்னா செய்யுது?
வாமிட்டிங்
ஒன்னும் பிரச்சனை இல்ல, நம்ம ஆபீஸ்ல பாத்ரூம் இருக்கு. ஒன் டெஸ்க்ல வேணும்னானும் வாமிட் பண்ணிக்கோ. ஆனா ஆபீஸ் வந்துரு.
விடுமுறை மறுத்தல் – 4

இந்த பொங்கலுக்கு ஒரு நாள் லீவு வேணும்.
இங்க பாருங்க பாஸ்(உன் பாசத்துல தீய போட்டு கொளுத்த) . நம்ம டீம்ல 3 பேர். நான் ஊருக்கு போகணும். நீங்க ரெண்டு பேர்ல யாருன்னு முடிவு பண்ணிங்க.
விடுமுறை மறுத்தல் – 5

தீபாவளிக்கு லீவு வேணும்
ஏங்க பாஸ், நம்ம டீம்ல 5 பேர் இருக்கோம். 3 பேர் வெளியூர் போறவங்க. அவங்க பேச்சிலர் வேற. உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. நீங்க எங்க ஊருக்கு போகப் போறீங்க.
விடுமுறை மறுத்தல் – 6

எனக்கு 5 நாள் வெகேஷன் லீவு வேணும்.

பாஸ், நீங்க முன்னால பின்னால இருக்கிற சனி, ஞாயிறு கணக்கு பண்ணி 9 நாள் லீவு எடுக்க பாக்காதீங்க. எம்ப்ளாயி ஹேன்ட் புக்ல என்னா போட்ருக்குன்னு நல்லா பாருங்க. ‘Depends upon the project’  ஞாபகம் வச்சிங்க.

விடுமுறை மறுத்தல் – 7

நாளைக்கு office official லா leave. But நாம கிளையன்ட்க்கு இது தெரியாது. அதனால நம்ம மெயின் கேட் closed ஆ இருக்கும். அதனால பின் கேட் வழியா வந்துடுங்க.

விடுமுறை மறுத்தல் – 8


பாஸ், சனி, ஞாயிறு லீவுன்னு ஹேண்ட் புக்ல போட்டுருக்குன்னு பாக்காதீங்க. சனிக்கிழமை வாங்க, இந்த வேலைய முடிச்சிடுங்க.

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருக்கச்சிமேற்றளி

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருக்கச்சிமேற்றளி
அமைவிடம்பிள்ளையார் பாளையம்
ஈசன் சுயம்பு மூர்த்தி
இரு மூலவர் சன்னதிகள்
சிவ சாரூப நிலை வேண்டி திருமால் இறைவனை நோக்கி தவமிருந்த தலம்
ஞான சம்மந்தரில் பதிகம் கேட்டு சிவபெருமான் உருகியதால் ஓத உருகீசர்
கற்றளி –  கற்களால் கட்டப்பட்ட கோயில். மேற்றளிமேற்கு திசையில் அமையப்பெற்ற கோயில்

ஞானசம்பந்தரின் பாடலைக் கேட்டு திருமால் உருகியதால் ஓத உருகீசர்கர்ப்பக்கிருகத்துள் தனி சந்நிதி

 
 
 
 
 
 
 
 
தலம்
திருமேற்றளீஸ்வரர்
பிற பெயர்கள்
திருக்கச்சிமேற்றளி, கற்றளி
இறைவன்
திருமேற்றளிநாதர்
இறைவி
திருமேற்றளிநாயகி
தல விருட்சம்
வில்வம்
தீர்த்தம்
விஷ்ணு தீர்த்தம்
விழாக்கள்
சிவராத்திரி, பங்குனி உத்திரம், கந்தசஷ்டி
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 7 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை
அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில்,
பிள்ளையார்பாளையம்-631 501
காஞ்சிபுரம்.
காஞ்சிபுரம் மாவட்டம். 09865355572, 09994585006
வழிபட்டவர்கள்
நூறு ருத்திரர்கள், சீகண்டர், வீரபத்திரர், குரோதர், மண்டலாதிபதிகள் உள்ளிட்ட 116 பேர் மற்றும்  புதன்
பாடியவர்கள்
திருநாவுக்கரசர் –  பதிகங்கள்,  ,  சுந்தரர் –  பதிகங்கள், திருஞானசம்பந்தர்
நிர்வாகம்
இந்து சமய அறநிலையத்துறை
இருப்பிடம்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 1கி.மீ
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 234 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   2 வது தலம்.
* ஞானசம்பந்தரின்  தேவாரப் பாடல்கள் கிடைக்கவில்லை
திருமேற்றளீஸ்வரர்
பாடியவர்                     திருநாவுக்கரசு சுவாமிகள்
திருமுறை                    4ம் திருமுறை 
பதிக எண்                    43
திருமுறை எண்               10
பாடல்


தென்னவன் மலையெ டுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு
மன்னவன் விரலா லூன்ற மணிமுடி நெரிய வாயாற்
கன்னலின் கீதம் பாடக் கேட்டவர் காஞ்சி தன்னுள்
இன்னவற் கருளிச் செய்தார் இலங்குமேற் றளிய னாரே.
பொருள்
 
தெற்குப் பகுதியை ஆண்ட இராவணன், (தனது கர்வத்தால்) கயிலாய மலையைப் பெயர்த்து எடுக்க, அதனால் பார்வதி நடுக்கமுற, பார்வதியின் நடுக்கம் நீக்குவதன் பொருட்டு தனது கால் விரல்களால் கயிலாய மலையை அழுத்த, அதனால அவன் தலைகள் நெரிய, தன் தவறை உணர்ந்து கரும்பு போன்று இனிய கீதங்களைப் பாட அதனால் அவனுக்கு அருள் செய்தவர். அவர் இந்த காஞ்சித் திருத் தலத்தில் உறையும் மேற்றளியார் ஆவார்.
கருத்து

தென்னவன் –  இராவணன் ,
சேயிழை – செய்ய ( கல் ) இழை ( த்துச் செய்யப்பட்ட அணிகளைப் ) பூண்டவள் . இழை நூலிழையாகக் கொண்டு தாலி எனலும் கூடும்
மன்னவன் – என்றும் நிலையாயிருப்பவன்.(கயிலைத் தலைவன் என்றும் கொள்ளலாம்) 
நெரிய – நொறுங்க
கன்னலின் – கரும்பினைப் போலும் இனிமை பயக்கும் , 
பாடியவர்                     சுந்தரர்
திருமுறை                    7 ம் திருமுறை 
பதிக எண்                    021
திருமுறை எண்               9
பாடல்
 
நிலையா நின்னடியே நினைந் தேன்நி னைதலுமே
தலைவா நின்னினையப் பணித் தாய்ச லமொழிந்தேன்
சிலையார் மாமதில்சூழ் திருமேற்ற ளிஉறையும்
மலையே உன்னையல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே.
பொருள்
பெரிய மதில்கள் சூழ்ந்த கச்சித் திருமேற்றளியில் உறையும் மலை போன்றவனே,  அடியேன் உனது திருவடிகளையே நிலையான பொருளாக உணர்ந்தேன். அவ்வாறு உணர்ந்த பிறகு அதில் இருந்து என்றும் மாறாமல் தொடந்து இருக்க திருவருள் செய்தாய். அதனால் எனது துன்பங்கள் ஒழிந்தவன் ஆனேன். ஆகவே அடியேன், உன்னை விடுத்து பிற தெய்வங்களை மனம் மகிழ்ந்து புகழ மாட்டேன்.
கருத்து
நிலையா நின்னடியே – (திருமாலாலும்) அடைய முடியா திருவடி (இது என் கருத்து)
சலமொழிந்தேன் – கடலைப் போன்ற பல பிறவி நீங்கினேன். (சலதி கிழிந்து – கந்தர் அலங்காரம்)

புகைப்படம் : கோலாலகிருஷ்ணன் விஜயகுமார்
 

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்

வடிவம்
 
·         ஞானம் செல்வம் இரண்டையும் தரும் வடிவம்
·         சங்கன் என்ற அரசன் சிவன் மீது பற்றும், பதுமன் என்ற அரசன் திருமால் மீது பற்று கொண்டு யார் பெரியவர் என்ற வாதத்தினால் அம்மையிடம் முறையிட அவர்களுக்கு இருவரும் ஒருவரே என குறிக்க எடுத்த வடிவம்.
·         சுவாத்தை மாற்றுவதால் ப்ரமத்தை அறியலாம். மேல்விவரங்களை குரு மூலமாக அறியவும்.
வலதுபிங்களை(சூரிய கலை நாடி)
இடதுஇடகலை(சந்திர கலை நாடி)
சுழுமுனைஇரு பக்கங்களிலும் காற்றை செலுத்துதல்
எண்
வலது பாதி(சிவன்)
இடது பாதி(திருமால்)
1
தலை
கங்கை, பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடி. பின்புறம் சிரசக்கரம் அல்லது ஒளிவட்டம்,சடாமுடி
கிரீடம்
2
திருமுகம்
நெற்றிக் கண்(அர்த்தநேத்திரன்), திருநீறு
திருநாமம்
3
காது
தாடங்கம், மகர குண்டலம், சர்ப்ப குண்டலம்
மகர குண்டலம்
4
கைகள்
·  மழு, அபய ஹஸ்தம்
·  பரசு மற்றும் நாகம்
சக்கரம், சங்கு அல்லது கதை மற்றும் ஊரு ஹஸ்தம்/(கடக முத்திரை) சங்க ஹஸ்தம். கேயூரம், கங்கணம்
5
மார்பு
ருத்ராட்சம்
திருவாபரணங்கள்
6
இடுப்பு
புலித்தோல் ஆடை
பஞ்சகச்சம்
7
திருவாட்சி
நாக வடிவில் சங்கன் குடை பிடித்தபடி
8
வண்ணம்
வெண்மை
நீலநிற மேனி
9
தோற்றம்
கோரம்
சாந்தம்
10
வாகனம்
வலது புறம் நந்தி
இடது புறம் கருடன்
கேசாதி பாதமாக விவரிக்கப்பட்டுள்ளன.  சோழர் கால வடிவமும், பல்லவர் கால/இதர வடிவமும் சில இடங்களில் வேறு வேறாக இருக்கின்றன.  
 
வேறுபெயர்கள்
 
சங்கர நாராயணர்
ஹரியர்த்தமூர்த்தி
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
 
·  சங்கரன் கோவில், திருநெல்வேலி மாவட்டம்
·  தஞ்சைப் பெரிய கோயில்
·  சங்கர நாராயண சுவாமி திருக்கோவில், தஞ்சை மேலராஜவீதி
·  கங்கை கொண்ட சோழபுரம்
·  சிதம்பரம்
·  திருஅறையணிநல்லூர் (தற்போது அரகண்டநல்லூர் )- திருக்கோவிலூருக்கு எதிர்க்கரையில் பெண்ணையாற்றின் வடகரையில் உள்ள ஒரு சிறு குன்றின் மீது திருக்கோவில்
·  திருச்செந்தூர்
·  திருப்பெருந்துறை
·  மீனாட்சி அம்மன் வசந்த மண்டபம், மதுரை
·  நாகேஸ்வரர் கோவில், கும்பகோணம்
·  குடுமியான் மலை குடவறைச் சிற்பங்கள்
·  ஹரிஹர், ஹோஸ்பெட் அருகே துங்கபத்ரா நதிக்கரை, தாவன்கெரே மாவட்டம், கர்நாடகா
·  கூடலி, சிவமோகா எனப்படும்ஷிமோகாதுங்காவும்(திருமால்) பத்ராவும்(சிவன்) சங்கமம்
இதரக் குறிப்புகள்
·  
சங்கர நாராயணர் கோயிற் கோமதியம்பிகை பிள்ளைத்தமிழ் என்றொரு நூலை முத்துவீரக் கவிராயரவர் என்பவர் இயற்றி இருக்கிறார்.
·  வாமன புராணம்
·  பேயாழ்வார் பாசுரம்
தாழ் சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால் சூழும்
திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து

புகைப்படம் : வலைத்தளம்

Loading

சமூக ஊடகங்கள்

I.T என்னும் பம்மாத்து – மீட்டிங் கூத்துக்கள்

நிகழ்வுகள் – 1

நாளைக்கு சீக்கிரம் வந்துடு தெரியுதா?
??
நாளைக்கு மீட்டிங் இருக்கு.
நாளைக்கு காலைல 8.00 – 8.30  – நம்ம டீம் Daily meeting. அப்புறம் 9.00 -9.30 எனக்கு மீட்டிங்.(போட்டு குடுக்க போறான்). 10.00 -11.00 நம்ம டீம் Weekly meeting. இது எதுக்குன்னா, நாம இந்த வீக்ல என்ன செய்யப்போறோம்ன்னு பேசுவோம்.(நிச்சயமா அதை செய்யப் போறது இல்ல). Before lunch 2.00 – 2.30 – Daily Status meeting. 7.00 – 7.30 – End of the day meeting. (நீ டெய்லி வீட்டுக்கு சீக்கிரம் போற இல்ல, அதான் இப்படி ஒரு டைமிங்). என்னா நவம்பர் வந்தா கொஞ்சம் ஃப்ரீயா இருக்கும்( நல்லா விடுவீங்களடா). திரும்பவம் மார்ச் வந்தா திரும்பவும் கஷ்டம் தான். எல்லாம் DST யால தான்
நிகழ்வுகள் – 2
TL : என்னா செய்துகிட்டு இருக்கீங்க?
TL :  அத விட இது priority ஜாஸ்தி, இத மொதல்ல முடிங்க.
நிகழ்வுகள் – 3
PL-1 : என்னா செய்துகிட்டு இருக்கீங்க?
PL-1 :  அத விட இது priority ஜாஸ்தி, இத மொதல்ல முடிங்க.Priority பண்ண தெரியலன்னா ஒன்னு எங்கிட்ட கேளுங்க, இல்ல TL உன் ஃப்ரண்ட் தானே. அவன்ட கேளுங்க. மதியம் 2.30 – 3.00 இந்த டீம் மீட்டிங்.நீங்க தான் எல்லாம்  explain பண்ணனும்.
நிகழ்வுகள் – 4
PL-2 : என்னா செய்துகிட்டு இருக்கீங்க?
PL-2 : ஏம்பா இன்னைக்கு டெமோ இருக்குன்னு உனக்கு தெரியாதா. ஏற்கனவே மைல்ஸ்டோன் ரெட்ல இருக்கு. நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது. 2 மணிக்குள்ள முடிச்சிட்டு என்கிட்ட demo காட்டு. நான் அப்ரூவ் பண்ண பிறகுதான் நீ பக் ட்ராக்கர்ல க்ளோஸ்டுன்னு மாத்தனும்.
Mr. X : இல்ல, இன்னொரு ஃப்ரையாரிட்டி வொர்க் இருக்கு, அதான்…
PL-2 : யாரு, PL1 தானே, நான் அவன் கிட்ட பேசிக்கிறேன். நீ இத முதல்ல முடி.
இரவு 7.43 PM
நிகழ்வுகள் – 5
PL-2 : ஏம்பா எங்க இருக்க?
Mr. X :கேபின்ல தான்.
PL-2 :இங்க பாரு, நாம இங்க டெமோ காமிச்சத client டீம்க்கு டெமோ காமிச்சேன். இது முடியாதுங்கிறாங்க.அதனால ஸ்பெக் மாத்ரோம். 9.30 (PM) க்கு மீட்டிங். Just 10 min. வந்துட்டு போய்டு.

*Overlapping ஆகும் மீட்டிங்குகள் / Emergency மீட்டிங்குகள்/ Quick மீட்டிங்குகள்/ Red milestone மீட்டிங்குகள் / Collaborative மீட்டிங்குகள்/ Pre delivery மீட்டிங்குகள்/ Post delivery மீட்டிங்குகள் /Unofficial மீட்டிங்குகள் கணக்கில்எடுத்துக் கொள்ளப்படவில்லை.

** – (Explained Entry level members meetings only)


புகைப்படம் : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

அட்சர அப்யாசம்

‘சவப்பெட்டி’ என்று எழுதத்துவங்கும்
குழந்தையின் முதல் மனநிலை
என்னவாக இருக்கும்?


புகைப்படம் :  SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 12/25 திரிமூர்த்தி

வடிவம்
 
·    உலகை  படைக்க எடுக்கப்பட்ட வடிவம் ஏகபாதராகத் திருவடிவம்.
·    இதயத்தில் இருந்து ஆயிரத்தில் ஒரு கூறாக ருத்திர், பின் வலப் பாகத்தில் இருந்து பிரம்மன், இடப் பாகத்தில் இருந்து விஷ்ணு.
·    சில இடங்களில் ஏகபாத மூர்த்தியும், திரிமூர்த்தியும் ஒன்றாகவே கருதப்படுகிறது. ஏகபாத மூர்த்தி என்பது சிவன் மட்டும் தனித்து ஒரு காலில் காணப்படும் வடிவம். (யோக நிலையைக் குறிப்பது) திரிமூர்த்தி என்பது பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் ஒன்றாக ஒற்றைக்காலில் தனித்து காணப்படும் வடிவம்.
·     இம்மூர்த்திக்கான ஸ்தாபன முறைகளும், பிரதிஷ்டா முறைகளும் மிகக் கடினமாக இருக்கின்றன.
·    வர்ணம்ரக்தவர்ணம்
·    முகம்முக்கண்
·    கரங்கள்வரத அபய ஹஸ்தம் மான் மழு
·    அலங்காரம்ஜடாமகுடம்
·    பாதம்ஒன்று
·    இடுப்புபிரதேசத்திற்கு மேல் தெற்கு வடக்கு பக்கமாகிய இருஇடங்களிலும் முறையாக பாதிசரீரம் உடைய பிரம்மா விஷ்ணு
·    பிரம்மா விஷ்ணு ஒவ்வொருபாதத்துடன் கூடியதாக() அஞ்சலிஹஸ்தத்துடன்
பிரம்ம விஷ்ணுக்களின் அளவானது பெண் சரீரம் போல் சற்று வளைவாக, இரண்டு கைகளும் தொழுத நிலையில் ஒரு காலோடு கூடியவராக.  (கால் இல்லாமலும்)
 
வேறு பெயர்கள்
 
ஏகபாததிரிமூர்த்தி
ஏகபாத திரிமூர்த்தி
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
 
·   திருமறைக்காடு (வேதாரண் யம்)
·   பிச்சாண்டார் கோயில்(அ) உத்தமர் கோயில், திருச்சி
·   மண்டகப் பட்டு ஸ்ரீ திரிமூர்த்தி குகைக் கோவில்
·   தர்மராஜரதம்(அ)திரிமூர்த்தி குகை, மஹாபலிபுரம்
·   தப்பளாம்புலியூர், திருவாரூர்
·   திரு உத்தரகோசமங்கை
·   திருவக்கரை
·   ஆனைமலையடிவாரம்
·   ஒரிஸ்ஸா, சௌராஷ்டிரம், மைசூர்
·   திரியம்பகேஸ்வர்,நாசிக்
·   திருநாவாய்,திரூர் நகரிலிருந்து தெற்கே 12 கி.மீ., மலப்புறம் மாவட்டம்,கேரள மாநிலம்
·   திரிப்பிரயார் ஸ்ரீ ராமர் கோயில் –  திரிப்பிரயார் ஆற்றின் கரை,கொடுங்கல்லூர்
இதரக் குறிப்புகள்
 
·  சிவபேதம் பத்தையும் கேட்டவர்களில் திரிமூர்த்தி வடிவம் பற்றி கேட்டவர் உதாசனர்
·  அஷ்ட வித்யேச்வரர்களில் (வித்யேச்வரர்: அநந்தர், சூக்ஷ்மர், சிவோத்தமர், ஏகநேத்ரர், ஏகருத்ரர், திரிமூர்த்தி, ஸ்ரீகண்டர், சிகண்டி) திரிமூர்த்தியும் ஒருவர். இவர்கள் மாயைக்கு மேல் சுத்த வித்யைக்குக் கீழிருக்கும் புவனவாசிகள் என்கின்றன ஞானநூல்கள்.
·  நவராத்திரியின் போது இரண்டாம் நாளளில்  மூன்று வயதுள்ள பெண்ணை திரிமூர்த்தி என்ற பெயரில் பூஜை செய்ய வேண்டும். இப்பூஜை அறம், பொருள், இன்பம், தானியம் ஆகியவை கிடைக்கச் செய்யும். பெயரன், பெயர்த்தி என பரம்பரையும் நீண்ட ஆயுளும் கிடைக்கும்
·  உத்தரகாமிகாகம மஹாதந்திரத்தில் த்ரீமூர்த்தி ஸ்தாபன விதி –  அறுபத்தி ஒன்றாவது படலம்.

புகைப்படம் : வலைத்தளம்

Loading

சமூக ஊடகங்கள்

ஆன்மாவின் மறுதலித்தல்

குழந்தைகளின் விருப்பங்களை
மறுதலிக்கும் பெற்றோர்களின்
காயங்களுடன் மறைந்து இருக்கிறது
இயலாமைகள்.


புகைப்படம் :  Gayu Venkat

Loading

சமூக ஊடகங்கள்

2038 – வளர்ப்பு மிருகங்கள் – Pet animals

2038 – வளர்ப்பு மிருகங்கள்  – Pet animals

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

1.
உங்களது வளர்ப்பு மிருகங்களை எங்களிடம் அழைத்து வாருங்கள். அவைகளுக்கு உடற் பயிற்சி தருகிறோம், ஒருமணி நேரத்திற்கு Just 2999 + tax
2.
உங்களது வளர்ப்பு மிருகங்களுக்கு திருமணம் செய்ய எங்களை அணுகவும்.மேலும் தகவல்களுக்கு  நரி திருமண தகவல் மையம்
3.
வளர்ப்பு மிருகங்களுக்கு நியூமராலஜி படி பெயர் வைக்க எங்களை அணுகவும். (ஐந்து மிருகங்களுக்கு 1 பெயர் இலவசம்)
4.
உங்களது வளர்ப்பு மிருகங்களை உணவிற்காக எங்களிடம் அழைத்து வாருங்கள். வண்ண மீன் உணவகம்( உயர்தர சைவம்/அசைவம்)
5.
உங்களது வளர்ப்பு மிருகங்களை கடற்கரையில் வாக்கிங் செல்ல எங்களது வாகனங்களை பயன்படுத்துங்கள். (முதல் 3 கி.மி – 999+ tax அடுத்த ஒவ்வொரு கி.மி க்கும் ரூ.67 +tax).  மாத வாடகைக்கு கண்டிப்பாக சலுகை உண்டு.

Loading

சமூக ஊடகங்கள்

சொல் புதையல்

கோவிலுக்குள்
எங்க சாமியே காணும்
எனும்  குழந்தையின் சொல்லில்
ஒளிந்திருக்கிறது சூட்சமங்கள்.


புகைப்படம் : தேவதைத் தூதன்

Loading

சமூக ஊடகங்கள்

கவரிமான்

பெரியதாக ஏற்க ஓன்றும் இல்லை
சில பிச்சைகளையும்
சில நினைவுகளையும் தவிர.



புகைப்படம் : விவேக்

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 11/25 சக்ரவரதர்

சக்ரவரதர்

சிவனின் வாமதேவ முகத்தில் இருந்து தோன்றியவர்சக்ரவரதர்.

திருமாலுக்கு சக்கரம் கொடுத்த மூர்த்தி. இவரை வழிபடுபவர்கள் அனைத்து போகங்களையும் எவ்வித இடையூரும் இன்றி துய்ப்பார்கள்.

இந்த விபரம் மட்டுமே இம்மூர்த்தி பற்றி காணப்படுகிறது.

Loading

சமூக ஊடகங்கள்