காலத்தின் படிமங்கள் – இன்றும் வாழும் தெருக்கூத்து

இன்றும் வாழும் தெருக்கூத்து‘ – மிகவும் நட்புடனும், நம்பிக்கையுடனும் சொல்லப்பட்ட வடிவங்களுடன் கூடிய ஒரு புதினம். (பி.ஜே. அமலதாஸ்)
காலங்களால் கடக்கப்பட்ட மற்றும் விலக்கப்பட்ட கலைகளின் வாழ்வு ஒரு கண்ணீரின் வெப்பத்தோடு கலந்தே இருக்கிறது. இந்த தெருக்கூத்துக் கலையும் அதற்கு விலக்கல்ல.
சக மனிதர்கள் பற்றிய பதிவு என்பதாலே மிக அதிக அழுத்தத்தை உண்ர முடிகிறது. கட்டை கட்டி ஆடுதல், தெருக்கூத்து கதைகள், ஒப்பனை செய்யும் முறைகள்(18 விதமான கட்டுக்கள், கட்டும் முறைகள்) என பலவாறாக விரிகிறது.
தெருக்கூத்துக் கதைகளில், இராமாயணம், மகாபாரதம், கர்ண மோட்சம் போன்றவைகளே கருப்பொருளாகி இருக்கின்றன.
மிக சொற்பமான வருமானமே வருவதாக குறிப்பிடும் போது மனது கனத்துப் போனது.(கலைஞன்ரூ. 15, ஆசிரியர்ரூ25)
அழுக்கு படிந்த ஆடைகளுடன் பெரும்பாலும் கலைஞர்கள் தோன்றுவதாக குறிக்கப்படுகிறது. இதற்கு பொருள் ஈட்ட முடியா பொருளாதார மற்றவாழ்வு காரணம் என்று வகைபடுத்தப்படுகிறது. ஆறு மாதம் மட்டுமே (இந்த) வாழ்வு என்றும், மற்ற ஆறு மாதங்களுக்கு கரும்பு வெட்ட, சூளை போட, ரிக்க்ஷா வண்டி ஓட்ட என்று தருமன், பீமன் மற்றும் பாஞ்சாலி செல்வதாக குறிப்பிடுகிறார்கள்.
பிரதமை  (பாட்டிமுகம்) குறித்து மகாபாரத்தில் வரும் அரவான் சார்ந்த கதை அனுபவம் எனக்கு புதியது.
நான் தாண்டா ஒங்கப்பன்
நல்லமுத்து பேரன்
வெள்ளிச் சிலம்பெடுத்து
விளையாட வந்தேன்…-
வந்தேன்…-
வந்தேன்…-
என்ற வரிகளை நான் வாசித்த போது என் பதினென் பிரயாத்தில் மூழ்கினேன்.
காலத்தால் நகரங்களில் பெரும்பாலும் மறக்கட்டிக்கப்பட்டு கிராமங்களில் மட்டுமே இருக்கும் பச்சைக்காளி, பவளக்காளி வடிவம் தெருக்கூத்தின் வடிவமே என்று அறிய முடிகிறது.
இரவு 8 மணிக்கு ரஜினிகாந்த், கமலஹாசன், ஸ்ரீதேவி நடித்த 16 வயதினிலே போஸ்டர் எங்கும் ஒட்டப்பட்டிருந்தது.
இன்னாடா இது, சாமிக்கு முன்னாடி சினிமா காரங்களை ஆடவுட்ரான்னுவேதனை வாய்வழியே சிந்திவிடாமல் கேட்பான் என்னும் வரிகளை வாசித்த போது நிஜங்களின் தரிசனம் தெரிந்தது. (காடு நமக்கு சொந்தம், காட்ல இருக்குற விலங்குகளும் நமக்கு சொந்தம், இவன் யாரு நமக்கு எல்லை போட்டு தரது (நன்றிசோளக்கர் தொட்டி- நாவல்).
கூத்தும் இசையும் கூற்றின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ
வரிகள் கனங்களாகி , இதயங்கள் கனத்துப் போய் இருக்கின்றன இக்கலைஞர்களுக்கு.       
பல்லாயிரக்கணக்கான வருட பாரம்பரியம் மிகுந்த கட்டிடத்தின் நிலை ஒத்து இருக்கிறது இக்கலைஞர்களின் வாழ்வு. பராமரிப்பும் நிர்வாகமும் நம் கைகளில்
புகைப்படம் : புதிய தலைமுறை

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *