அந்தக்கரணம்

அந்தக்கரணம் என்பதற்கு மனம், சித்தம், புத்தி மற்றும் அகங்காரம் இவற்றின் கலவை என்பது ஒரு பொருள். உள் முகமாக நோக்குதல் என்பது மற்றொரு பொருள். எனக்கு புகட்டப்பட்ட அனுபவங்களை பகிர்தல் மட்டுமே நோக்கம். குற்றம் இருப்பின் குறை உடைய மனிதப்பிறப்பின் நிகழ்வுகள் காரணமாகும். நிறை இருப்பின் அனைத்தும் குருவருளையே சாரும்.

Loading

சமூக ஊடகங்கள்

சொர்க்க வாசல்

மிகுந்த பசியோடு அறைக்குள் நான்.
பசிக்கிறதா என்கிறாய்.
ஆம் என தலை அசைக்கிறேன்.
கைகளில் இருக்கும் உணவினை
கிள்ளித் தந்துப் புன்னைக்கிறாய்.
உலகத்தில் உள்ள
உணவை எல்லாம் உண்டு
அறியப்படாத சொர்க்கத்தின் அருகினில் நான்.

Loading

சமூக ஊடகங்கள்

வல்லமை தாராயோ

நீண்ட நெடும் தூக்கதிற்கு
தயாரய் மனமும் உடலும்.
எதிர்படும் தலைவலிகள்
என்றைக்குமான தொடர்ச்சியாய்.
வலி பெரியதா, மருந்திடவா
என்கிறாய்.
வலியினை நீக்கும் மருந்தாய்
விரல்களும் உன் வார்தைகளும்.
இன்னும் இருக்கும் வலியை
உரைக்கிறேன் உன்னிடத்தில்.
அடுத்தவங்கள பாடா படுத்தினா
வலி எப்படி போவும்.
வார்தைகளின் முடிவில்
முடிவில்லா பயணம்.

Loading

சமூக ஊடகங்கள்

விதிகளை மதித்தல்

மோதிய வாகனத்தில்
எழுதப் பட்டிருந்தது
சாலை விதிகளை மதிப்போம்.

Loading

சமூக ஊடகங்கள்

பின் நோக்கிய நினைவுகள்

வீடு மாற்றத்தின் பொருட்டு
எல்லா பொருள்களையும்
வாகனத்தில் ஏற்றிய பின்னும்
ஏற்ற முடியாமல் திணறுகின்றன
அந்த வீட்டின் நினைவுகள்.

Loading

சமூக ஊடகங்கள்

மவுனம் அறிதல்

பேச்சுகள் பெருகிய பொழுதுகளில்
பெரும் துக்கத்தில்
மவுனம் வேண்டி மனம்.
குருவினிடத்தில் கோரிக்கைகள்.
மவுனம்  அறியவும்  அடையவும்
மணம் புரிதலே சிறந்தவழி
என்று கூறிப் புன்னைகைத்தார்.

Loading

சமூக ஊடகங்கள்

நாத்திக நம்பிக்கை

நாத்திகத்தில் நம்பிக்கை இருப்பினும்
கிளி ஜோதிடம் பாருங்கள்.
எவர் அறியக்கூடும்
வீசி விடும் நெல் மணிகள்
ஒர் உயிரின், பசியின் ஒர் துளி
ஆற்றுவதை.

Loading

சமூக ஊடகங்கள்

அழுகையின் ஊற்றுக்கண்

எங்கேனும் உற்று கவனித்திருக்கிறீர்களா
திருமணத்தில் சந்தோஷ ஒலிகளைத் தாண்டி
மனதிற்குள் அழுகைகளை
அடக்கி வைத்திருக்கும்
மணப்பெண்ணின் தந்தையின் வலிகளை.

Loading

சமூக ஊடகங்கள்

வீச்சங்கள்

மழை ஒய்விற்கான பின் ஒரு பொழுதுகளில்
நீண்ட தெருக்களில் நெடும் பயணம் உன்னோடு.
இலைகளின் எச்சில்களாய்
எச்சங்களாய் மழைத்துளிகள்.
தரையினில் இருந்து
மேலே எழும்பி
இலைகளின் ஈரத்தை
உதிர்த்து விட்டு
காதலை சொல்லத் துணிகிறேன்.
மாறுதல் கொள்ளும் உடல் மீது
ஏன் இந்த மயக்கம் என்கிறாய்.
உதிர்ந்து விட்ட உயிர்ச் சொல்லின்
முடிவில் துவங்கிய வீச்சங்கள்
வேரிலிருந்து விழுதுகள் வரை.

Loading

சமூக ஊடகங்கள்

வாழ்வின் முறைகள்

கணப் பொழுதினில்
கண்ட கடவுளிடம்
ஒற்றை வார்த்தைகளில்
வாழ்வினை விவரிக்க சொன்னேன்.
சபலம்
சந்தோஷம்
சடலம்
சீவன்
சிவன்
என்றார்.

Loading

சமூக ஊடகங்கள்

மிருக பலி

மிருக பலித் தடை குறித்த
அறிவிப்புகள்
எல்லா இடங்களிலும்.
அறிவிப்புகள் அற்று
உயிர் பலிகள்.
வெறுப்பினை உமிழும்
வெட்கம் கெட்ட தேசத்தில்
வாழ்வதைவிட
வேறு என்ன செய்ய முடியும்.

Loading

சமூக ஊடகங்கள்

நிலாப் பார்த்தல்

நீண்ட இரவுப் பொழுதுகளில்
மகளுடன் கூடிய
நெடும் பயணத்தில்
தலையை திருப்பி நிலாவினை
காண்பித்த பொழுதுகளில்
உணர ஆரம்பித்தேன்
நான் தொலைத்துவிட்ட குழந்தைப் பருவங்களை.

Loading

சமூக ஊடகங்கள்

காட்சியும் சாட்சியும்

காட்சியின் இரு வேறு பயணங்கள்
இரு நாடகத்திலும் .
கணவனை உயிர்ப்பிக்க சொல்லி சாவித்திரி.
எதைப் போட்டாலும் திங்கிற
நாயை சோத்தை கொட்டிக்க வரச்சொல்லுடா.

Loading

சமூக ஊடகங்கள்

தேவதையின் அருகில்

நீண்ட நெடும் பயணத்தில்
மகளின் கதை துவங்கியது.
தலையினை மேலும் கீழும் ஆட்டி
எச்சில் விழுங்கி
தொடங்கியது கதை.
ஒரு ஊர்ல ஒரு தேவதையாம்.
துவக்கத்திலே உணர்ந்தேன்
அந்த தேவதையின் அருகாமையை.

Loading

சமூக ஊடகங்கள்

புனரபி ஜனனம் புனரபி மரணம்

நீண்ட நாட்களுக்கு பிறகு
மீண்டும் கடவுளுடன் நேசம்.
கழுத்தை திருப்பி கன்னத்திலான
மகளின் முத்தமும்
கவிதையின் தொடக்கத்திற்கான
மனைவியின் தொடர் வார்த்தைகளும்
தொடரக் காரணம் ஏன்  என்றேன்.
புனரபி ஜனனம் புனரபி மரணம்
என்று கூறி இடம் அகன்றார்.

Loading

சமூக ஊடகங்கள்

உன்னை அறிந்த பொழுதுகள்

உன்னை அறிந்த பொழுதுகள்
உன் பார்வை பட்ட
வினாடியில் என்னுள் மாற்றம்.
நீண்ட நெடிய கேசம்
குழைகள் ஆடும் காதுகள்
அகல நெற்றி
வில்லினை ஒத்த புருவம்
என்றும் தொடரும் பார்வைகள்.
என்றைக்கோ
உன்னை சந்திதிருப்பதாக சொன்னேன்.
ஈரெழு ஜன்மங்களிம்
கிடைக்காத புன்னகையை சிந்தினாய்.
ஒலித்தது என் காதுகளுக்குள் ஓங்காரம்.

Loading

சமூக ஊடகங்கள்

காலத்தின் சாட்ஷி

ஒரு சிறந்த கணத்தில்
நிலம் பெறப்பட்டது.
கட்டிடம் உருவானது
கணப் பொழுதுகளில்.
அனைத்து பொழுதுகளிலும்
உறவினர் கூட்டம்.
களித்த பொழுதுகளையும்
கவிதை பொழுதுகளையும்
சந்தித்தது அவ்வீடு.
கால மாற்றத்தில்
கரைந்தன காரை சுவர்கள்.
நீண்ட நெடும் பயணத்திற்கு பிறகு
வீட்டின் சுவாசம்
அண்டப் பெருவெளியில்.
காலத்தின் சாட்ஷியாக
கனவுகளையும் கவிதைகளையும்
சுமந்து அவ்வீடு.

Loading

சமூக ஊடகங்கள்

கொப்பு விட்ட குரங்கு

நீண்ட நாட்களுக்குப் பின்
நண்பர்களுடன் சந்திப்பு நிகழ்ந்தது.
வாழ்க்கை குறித்த எண்ணங்கள்.
நல்ல உணவிற்காக வாழ்கிறேன்
என்றான் ஒருவன்.
போகங்களை அனுபவிற்பதற்காக வாழ்கிறேன்
என்றான் ஒருவன்.
பொருள் ஈட்ட வாழ்கிறேன்
என்றான் ஒருவன்.
கற்று தெளிவதற்காக வாழ்கிறேன்
என்றான் ஒருவன்.
இறப்பதற்காக வாழ்கிறேன்
என்றான் ஒருவன்.
பதில் பெற்ற பொழுதுகளில்
கொப்பு விட்ட குரங்காய் மனமும் நானும்.

Loading

சமூக ஊடகங்கள்

அரிதாரங்கள்

எல்லா அடகுக் கடை
மனிதர்களிடமும், நகைகளிடமும்
படிந்து இருக்கிறது
எவராலும் அறியப் பட முடியாத
அரிதாரங்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

பிரிவுகளின் பதிவுகள்

எல்லா மரணங்களும்
நிச்ச குறிப்பொன்றை
எழுதிச் செல்கின்றன
அலைகளின் மீதான
இலைகளின் பயணங்களாய்.

Loading

சமூக ஊடகங்கள்