உடைந்து கிடக்கும் ஒவ்வொரு பொருளும் ஒன்றை நினைவு படுத்துகின்றன. எரியும் நெருப்புகள் அனைத்தும் ஒன்றை நினைவு படுத்துகின்றன. அறைக்கும் அசையும் காற்றுகள் அனைத்தும் ஒன்றை நினைவு படுத்துகின்றன நீரும், நீர்த் துடிப்பும் ஒன்றை நினைவு படுத்துகின்றன. கூடும் நீல மேகங்களும் ஒன்றை நினைவு படுத்துகின்றன. ஒன்றிலும் நிலைபெறாமலும் ஒன்றாமலும் மனம் மட்டும்.
ஆன்மீகம்
மார்கழி மாதம் பீடு உடைய மாதம். சைவத்திலும், வைணவத்திலும் அது பற்றி மிகவும் சிறப்பாக சொல்லப் பட்டிருக்கிறது. தேவர்களின் துவக்க நாள். அதனால் அதைக் கொண்டாடுகிறோம்.
அறிவியல்
1. மார்கழி மாதத்தில் அதிக அளவு ஆக்ஸிஜன் விடியற் காலையில் வெளிப்படும். அதை சுவாசிப்பதால் உடற் பிணிகள் நீங்கும்.
2. இறை வழிபாட்டிற்கு செல்வதால் மற்றவர்களோடு கலந்து பழக வாய்ப்பு வரும். இதனால் நீண்ட நாள் மனக் கசப்புகள் விலகும்.
3. இந்தக் காலங்களில் சிறு சிறு விலங்குகளுக்கு இரை தேடுதல் கடினம். அதை எளிமையாக்கும் வழி. (பூசணிப் பூ – கோல நடுவில்)
செய்த சபதம் மறந்து சங்கிலி நாச்சியாரை விட்டு திருவொற்றியூர் எல்லையைக் கடந்ததால் சுந்தரர் இரு கண்களையும் இழக்கிறார். காஞ்சிபுரம் செல்லும் வழியில் வடதிருமுல்லைவாயில் வருகிறார்.
இத்திருத் தலத்தில் 10+1 பாடல்கள் பாடுகிறார்.
அனைத்துப் பாடல்களும் அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே என்று முடிகின்றன.
இதில் ஒரு பாடல் மட்டும் இப்போது.
மற்று நான் பெற்றது ஆர் பெற வல்லார்? வள்ளலே! கள்ளமே பேசிக் குற்றமே செயினும், குணம் எனக் கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன்; செற்று மீது ஓடும் திரிபுரம் எரித்த திரு முல்லை வாயிலாய்! அடியேன் பற்று இலேன்; உற்ற படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! .
இப்பாடல் சாதாரண மனிதனை வைத்து எழுதப் பட்டதாகவே தோன்றுகிறது.
மற்று நான் பெற்றது ஆர் பெற வல்லார் – எனக்கு கிடைக்கப் பெற்றது யாருக்கு கிடைக்கும்.
வள்ளலே – பெறுபவரின் நிலை அறியாமல் விரும்பிய அனைத்தையும் கொடுக்கக் கூடியவன்.
கள்ளமே பேசிக் குற்றமே செயினும் – என் உள்ளம் கள்ளத் தன்மை உடையது, குற்றம் புரியக் கூடியது.
குணம் எனக் கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன் – இது எனது பிறவிக் குணம். ஆதலால் இன்னும் பல தீமைகள் புரிந்தேன்.
செற்று மீது ஓடும் திரிபுரம் எரித்த திரு முல்லை வாயிலாய் – செருக்கு கொண்டவர்களின் கர்வத்தை திரிபுர தகனமாக(மும் மல காரியம்) செய்தவனே
அடியேன் பற்று இலேன் – பற்றுவதற்கு எதுவும் இல்லாதவன்.
மழை மிகவும் பிடிக்கும் என்கிறாய். ஏன் என்கிறேன். ‘ஒற்றை குடை பிடித்து உன் தோளில் சாய்ந்து மழையில் நனையலாம் அல்லவா’ என்கிறாய். வெகு அருகில் தட்டான் பூச்சிகளின் ஒலிகள்.
(இசைஞானி பற்றிய சிறு சிறு செய்திகள். அவர் மூச்சுவிடுவது முதற்கொண்டு அவரைப்பற்றி எழுத ஆட்கள் உண்டு. என்றாலும் இது குழந்தைகள் பொம்மை வைத்து சமையல் செய்வது போன்றது இது).
சமீபத்தில் நான் படித்த என்னை பாதித்த விஷயம்.
வெளி நாட்டில் வாழும் ஒரு குழந்தையை சுமக்கும் ஒரு தாய்க்கு, அது செயல் அற்று விட்டதாத மருத்துவ முறைப்படி அறிவிக்கப்பட்டது.
தாய் மிகவும் கவலையுடன் இருந்திருக்கிறாள்.
அந்த நேரத்தில் இசைஞானி இசையை கேட்க நேரிடுகிறது. மிகக் குறுகிய காலத்துக்குள் வயிற்றில் இருக்கும் குழந்தை அசைய ஆரம்பிக்கிறது.
குழந்தை பிறந்த பிறகு கணவன், குழந்தை அனைவருடன் வந்து இசைஞானியிடம் ஆசி பெற்று சென்றதாக செய்தி.
காலையில் இருந்து பரபரப்பு இருவருக்கும்(மனைவிக்கும் எனக்கும்) தொற்றிக் கொண்டது.
‘ஏங்க அவனை கொஞ்சம் எழுப்புங்க’
‘இன்னும் 10 நிமிஷம் தூங்கட்டும்’
‘இன்னைக்கு தான் 2 மாசத்துக்கு பிறகு ஸ்கூல் தொரக்குது. 2 மாசமா தூங்கி தூங்கி காலைல எழுந்திருக்கி மாட்டான் இதுல பூஸ்ட் குடிச்சி காலைல சாப்பிடனும் வேற.
‘இரு எழுப்புறேன்’
‘எனக்கு என்னவோ கவலையா இருக்குங்க, அவன் அவ்வளவு சீக்கிரமா
எழுந்திரிக்கமாட்டான்’
‘இரு எழுப்புறேன்’
‘இருங்க, அடுப்புல கொஞ்சம் வென்னீர் போடுங்க, யூனிபார்ம் எடுத்து வைச்சிருக்குறேன். அத கொஞ்சம் அயன் பண்ணுங்க, ஷூவ எடுத்து வைங்க, சாக்ஸ் நல்லா இருக்கா பாருங்க ஸ்கூல் ரெசிப்ட் எடுத்து வச்சிருங்க, கொஞ்சம் பாட்டில்ல தண்ணி ஊத்தி வச்சிருங்க, ஸ்னக்ஸ் ஏதாவது இந்த டப்பால எடுத்து வச்சிருங்க’
எனக்கு தலை சுற்றியது.
‘எனக்கு ஒரே டென்ஷான இருக்குங்க, அவன் எப்படி கிளம்புவான்னு’
‘கவலப் படாத, நான் எழுப்புறேன்’
‘யேய், தம்பி எழுந்திரிடா’
சிறிய பால்பாயின்ட் பேனாவை கழட்டும் போது வெளியே விழும் ஸ்பிங் போல் கட்டிலில் இருந்து எழுந்தான்.
‘ஏன்டா’
‘இன்னைக்கு ஸ்கூல் தொறக்குதுல்ல, என் ப்ரெண்ஸ் எல்லாரையும் பாக்குணும் இல்ல அதான்’
வாழ்க்கை வழி எங்கும் விசித்திரங்களை விதைத்துச் செல்கிறது. விடை எழுதும் முன்னே வாசித்தல் விசித்திரமே.
(இசைஞானி பற்றிய சிறு சிறு செய்திகள். அவர் மூச்சுவிடுவது முதற்கொண்டு அவரைப்பற்றி எழுத ஆட்கள் உண்டு. என்றாலும் இது குழந்தைகள் பொம்மை வைத்து சமையல் செய்வது போன்றது இது).
சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒரு காட்சி.
சங்கீதா: நீங்க ஏன் இப்ப இளையராஜாவோடு சேர்வதில்லை.
பாலா : இன்னைக்கு இருக்கிற எல்லா இசையிலும் ராஜா இருக்கிறார். அவரில் சாயல் அற்ற தனிப்பாடல் எதுவும் இல்லை. அதனால அவரை அவர் இசையை தனியா பார்க்கவில்லை.
தத்துவங்கள் அனைத்தும் நிலையாமை என்ற நிலையில் உருவாகின்றன.
சிவவாக்கியரின் கீழ்க் கண்ட பாடல் அதை விளக்குகிறது.
பாடல்
வடிவுகண்டு கொண்ட பெண்ணை மற்றொருவன் நந்தினால் விடுவனோ அவனை முன்னை வெட்ட வேண்டும் என்பனே; நாடுவன் வந்து அழைத்த போது நாறும் இந்த நல்லுடல் சுடலை மட்டும் கொண்டு போய்த் தோட்டிகைக் கொடுப்பரே!
விளக்கம்
அழகிய வடிவம் கொண்ட தான் விரும்பும் ஒரு பெண்ணை மற்றொருவன் விரும்புகிறான் என்றால் அவனை விடுவேனா, அவனை வெட்டி விடுவேன் என்று கூறுபவன் இருக்கிறான். அவன் எமன் வாயிலில் விழும் போது நாற்றம் கொண்ட இந்த உடல் மண்ணில் விழும். அதன் பிறகு இந்த உடலை மயானத்தில் இருக்கும் வெட்டியானிடம் கொடுத்து விடுவார்கள்.
இதில் பல கருத்துக்கள் அடங்கி உள்ளன.
அழகிய வடிவம் கொண்ட பெண்ணை விரும்புதல் – இயற்கை. அது காமத்துடன் கூடிய மாயையின் காரியம்.
விரும்புவனை வெட்டிவிடுவேன் – ஆணவம்
இறப்பு தீர்மானிக்கப்பட்டது. எனவே அதில் ஆணவம் கொள்ள எதுவும் இல்லை.
எனவே மும்மல காரியம் கொண்டவனுக்கு முக்தி இல்லை. நிலையற்ற எண்ணம் விடுத்து அஃதாவது மும்மலம் நீக்கி இறைவனை நாடச் சொல்கிறது இப்பாடல்.
(இசைஞானி பற்றிய சிறு சிறு செய்திகள். அவர் மூச்சுவிடுவது முதற்கொண்டு அவரைப்பற்றி எழுத ஆட்கள் உண்டு. என்றாலும் இது குழந்தைகள் பொம்மை வைத்து சமையல் செய்வது போன்றது இது).
பாரதிராஜா : நான் படம் எடுக்கிறேன். நீ மியுசிக் போடனும்.
இசைஞானி : கதய சொல்லு.
பாரதிராஜா முழு கதையும் சொல்லி முடிக்கிறார்.
இசைஞானி : படம் ஓடாதுடா.
பாரதிராஜா : உன் இசை மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
இசைஞானி : அப்படீன்னா, எனக்கு சம்பளம் வேண்டாம்.
இன்று வரை அப்படத்திற்கு இசை அமைப்பிற்காக சம்பளம் வாங்கவில்லை.