ஆத்மாவின் ராகங்கள்

(இசைஞானி பற்றிய சிறு சிறு செய்திகள். அவர் மூச்சுவிடுவது முதற்கொண்டு அவரைப்பற்றி எழுத ஆட்கள் உண்டு. என்றாலும் இது குழந்தைகள் பொம்மை வைத்து சமையல் செய்வது போன்றது இது).

பாரதிராஜா : நான் படம் எடுக்கிறேன். நீ மியுசிக் போடனும்.

இசைஞானி : கதய சொல்லு.

பாரதிராஜா முழு கதையும் சொல்லி முடிக்கிறார்.

இசைஞானி : படம் ஓடாதுடா.

பாரதிராஜா : உன் இசை மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

இசைஞானி :  அப்படீன்னா, எனக்கு சம்பளம் வேண்டாம்.

இன்று வரை அப்படத்திற்கு இசை அமைப்பிற்காக சம்பளம் வாங்கவில்லை.

படம் : முதல் மரியாதை.

Loading

சமூக ஊடகங்கள்

எச்சில் படிந்த நினைவுகள்

மழைகளோடு அடங்கி விடுகின்றன
தவளைகளில் ஒலிகள்,
பிரிதொரு பொழுதுகளில்
துவங்கி விடுகின்றன
மனதில் ஒலிகள்.

Loading

சமூக ஊடகங்கள்

என் இனிய பொன் நிலாவே…

இந்த பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று தெரியவில்லை.

காலை நேரக் காப்பிக்கு என்று ஒரு வாசனை எப்பொழுதும் உண்டு. புது டிகாஷன், புது பால் மற்றும் இத்தியாதிகள். அது போன்றதே இப்பாடலும்.

இசை, காட்சிவடிவம் மற்றும் அனைத்தும் சேர்ந்த ஒரு கலவை இப்பாடல். (இது போன்று மிகச் சில படைப்பாளிகளுக்கே அமைகிறது. மகேந்திரன், பாலு மகேந்திரா, பாலா – பொது அம்சம் – இளையராஜா)

நாயகியை கடத்தி வந்திருக்கிறான். அவளை வீட்டில் அடைத்து வைத்திருக்கிறான்.

காலம் சிறிது கடக்கிறது

அவள் கேட்கிறாள். ‘ உங்களுக்கு பாட வருமா?’
‘கொஞ்சமா’ பதில் வருகிறது.

பாடல் துவங்குகிறது. மெல்லியதாய் கிடார் இழைய ஆரம்பிக்கிறது.
பலப்பல முக பாவனைகள் நாயகி முகத்தில்.

காட்சி அமைப்பில் நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது இசையும் காட்சியும்.

தலை கோதுதல், நாயகன் கண்ணாடி சரி செய்தல், மழை பெய்யும் வானம் பார்த்தல் ஆகட்டும் அனைத்தும் கவிதையில் சிறந்த வடிவங்களாய்.

நீரினில் பட்டு வெளிச்சம் நாயகி முகத்தில் பிரதிபலிக்கிறது. அது நாயகன் கண் கண்ணாடிகளில்.
கடற்கரையில் இருவருக்குமான நடை. பின் புலத்தில் அலைகள்.

காப்பி அருந்திக் கொண்டே இருவருக்குமான பேச்சுக்கள். கைகள் செயினை சரி செய்து கொண்டே இருக்கின்றன.

காட்சி அமைப்பில் பழைய நிலைக்கு வந்தாலும் இன்னும் ஒலிக்கிறது.

‘இரட்டுற மொழிதல்’ என்பது தமிழின் பயன்பாடுகளில் ஒரு வகை.  அது போல ஒரு பாடல் மிக கனமான அழுத்தம் நிறைந்த மன நிலைக்கும், மிக சந்தோஷமான தருணங்களுக்கும் பொருந்துவது இப்பாடல்.

தரை இறங்கா நிலவு இன்றும் வானிலும் மனத்திலும்.

Loading

சமூக ஊடகங்கள்

முன்னுரை

இறந்த பின்னும்
பயணிக்கின்றன
வண்டிகளில் மீன்கள்.













Click by :  Ramaswamy Nallaperumal 

Loading

சமூக ஊடகங்கள்

அனாகத நாதம்

மிகச் சிறந்த ஒலிகள் எல்லாம்
அடங்கி விடுகின்றன
சிறு கொலுசுகளின் ஒலிகளில்.

*அனாகத நாதம் – மனிதனுடைய முயற்சியின்றி இயற்கையிலேயே கேட்கப்படும் நாதம்

Click by : Devadhai Thozhan (a) Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

சலனம்

எல்லா இரவிற்குள்ளும் இருக்கின்றன
பல அழுகை ஒலிகள்.

Click by : Devadhai Thozhan (a) Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

வியாபாரம்

மேற்கு மாம்பலத்தில் பரபரப்பான பகுதியில் ஒரு மாலை வேளை.

ரெண்டு எளநி என்ன வில?
60 ரூவா சார்.

ரெண்டு சேப்பு எளநி குடுங்க.
இந்தாங்க சார்.

‘ரொம்ப வருசமா கட வச்சிருக்கீங்ல போல’

‘ஆமாம் தம்பி’.

‘எளநி ரொம்ப நல்லா இருந்துதுங்க, இந்தாங்க பணம்’

‘இதுல 70ரூவா இருக்கு தம்பி’

‘நல்லா இருந்துன்னு நாந்தான் சேத்துக் குடுத்தேன்’

‘வேண்டாம் தம்பி. யாரும் யார் காசயும் புடுக்க முடியாது சார். கடவுள் புண்ணியத்துல யாவாரம் நல்லா போவுதுங்க. பையன் சிங்கப்பூர்ல இருக்கான். பொண்ணு TCSல வேல பாக்குது. எனக்குதான் தம்பி எங்கயும் போவ புடிக்கல. அதனால இத செஞ்சிகிட்டு இருக்கேன். தம்பி நீங்க கம்புட்டர் கம்பெனியிலா வேல செய்ரீங்க’

‘ஆமாம்’

‘நீங்க தான் தம்பி பாவம், ஒங்களுக்கு மாசத்துக்கு ஒரு தபா தான் சம்பளம். ஆனா பாருங்க எங்களுக்கு தினம் சம்பளம், செலவுனாக்க கூட காசு புரட்டிக்கலாம் பாருங்க’

குடித்த இளநீரின் துவர்ப்பில் இன்னமும் இருக்கின்றன அதற்கான அனுபவமும் தர்மத்துடன் கூடிய வியாபார நோக்கமும்.

 
Click by : RamaSwamy N

Loading

சமூக ஊடகங்கள்

அரூபநதி

கனவு
கனவுக்குள் கனவு.
நனவு,
நனவுக்குள் கனவு.
கனவு நனைவான பொழுதுகளில்
கனவு கலைந்திருந்தது.


Click by : Bragadeesh 

Loading

சமூக ஊடகங்கள்

மினி பேருந்தும் மினி பயணமும்

ராமாபுரம் மெயின் ரோட்டில் ஒரு மினி பேருந்து

கிடுகிடு வென 30 பேர் பஸ்ஸில் ஏறினர்.

எல்லோர் முகத்திலும் சந்தோஷம்.

‘ஏண்டா, இப்ப மினி பஸ், அப்புறம் 17G, அப்புறம் திரும்பவும் மினி பஸ். அப்புறம் நம்ப பொழப்பு எப்படி ஓடும்’. ஆட்டோ காரர்களின்  மன வெளிப்பாடுகள்.

மனிதர்களை ஏற்றிக்கொண்டு பஸ் புறப்பட்டது.
‘எங்க போவணும்’
‘அரச மரத்தடி’
‘கல்லூரி சாலை ஒன்னு கொடுங்க’
‘அது எங்க இருக்கு’
‘ஏங்க, என்னங்க கண்டக்டர் நீங்க, நிறுத்தம் எல்லாம் உங்களுக்குத் தான் தெரியனும்’.
‘சார் நான் புதுசு சார்’

பஸ் சுட்டுகாட்டுக்கு அருகில் ஸ்டேஜிக்காக நிறுத்தப்பட்டிருந்தது.

‘சார் டிக்கட் வாங்கறவங்கலெம் சீக்கிரம் வாங்குங்க’
பஸ் மைக்கேல் கார்டன் அருகில் வந்திருந்தது.
‘புள்ளயார் கோயில் நிக்குமா சார்’
‘ரெண்டு வீட்டுக்கு ஒரு வீடு நிக்கும்’

‘என்ன சார் செய்யறது, இது தான் பொழப்பு, ஆளாளுக்கு வீட்டுக்கு வீடு நிறுத்த சொல்றாங்க. ஆனா எங்களுக்கு 32 டிரிப்பு அடிக்கணும் சார். இன்னைக்கு இது தான் 18வது டிரிப்பு. அதிக பட்சம் 22 அல்லது 23 தான் முடியும். என்னா, கொஞ்சம் திட்டுவாங்க, வாங்கிக்க வேண்டியது தான்.

டிரிப் ஷீட்டில் 32 என்று எழுதி வட்டம் இடப் பட்டிருந்தது.

பயணம் சிலருக்கு சுகமாகவும், சிலருக்கு சுமையாகவும் மாறிவிடுகிறது. ஆனாலும் பயணம் மட்டும் தொடர்கிறது.

Loading

சமூக ஊடகங்கள்

தினம் தினம் தீபாவளி

வெடிக்கும் பட்டாசில் தெரிகிறது
அதைச் செய்பவர்களில்
வேதனைகள்.

















Photo by : Devadhai Thozhan (a) Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

கார்காலம்

‘குடை பிடிக்க
கற்றுக் கொண்டேன்
எப்பொழுது மழைவரும் என்கிறாய்’
தகப்பனின் மனதறியா இருக்குமோ
மழை மேகங்கள்.








Photo : Karthik Pasupathi

Loading

சமூக ஊடகங்கள்

மீளா உறக்கம்

எல்லா படைப்புகளும்
முற்றுப் பெறுகின்றன
அதனதன் மீளா உறக்கத்தில்.

Loading

சமூக ஊடகங்கள்

காசுக் கடவுள்

காசுக் கடவுளை
பொம்மைகளாக்கி
விற்ற பின்னும்
கனவாகவும்
கனமாகவும் இருக்கிறது
விற்பவர்களின் வாழ்வு.

Loading

சமூக ஊடகங்கள்

கொண்டாடுதல்

வினைகளின் வழியே
பிறந்து பார்,
வேறு என்ன இருக்கிறது?
புழுதி நிறைந்த தெருக்களில்
விளையாடு,
வேறு என்ன இருக்கிறது?
உறவுகளோடு சொந்தம்
கொண்டாடு,
வேறு என்ன இருக்கிறது?
கற்றல் தவிர்த்து
அனைத்து விஷயங்களையும் செய்,
வேறு என்ன இருக்கிறது?
பெரு மிருகங்களால்
துரத்தப்படும் சிறு மிருகமாய்
வேலை தேடு,
வேறு என்ன இருக்கிறது?
தனிமை விலக்க
தவறா மணம் செய்,
வேறு என்ன இருக்கிறது?
மனைவியின் வார்த்தைகளால்
வலி கொள்,
வேறு என்ன இருக்கிறது?
குளிரில், ஊன் முழுவதும்
புண்ணாகி குரைத்துச்
செல்லும் நாயினைப் பார்,
வேறு என்ன இருக்கிறது?
தவறாது தமிழ் இலக்கியம் படித்து
தவித்துப் போ,
வேறு என்ன இருக்கிறது?
மகிழ்வின் விளைவாய்
மகிழும் குழந்தை கொள்,
வேறு என்ன இருக்கிறது?
பெருங்குரலுடன் கரைந்து
செல்லும் காகத்தினை உணர்,
வேறு என்ன இருக்கிறது?
கனவுகளில் வாழ்வினை நடத்து
வேறு என்ன இருக்கிறது?
ஒட்டு பீடியும் ஊறுகாயும் கொள்,
வேறு என்ன இருக்கிறது?
மனிதர்களால் விலக்கப்படு,
வேறு என்ன இருக்கிறது?
தடம் மாறாது தனித்துச் செல்லும்
பறவைக் கூட்டங்களை காண்,
வேறு என்ன இருக்கிறது?
தனிமைகளுடன் தனித்திரு,
வேறு என்ன இருக்கிறது?
யாருமற்ற இரவில்
தடயங்கள் அற்று
மரணம் அறிந்து மரித்துப் போ.
வேறு என்ன இருக்கிறது
வாழ்வினை கொண்டாடுதல் தவிர?

Photo : Devadhai Thozhan (a) Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

2038 – இயந்திர மனிதன்,செயற்கை அறிவு, நரம்புகளின் வலைப்பின்னல்

2038 – இயந்திரமனிதன்,செயற்கை அறிவு, நரம்புகளின்வலைப்பின்னல்
(இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.

இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

1.
மிகச் சிறந்த வலைப்பின்னல் மற்றும்அறிவுள்ள உணர்தல் கூடிய நுட்பம்சார்ந்தது.( intelligent sensing systems)
சார், இத வச்சி எம்புருசனுக்கு எப்ப அறிவு வரும்னுசொல்ல முடியுமா?
2.
சார், இது மிகச் சிறந்தஅறிவான வலைப்பின்னல் வகையைச் சார்ந்த கைப்பேசிதான். ஆனா உங்க பொண்டாட்டிஎவ்வளவு நேரத்தில துணி எடுப்பாங்கன்னு சொல்லமுடியாது சார்.
3.
என்னங்கநீங்க, சிறந்த வலைப்பின்னல் கூடியதுஅதால உதட்டால பேசறத எல்லாம்புரிஞ்சிக் முடியும்னு சொல்லி குடுத்தீங்க. ஆனாஎம் புருசன் பேசற கெட்டவார்தைகளை மட்டும் புரிஞ்சிக்க முடியலசார்.
4
மிகச் சிறந்த தொழில் நுட்பவலைப்பின்னலுடன் கூடிய தானியங்கி கார்களைசென்னைக்கு டெமோவிற்கு அனுப்பியது தப்பா போச்சு.
ஏன்?
ஒரு அடி கூட நகரல. எல்லாம் பெயில் ஆயிடுச்சு.
5
சார் எங்களை மன்னிச்சுடுங்க, உங்கமனைவி எப்ப எல்லாம் கோவப்படுவாங்கன்னுநரம்பு சார்ந்த வலைப்பின்னல்ல ஏத்திட்டோம்சார். ஆனா, அதுக்கு மேலநினைவாற்றலை அதிக படுத்த முடியலசார்.
6
என்னாப்பா? போன வாரம் வாங்குன ரோபோசரியா வேலை செய்யல?

அது ரிசஷன் பீரியட்ல செய்ததுசார். அதனால 50 மில்லியன் வலைப் பின்னல்கள் சரியாவேலை செய்யாது சார்.

Loading

சமூக ஊடகங்கள்

பகுபடுதல்

ஒவ்வொரு நரையும்
உணர்த்துகின்றன
பகுக்கபட்ட வைராக்கியங்கள்
வீழ்ச்சி அடைவதை.











Photo : Devadhai Thozhan (a) Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

நெடுமரங்கள்

தனித்த அறையில்
தகிக்கும் தனிமையில்
இருக்கும் ஒருவனை
சந்திக்க  நேர்ந்தது.
யாவரும் கண்டு உணர முடியா
செடிகளும் மரங்களும் அவனிடத்தில்.
அவன் கண்களில், காதுகளில்,
மூச்சுக் குழல்களில், செவிகளில்.
அவைகள் தாண்டி
மேனி முழுவதும்.
காரணம் அறிய விரும்பி
கேள்விகளைத் தொடுத்தேன்.
பிறந்து காலமுதல்
அவைகள் தன்னிடத்தில் இருப்பதாக உரைத்தான்.
தோன்றி மறையும் இயல்பு
அவைகளுக்கு உண்டு என்று உரைத்தான்.
இயல்பான தனிமைகளில்
எதிர்பாரா அளவு பரவும் என்று உரைத்தான்.
பேச்சுக்களில் அவைகள்
விருட்சங்களாக ஆவதும் உண்டு என்றும்
அவைகள் இயல்பெனவும் உரைத்தான்.
பேச்சுக்களின் முடிவில்
சில மரங்கள் என்னுள்ளும் வேறூன்றி இருந்தன.

Photo : Vinod Velayudhan

Loading

சமூக ஊடகங்கள்

கரைதல்

கம்பி வழி வழிந்தோடும்
நீரினில் கரைகின்றன
கடந்த கால நினைவுகள்.

Loading

சமூக ஊடகங்கள்

காலத் தத்துவம்

தேடித்தான் வருகிறோம்,
தேடலில் மாற்றம் கொள்கின்றன தேவைகள்;
மாற்றத்தில் மறைகிறது தேடல்,
தேடல் கொள்ளும்
ஆட்டம் மட்டும் தொடர்கின்றது.

Loading

சமூக ஊடகங்கள்

மாயை சூழ் உலகு

யாருமற்ற பொழுதுகளில்
அலைகள் மட்டும்.
அருகருகே நீயும் நானும்.
அலைந்து கொண்டிருக்கிறது காற்று.
வாழ்வினை வெற்றி கொண்டவனாக
‘என்ன வேண்டும்’ என்கிறேன்.
‘துளிர்த்தல் இயல்பெனில்
உதிர்த்தலை என் சொல்வாய்’
என்கிறாய்.
சொல்லின் முடிவில்
இறக்கிறது ஒரு மாயப்பிரபஞ்சம்.

Photo : Devadhai Thozhan (a) Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்