2038 – இயந்திரமனிதன்,செயற்கை அறிவு, நரம்புகளின்வலைப்பின்னல்
(இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.
இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)
1.
மிகச் சிறந்த வலைப்பின்னல் மற்றும்அறிவுள்ள உணர்தல் கூடிய நுட்பம்சார்ந்தது.( intelligent sensing systems)
சார், இத வச்சி எம்புருசனுக்கு எப்ப அறிவு வரும்னுசொல்ல முடியுமா?
2.
சார், இது மிகச் சிறந்தஅறிவான வலைப்பின்னல் வகையைச் சார்ந்த கைப்பேசிதான். ஆனா உங்க பொண்டாட்டிஎவ்வளவு நேரத்தில துணி எடுப்பாங்கன்னு சொல்லமுடியாது சார்.
3.
என்னங்கநீங்க, சிறந்த வலைப்பின்னல் கூடியதுஅதால உதட்டால பேசறத எல்லாம்புரிஞ்சிக்க முடியும்னு சொல்லி குடுத்தீங்க. ஆனாஎம் புருசன் பேசற கெட்டவார்தைகளை மட்டும் புரிஞ்சிக்க முடியலசார்.
4
மிகச் சிறந்த தொழில் நுட்பவலைப்பின்னலுடன் கூடிய தானியங்கி கார்களைசென்னைக்கு டெமோவிற்கு அனுப்பியது தப்பா போச்சு.
ஏன்?
ஒரு அடி கூட நகரல. எல்லாம் பெயில் ஆயிடுச்சு.
5
சார் எங்களை மன்னிச்சுடுங்க, உங்கமனைவி எப்ப எல்லாம் கோவப்படுவாங்கன்னுநரம்பு சார்ந்த வலைப்பின்னல்ல ஏத்திட்டோம்சார். ஆனா, அதுக்கு மேலநினைவாற்றலை அதிக படுத்த முடியலசார்.
6
என்னாப்பா? போன வாரம் வாங்குன ரோபோசரியா வேலை செய்யல?
அது ரிசஷன் பீரியட்ல செய்ததுசார். அதனால 50 மில்லியன் வலைப் பின்னல்கள் சரியாவேலை செய்யாது சார்.