I.T என்னும் பம்மாத்து

மனித வாழ்வின் காலத்தடம் படாத இடங்கள் கூட கணினியின் தடங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன என்பதே நிஜமான உண்மையாகும்.
தொழில் சார்ந்த துறைகளின் வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் வளரும் போது, தகவல் தொழில் நுட்பத் துறையின் வளர்ச்சி வகை தொகை இல்லா வளர்ச்சியினை சந்தித்து இருக்கிறது. இதில் பெரும்பாலும் நிறுவனங்களின் வளர்ச்சி மலை அளவிற்கும், அதில் பணிபுரியும் ஊழியர்களின் வளர்ச்சி மடு அளவிற்கும் இருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.
இங்கு நான் குறிப்பிடும் அனுவபங்கள் எனக்கானவை மட்டும் அல்ல. பல அல்லல் பட்ட மனிதரிகளின் அனுபங்களும் கூட.
ஒரு நாட்டின் வளர்ச்சியினை வேறறுக்க அதன் அடிப்படை கலாச்சாரத்தை அறுத்துவிட்டால் போதும். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வருடங்களாக இருந்த ஒரு கலாச்சாரம், சில தசாப்தத்தில் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது என்பதே நிதர்சனம்.
இது குறித்து கீழ் கண்ட தலைப்புகளில் எழுத உள்ளேன்.
  1. வளர்ச்சிப் படிகள் – Stages
  2. மீட்டிங் கூத்துக்கள் – Meetings
  3. விடுமுறைகள் என்னும் நாடகங்கள் – Leave
  4. மதிப்பீடு(சுயம்/கம்பெனி) – appraisal
  5. குழுவுடன் சில நாட்கள் – Team outing
  6. மற்றவை
இவைகளின் நோக்கம் எவர் மனதையும் புண்படுத்துதல் அல்ல. நிதர்சனங்களை சுட்டிக்காட்டுவது மட்டுமே இதன் நோக்கம்.
புகைப்படம் : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 13

நினைவுகளை கலைத்தலை விட கனமான வேலை ஒன்றும் இல்லை.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
வறுமை உடையவன் மயானம் அடையான்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
சாலை ஒரங்களில் இருக்கும் மரங்களில் மிக மெல்லிய அடுக்குகளாக மணல் துகள்கள் படிந்திருப்பதைப் போல், 35+ கடக்கும் மனிதர்களிடம் மரணம் குறித்த சிந்தனை படிந்திருக்கிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பட்ட மரத்திலிந்து பறந்து செல்கின்றன பல பறவைக் கூட்டங்கள்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
உச்ச கட்ட வன்முறையின் மிகச் சிறந்த வடிவம் மௌனம்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தண்டவாளங்களின் மேல் பறந்து செல்லும் பறவைகளின் சேரும் இடம் எதுவாக இருக்கக் கூடும்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
வாழ்வின் தனிமைகள் கற்றித் தருவதை விட வேறு யார் அதிகம் கற்றுத் தரமுடியும்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தேடலைத் தொலைத்தவன் மயானம் அடையான்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மனைவியின் முகத்தில் அதிக பிரகாசம் உண்டாக்க வேண்டுமா? ‘மணி 10 ஆயிடுத்து. ஒரே தடவையா மதியம் சாப்பிடலாமா?’ என்று சொல்லிப் பாருங்கள்.
அன்னைக்கு நிச்சயம் கறி மீன் குழம்பு வகையரா தான். 
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
உறவுகள் அற்று இருப்பவர்களுக்கே உலகம் வசமாகிறது.

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 9/25 சக்திதரமூர்த்தி

 
ஜனனம், மரணம் ஆகியவற்றில் உழலக்கூடிய மனிதர்கள் மட்டும் தேவர்கள் ஆகியவர்களுக்கு முக்தியை அளிக்கும் பொருட்டு, தனது வாம பாகத்தில் இருந்து உமா தேவியாரை தோற்றுவித்த மூர்த்தி  என்ற குறிப்பு மட்டுமே காணப்படுகிறது.
இது போக மூர்த்தி 

(இம் மூர்த்தி பற்றிய குறிப்புகள் இருந்தால் தெரியப்படுத்துங்கள். தெரிந்து தெளிவடைகிறேன்.)

 

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

வைசேஷிகம் – சிறு விளக்கம்

·   ஆன்மா வின் தன்மைகளை கூறல்
·   ஆன்மா அழிவற்றதாக என்றும் உள்ளது.
·   அது அருவமாக இருக்கும்
·   அது ஜீவான்மா, பரமான்மா என்று இருவகையாகப் பிரியும்.
·   பரமான்மா  – பிறப்பிலி
·   ஜீவான்மாபல் வேறு பிறப்புக்கள் எடுக்கும்.
·   புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப  மனத்தில் தன்மையால் ஞானம் கிடைக்கும்.
·   இயல்புகளை அறியும் ஞானத்தால் கர்மம் நசிக்கும்.
·   அவ்வாறு நசிக்க ஞானமின்றி செயல் அற்று இருப்பதே முக்தி.
·   வேதம் ஈஸ்வரனால் செய்யப்பட்டது. 
மீமாம்சை  – சிறு விளக்கம்
·   வேதங்களில் சொல்லப்பட்டவைகளே அனுட்டிபவர்கள் சொர்கத்தை சேருவார்கள்
·   வேதம் சுயம்பு
·   பிரபஞ்சம்  நித்யம் அஃதாவது என்றும் உள்ளது.
·   ஆன்மாக்கள் பல உண்டு.
·   ஆன்மாக்களுக்கு செய்த கர்மத்திற்கு ஏற்ப அதற்கான பலன்களை அனுபவிப்பதால் அதைத் தர ஈஸ்வரன் என்ற ஒருவன் தேவையில்லை
வேதாந்தம் – சிறு விளக்கம்
·   உபநிஷத்துக்களில் சொல்லப்படும் (பரம) ஆன்மா இந்த உலகப்படைப்பிற்கான காரணம்
·   இதுவே உலகத்தை வழி நடத்துகிறது
·   (ஜீவ) ஆன்மா தனது பந்தத்தை அறுக்க இதுவே உபாயம்.
·   அந்த பந்தம் நீங்காததற்கு காரணத்தை விளக்கும்
·   பந்தம் நீங்கியப்பின் அடையும் புருடன் இது என்று கூறும்


ஆறு தத்துவ சாத்திரங்களையும் படைத்தவர்கள் யார் யார்?
சாங்கியம் – கபிலர்
பாதஞ்சலம் – பதஞ்சலி
நியாயம் – அக்ஷபாதர்
வைசேஷிகம் – கணாதர்
மீமாம்சை – ஜைமினி
வேதாந்தம் – வியாசர்




Loading

சமூக ஊடகங்கள்

கரையும் இளமைகள்

இருப்பதாய் நினைத்த இளமை
கடந்த காலங்களில்
கரைந்து கலந்திருந்தது
பிரிதொரு நாளில்
பிரபஞ்சத்தின் வடிவம் தேடி.
















புகைப்படம் :  Bhavia Velayudhan

Loading

சமூக ஊடகங்கள்

பிரபஞ்சத்தின் சொற்கள்

எனக்கென்று கவிதை
எதுவும் இல்லை
பிரபஞ்சத்தின் சொற்களைத் தவிர.











புகைப்படம் :  Bhavia Velayudhan 

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

சாங்கியம்சிறு விளக்கம்

·   தேகாதி பிரபஞ்சத்திற்கு காரணமானதும், அருவமாகவும், என்றும் உள்ளதாகவும், எல்லா பொருள்களிலும் நீக்கமற நிறைந்தும் ஜடமாகவும் உடைய மாயை உண்டு என உணர்தல்.
·   அதனோடு தொடர்புடைய ஆன்மா உண்டு என்றும் அறிதல்.
·   ஆன்மாவுக்கு அஞ்ஞானத்தால் சுக துக்ககங்கள் உண்டு என்றும், அதை பிரித்து உணரும் பகுத்தறிவதாலே அஞ்ஞானம் நீங்கி ஆன்மா முக்தி அடையும் என்றும் உணர்தல்.
·   பல பிறவிகளுக்குப் பின் முக்தி உண்டு என உணர்தல்,
·   ஈஸ்வரனை தத்துவ விசாரணை மூலமாக அறிய இயலா நிலையில் ஈஸ்வரன் என்று ஒருவன் இல்லை என்று கூறுவது.
பாதஞ்சலம் –  சிறு விளக்கம்

சாங்கிய கருத்துக்களை ஏற்பது. அதோடு மட்டுமல்லாமல் அதற்கு மேல் படைத்தல், அழித்தல் ஆகிய தொழில்களை செய்யவும், உண்மை ஞானத்தை உபதேசிப்பவனாகவும் உடைய ஈஸ்வரன் ஒருவன் உண்டு எனவும், அவனை யோக முறையினால் காண இயலும் என்றும் விளக்குவது.
நியாயம் –  சிறு விளக்கம்
தர்கத்தின் வாயிலாக ஜடப் பொருள்களையும் சித்துப்  பொருள்களையும் தனித்தனியே நித்தியப் பொருள்களாக அறிதல். ஜடத்தில் இருந்து சித்தினை பிரித்து அறிந்து முக்தி என்றும் கூறுதல் . சித்து மனம் என்றும் அது அணுவினை விட சிறியது என்றும் கூறும்.

Loading

சமூக ஊடகங்கள்

சூன்யத் தேடல்கள்

தேகங்கள்
தேவைகள்
தேய்கிறது காலங்கள்
பின்னொரு நாளில்
சூன்யங்கங்கள்.









புகைப்படம் : SL Kumar



Loading

சமூக ஊடகங்கள்

சாரல் நினைவுகள்

மழை பெய்து முடித்தபின்னும்
இருக்கின்றன
முன்னொரு நாளின் நினைவுகள்










புகைப்படம் :  Bhavia Velayudhan 

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 8/25 சுகாசனர்

மகேசுவரமூர்த்தங்கள் 8/25 சுகாசனர்
வடிவம்
·   உருவ திருமேனி – யோக வடிவம்
·   உமா தேவிக்கு சிவாகமப் பொருளை விளக்கிய திருவடிவம்
·   சுகாசனம் – சுவத்திகம், கோமுகம், பதுமம், வீரம், கேசரி, பத்திரம், முக்தம், மயூரம், சுகம் என்ற ஒன்பது வகையான ஆசனங்களில் ஒன்று.
·   சத்யோஜாத முகத்திலில் இருந்து தோன்றிய வடிவம்.
·   இடது கால் – மடக்கி
·   வலது கால் – தொங்க விட்டபடி
·   இடது மேல் திருக்கரத்தில் – மான்
·   வலது மேல் திருக்கரத்தில் – மழு
·   வலது கீழ் திருக்கரத்தில் – அபயம்
·   இடது கீழ் திருக்கரத்தில் – வரத கரம்
வேறு பெயர்கள்
சுகாசன மூர்த்தி
நலவிருக்கையன்
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
சுவேதாரண்யேசுவர் கோயில், திருவெண்காடு
மீனாட்சி அம்மன் ஆலயம் – இரண்டாம் பிரகாரம் ,மதுரை
கயிலாய நாதர், காஞ்சிபுரம்
சட்டைநாதர் திருக்கோயில்சீர்காழி
சிதம்பரம்
இராமேஸ்வரம்
கங்கை கொண்ட சோழபுரம்
இதரக் குறிப்புகள்
வகைகள்
உமாசகித சுகாசனர்
உமா மகேசுவர சுகாசனர்
சோமாஸ்கந்த சுகாசனர்
விளக்க நூல்கள்
சில்ப ரத்தினம்
ஸ்ரீதத்துவநிதி
Image : Dinamalar
உதவி : சைவ சித்தாந்தம் மற்றும் வலைத் தளங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

அனுபவக் கூடுகள்

காலங்களில் கரைந்தபின்
எஞ்சி இருக்கின்றன
அனுபவக் கூடுகள்










புகைப்படம் : Chithiram Photography 

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

புராணம் என்பது என்ன?

வேத ஆகமப் பொருளை சரித்திர வடிவில் விவரிப்பது.

புராணத்தில் விவரிக்கப்படுபவை எவை? விளக்கங்கள்

உலக் தோற்றம், உயிர் இறைவனை அடைதல், பாரம்பரியங்கள், அவற்றோடு தொர்டபுடைய கதைகள், மனுவந்தரங்கள் ஆகியவற்றை கூறும். இது சைவம் முதல் ஆக்கினேயம் வரை உள்ள பதினெட்டு ஆகும்.


சிவபுராணம்
சைவம் ,காந்தம், லிங்கம், கூர்மம், வாமனம், வராகம், பௌடிகம்
மச்சியம், மார்க்கண்டேயம், பிரமாண்டம் – 10
விஷ்ணுபுராணம்
நாரதீயம்,பாகவதம்,காரூடம்,வைணவம் – 4
பிரமபுராணம்
பிரமம், பதுமம் – 2
சூரியபுராணம்
பிரமகைவர்த்தம் – 1
அக்னிபுராணம்
ஆக்கிநேயம் – 1
உபபுராணங்கள்
உசனம்,கபிலம்,காளி,சனற்குமாரம்,சாம்பவம்,சிவதன்மம்,சௌரம்,
தூருவாசம்,நந்தி,நாரசிங்கம்,நாரதீயம்,பராசரம்,பார்க்கவம்,
ஆங்கிரம்,மாரீசம்,மானவம்,வாசிட்டலைங்கம், வாருணம் – 18


சாத்திரங்கள் எதனை உணர்த்தும்?
சிஷைவேதங்களை ஓதும் முறை
கற்பம்வேதங்களில் விதித்த கர்மங்களை அனுட்டிக்கும் முறை
சோதிடம்வேதங்களை ஒதுவதற்கான காலம்
வியாகரணம்வேதங்களின் எழுத்து, சொல், பொருள் இலக்கணம்
நிருத்தம்சொற்களின் வியாக்யாணம்
சந்தம்வேத மந்திரங்களின் சந்தங்களின் இலக்கணம்
இவை தவிர வேறு சாத்திரங்கள் இருக்கின்றனவா?

சாங்கியம், பாதஞ்சலம், நியாயம், வைசேஷிகம், மீமாம்சை மற்றும் வேதாந்தம் என ஆறு தத்துவ சாத்திரங்கள் உள்ளன.

Loading

சமூக ஊடகங்கள்

நீங்கா அலைகள்

சிறு பயணத்தில்
புத்தகம் புரட்டும்
நிமிடங்களில் நகர்ந்து போகிறது
குழந்தையின் புன்னகையோடு
அதன் அழகு அலை










புகைப்படம் :  R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருவேற்காடு

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருவேற்காடு
இறைவன் சுயம்பு –  லிங்கத்தின் பின் சிவனும் பார்வதியும் திருமணக் கோலம்
அம்பாள் – சுயம்பு – கைகளில் கத்தி, கபாலம், டமருகம், சூலம்
அகத்தியருக்கு திருமண காட்சி அளித்த இடங்களில் இதுவும் ஒன்று.
நான்கு வேதங்களும் வேல மரங்களாய் நின்று இறைவனை வழிபட்டதலம் – வேற்காடு
முருகன் வேல் இல்லாமல் வில்லும் அம்பும் ஏந்த, ஒரு காலை மயிலின் மீது வைத்துக்கொண்ட வடிவம்
ஜோதிட சாஸ்திரத்தில் வல்லவரான பராசர வழிபட்ட தலம்
நாயன்மார்கள் சிறப்பு –  மூர்க்க நாயனார் பிறந்து வாழ்ந்த தலம்
கஜபிருஷ்ட விமான அமைப்பு

வழிபட்டவர்கள்
 
  • விநாயகர்
  • திருமால்
  • ஆதிசேஷனும்
  • முருகன்
  • ஒன்பது கோள்கள்
  • அஷ்டதிக்பாலகர்கள்
  • பராசரர்
  • அத்திரி
  • பிருகு
  • குச்சரர்
  • ஆங்கீரசர்
  • வசிட்டர்
  • கவுதமர்
  • காசிபர்
  • திண்டி
  • முண்டி
  • வாலகில்லியர்
  • விரதாக்னி
  • பஞ்சபாண்டவர்கள்
  • சிபி சோழன்
  • வாணன்
தலம்
திருவேற்காடு
பிற பெயர்கள்
விடந்தீண்டாப்பதி
இறைவன்
வேதபுரீஸ்வரர், வேற்காட்டீசர்
இறைவி
பாலாம்பிகை, வேற்கண்ணி அம்மை
தல விருட்சம்
வெள் வேல மரம்
தீர்த்தம்
வேலாயுத தீர்த்தம், பாலிநதி
விழாக்கள்
மகா சிவராத்திரி, நவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம்
மாவட்டம்
திருவள்ளுர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில்
திருவேற்காடு அஞ்சல்
திருவள்ளூர் மாவட்டம் – 600077
+91- 44-2627 2430, 2627 2487.
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர்-11 பாடல்கள், அருணகிரிநாதர்
நிர்வாகம்
இருப்பிடம்
சென்னை- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வேலப்பன் சாவடி ->  கிளை சாலையில்  இருந்து 2 கிலோ மீட்டர்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 255 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   23 வது தலம்.
வேதபுரீஸ்வரர்
பாலாம்பிகை
பாடியவர்                     திருஞானசம்பந்தர்
திருமுறை                    1ம் திருமுறை 
பதிக எண்                    57
திருமுறை எண்               8
பாடல்

மல்லன் மும்மதின் மாய்தர வெய்ததோர்
வில்லி னானுறை வேற்காடு
சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர்
செல்ல வல்லவர் தீர்க்கமே.
பொருள்
வளமை பொருந்திய முப்புரங்களும் மாயுமாறு கணை எய்த ஒப்பற்ற மேருவை வில்லாக உடைய ஈசன் உறையும் இடம் திருவேற்காடு ஆகும். அதன் புகழினை சொல்ல வல்லவர்கள் குறுகிய மனம் உடையவர்களாக இருக்க மாட்டார்கள். அங்கு சென்று தரிசிப்பவர்கள் நீண்ட ஆயுளை உடையவர்கள் ஆவார்.
கருத்து
தீர்க்கம் – நெடுங்காலம்
சுருங்கா மனத்தவர் – நீண்ட மனம் உடையவர்கள். இவர்கள் மட்டுமே ஈசனை நினைக்க வல்லவர்கள். குறுகிய மனம் உடையவர்கள் ஈசன் நினைவு அற்றவர்களாக இருப்பார்கள் என்பது துணியு.
பாடியவர்                     திருஞானசம்பந்தர்
திருமுறை                    1ம் திருமுறை 
பதிக எண்                    57
திருமுறை எண்               9
பாடல்
பரக்கி னார்படு வெண்டலை யிற்பலி
விரக்கி னானுறை வேற்காட்டூர்
அரக்க னாண்மை யடரப்பட் டானிறை
நெருக்கி னானை நினைமினே
பொருள்
சிரைச்சேதம்  செய்யப்பட்ட ப்ரம்மனின் தலை ஓட்டினை உணவு ஏற்கும் பாத்திரமாக கொண்ட ஈசன் உறையும் இடம் திருவேற்காடு. ஆணமையை குணமாக கொண்ட அரக்கன் ஆகிய இராவணனின் தனது கால் விரலால் சிறிது ஊன்றி அக் குணத்தை அழித்தவன் திருவேற்காடு உறையும் ஈசன். அவனை நினையுங்கள்.
கருத்து
பரக்கினார் – பிரமன்
விரக்கினான் – சாமர்த்தியமுடையன்
புகைப்படம்/உதவி : தினமலர் மற்றும் வலைத்தலங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 7/25 லிங்கோத்பவர்

வடிவம்
·   உருவம் அற்ற திருமேனியை உருவ வழிபாடு கொள்ளச் செய்யும் வழிபாடு முறை
·   மகா சிவராத்ரியுடன் தொடர்புடையது
·   திருருவத் திருமேனிஅண்ணாமலையார் வடிவம்
·   அக்னி பிழம்புகள் இயல்பாய் மேல் நோக்கி
·   வளர்ந்த ஜடா முடி
·   கரம்மான, மழு, வரத கரம்
·   மூர்த்தத்தின் நடுவில் நெருப்பு
·   வலப்புறம் அன்ன வடிவில் ப்ரம்மா,
·   இடப்புறம் பன்றிவடிவில் திருமால்
வேறு பெயர்கள்
 
லிங்கோற்பவர்
திருவிலங்கம்
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
 
  • ஜலநாத ஈஸ்வரர், திருவூறல், (தக்கோலம்)
  • திருமெய்ஞானம் – தஞ்சை மாவட்டம்
  • தேவிகாபுரம், பெரியநாயகி அம்மன் கோயில்,ஆரணி வட்டம் –  திருவண்ணாமலைமாவட்டம்
  • ஏகாம்பரநாதர் கோவில் – காஞ்சிபுரம்
  • திருக்கலயநல்லூர் (சாக்கோட்டை)
  • திருகோடிக்காவல்
  • முக்தீஸ்வரர் ஆலயம், – மதுரை –  அன்னமும், பன்றியும் தோற்ற பிறகு சுயம் உணர்ந்து தாளில் இருக்கும் வடிவம்
  • சத்யகிரி சிவ குகை – திருமயம்
  • நல்துணை ஈஸ்வரம் – புஞ்சை
  • ப்ரம்மபுரீஸ்வரர் – புள்ளமங்கை
  • ப்ரஹதீஸ்வரர் – தஞ்சாவூர்
  • திருபுவனம்
  • ஸ்ரீ சந்தரேசுவரர் கோயில் – அருப்புக்கோட்டை
  • பால்வண்ண நாதர் கோயில்  – கரிவலம் வந்தநல்லூர் –  திருநெல்வேலி மாவட்டம்
  • தாணுமாலய சுவாமி திருக்கோயில் –  சுசீந்திரம் 
  • கயிலைநாதர் கோயில் – காஞ்சிபுரம் (எட்டு தோள்களுடன் கூடிய லிங்கோத்பவர்)
  • மலைக் கொழுந்தீஸ்வரர் குகைக் கோயில் – குன்றக்குடி
  • கோமேஸ்வரர் ஆலயம் – பனகல், நளகொண்டா வட்டம், ஆந்திர மாநிலம் 
  • குடிமல்லூர்
  • பிள்ளையார்பட்டி
  • திருச்செட்டாங்குடி
  • நாகப்பட்டினம்
  • கூவம்
  • கூளம்பந்தல்
இதரக் குறிப்புகள்
 
அடிமுடி தேடிய கதை  விவரிக்கப்பட்டுள்ள நூலகள்
ருக்வேதசம்ஹிதை
சரபோப நிஷத்
லிங்க புராணம்
கூர்ம புராணம்
வாயுபுராணம்
சிவ மகா புராணம்
உபமன்யு பக்த விலாசம்
மகா ஸ்காந்தம்
நாரதம்
கந்த புராணம்
அருணகிரி புராணம்
சிவராத்ரி புராணம்
அருணாசல புராணம்
உதவி : சைவ சித்தாந்தம் மற்றும் வலைத் தளங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

2038 – T.V Serialsssssss

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)
1.
சார், உங்களுக்கு கல்யாணம் ஆகுணும்னா நீங்க செய்ய வேண்டியது எல்லாம் ரொம்ப ஈசி. கார்த்தின்னு பேர் வச்சிங்க. காமாட்சின்னு ஹீரோயின் பேரு வைச்சிப்போம். எங்க சீரியல நடிங்க. உங்களுக்கு கல்யாணம் ஆகிடும்.
2.
என்னா அநியாயமா இருக்கு. எங்க காலத்துல 1000 எபிசோட் வந்தா பெருசா கொண்டாடுவாங்க. இப்ப என்னடான்னா, 20000 எபிசோட் மேல வர சீரியலுக்கு கூட ஒரு கொண்டாட்டமும் இல்லயே.
3.
30 நிமிடம் இடைவெளி இல்லா சீரியல் இன்றுநாசமா போறவனே, கட்டைல போறவனே போன்ற அழகு வசனங்கள்.
4.
வீட்டு பெண்மணிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு. . எவ்விதஇடஞ்சல் இன்றி சீரியல் பாருங்கள். உங்கள் வீட்டிற்கே Breakfast/Lunch/Dinners வந்து  சப்ளை செய்கிறோம்.
5.
TRB ரேட்டிங் ஏறவேமாட்டேங்குது சார், என்ன செய்யலாம் சார்?
அது பெரிய மேட்டரே இல்ல. ஒரு வெள்ளிக்கிழமை புருஷன் பொண்டாட்டியை அடிச்சு காயப்படுத்துற மாதிரி முதல் 7 நிமிஷம் காமிக்கலாம். அடுத்த 2 நிமிஷம் பொண்டாட்டி அழுவுற மாதிரி சீன் கடைசி 5 நிமிஷம் பொண்டாட்டியை சாகடிக்கிறதை லைவ்ல காமிக்கலாம்.


Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருக்கள்ளில்

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருக்கள்ளில்
·   சிவன் – சுயம்பு மூர்த்தி,சதுர ஆவுடையார்
·   சிவன் சக்தி தெட்சணாமூர்த்தியாக
·   இடது கையினில் அமுத கலசம், ஏடு தாங்கி அம்பாளை தழுவிய கோலம்
·   பிருகு முனிவர் இக்காட்சியினை வணங்கியபடி கோலம்
·   அகத்தியருக்கு திருமண காட்சிக் கோலம் காட்டிய இடத்தில் ஒன்று
·   அகத்தியர் பூஜித்த லிங்கம்
·   திருஞானசம்மந்தருக்கு பூண்டி தலத்தில் பூஜை பொருள்களை மறையச் செய்து இத்தலத்தில் பூஜைப் பொருள்கள் காட்சி.
·   கஜபிருஷ்ட விமானம்
 
தலம்
திருக்கள்ளில்
பிற பெயர்கள்
திருக்கண்டலம், திருக்கள்ளம்
இறைவன்
சிவாநந்தீஸ்வரர், சோமாஸ்கந்தர், திருக்கள்ளீஸ்வரர்
இறைவி
ஆனந்தவல்லி
தல விருட்சம்
கள்ளில், அலரி
தீர்த்தம்
நந்தி தீர்த்தம்
விழாக்கள்
திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி, திருவாதிரை, கந்த சஷ்டி.
மாவட்டம்
திருவள்ளுர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 12 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில், திருக்கண்டலம்- 601 103.
ஊத்துக்கோட்டை தாலுகா,
திருவள்ளூர் மாவட்டம்.
+91-44 – 2762 9144. +91- 99412 22814
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர்
நிர்வாகம்
இருப்பிடம்
சென்னை – பெரியபாளையம் சாலையில் (36 கி.மீ.,) கன்னிகைப்பேர் என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து 4 கி.மீ., சென்று இத்தலத்தை அடையலாம்.
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 251 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   18 வது தலம்.
சிவாநந்தீஸ்வரர்
ஆனந்தவல்லி
பாடியவர்                     திருஞானசம்பந்தர்
திருமுறை                    1ம் திருமுறை 
பதிக எண்                    119
திருமுறை எண்               3
பாடல்
ஆடலான் பாடலா னரவங்கள் பூண்டான்
ஓடலாற் கலனில்லா னுறை பதியால்
காடலாற் கருதாத கள்ளின் மேயான்
பாடெலாம் பெரியார்கள் பரசு வாரே.

பொருள்
ஆடல் பாடல்களில் வல்லவனும், பாம்புகளை அணிகலன்களாக அணிந்தவனும், உண்ணுவதற்கு தலை ஓடு அன்றி வேறு எதுவும் இல்லாடவனும், சுடுகாட்டினைத் தவிர வேறு இடத்தை தனது இடமாக கொள்ளாதவனும் ஆகிய சிவன், பெரியோர்கள் அவன் பெருமை வாய்ந்த புகழைப்பாட கள்ளில் எனும் தலத்தில் உறைகிறான்.
கருத்து
 
ஆடலான் பாடலா னரவங்கள் பூண்டான் – நடராஜ வடிவம்.
ஓடலாற் கலனில்லா னுறை பதியால் – பைரவ வடிவம்
அரவம் – பாம்பு.
கலன் – உண்கலன்.
பாடு – பெருமை.
பாடியவர்                     திருஞானசம்பந்தர்
திருமுறை                    1ம் திருமுறை 
பதிக எண்                    119
திருமுறை எண்               9
பாடல்
 
வரியாய மலரானும் வையந் தன்னை
உரிதாய வளந்தானு முள்ளு தற்கங்
கரியானு மரிதாய கள்ளின் மேயான்
பெரியானென்றறிவார்கள் பேசு வாரே.
 
பொருள்
சிவந்த வரிகளை உடைய தாமரை மலரை இருப்பிடமாக கொண்ட பிரமனும், உலங்களை தனக்கு உரித்தானக்க அதை அளந்த பிரானாகிய திருமாலும், நினைப்பதற்கு அரியவனாகி இருக்கும் பெருமானாகிய இறைவன், கள்ளில் என்ற தலத்தில் உறைகிறான்.அவனை அறிந்தவர்கள் அவனை பெரியோன் என்று புகழ்வார்கள்.
கருத்து
 
வரி – செவ்வரி.
அவனை அறிந்தவர்கள் அவனை பெரியோன் என்று புகழ்வார்கள். – அவனை அறியாதவர்கள் பேச மாட்டார்கள் என்பது குறிப்பு.

புகைப்படம் : தினமலர் மற்றும் வலைத்தலங்கள்
 
 
 

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

இவ்வாறு வேதம், சிவாகமம் என்று இரண்டு நூல்கள் தேவைஇல்லை என்று கூறுதல் வேத நிந்தை ஆகுமா?

ஆகாது. ஏனெனில் இரண்டுமே ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன். சிவாகம ஞானம் அடைய வேதம் முக்கியம். வேதம் மட்டுமே தெரிவதால் ஞானம் அடைதல் தேவை இல்லை என்று கூற இயலாது. எனவே சரியை, கிரியை, யோகம்   இவற்றால் அடையப்பெறும் ஞானம் மிக முக்கியம்.
எனில்  சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய  சனகாதி முனிவர்களுக்கு ஈஸ்வரன் அருளியது வேதமா அல்லது சிவாகமமா?

முதலில் சுருக்கமான வேதத்தையும் அது குறித்து அவர்கள் தெளிவடையாமையால் பின்னர் சிவாகமத்தையும் விரிந்துரைத்தார்.
வேதம் மற்றும் சிவாகமங்களின் தோற்றத்தில் கால வேறுபாடு உண்டா? அவைகள் எப்போழுது தோன்றின?

சிவனின் ஊர்த்துவ முகமாகிய ஈசான்யத்தில் இருந்து 28 சிவாகமங்களும், மற்ற நான்கு முகங்களாகிய தத்புருஷம், அகோரம், வாம தேயம், சத்யோஜாதம் ஆகியவற்றில் இருந்து நான்கு வேதங்களும் ஒரே காலத்தில் தோன்றின.
ஆகமங்கள் ஐந்து வகைப்படும் என்றும் அவை லௌதிகம், வைதிகம், அத்தியான்மீகம், அதிமார்கம் மற்றும் மாந்திரம் எனப்படும் என்று கூறப்படுகின்றன.இவைகள் சிவாகமத்தின் பகுதியா?

மாந்திரம்சிவாகமம்
லௌதிகம்இகலோக வாழ்வு
வைதிகம்காலாந்திரம்
அத்தியான்மீகம்ஆன்ம விசாரம்
அதிமார்கம்யோகமார்க அறிவு
காமிகாதி இருபத்திஎட்டு ஆகமங்களுக்கு வேறாக அல்லது அதிகமாக வேறு சிவாகமங்கள் உண்டா?

காமிகாதிகளை முதன்மையாகக் கொண்டு குரு முதலிய இருடியர் செய்த உபாகமங்கள்(உப+ஆகமங்கள்) இருநூற்று ஏழு  ஆகும்.

Loading

சமூக ஊடகங்கள்

ஆகாய அலைகள்

ஆற்று நீரின் வாசம்
மனதுக்குள்.
நேர் எதிரில் நிலா.
மெதுவாய் பாதம் பிடித்து விடுகிறேன்.
இதழ் வழி புன்னகைப் பூக்கிறாய்.
பேச்சுக்கள் தொடர்கின்றன.
நேர் மேலே நிலா.
‘தேகம் பொய்’ எனில்
‘நினைவுகளும் பொய்யா’ என்கிறேன்;
என்றைக்குமான புன்னகையை வீசுகிறாய்.
சுற்றிலும் கொட்டிக்கிடக்கின்றன
பூக்களும் நினைவுகளும்.
பதிலுக்காக மீண்டும்
கேள்வி தொடுக்க துவங்குகிறேன்.
அறை எங்கும் ஒலிக்கிறது ஒரு குரல்.
வேளா வேளைக்கு சோறு தின்னுட்டு
சாமி கும்பிடாம
என் உயிர எடுக்கிறான் உங்கப்பன்‘.

புகைப்படம் : R.s.s.KClicks

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 12

விலக்கப்பட்ட மனிதர்களின் நேசிப்புகள் உண்மையானவைகள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கருப்பு மிகவும் அழகான நிறம். ராமர் கருப்பு, கிருஷ்ணர் கருப்பு, அந்த… (அட சே…) அதனால் கருப்பாக இருப்பதற்காக மகிழ்வு அடைவோம். இப்படிக்கு பெரிய fair and lovely  வாங்குவோர் சங்கம்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
அஹோரிகள் அழுவதில்லை
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கனவு காண்பது கண்கள், நிஜத்தில் வாழ்வது நெஞ்சம்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
எதிரியை காயப்படுத்த மௌனத்தை விட சிறந்த ஆயுதம் இல்லை
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கருணை அற்றுச் செல்லும் காலங்களில் கனவுகளுடன் வாழ்பவன் தானே மனிதன்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
 உறக்கங்கள், மீளா உறக்கங்களை ஒத்து இருக்கின்றன.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
ஒவ்வொரு தெருக் கூத்தாடியும் நினைவு படுத்துகிறான் வாழ்வினையும், பொருள் பெறுவதும் மட்டுமே வாழ்வு   என்று.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கடக்கும் பொழுதுகளை விட கடந்த பிறகான ஒய்வுறுதல் மிக்க ஆயாசம் தருகிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தேசம் வென்றவரைவிட
தேகம் வென்றவரையே கொண்டாடுகின்றன
உலகங்கள்

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!