சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

இவ்வாறு வேதம், சிவாகமம் என்று இரண்டு நூல்கள் தேவைஇல்லை என்று கூறுதல் வேத நிந்தை ஆகுமா?

ஆகாது. ஏனெனில் இரண்டுமே ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன். சிவாகம ஞானம் அடைய வேதம் முக்கியம். வேதம் மட்டுமே தெரிவதால் ஞானம் அடைதல் தேவை இல்லை என்று கூற இயலாது. எனவே சரியை, கிரியை, யோகம்   இவற்றால் அடையப்பெறும் ஞானம் மிக முக்கியம்.
எனில்  சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய  சனகாதி முனிவர்களுக்கு ஈஸ்வரன் அருளியது வேதமா அல்லது சிவாகமமா?

முதலில் சுருக்கமான வேதத்தையும் அது குறித்து அவர்கள் தெளிவடையாமையால் பின்னர் சிவாகமத்தையும் விரிந்துரைத்தார்.
வேதம் மற்றும் சிவாகமங்களின் தோற்றத்தில் கால வேறுபாடு உண்டா? அவைகள் எப்போழுது தோன்றின?

சிவனின் ஊர்த்துவ முகமாகிய ஈசான்யத்தில் இருந்து 28 சிவாகமங்களும், மற்ற நான்கு முகங்களாகிய தத்புருஷம், அகோரம், வாம தேயம், சத்யோஜாதம் ஆகியவற்றில் இருந்து நான்கு வேதங்களும் ஒரே காலத்தில் தோன்றின.
ஆகமங்கள் ஐந்து வகைப்படும் என்றும் அவை லௌதிகம், வைதிகம், அத்தியான்மீகம், அதிமார்கம் மற்றும் மாந்திரம் எனப்படும் என்று கூறப்படுகின்றன.இவைகள் சிவாகமத்தின் பகுதியா?

மாந்திரம்சிவாகமம்
லௌதிகம்இகலோக வாழ்வு
வைதிகம்காலாந்திரம்
அத்தியான்மீகம்ஆன்ம விசாரம்
அதிமார்கம்யோகமார்க அறிவு
காமிகாதி இருபத்திஎட்டு ஆகமங்களுக்கு வேறாக அல்லது அதிகமாக வேறு சிவாகமங்கள் உண்டா?

காமிகாதிகளை முதன்மையாகக் கொண்டு குரு முதலிய இருடியர் செய்த உபாகமங்கள்(உப+ஆகமங்கள்) இருநூற்று ஏழு  ஆகும்.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *