![]()
தேடல்
தத்துவ சாஸ்திரத்தின் படி ஒரு பொருளை அடையாளம் காண (கடவுள் என்று கொள்வோம்)மூன்று வழிகள் உண்டு.(நாஸ்திக தர்சனம் – இங்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை)
1.அனுபவம்
2.அனுமானம்
3.ஆப்தவாக்கியம்.
1.அனுபவம் – தன்னால் தானே காண்பது. எனக்கு இதற்கு முன்பு நிகழ்ந்திருக்கிறது. அது போலவே இதற்கும் முடிவு எடுக்க வேண்டும். (நேற்று பூஜைக்கு வாங்கிய மலர்கள் அருமை. எனவே மீண்டும் அங்கேயே வாங்க வேண்டும்)
2.அனுமானம் – பெற்ற அனுபவம் கொண்டு (தான் மற்றும் பிறர்) முடிவெடுத்தல். (பூக்கடையில் நல்ல கூட்டம். வரலட்சுமி விரதம் வேறு. ரூ.50/- சொல்வான்)
3.ஆப்தவாக்கியம் – விவரம் அறிந்தவர்கள் சொல்வதை கேட்பது. (அங்க வாங்கு, நிச்சயம் விலை மலிவு)
தேடுதலைத் தொடர்வோம்..
![]()
தடுமாற்றம்
வெளியே புறப்படும் போது, தடுமாறினால் வீட்டிற்கு வந்து நீர் அருந்தி செல்வது எதனால்?
ஆன்மீகம் – போகும் காரியத்தில் தடங்கல் வரும்.
அறிவியல் – தடுமாற்றம் என்பது, தெளிவற்ற மனநிலையக் குறிக்கிறது. மன ஒருமை இன்மையே தடுமாற்றத்திற்கு காரணம். நீர் அருந்துதல் என்பது அமைதிப் படுத்துதல். சுவாசம் சீராகும். பதறாத காரியம் சிதறாது.
![]()
கருடனின் பிறப்பு – 1
கருடனின் பிறப்பு (சிறிய வடிவில் – மூலம் – மகாபாரதம் – M. V. ராமானுஜாச்சாரியார்)
கத்ரு, வினதை இரு அரசிகள்.
கத்ரு – நாகங்களின் தாய்
வினதை – அருணன் மற்றும் கருடனின் தாய்.
ஒரு முறை வானில் வெள்ளைக் குதிரை பறந்து செல்கிறது.
அப்போது அதன் வால் கருப்பாக இருப்பதாக கத்ரு உரைக்கிறாள். வெள்ளையாக இருப்பதாக வினதை உரைக்கிறாள். யார் தோற்றாலும் ஒருவர் மற்றவருக்கு 1000 வருடம் அடிமையாக வேண்டும் என்று முடிவாகிறது.
அன்று இரவு கத்ரு தனது மகன்களான நாகங்களை அழைத்து, அவைகள் வாலில் தங்கும் படி கேட்டுக் கொள்கிறாள். அதனால் ‘வால் கருப்பாக தெரியும் ‘என்றும், ‘நான் ஜெயித்து விடுவேன்’ என்றும் உரைக்கிறாள். நாகங்கள் ‘நீ தவறு செய்கிறாய்’ என்று உரைக்கின்றன. அவள் கேட்கவில்லை. பின்பு அவைகள் ஒத்துக் கொள்கின்றன. போட்டியில் கத்ரு வெற்றி பெற்றதாக அறிவிக்கப் படுகிறது.
வினதை அடிமையாகி விடுகிறாள்.
அப்பொழுது வினதை கருவுற்றிருந்தாள். அவளிடம் இரு முட்டை இருந்தது.
500 வருட காலம் காத்திருந்தும் எதுவும் நிகழவில்லை. ஒரு முட்டையை உடைத்து விடுகிறாள். அதிலிருந்து அருணன் வெளிவருகிறார். ‘அவசரப் பட்டு உடைத்து விட்டாய் தாயே, இன்னும் ஒரு 500 வருட காலம் காத்திரு, மிகவும் பலசாலியாகவும், மிகவும் புத்திசாலியுமான ஒரு மகன் பிறப்பான்’ என்று கூறி மறைந்துவிடுகிறார்.
பின்பு..
(தொடரும்)
![]()
சைவ சித்தாந்தம்
சைவ சித்தாந்தம் – சிந்தனை
பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில் – என்று ஆரம்பிக்கிறது. பதி குறித்தே தொடக்கம் எனினும், ‘பசு'(உயிர்) குறித்த அறிவு ஏற்பட்ட பின் ‘பதி’ குறித்த உணர்வு வரும் என்பது என் கருத்து.
எனவே பசு தொடங்கி விளக்கம் ஆய்வோம்.
பொதுவாக உயிர்களின் நிலையாமையைச் சொல்லி இறைவனை நாடச் சொல்லுதல் சைவ மரபு. (உ.ம் – திருமந்திரம் – உயிர் நிலையாமை, யாக்கை நிலையாமை )
நிலைத்திருத்தல் என்பது எல்லா காலங்களிலும் நிலைத்திருத்தல் (அழிவற்றதாக) என்பதாகக் குறிக்கப்படும்.
அவ்வாறு அல்லாது,
1. உடம்பு அழியக்கூடியது. (தேகம்)
2. பிரபஞ்சம் அழியக்கூடியது. (உ.ம் பிரளயம், ஊழிப் பெருங்காற்று)
3. பிரபஞ்சதின் உட் பொருட்களும் அழியக் கூடியது. (மரம், செடி)
அழியும் பொருள் ஒன்று எனில், அழியாப் பொருளும் இருக்கக் கூடும்.
எனவே அவைகள் அசித்து எனவும், சித்து எனவும் வழங்கப்படும்.
சித்து – அழியாதது.
அ – சித்து – அழியக் கூடியது.
கருத்து கனமானது என்பதால் மீண்டும் தொடர்வோம்.
(மிக அதிக அளவில் இக்கருத்துக்களை அறிந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னை மன்னிப்பார்களாக)
![]()
தபஸ்
வார்த்தைகளில் பொருள் ஏற்றி
விளையாடும் பொழுதுகள்
உனக்கும் எனக்கும் புதியவை அல்ல.
‘என்னைப் பிடிக்குமா’ என்கிறாய்.
‘மிகவும் பிடிக்கு’ம் என்கிறேன்.
‘எனக்காக உன்
பெயரை மாற்றிக் கொள்வா’யா என்கிறாய்.
‘மாற்றங்கள் அற்றது என் வார்த்தைகள்’ என்கிறேன்.
‘நேசித்தலில் மறத்தல்
ஒரு பகுதி தானே’ என்கிறாய்.
‘உன் பெயர் மறக்கப்படும்
நாளில் என் பெயர் பிணம்’ என்கிறேன்.
கார்காலக் குறிப்புகள் உன் கண்களில்.
![]()
2038 – சினிமா
2038-சினிமா
இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.
இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.
(நானும் எவ்வளவு நாள் தான் நல்லவனாவே நடிக்கிறது.)
சினிமா
——-
1.
சின்ன பட்ஜெட்ல படம் எடுக்கணும்.
இப்ப மினிமம் பட்ஜெட்னா ஆயிரம் கோடிதான்.
2.
கமலின் அடுத்த படைப்பு, சதாவதாரம். 2008ல் தசாவதரம் எடுத்தார். தற்போது சதாவதாரம். 100 முக்கிய வேடங்களில்.
3.
பிரசன்னா ஸ்னேகா – பிரிவுக்குக் காரணம் என்ன?
பிரசன்னா ஸ்னேகா மகன் மற்றும் மகள் தீபாவளிக்கு வீட்டுக்கு வந்து ஊருக்கு சென்றார்கள். ஸ்னேகா அவர்களுடன் சென்றுள்ளார். பிரிவு ஏற்படாமல் இருக்க எங்களிடம் மொபைல் வாங்குங்கள்.
![]()
வடக்கில் தலை வைத்து உறங்குதல்
வாழ்வாங்கு வாழ்ந்தாலும் வடக்கில் வைத்து உறங்குதல் கூடாது?
ஆன்மீகம் – கைலாச மலை வடக்கில் இருக்கிறது. அதனால் வடக்கில் தலை வைத்து உறங்கக் கூடாது.
அறிவியல் – உடல் முழுவதும், தலை முதல் கால் வரை ஒரு காந்த சக்தி எப்பொழுதும் எல்லோருக்கும் ஓடிக் கொண்டிருக்கும். தலையை வடக்காகவும், பாதங்களை தெற்காகவும் வைத்து அது இயங்குகிறது. வடக்கில் தலை வைத்து உறங்கும் போது, வட புலமும், வட புலமும் அருகினில் வரும். தொடர் உறக்கத்தின் காரணமாக தலைவலி மற்றும் அதிக மன நோய்கள் ஏற்படும்.
![]()
இரவுகளின் நீட்சிமை
ஜனனி
தங்க கொலுசுகள் அணிதல் கூடாது ஏன்?
தங்க கொலுசுகள் அணிதல் கூடாது ஏன்?
ஆன்மீகம்
மஹாலக்ஷ்மி சம்மந்தப்பட்டது. அதனால் தெய்வத்திற்கு மரியாதை தர வேண்டும்.
![]()
மகா மாயா
கோயிலை வலம் வருதல்
பரிகாரங்களுக்காக கோயிலை வலம் வருதல் வழக்கமாக இருப்பது ஏன்?
ஆன்மீகம் – எல்லா கோவில்களுக்கும் ஒவ்வொரு விதமான ஆற்றல் இருக்கும். அவைகள் நம்மீது படும் போது நம்மில் செயல் இழந்து இருக்கும் ஆற்றல் வலிமை பெறும்.
அறிவியல் –
1. பழமையான கோவில்களின் சுற்றளவுகள் மிகவும் பெரியவை. நடந்து செல்லுதல் அல்லது வலம் வருதல் என்பது இரத்த ஓட்டதை அதிகப்படுத்தும்.
2.
முழுமையான சுவாசம் நடைபெறும். அதனால் இதயத் துடிப்புகள் சீராகும்.
3.புதிய மனிதர்களை/பழைய நண்பர்களை சந்திப்பதால் மன நிலையில் மிகப் பெரிய மாறுதல் நிகழும்.
![]()
குருஷேத்ரம்
2038
2038
இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.
இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.
(நானும் எவ்வளவு நாள் தான் நல்லவனாவே நடிக்கிறது.)
பல் வேறு தலைப்புகளில் எழுத உள்ளேன். சில தலைப்புகள்.
இலக்கியம்
சினிமா
சமூகம்
வாழ்க்கை
அறிவியல்
பொருளாதாரம்
இலக்கியம்
——————
இந்த வருடத்திற்கான இலக்கிய பாடல்.
எனக்கு கண்வலி ஏன் தெரியுமா?
கண்ணே
உன் ரோஜா பார்வை பட்டதால்.
மேற்கண்ட கவிதை ரூ.1,00,000/-. பரிசு பெறுகிறது.
சினிமா
———–
தலைவர் ரஜினியின் மற்றும் ஒரு மகுடம். கல்லூரிக் காலங்கள். பழம் பெரும் நடிகை லக்ஷ்மி மேனனின் மகள் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
சமூகம்
———–
பூட்டிய வீட்டினில் 1 லி. தண்ணீர் திருட்டு.
வாழ்க்கை
—————
அரிஷ்டநேமி, நீ ஏன் எப்ப பாத்தாலும் பசி பட்னின்னு கவித எழுதுற.
இதுக்கு 5623 like
இது சும்மா சாம்பிள் தாம்மா. மெயின் பிச்சர் பாரு.
![]()
படைப்பின் பயணம்
ஆதியில் விசித்திரங்களை ஈனும் பூமியில்
நான் விழுந்த போது
எனக்கு சிறகுகள் இருந்தன.
அப்போது நீர்ப் பரப்பு சலனமற்று இருந்தது.
சில பறவைகளுக்கு சிறகுகள் இருந்தன
பல பறவைகளுக்கு சிறகுகளில் முட்களும் இருந்தன.
பல பறவைகள் சிறகுகள் அற்று.
ஏன் இந்த நிகழ்வுகள் என்றேன் அவைகளிடம்.
மாயையின் தோற்றம் படா இடங்களில் சிறகுகள் இருக்கும்;
சந்தோஷ வாழ்வுடன் கோபங்களை வீசியவைகளுக்கும்,
கோபத்தில் தடித்த வார்த்தைகளை வீசியவைகளுக்கும்,
சிறகுகளில் முட்கள் இருக்கும்;
வாழ்வினை கொண்டாடத் தெரியாதவைகளுக்கு
சிறகுகள் அற்று இருக்கும்
என்றும் பகர்ந்தன.
பதிலின் வசிகரத்தில் ‘எனக்கு என்ன ஆகும்’
என்று வினா ஒன்று எழுப்பினேன்
‘விடை தேடுதல் தான் வாழ்வு’ என்று கூறி
அவ்விடம் விட்டு அகன்றன.
தொலை தூரத்தில்
மேகக் கூட்டங்களின் சாயைகள் நீரினில்.
அப்போதும் நீர்ப் பரப்பு சலனமற்று இருந்தது.
![]()
அணையா அடுப்பு
யாத்திரை
காதல் = பக்தி இலக்கியம்
காதலில் பல வகைகள் உண்டு. பக்தி இலக்கியங்கள் அதனை பெரிதும் பின்பற்றுகின்றன.
தன்னை தலைவியாகவும், இறைவனை தலைவியாகவும் இந்த இலக்கிய காதல்கள் போற்றுகின்றன.
திருநாவுக்கரசரின் பின்வரும் பாடல் அதனை நன்கு விளக்குகிறது.
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.
கேட்டு, கண்டு, உணர்தல் அங்கே நிகழ்கிறது. காட்சிகள் விரிகின்றன.
தோழியினடத்தில் கேட்கிறாள்.
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் – முதலில் அவனது பெயர் என்ன என்று கேட்கிறாள்.
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள் – அவனது உருவ அமைப்புப் பற்றி கேட்கிறாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் – அவனது சொந்த ஊர் பற்றி கேட்கிறாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள் – பின் அவன் பொருட்டு பைத்தியமாகிறாள்.
இவ்வடிவத்தில் முக்கியமானதொரு விஷயம் ‘கேட்கிறாள்’.’கேட்கிறாள்’ என்ற நிலை தன்னை இழந்த நிலை. காதும் மனமும் வேறு வேறு வேலையைச் செய்கின்றன்.
காதல் எத்தனை விஷயங்களை செய்கிறது என்ற பட்டியல்.
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அன்னையையும், மற்ற எல்லாவற்றையும் விலக்குகிறாள். ‘நீத்தாள்’ – மீண்டும் திரும்ப முடியாத நிலை. (உ.ம் நீத்தார் விண்ணப்பம் – மாணிக்கவாசகர். அன்னையை எவ்விதத்திலும் விலக்க முடியாது என்பது துணிபு. ஆதிசங்கரர், பட்டினத்தார்)
எல்லா இடங்களுக்கும்/வீடுகளூக்கும் என்று சில ஆசாரங்கள் இருக்கின்றன. இங்கே ஆசாரங்கள் என்பது பழக்க வழக்கங்கள். அதை விட்டு விலகினாள்.
தன்னை மறந்து விடுகிறாள். தன் பெயரையும் மறந்து விடுகிறாள். இரண்டும் வெவ்வேறு நிலைகள். முதல் வகை குறுகிய காலம் குறித்தது. இரண்டாவது நீண்ட காலம் குறித்தது.
அவனது தாளை சரணடைந்தாள்.
வாருங்கள் நமது பொக்கிஷங்களை பேணிக்காப்போம்.
![]()



















