![]()
சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்
குற்றமற்ற ஒன்றும், இயக்க வல்லமை உடையதும், முற்றும் உணர்ந்த ஒருவன் இருக்க வேண்டும். அவனால் மட்டுமே குற்றம் உடைய ஆன்மாக்களை சரி செய்ய முடியும். (தேர்வு எழுதுவனை கண்காணிக்கும் கண்காணிப்பாளர் போல்). அந்த நிலைக்குப் பெயர் சர்வஞ்ஞத்வம்.
எல்லா பொருள்களை அறிவிக்கவும் அதனை அசைவிக்கவும் அவனால் முடியும் எனவே அவன் சர்வவியாபகன்.
பசுவாகிய தன்னை கட்டுப்படுத்த வேறு ஒரு பதி வேண்டும். அவன் எல்லா காலங்களிலும் (பிரளய காலம் உட்பட) எல்லா காலத்திலும் இருப்பதால் நித்யதத்துவம் உடையவன்.
![]()
தேவைகள்
2038 – போக்குவரத்து
1.
இன்னைக்கு ரொம்ப நல்ல நாள்.
ஏன்?
பீச்ல இருந்து தாம்பரம் வரைக்கும் வண்டில ஒரு அவர்ல வந்துட்டேன்.
2.
திருவான்மீயூர் – ஒவ்வொரு வீட்டிற்கும் 10 கார் 20 டூவீலர் இருக்கிறது by RTO. (தற்போது – 2 கார், 3 டூவீலர்)
3.
வாகன விற்பனை குறைவால் எல்லா வாகனமும் உற்பத்தி 0.25 அவருக்கு நிறுத்தி வைப்பு.(தற்போது 1 வாரம்)
4.
எல்லாரும் 10000 ரூ நோட்டா கொடுத்தா என்ன செய்யறது. ரூ 1000மா கொடுங்க.
5.
உங்க வண்டிய 125வது மாடியில பார்க் பண்ணுங்க, ஒரு நிமிஷத்திற்கு ரூ. 100/-
![]()
மனக் குறுக்கம்
பெண் – இளமை துறத்தல்
வந்த சிவனடியார் அமுது உண்டு சென்றார்.
பரம தத்தன் பசியோடு வீடு திரும்பினான். புனிதவதியார் அமுது படைத்தார். அதோடு மாங்கனியையும் படைத்தார்.
மிகுந்த பசியோடு இருந்ததால் அவன் சொன்னான் ‘இன்னொன்றை எடுத்து வந்து இடுக’. கணவன் மனைவி இருவருக்கும் இரட்டைகள் என்பது பொதுவானது. (இன்பத்திலும் துன்பத்திலும், வாழ்விலும் தாழ்விலும் – திருமண மந்திரம்). இது விடுத்து அவன் தான் மட்டும் உண்ண நினைத்தது தவறானது.
புனிதவதியார் திகைத்தார். இறைவனிடம் சென்று வேண்டினார். மற்றொன்று கிடைத்தது. அதனை அவனிடம் கொடுத்தார் புனிதவதியார். இது வரை அறையா சுவையாக இருந்தது. காரணம் வினவினான் பரம தத்தன்.
நடந்ததை விளக்கிச்சொன்னார் புனிதவதியார்.
பரம தத்தன் நம்பவில்லை. அவன் கூறினான். ‘அப்படி எனில் மற்றொன்றை இடுக’.
புனிதவதியார் இறைவனிடம் வேண்டினார். மற்றொன்று கிடைத்தது.
அதைக் கொண்டுவந்து பரம தத்தனின் கைகளில் அதை இட்டதும் அவன் அதை வாங்கினான். வாங்கியதை உணர்ந்ததும் அது மறைந்து விட்டது. பரம தத்தன் திகைத்தான். அவன் சொன்னது ‘மற்றொன்றை இடுக’ என்றுதானே அன்றி அதை தான் உண்ண வேண்டும் என்று சொல்லவில்லை. எனவே இட்ட உடன் மறைந்து விட்டது.
பரம தத்தன் தெய்வத்திற்கு தீங்கு இழைத்து விட்டதாக நினைத்தான். எனவே வியாபார நிமித்தமாக கடல் மார்க்கமாக பயணம் தொடந்தான்.
நம் பயணமும் கடல் மார்க்கமாக தொடர்கிறது.
![]()
சம்சயம்
மிலேச்ச தேசம்
ஒருபுள்ளியில் உருவம் அற்று
வெற்றிடத்தில் வேண்டுவன தந்து
தவித்து, தனித்து
நிழலாடி
கனவினை விதைக்கிறது
உன் வரைபடங்கள்.
எண்ணப் பகிர்தலுக்கு
எதிர் அணியில் நான்.
காட்சிகள் கவிதையாக்கம்
கொள்கின்றன.
எட்டும் தூரத்தில் ஒரு குரல்
‘கட்டைல போறவன்
தின்னுட்டு சாமி கும்பிட வேண்டியதுதானே’
*மிலேச்ச தேசம் – மரபுகளைக் கைவிட்ட தேசம்
![]()
குடிப்பிறப்பு
மஹாபாரதம் – சாந்தி பர்வத்தில் வரும் கதை.
குட்டி ‘அம்மா, ஒரு கத சொல்லேன்’
அம்மா ‘அன்னைக்கு ஒடினல, இப்ப ஏன் கத கேக்கற’
குட்டி ‘சரிம்மா. ஒரு டாக் கத, ஒரு எலிஃப்னெட் கத சொல்லு’
அம்மா ‘ஒரு ஊர்ல ஒரு ரிஷி இருந்தாராம்.
குட்டி ‘பெரிய தாடி வச்சிகிட்டா?’
அம்மா ‘குறுக்க பேசாத,அவர்கிட்ட ஒரு நாய் இருந்துதாம்’
குட்டி ‘ஜிம்மி மாதிரியா’
அம்மா ‘குறுக்க பேசாத, பேசினா கத சொல்ல மாட்டேன்’
குட்டி ‘சரி’
அம்மா ‘நாய் ரொம்ம சாதுவாம். சமத்தா சாப்பிடுமாம், சமத்தா தூங்குமாம். அவருகிட்கவே இருக்குமாம்’
குட்டி ‘ம்’
அம்மா ‘ஒரு நாள் ஒரு சிறுத்தபுலி நாய விரட்ட ஆரம்பிடுச்சாம். நாய் ரிஷி கிட்ட வந்து என்னைய சிறுத்தபுலியா கன்வர்ட் பன்னிடுங்க அப்பத்தான் நான் சிறுத்தபுலி கிட்ட இருந்து எஸ்கேப் ஆகமுடியும் அப்டின்னு சொல்லுச்சாம்’
குட்டி ‘ம்’
அம்மா ‘அவரும் நாயை சிறுத்தபுலியா மாத்தி காப்பாத்தினாராம்.
இன்னொரு நாள் ஒடிவந்து என்னைய யானை துரத்துது. என்னைய யானை ஆக்குங்க அப்டீன்னு சொல்லுச்சாம்.
அவரும் சிறுத்தபுலியை யானையா மாத்தி காப்பாத்தினாராம்.
இன்னொரு நாள் ஒடிவந்து என்னைய சிங்கம் துரத்துது. என்னைய சிங்கம் ஆக்குங்க அப்டீன்னு சொல்லுச்சாம்.
அவரும் யானையை சிங்கமா மாத்தி காப்பாத்தினாராம்’
குட்டி ‘ம்’
அம்மா ‘வாயில விரல வைக்காதே. வச்சா கத சொல்ல மாட்டேன்’
குட்டி ‘ம்’
அம்மா ‘இன்னொரு நாள் ஒடிவந்து என்னைய சரபமிருகம்(சரபேஸ்வரர் போன்றது) துரத்துது. என்னைய சரபமிருகம் ஆக்குங்க அப்டீன்னு சொல்லுச்சாம்.
அவரும் சிங்கத்தை சரபமிருகம் மாத்தி காப்பாத்தினாராம்.
அப்ப சரபமிருகத்திற்கு பயங்கர பலம் வந்துடுச்சாம். அப்பத்தான் அது யோசனை பண்ணுச்சாம். ‘ நம்மள இப்படி ஆக்கினது மாதிரி வேறயாரையாவது இப்படி ஆக்கி நம்ம மேல ஏவி விட்டா என்ன செய்யறது’
உடனே ரிஷி மேல பாய போச்சாம்.
ரிஷி சொன்னாராம், ‘ உனக்கு ஹெல்ப் பண்ணத்துக்கு இப்டியா செய்வ, அதனால நீ நாயா போ’
அதற்குள் குட்டி உறங்கி இருந்தாள்.
ரிஷி – அக்னிப்ரபர்
![]()
2038- ரியல் எஸ்டேட்
1.
சென்னைக்கு மிக அருகில் சுமார் 700 கி.மி (கன்யா குமரியில் இருந்து 10 கி.மி தூரத்தில்) இடம் விற்பனைக்கு
2.
எங்களிடம் திண்டிவனத்திற்கு அருகில் 100 பிளாட் வாங்குபவர்களுக்கு, 1கிராம் தங்கம் இலவசம்.
3.
எங்களிடம் இன்றே அடுக்கு மாடி குடியிருப்புகள் புக் செய்யுங்கள். சரியாக 2063ல் உங்களிடம் வீடு ஒப்படைக்கப்படும்.
4.
இங்க பாருங்க, இது எங்க நாய் கட்டி வைக்கும் இடம். அடுத்த நாய் வாங்குற வரைக்கும் அத வாடகைக்கு விடறோம். வாடகை – 1,00,000/- 100 மாசம் அட்வான்ஸ். புடிக்கலன்னா சொல்லிடுங்க, அடுத்த பார்டி வெயிட்டிங்.
5.
எங்களிடம் அடுக்கு மாடி குடியிருப்பு வாங்குபவர்களுக்கு முதல் மாதம் தினமும் 1லி தண்ணீர் இலவசம்.
![]()
முடிவற்றவைகள்
வெறும் தரையில் படுத்து உறங்கக் கூடாது. ஏன்?
![]()
நனைதல்
சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்
![]()
நெருப்பினை சுமத்தல்
பெருங்குரலுடன் முழுவதுமான
கரு நெருப்பினை சுமந்து ஒருவன்.
என்னை அவனிடத்திலிருந்து விலகச் சொன்னான்.
‘பேசினால் மற்றவர்களையும்
அது பற்றும் என்றும்’ சொன்னான்
பிறந்தது முதல்
நெருப்பினை சுமந்திருப்படதாகச் சொன்னான்.
பிறந்த நாளில் அதன் நிறம் மஞ்சளாக
இருந்தாகவும் ,
நாள்களின் வளர்ச்சியில்
பல நெருப்புகள் சேர்ந்ததாகவும்
அது சிகப்புடன் கூடிய நீலமாகவும்
தற்போது ஒளி குறைந்து
கருமையானது என்றும் உரைத்தான்.
உரைத்த பொருள் உணர்வதற்குள்
பரவியது என்மேலும் என்னுள்ளும்.
![]()
சோம்பல் தவிர்
மஹாபாரதம் – சாந்தி பர்வத்தில் வரும் கதை – தற்கால வடிவங்களுடன்.
குட்டி – அம்மா, ஒரு கத சொல்லேன்.
அம்மா – ‘ஒரு ஊர்ல ஒரு ஒட்டகம் இருந்துச்சா’
குட்டி – ‘ம்’
அம்மா – ‘அது சாமிகிட்ட தவம் இருந்து ஒரு வரம் வாங்கிச்சாம்’
குட்டி – ‘என்னான்னு’
அம்மா – ‘நான் நகந்து போகாம சாப்பிடனும், அதுக்கு என் கழுத்து அவ்வ்வ்வ்வ்வ்வ்ளவு நீளமா வளரனும்’
குட்டி – ‘அது எப்படி’
அம்மா – ‘அது தான் கதயே. சாமியும் வரம் குடுத்துட்டாராம்’
குட்டி – ‘ரொம்ப ஜாலி இல்ல’
அம்மா – ‘கதய கேளு. அதுக்கு அப்புறம், அது ஒரு குகையில இருந்து நகராமலே எல்லா மரத்திலேருந்தும் எல்லா இலையையும் சாப்டுச்சாம்’.
குட்டி – ‘ம்’
அம்மா – ‘அதனால அது ரொம்ப குண்டாயிடுச்சாம்’
குட்டி – ‘நம்ம ஆகாஷ் மாதிரி. ஹா ஹா’
அம்மா – ‘அப்ப ஒரு பெரிய வெள்ளம் வந்துச்சாம். அதனால அதால நகர முடியலியாம்.
குட்டி – ‘ம்’
அம்மா – ‘அப்ப வெள்ளத்துல ஒரு நரி வந்துச்சாம். அதுக்கு ரொம்ம பசியாம். அது இந்த ஒட்டகத்தை சாப்டுடுச்சாம்’
குட்டி – ‘ஏன் ஒட்டகம் ஓடலையா’
அம்மா – ‘சோம்பேறியா ஒரே இடத்துல இருந்ததால அதால ஓட முடியல. அதனால சோம்பேறியா இருக்கக்கூடாது. ஏய் எங்க ஒடற’
குட்டி – ‘விளயாடப் போறேன். நீதான சொன்ன சோம்பேறியா இருக்கக்கூடாதுன்னு’
![]()
பெண் – இளமை துறத்தல்
காரைக்கால் அம்மையார்
இவர் காரைக்காலில் பிறந்தவர். இயற்பெயர் – புனிதவதி. வணிகர் மரபினை சார்ந்தவர்.
இளமை முதலே சிவ பக்தியில் சிறந்தவராக விளங்கினார். சிவ பத்தர்களை சிவனாகவே எண்ணி வணங்குவார்.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பரமதத்தன் என்பவருக்கு புனிதவதியை மணம் செய்து வைத்தார் அவர் தந்தையார்.
தந்தையாருக்கு புனிதவதியை கணவன் வீட்டிற்கு அனுப்ப மனம் இல்லை. எனவே காரைக்காலில் பரமதத்தன் தனது வியாபாரத்தை தொடர்ந்தார்.
பரமதத்தனை சந்திக்க வந்தவர்கள் அவனிடம் இரண்டு மாம்பழங்களை கொடுத்துச் சென்றனர்.(இதில் பல்வேறு கருத்துகள் இருக்கின்றன. இவைகள் இரட்டை என்ற கருத்துக்கு வலிமை சேர்க்கின்றன.கணவன் – மனைவி, பரமாத்மா – ஜீவாத்மா)
பரமதத்தன் வேறு ஆள் மூலமாக அந்தப் பழங்களை புனிதவதியிடம் கொடுத்து அனுப்பினான்.புனிதவதி மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்தார்.
ஐந்தொழில் புரிவோன் நாடகத்திற்கு தயாரானார்.
அப்போது வாயிலில் குரல் கேட்டது. ‘சிவாயா நம’
காரைக்கால் அம்மையார்,’திரு அமுது(சோறு) தயாராக இருக்கிறது. கறிஅமுது இன்னும் தயாராகவில்லை, சற்று பொருத்திருங்கள்’
சிவனடியார் – ‘மிக்க பசியாக இருக்கிறது. இருப்பதைப் படையுங்கள்’.
எனவே அமுது படையல் பரமதத்தன் அனுப்பிய ஒரு மாங்கனியோடு நிகழ்தது.
காத்திருங்கள்.. நாயகனின் நாடகத்திற்கு..
![]()
நிரந்தரா
யாருமற்ற இரவு
ஓளி நிரம்பியதாகவும்,
புகை நிரம்பியதாகவும்,
இருக்கிறது.
எனக்கான பேச்சுகள்
தொடர் அருவியாக.
மௌனத்தின் சாட்சியாக நீ.
விடை பெறுதலுக்கான
ஆயத்தங்களைச் செய்கிறாய்.
கனத்துப் போகிறது இதயம்.
‘என்றைக்கு வருவாய்’ என்கிறேன்.
‘என்றும் எங்கும் இருப்பவள் நான்,
வருவதும் போவதும் உன் நினைவுகள் தான்’ என்கிறாய்.
இன்னும் கனத்துப் போகிறது.
![]()
யானை காடு திரும்பிய கதை
அடர்ந்த பெருங்காட்டிலிந்து
கனத்த சரீரத்துடன்
பெரும் யானை ஒன்று
பிளிரி ஓடிவந்தது.
ஓட்டத்திற்காண காரணம் கேட்டேன்.
‘காட்டில் உணவு இல்லை’ என்றும்
‘வற்றிய நீர் நிலைகளும்
தனக்கானவை அல்ல’ என்றும் கூறியது.
பெரு நிலத்தில்
வேளா வேளைக்கு உணவு என்றும்,
தன் குளியளுக்கு பிற ஆள் எனவும்,
வித விதமான மனிதர்கள் தினமும் எனவும்,
வாழ்க்கை வசீகரமானது எனவும்
பகன்றது.
காலத்தின் சுழற்சிதனில்
அதன் கடைநாளில்
சந்திக்கும் வாய்ப்பு நிகழ்ந்தது.
மனிதத் தேவையில்
விலங்குகளின் தேவைகள்
வெகுதூரம் என்று கூறி
காட்டை நோக்கிப் புறப்பட்டது.
![]()



















