சோம்பல் தவிர்

மஹாபாரதம் – சாந்தி பர்வத்தில் வரும் கதை – தற்கால வடிவங்களுடன்.

குட்டி –  அம்மா, ஒரு கத சொல்லேன்.

அம்மா – ‘ஒரு ஊர்ல ஒரு ஒட்டகம் இருந்துச்சா’

குட்டி – ‘ம்’

அம்மா – ‘அது சாமிகிட்ட தவம் இருந்து ஒரு வரம் வாங்கிச்சாம்’

குட்டி – ‘என்னான்னு’

அம்மா – ‘நான் நகந்து போகாம சாப்பிடனும், அதுக்கு என் கழுத்து அவ்வ்வ்வ்வ்வ்வ்ளவு நீளமா வளரனும்’

குட்டி – ‘அது எப்படி’

அம்மா – ‘அது தான் கதயே. சாமியும் வரம் குடுத்துட்டாராம்’

குட்டி – ‘ரொம்ப ஜாலி இல்ல’

அம்மா – ‘கதய கேளு. அதுக்கு அப்புறம், அது ஒரு குகையில இருந்து நகராமலே எல்லா மரத்திலேருந்தும் எல்லா இலையையும் சாப்டுச்சாம்’.

குட்டி – ‘ம்’

அம்மா – ‘அதனால அது ரொம்ப குண்டாயிடுச்சாம்’

குட்டி – ‘நம்ம ஆகாஷ் மாதிரி. ஹா ஹா’

அம்மா – ‘அப்ப ஒரு பெரிய வெள்ளம் வந்துச்சாம். அதனால அதால நகர முடியலியாம்.

குட்டி – ‘ம்’

அம்மா – ‘அப்ப வெள்ளத்துல ஒரு நரி வந்துச்சாம். அதுக்கு ரொம்ம பசியாம். அது இந்த ஒட்டகத்தை   சாப்டுடுச்சாம்’

குட்டி – ‘ஏன் ஒட்டகம் ஓடலையா’

அம்மா – ‘சோம்பேறியா ஒரே இடத்துல இருந்ததால அதால ஓட முடியல. அதனால சோம்பேறியா இருக்கக்கூடாது. ஏய் எங்க ஒடற’

குட்டி – ‘விளயாடப் போறேன். நீதான சொன்ன சோம்பேறியா இருக்கக்கூடாதுன்னு’

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

2 thoughts on “சோம்பல் தவிர்”

  1. Thanks for your comments. கதைசொல்லிகள் நிறைய உருவாக வேண்டும் அடுத்த தலைமுறையை வளமாக்க/அவர்கள் வாழ்வை வரமாக்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *