கூத்து கலைஞர்கள்

என்றாவது உற்று கவனித்திருக்கிறீர்களா
கூத்து கலைஞர்களின்
இதழ் வழி தாண்டிய புன்னகைகளும்
கண்களை தாண்டிய கண்ணீரும்.

Loading

சமூக ஊடகங்கள்

காத்திருக்கும் குல தெய்வங்கள்

வேண்டிய வரம் அளிக்க
விடுமுறை நாட்களுக்காக
காத்திருக்கின்றன
குல தெய்வங்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

நோய்மை

கண்ணிருடன் ஆன
தருணத்தில் நிகழ்ந்தது
நோய்மையின் தாக்கமும்
கடவுளுடன் இணக்கம்.
நோய்மையை தாண்டிய
நினைவுகள்.
நீற்றுப் போன் உடல்மீது
நெடும் பயணம் செல்லும்
ஈக்கள்.
அப்பொழுதாவது உன்னில் நிகழ்ந்தப்படட்டும்
கடவுளுடன் இணக்கத்தில் கொஞ்சம்.

Loading

சமூக ஊடகங்கள்

காலத்தின் சாட்சி

வந்த நாளைக் கொண்டாடிய
நினைவுகள்.
மனிதர்களை ஏற்றிச்
சுமந்த நினைவுகள்.
உறுப்புகள் உடைந்த போதும்
சரி செய்து சமன்
செய்த மனிதர்களின் நினைவுகள்..
கதவுகளைத் தாண்டி
காலத்தின் சாட்சியாக
கனத்த வலியுடன்
வீட்டின் கடைவழியினில்
பழைய நினைவுகளைச்
சுமந்தபடி சைக்கிள்.

Loading

சமூக ஊடகங்கள்

விக்ரமாதித்தியன்

காலத்தின் மாற்றத்தில்
விக்ரமாதித்தியன் ஆகி
கேள்வி கேட்கும் வாய்ப்பும் நிகழ்ந்தது.
பிறர் அறியா
கவிஞனின் மன வலியும்,
பசி இருந்தும்
யாசகம் பெறா கர்வமும்
என்று மாறும் என்றேன்.
வேதாளத்திடம் பதில் இல்லை.
விடுதலை ஆனேன்.

Loading

சமூக ஊடகங்கள்

வாசம்

பாதணிகளை உதறிவிட்டு
ஓடி வந்து மடியினில் அமர்ந்து
உங்களுக்கு பிடித்தது
ரோஜா வாசமா மல்லி வாசமா
என்ற எனது மகளின் கேள்விக்கு
உன் வாசம் என்றேன்.
வியப்புடனான புன்னகையில்
கடை நாள் வரையிலான வாசம்.

Loading

சமூக ஊடகங்கள்

உணர்வின் வாசனை

பல தேசம் சென்றும்
பல உணவினை ருசித்த பின்னும்
மாறாமல் இருக்கிறது
அம்மாவிடம் அடி வாங்கிய பின்
அழுத படியே
உண்ட உணர்வின் வாசனை.

Loading

சமூக ஊடகங்கள்

நிஜமும் நிழலும்


எதோ ஒரு கணத்தில்
எனது குரல்
கடவுளுக்கு கேட்டிருக்க கூடும்.
இல்லை எனில் நிகழ்ந்திருக்குமா
இனிய எண்ணப் பரிமாற்றம்.
இல்லை எனில் நிகழ்ந்திருக்குமா
வேதனையற்ற சந்தோஷ சிரிப்புகள்.
இல்லை எனில் நிகழ்ந்திருக்குமா
புன்னகைப் பூக்கள்.
அனைத்தும் தாண்டி
அடுத்த அறையினில்
என் மகளின் படிப்புக் குரல்
‘கிட்டாதாயின் வெட்டன மற’


Loading

சமூக ஊடகங்கள்

சொர்க்கம்


நாத்திகம் பேசி
இருமையை மறுத்து வந்த
காலங்களில்
எங்கிருந்தோ ஓடி வந்து
கழுத்தினைக் கட்டிக் கொண்டு
கன்னத்தில் முத்தமிட்டு
சொர்க்கம் என்றால் என்ன அப்பா
என்ற எனது மகளின் கேள்விக்கு
பதில் அறிந்து புன்னகைத்தேன்.


Loading

சமூக ஊடகங்கள்

வரம்

குழந்தை வரம் கேட்டு
கோட்டம் விட்டு வெளியேறுகையில்
கைகளில் குழந்தைகளுடன்
பிச்சைக்காரி

Loading

சமூக ஊடகங்கள்

கடவுளைக் காணல்

மீண்டும் ஒரு முறை
எனக்கும் கடவுளுக்குமான
எண்ண பரிமாற்றம்
உன் வலியை உள் வலியை
உணர்கையின் என்னைக் காண்பாய் என்றார்.
வலி உண்டாக்கி தருணத்தை
விவரிக்க சொன்னார்.
தெருவில் நடந்து செல்பவனை
அப்பா என்று எனது மகள்
முதல் முறையாய் அழைத்ததை
செவிலித் தாய் சொன்ன போது
என்றேன்.
பதில் அளித்த தருணதில்
உண்ர்ந்தேன் கடவுளை.

Loading

சமூக ஊடகங்கள்

கேள்வியும் பதிலும்


எனக்கும் கடவுளுக்குமான
எண்ண பரிமாற்றத்தில்
பதில் அளிக்க விரும்பா தருணங்களில்
புன்னகைப்பேன் என்று
உடன்பாடு உண்டானது.
நெஞ்சினில் கை வைத்து
வாலிபத்தின் சாயலில்
வாழ்ந்து காட்டுவேன் என்று
சபதமிட்ட மனிதர்கள்
மண்ணில் மறைந்து போனது
குறித்ததுவே என்ற எனது கேள்விக்கு
பதில் கிடைத்தது
மந்தஹாசப் புன்னகை.


Loading

சமூக ஊடகங்கள்

வர்த்தகம்

கட்டப்பட்ட கைப்பேசி கோபுரங்களின்
எண்ணிக்கை குறித்தும்
வர்த்தகம் குறித்தும்
விரிவடைகின்றன முதன்மை செய்திகள்
எவரும் அறியா இடத்தில் செய்திகள்
தேய்ந்து வரும் தேனீக்களின்
எண்ணிக்கை குறித்து


Loading

சமூக ஊடகங்கள்

இளித்த வாயன்


வழி தவறிய நாய் குட்டியாய்
எதோ ஒரு கணத்தில் வந்து சேர்ந்தது
கிழிந்த ரூபாய் நோட்டு
உலகின் நடனம் கண்டு வியக்கும்
பொழுதுகளில்
செவிகளில் செய்தி
‘நெத்தியில எழுதி ஒட்டியிருக்கும் போல
இளித்த வாயன் என்று’

Loading

சமூக ஊடகங்கள்

வலியறிதல்


பறவையின் சிறகுகள்
தரையினில்
வலியறிந்திருக்குமா
வழித் தடத்தில் தன் சிறகுகள் கண்டு

Loading

சமூக ஊடகங்கள்

கோபம்


கோபம் கொண்ட தருணங்களில்
கண்களை உருட்டி
கைகளை காட்டி
மிகப் பெரிய மிருகமொன்று
உன்னைக் கவ்விச்செல்லும்
எனும் தருணங்களில்
உங்களை விடவா அப்பா
எனும் மகளின் கேள்விக்கு
என்ன பதில் சொல்வது

Loading

சமூக ஊடகங்கள்

நிஜம்

மனம் விட்டு பேசிய நிமிடங்கள்
மனதில் நிழல் ஆடுகின்றன
கைகோர்த்து நடந்த நிமிடங்கள்
காலங்களோடு கரைகின்றன
உணர்வு கொண்டு
உணவு பரிமாறிய தருணங்கள்
உயிர் வரை ஊடுருவுகின்றன
காலம் கரையேற்றியதா என் மனைவியை
நினைவு உலகத்துள் கேள்வி
எங்கிருந்தோ வந்தது பதில்
எட்டு மணிக்கு தூக்கத்த பாரு உங்கப்பனுக்கு

Loading

சமூக ஊடகங்கள்

வலியறிந்த தருணம்

எப்பொதோ நிகழ்தது
எனக்கும் என் மகனுக்குமான போராட்டம்
வலியறிந்த தருணங்களில்
வன்மையான வார்தைகள்
செத்தொழியுங்கள்
நசிகேசன் சாபம்
அப்பனுக்கு பலித்தது
என் கண்களை மூடினேன்
அவன் கண்களுக்குள் குளம்

Loading

சமூக ஊடகங்கள்

நெருக்கம்

ஏதோ ஒரு கணத்தில்
நிகழ்ந்து விட்டது
கடவுளுக்கும் எனக்குமான நெருக்கம்
எனனை அருகினில் அழைத்து
என்ன வேண்டும்
கடவுளா, கடவுளின் தன்மையா என்றார்
எண்ணத் தொடங்கிய நிமிடங்களில்
எட்டா தூரத்தில் எல்லாம் அறிந்த ப்ரம்மம்

Loading

சமூக ஊடகங்கள்

விழியருவி

தங்க சங்கிலி பட்டாசாய்
மகளின் சந்தோஷம்
மனைவியின் விழியருவி

Loading

சமூக ஊடகங்கள்