பேச்சுகள் பெருகிய பொழுதுகளில்
பெரும் துக்கத்தில்
மவுனம் வேண்டி மனம்.
குருவினிடத்தில் கோரிக்கைகள்.
மவுனம் அறியவும் அடையவும்
மணம் புரிதலே சிறந்தவழி
என்று கூறிப் புன்னைகைத்தார்.
![]()
உருவேறத் திருவேறும்
மழை ஒய்விற்கான பின் ஒரு பொழுதுகளில்
நீண்ட தெருக்களில் நெடும் பயணம் உன்னோடு.
இலைகளின் எச்சில்களாய்
எச்சங்களாய் மழைத்துளிகள்.
தரையினில் இருந்து
மேலே எழும்பி
இலைகளின் ஈரத்தை
உதிர்த்து விட்டு
காதலை சொல்லத் துணிகிறேன்.
மாறுதல் கொள்ளும் உடல் மீது
ஏன் இந்த மயக்கம் என்கிறாய்.
உதிர்ந்து விட்ட உயிர்ச் சொல்லின்
முடிவில் துவங்கிய வீச்சங்கள்
வேரிலிருந்து விழுதுகள் வரை.
![]()
ஒரு சிறந்த கணத்தில்
நிலம் பெறப்பட்டது.
கட்டிடம் உருவானது
கணப் பொழுதுகளில்.
அனைத்து பொழுதுகளிலும்
உறவினர் கூட்டம்.
களித்த பொழுதுகளையும்
கவிதை பொழுதுகளையும்
சந்தித்தது அவ்வீடு.
கால மாற்றத்தில்
கரைந்தன காரை சுவர்கள்.
நீண்ட நெடும் பயணத்திற்கு பிறகு
வீட்டின் சுவாசம்
அண்டப் பெருவெளியில்.
காலத்தின் சாட்ஷியாக
கனவுகளையும் கவிதைகளையும்
சுமந்து அவ்வீடு.
![]()
நீண்ட நாட்களுக்குப் பின்
நண்பர்களுடன் சந்திப்பு நிகழ்ந்தது.
வாழ்க்கை குறித்த எண்ணங்கள்.
நல்ல உணவிற்காக வாழ்கிறேன்
என்றான் ஒருவன்.
போகங்களை அனுபவிற்பதற்காக வாழ்கிறேன்
என்றான் ஒருவன்.
பொருள் ஈட்ட வாழ்கிறேன்
என்றான் ஒருவன்.
கற்று தெளிவதற்காக வாழ்கிறேன்
என்றான் ஒருவன்.
இறப்பதற்காக வாழ்கிறேன்
என்றான் ஒருவன்.
பதில் பெற்ற பொழுதுகளில்
கொப்பு விட்ட குரங்காய் மனமும் நானும்.
![]()