மண் வாசனை

எல்லா மழைக் காலமும்
எழுப்பி விடுகிறது
உறங்கி இருக்கும் நினைவுகளை

Loading

சமூக ஊடகங்கள்

நான் தொலைதல்

நீ, கிளி பொம்மையை வாங்கி
அதை பறக்க விட முற்பட்ட தருணங்களில்
தொலைந்திருந்தது
எனது இளமைக் காலங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

2038 – இயந்திர மனிதன்,செயற்கை அறிவு, நரம்புகளின் வலைப்பின்னல்

இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.

இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.

1.
அப்பா ரோபோ : என்னடா, 100 மில்லியன் pages ஒரு செகன்டபடிக்கிற. 2*2 = 4ன்னு தெரியாதா?
2.
 ரோபோ  1 : என்னட்ராபிக்டா இது. இதுக்கு முதல்லஒரு ப்ரொக்ராம் எழுதனும்.
3.
காதலித்தபெண் கைவிட்டதால் ஆண் ரோபோ தற்கொலை.
4.
  ரோபோ  gen xyz – எங்கவீட்ட ஒரு பழைய மாடல்ரோபோ இருக்கு. 2013 மாடல் சார். அத  mercy killing  பண்ண என்ன procedure?
5.
தொகுப்பாளர்  ரோபோ  – யார்பேசிறீங்க.
மனிதன் :  நான் 1993ல்இருந்து உங்க குரல கேக்கிறேன். நீங்க, 12 May 1994 வியாழக்கிழமை கட்டிகிட்டு வந்த பச்ச கலர்பூப் போட்ட சுடிதாரும் சின்னபொட்டும் சூப்பர்ங்க. 14 May 1995 ம் தேதி ரிலீஸ்  ஆன மோக முள் படத்திலிருந்து பாட்டு போடுங்க.
ரோபோ X : மனுஷங்க data  பாத்துமயக்கம் போட்டுடுத்து சார்.
6.
  ரோபோ 1 : நமக்காவது டெய்லி 50 யூனிட் கரண்ட் வேணும். அவனுக்கு 1யூனிட் போதும். அவன்ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறான்.
7
  ரோபோ 1 : ஏன்டா ஓடிவர?
  ரோபோ 2 : என் பொண்டாட்டி ரொம்பகொடும காரியா இருக்காடா. டெய்லி1 யூனிட் கரண்ட் கூட குடுக்கமாட்டேங்கிறாடா?

Loading

சமூக ஊடகங்கள்

நித்ய கன்னி

ஒரு ஒளிநாளில்
எனக்கான காதலைச் சொல்கிறேன்.
மோனப் புன்னகைக் கொண்டு
புகைப்படம் ஒன்றைக் காட்டுகிறாய்.
வயோதிகனாக நானும்
நித்திய கன்னியாக நீயும்.
எப்படி என்கிறேன்.
ஒளிவேக சுழற்சி*
உண்மையை உணர்தியது என்கிறாய்.
கரைகிறது கனவுகள்.

*As per the Einstein’s relativity theory, when you travel with the speed of light, your age will be reduced. 

Loading

சமூக ஊடகங்கள்

மனதின் வலிகள்

எல்லா வெற்றிகளுக்குப்
பின்னும் இருக்கின்றன
மறுக்க முடியா
மனதின் வலிகள்.

Loading

சமூக ஊடகங்கள்

ஆடிப் பெருக்கு

ஆடிப் பெருக்கு

தமிழ் மாதம் ஆடியில் வரும் 18ம் தேதி ஆடிப் பெருக்கு.

வீட்டில் வயதானவர்களுடன்(பெரும் பாலும் – பாட்டி) ஒரு குட்டிக் குழந்தைகள் அவர்கள் உலகங்களுடன் செல்வார்கள்.

மயிலாடுதுறை – சுடுகாட்டுத்துறை, முங்கில் பாலம்(இப்போது இல்லை) துறை – 2, படித்துறை விஸ்வநாதர் துறை(கூட்டம் குறைவுதான்), மற்றும் லாகடம்.

காவிரி நதிக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு இது நிகழும்.

டேய் பசங்களா, கொஞ்சம் ஆட்டம் போடாதீங்கடா, தண்ணீ கலங்கிடும்( அப்பவே 2 ஆள் ஆழத்துக்கு தண்ணி)

நீங்க வேணும்ணா வேற துறைக்கு போய் சாமி கும்பிடுங்க .

எப்படியா இருந்தாலும் வீட்டுக்குத்தான வருவ, அப்ப பேசிக்கிறேன்.

கடந்த வருடத்தில் திருமணமான தம்பதியரின் மாலைகள் வீட்டில் ஏதோ ஒரு இடத்தில் மாட்டி வைக்கப் பட்டிருக்கும். அதை வயதானவர்கள் ஆற்றில் விட எடுத்து வருவார்கள்

டேய், பசங்களா, இந்த மாலை எல்லாம் நடு ஆத்துல விடுங்கடா பாப்போம். – பாட்டிகள்,
‘ஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்’ –  இது கூட்டம்.

படைக்கப்பட இருக்கும் பொருளில் ஒரு மஞ்சள் கயிரு இருக்கும்.
‘டேய் கயரு கட்டிக்க வாங்கடா’
கடைசியாக வரேன், (யார் அதிக நேரம் நீரில் இருப்பவர்களே வென்றவர்கள்)

டேய் கம்னேட்டி(நான் அறிந்த வரையில் இது கும்பகோணம் மற்றும் அவை சார்ந்த பகுதி மக்கள் திட்டும் பாஷை) சீக்கிரம் கரை ஏறுடா, தலையில தண்ணி கொட்டுது.

அப்போதுதான் சப்பரம் ஞாபகம் வரும். (சிறிய வடிவ தேர். உள்ளே சாமி படம் ஒட்டப் பட்டிருக்கும்). அலங்காரம் முடிந்து அது வீடு வரையில் இழுத்து வரப் படும். கூடவே நண்பர்கள் கூட்டம்.

கலர் அன்னங்கள் – படையல் வீட்டில், மறுபடியும் விளையாட்டு தொடரும் – இது வீதிகளில்.

காவிரியினில் நீர் உண்டோ இல்லையோ, நினைவுகளில்….

Loading

சமூக ஊடகங்கள்

2038 – கடவுள் மறுப்புக் கொள்கை

1.
நாங்கள் கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்கள். அதனால் ஏற்கவில்லை என்பதே என் கருத்து.(பெயர் – Saaraavanaakumaar)

2.
தெய்வம் என்பது பொய். (வீடுகளில் பூஜை அறை வீடு மாதிரி இருக்கும்)

3.
எண் கணிதம் என்பது பொய். இந்த காலத்தில இத நம்ப முடியுமா.(கார் நம்பர் 5ன்னு இருக்கணும்.  எல்லா எழுத்தையும்  கூட்டினாலும் 5 வரணும்

4.
நான் அடுத்த வருஷம் அமெரிக்கா போலாம்னு இருக்கேன்.
இந்த தேதி நல்லா இருக்கும் சார்.
என்னா சார் நீங்க, தேய் பிறை சதுர்த்திய நாள் குறிக்கிறீங்க. 6ம் தேதியும், சஷ்டியும் வரமாதிரி குறிச்சி குடுங்க.

5.
உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நான் கடவுள் மறுப்பு பத்தி எழுதினத்துக்கு 50 பேர் பாராட்டியிருக்காங்க.

Loading

சமூக ஊடகங்கள்

மரங்கள் ஊமையான கதை

ஆதியில் அவன் பெயர்                                     ‘அவன்’ என்று இருந்தது.
அவனுக்கு மரங்களின் மொழிகளும்,
செடிகளின் மொழிகளும் தெரிந்திருந்தன.
நேசித்த இயற்கையை அவன் நேசித்தான்.
சில மரங்கள் அவனிடம்                             அன்பைச் செலுத்தின.
சில செடிகள் அவனிடம்                         துன்பங்களைப் பகிர்ந்தன.
சில மரங்கள் அவனிடம் கதை கேட்டன.
சில செடிகள் அவனிடம் தூங்கின.
சில குறுங் கொடிகளும் அவனிடம்                  நட்பு கொண்டன.
மரங்களின் நட்பு மற்றவர்களுக்கு               புதிராக இருந்தது.
மிகுந்த விலை கொடுத்து
மரங்களையும் செடிகளையும் வாங்குவதாக ஒருவன் தெரிவித்தான்.
செய்தியின் அடுத்த நாளில்
அவன் சென்ற போது மரங்கள் ஊமையாக இருந்தன.

Loading

சமூக ஊடகங்கள்

மூடுவிழா

எல்லா மௌனங்களுக்குப் பின்னும்
இருக்கின்றன
உணர்த்த முடியா ஓசைகளும் வலிகளும்.

Loading

சமூக ஊடகங்கள்

இறைவழிபாட்டில் வாசனை மலர்களும் வாசனைப் பொருள்களும்

இறைவழிபாட்டில் வாசனை மலர்களையும், மணம் மிக்க பொருள்களையும் சேர்ப்பது ஏன்?

ஆன்மீகம் –  இறைவனுக்கு உகந்தது. அதனால் மகிழ்வு ஏற்படுகிறது.

அறிவியல் – மணம் மிக்க பொருள்கள் உடலினில் மாறுதல் ஏற்படுத்தும். அவைகளை உணரும் போது நீண்ட சுவாசம் நிகழும். அது இதயத்தின் அனைத்து பகுதிகளிலிலும் நீண்ட காற்றினை செலுத்தும். சுவாசம் சீராவதால் உடல் நிலையில் மாறுதல் ஏற்படும்.

முன் காலத்தில் வாசனைப் பொருள்கள் அனைத்தும் இயற்கையானவை. அதன் மூலப் பொருள்கள் உடலில் மாறுதல்களை ஏற்படுத்தும்.

Loading

சமூக ஊடகங்கள்

மோனத்துவம்

இருத்தலுக்காக வந்த பிறகு
எல்லாம் இழந்தப் பின்
இயல்பாய் கிடைக்கிறது இளைபாறுதல்.

மோனம் – Silence

Loading

சமூக ஊடகங்கள்

நிகழ்விருத்தல்

இருத்தலுக்கான இடத்தில்
இயலாமைகள்.
ஆனால்
எல்லா இயலாமைகளிலும்
இருத்தல் இயல்பாய்.

Loading

சமூக ஊடகங்கள்

காற்று தனித்திருந்தது

காற்று தனித்திருந்தது
அவ்வேளையில் ஆதியில்
சில பறவைகள்
பறந்து கொண்டிருந்தன.
மாயையின் சாரம் கொண்டிருந்த
இரு பறவைகள் தரையிரங்கின.
உதிர்ந்த ஒற்றை கிளை கொண்டு
கூடு எழுப்பின.
உறவுகளுடன் தாளமிட்டன,
சப்தமிட்டன, நீர் அருந்தின,
மாயப் பிரபஞ்சம் தனக்கானது
என்றும் கொண்டாடின.
வானில் பறந்த பிறிதொரு நாளில்
மரித்துப் போயின.
நகர விரிவாக்கத்தில்
கூடுகளும் கரைந்தன.
காற்று தனித்திருந்தது
எவ்வித தடயங்களும் இன்றி.

Loading

சமூக ஊடகங்கள்

துலாக் கட்டம்

ஆற்றின் ஒரு கரையினில் நானும்
மறு கரையினில் நீயும்.
மொழிகள் அற்ற நாட்களில்
சைகைகளில் பாஷைகள்.
விளைவுகளில் நகரும் நாட்கள்.
பாஷைகள் பழகிய பொழுதுகளில்
உன் கரை நோக்கி வர என்னை பணிக்கிறாய்.
என் கரை நோக்கி வர உன்னை பணிக்கிறேன்.
அவரவர் இடம் விட்டு
எதிர் கரை நோக்கி பயணித்த பொழுதுகளில்
நதி கடந்திருந்தது.

துலாக் கட்டம் – மயிலாடுதுறையில், ஐப்பசி மாதத்தில், காவிரியில்  நடை பெறும் ஒரு விழா

Loading

சமூக ஊடகங்கள்

அசையா வானவில்

சில பாடல்கள் மழையைத் தூவிச் செல்லும், சில பாடல்கள் வெய்யிலை இறைத்துச் செல்லும்.

சில வானவில்லை விட்டுச் செல்லும்.

அப்படிப்பட்ட பாடல் தான் பட்டாகத்தி பைரவன் படத்தில் வரும் – எங்கெங்கோ செல்லும்’ என்ற பாடல்.

மெல்லிய இசையுடன் ஆரம்பிக்கிறது பாடல்.

கவிதைக்கான முழுவடிவமும் இப்பாடலில்.

நான் காண்பது உன் கோலமே, அங்கும் இங்கும் எங்கும்
என் நெஞ்சிலே உன் எண்ணமே அன்றும் இன்றும் என்றும்

கல்லானவன் பூவாகிறேன் கண்ணே உன்னை எண்ணி
பூவாசமும் பொன் மஞ்சமும்

எதற்காக வாழ்ந்தேன் உனக்காக வாழ்வேன்.

ஒரு மழைக்கால ஃபில்டர் காபி போல,
அழகிய பனிக்காலையில் பூத்திருக்கும் பூக்களின் மேல் பனித்துளி போல,
பவழ மல்லியின் வாசம் போல,
கரை புரளும் காவிரி போல,
விழாக் கால இசை வாசிப்புகள் போல,
கவிதையில் வாசிப்பு அனுபவம் போல

எத்தனை சொன்னாலும் அதனுள் பொருந்துவதாக அமையும் இசையும் வரிகளும்.

அசையா வானவில் என்னுள் இன்றும்.

Loading

சமூக ஊடகங்கள்

நீர்ப்பறவை

எவர் அறியக்கூடும்
மகளை அடித்த பிறகு
நீண்ட நேரம்
மௌனமாய் அழும்
தந்தையின் வலிகளை

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

குற்றமற்ற ஒன்றும், இயக்க வல்லமை உடையதும், முற்றும் உணர்ந்த ஒருவன் இருக்க வேண்டும். அவனால் மட்டுமே குற்றம் உடைய ஆன்மாக்களை சரி செய்ய முடியும். (தேர்வு எழுதுவனை கண்காணிக்கும் கண்காணிப்பாளர் போல்). அந்த நிலைக்குப் பெயர் சர்வஞ்ஞத்வம்.

எல்லா பொருள்களை அறிவிக்கவும் அதனை அசைவிக்கவும் அவனால் முடியும் எனவே அவன் சர்வவியாபகன்.

பசுவாகிய தன்னை கட்டுப்படுத்த வேறு ஒரு பதி வேண்டும். அவன் எல்லா காலங்களிலும் (பிரளய காலம் உட்பட) எல்லா காலத்திலும் இருப்பதால் நித்யதத்துவம் உடையவன்.

Loading

சமூக ஊடகங்கள்

தேவைகள்

உறக்கமற்ற ஒவ்வொரு இரவிலும்
உன்னதம் வேண்டி
மடி தாண்டி அலைகின்றன
ஒவ்வொரு பொம்மைகளும்.

Loading

சமூக ஊடகங்கள்

2038 – போக்குவரத்து

1.
இன்னைக்கு ரொம்ப நல்ல நாள்.
ஏன்?
பீச்ல இருந்து தாம்பரம் வரைக்கும் வண்டில ஒரு அவர்ல வந்துட்டேன்.

2.
திருவான்மீயூர் – ஒவ்வொரு வீட்டிற்கும் 10 கார் 20 டூவீலர் இருக்கிறது by RTO. (தற்போது – 2 கார், 3 டூவீலர்)

3.
வாகன விற்பனை குறைவால் எல்லா வாகனமும் உற்பத்தி 0.25 அவருக்கு  நிறுத்தி வைப்பு.(தற்போது 1 வாரம்)

4.
எல்லாரும் 10000 ரூ நோட்டா கொடுத்தா என்ன செய்யறது. ரூ 1000மா கொடுங்க.

5.
உங்க வண்டிய 125வது மாடியில பார்க் பண்ணுங்க, ஒரு நிமிஷத்திற்கு ரூ. 100/-

Loading

சமூக ஊடகங்கள்

மனக் குறுக்கம்

உனக்கான பள்ளி வாகனத்தில்
தலையில் மல்லிகையின் வாசத்தோடு நீ.
எப்படி அழுது கொண்டு செல்வாயோ
என்ற நினைவோடு நான்.
வாகனத்தில் ஏறி தலையை வெளியே
தலையை நீட்டி கூறுகிறாய்.
‘நாளைக்கு யாத்திரி சொன்ன கதை மாதிரியே
இன்னைக்கும் சொல்லனும்’ என்கிறாய்.
நகர்ந்து செல்கிறது வாகனம்
நகராமல் இருக்கிறது நினைவுகள்.

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!