ஆடிப் பெருக்கு

ஆடிப் பெருக்கு

தமிழ் மாதம் ஆடியில் வரும் 18ம் தேதி ஆடிப் பெருக்கு.

வீட்டில் வயதானவர்களுடன்(பெரும் பாலும் – பாட்டி) ஒரு குட்டிக் குழந்தைகள் அவர்கள் உலகங்களுடன் செல்வார்கள்.

மயிலாடுதுறை – சுடுகாட்டுத்துறை, முங்கில் பாலம்(இப்போது இல்லை) துறை – 2, படித்துறை விஸ்வநாதர் துறை(கூட்டம் குறைவுதான்), மற்றும் லாகடம்.

காவிரி நதிக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு இது நிகழும்.

டேய் பசங்களா, கொஞ்சம் ஆட்டம் போடாதீங்கடா, தண்ணீ கலங்கிடும்( அப்பவே 2 ஆள் ஆழத்துக்கு தண்ணி)

நீங்க வேணும்ணா வேற துறைக்கு போய் சாமி கும்பிடுங்க .

எப்படியா இருந்தாலும் வீட்டுக்குத்தான வருவ, அப்ப பேசிக்கிறேன்.

கடந்த வருடத்தில் திருமணமான தம்பதியரின் மாலைகள் வீட்டில் ஏதோ ஒரு இடத்தில் மாட்டி வைக்கப் பட்டிருக்கும். அதை வயதானவர்கள் ஆற்றில் விட எடுத்து வருவார்கள்

டேய், பசங்களா, இந்த மாலை எல்லாம் நடு ஆத்துல விடுங்கடா பாப்போம். – பாட்டிகள்,
‘ஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்’ –  இது கூட்டம்.

படைக்கப்பட இருக்கும் பொருளில் ஒரு மஞ்சள் கயிரு இருக்கும்.
‘டேய் கயரு கட்டிக்க வாங்கடா’
கடைசியாக வரேன், (யார் அதிக நேரம் நீரில் இருப்பவர்களே வென்றவர்கள்)

டேய் கம்னேட்டி(நான் அறிந்த வரையில் இது கும்பகோணம் மற்றும் அவை சார்ந்த பகுதி மக்கள் திட்டும் பாஷை) சீக்கிரம் கரை ஏறுடா, தலையில தண்ணி கொட்டுது.

அப்போதுதான் சப்பரம் ஞாபகம் வரும். (சிறிய வடிவ தேர். உள்ளே சாமி படம் ஒட்டப் பட்டிருக்கும்). அலங்காரம் முடிந்து அது வீடு வரையில் இழுத்து வரப் படும். கூடவே நண்பர்கள் கூட்டம்.

கலர் அன்னங்கள் – படையல் வீட்டில், மறுபடியும் விளையாட்டு தொடரும் – இது வீதிகளில்.

காவிரியினில் நீர் உண்டோ இல்லையோ, நினைவுகளில்….

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *