விளம்பரம்

மிகப் பெரிய குளிர் பான நிறுவனத்தின் விளம்பரம்.

வயலின் கற்றுக் கொண்டிருக்கிறான் ஒருவன். இருவர் வருகிறார்கள். நன்றாக வாசிக்கிறார்கள். ஆசிரியை வருகிறார். இருவரையும் நன்றாக வாசிப்பதாக கூறி இருவரையும் அனுப்பி விடுகிறார். வயலின் கற்றுக் கொண்டிருப்பனை தன்னுடன் இருக்குமாறு கூறுகிறார்.

அவன் சந்தோஷமாக தலையட்டுகிறான்.
அருவெறுப்பின் உச்ச கட்டம்.

இதற்கு யாரும் மாற்று கருத்து தெரிவித்தார்களா என்று தெரியவில்லை.

மாத்ரு தேவோ பவ;
பித்ரு தேவோ பவ;
ஆச்சார்ய தேவோ பவ;

காலம் நம்மைக் காக்கட்டும்.

Loading

சமூக ஊடகங்கள்

திசைகளும் நோக்கமும்

கிளைத்தலும் பரவுதலும்
பல திசைக்கள் நோக்கி
உதிர்தல் மட்டும்
ஒரு திசை நோக்கி.

Loading

சமூக ஊடகங்கள்

சொர்க்கம்

சமீபத்தில் திருமண விழா ஒன்றிற்கு சென்றிருந்தேன். வாசலில் நுழையும் போது இசைக் கச்சேரி. வேண்டாம் மச்சான் வேண்டாம்  இந்த .. என்ற பாடல். மிகப் பெரும்பாலான மனிதர்கள் ரசித்தார்கள். (வேறு என்ன சொல்ல)

திருமண தம்பதியருக்கு அன்பளிப்பு அளிக்க காத்திருக்கும் ஒரு கூட்டம்.  ஒரு புறம் ஏறி, மற்றொரு புறம் இறங்க வேண்டும். தீடிரென இரண்டு பேர் எதிர் முனையில் ஏறி, அன்பளிப்பு கொடுத்து விட்டு இறங்கி விட்டனர்.சினிமா அரங்கமா என சந்தேகம் வந்து விட்டது.

உணவு அரங்கத்தில் மீண்டும் கூட்டம். பந்தி ஆரம்பித்து சாம்பார் தான் சாப்பிடுகிறார்கள். அதற்கும் சரவண பவனில் சீட்டு வைத்து காத்திருப்பது போல். சாப்பிட்டுக் கொண்டிருப்பவரின் பின்னால் காத்திருக்கும் கூட்டம்.

இந்த அக்கினி நம்மை காக்கட்டும் என்று தொடரும் மந்திரங்கள் எங்கே போயின.

திருமணங்கள் சந்தோஷ தருணங்கள். ஆனால் எது சந்தோஷ தருணங்கள் என்பதில் சந்தேகம்.

Loading

சமூக ஊடகங்கள்

நித்திய நிகழ்வுகள்

தானியங்கியில் பணம்
எடுத்து வெளியே வரும் போது
காவலாளி கேட்கும் டீக்கான காசில்
கனத்துப் போகிறது இதயம்.

Loading

சமூக ஊடகங்கள்

பொம்மலாட்டம்

ஆடுவதற்கு ஆட்கள் இன்றி
தனித்திருக்கின்றன பொம்மைகள்.

Loading

சமூக ஊடகங்கள்

வாழ்க்கைக் கனவுகள்

எவர் அறியக்கூடும்,
கண்ணுக்கு தெரியும்
உடைந்த பொம்மைகளின்
பின்னால் இருக்கும்
பெற்றவர்களின்
நிறைவேறாமல்
உடைந்த கனவுகள்.

Loading

சமூக ஊடகங்கள்

தொடரும் நினைவுகளும் பாடலும்

விழியில் விழுந்து – இந்த பாடலை பல ஆயிரம் முறை கேட்டிருப்பேன். ஆனாலும் ஒவ்வொரு முறையும் புதுமையாகத்தான் இருக்கிறது. காட்சியா, இசையா, பாடலை பாடிய சசிரேகாவா அல்லது வரிகளா தெரியவில்லை. என் சிறு பிராயத்தின் வரிகள் என்பதாலா. எனக்கு மட்டும் சொந்தம் உந்தன்… என்ற வார்தைகளின் தொகுப்பா. கோடையில் குளிரினையும், குளிரினில் ஒரு வெம்மையையும் தரும் இந்த பாடலை உங்களுக்கு பிடிக்குமா?

பார்க்க ரசிக்க
http://www.youtube.com/watch?v=H3cs6IXfqQ8

Loading

சமூக ஊடகங்கள்

அடைப்புக்குறிக்குள் அடைபடா அனுபவங்கள்

வீசிச் செல்லும் பனிக்காற்று வழிச் செல்லும் எல்லா செடிகளிலும் தன் இருப்பை உறுதிப்படுத்தி செல்லும். தடையங்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கும். நினைவு ஓடையில் வரும் சில நினைவுக் குறிப்புகள் மட்டும் இங்கே. 

Loading

சமூக ஊடகங்கள்

பிறந்தநாள் பரிசு

உன் பிறந்த நாளில்
என்ன தருவாய் என்கிறாய்.
கண்ணீரின் கனம் அடக்கி
எது வேண்டுமானாலும்  
என்பதை மாற்றி
முத்தம் என்கிறேன்.
பரவாயில்லை என்று வார்த்தைகளை
சிந்துகிறாய்.
வார்த்தைகளின் முடிவில்
அடங்கிய கனம் தாளாமல்
இதயத்திற்குள் இமயம்.

Loading

சமூக ஊடகங்கள்

கர்ணனின் பசி

கர்ணனாய் வேஷமிட்டாலும்
காயந்து கிடக்கிறது
பசி அறுக்க முடியா
பாழும் வயிறு.

Loading

சமூக ஊடகங்கள்

அழுகையின் ஒலிகள்

என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா
விலை உயர்ந்த காரினில்
செல்பவர்களின் சந்தோஷ ஒலி தாண்டி
ஓலிக்கும்
ஏழைகளின் கண்ணீரின்
அழுகை ஒலிகளை

Loading

சமூக ஊடகங்கள்

சந்தோஷ ஆலாபனைகள்

என்றாவது உற்று கவனித்திருக்கிறீர்களா
கோரஸாக பாடுபவர்களின்
சந்தோஷ குரல் தாண்டி
கண்ணுக்குள் அடைபட்டுக்கிடக்கும்
கண்ணீரின் வலிகளை.

Loading

சமூக ஊடகங்கள்

தொடரும் என் ஜன்மங்கள்

ஒரு விடியலுக்கான
முன் இரவினின் கண் விழித்து
பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்லி
உனக்காக வீடும் காரும் வாங்கி
தருகிறேன் ஆனால் சில வருடம் கழித்து
என்று கூறி புன்னகைக்கிறாய்.
இமைகளில் பட்டுத் தெரிக்கும்
நீரினில் கரைகின்றன
தொடரும் என் ஜன்மங்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

உடையும் கவிதைகள்

நிச்சயிக்கப்பட்ட பாதையில்
பயணம் என்றாலும்
நித்தமும் உடைகின்றன
கனவுகளும் கவிதைகளும்.

Loading

சமூக ஊடகங்கள்

ஆத்ம நிவேதனம்

உறங்க துவங்கும்
வினாடியில்
பிஞ்சு விரல்களால் என் மேல் எழுதி
என்ன எழுதினேன் என்கிறாய்.
சொர்க்கம் என்றேன்.
நீ விழித்த விழிப்பில்
பல ஜன்மங்களை நிறைவாக வாழ்ந்த
தந்தைகளின் வரிசையில்
முதன்மையாக நான்.

Loading

சமூக ஊடகங்கள்

விடியல் தேடி

வினாக்களோடு விடிகின்றன
விடியல்கள்.
விடைகளோடு முடிகின்றன
கவிதைகள்.

Loading

சமூக ஊடகங்கள்

ஓவியனின் கனவுகள்

வண்ணம் தீட்ட
துவங்கிய தருணத்தில்
வரிசையாக மனிதர்கள்.
சிகையை சீர் படுத்த சொன்னான் ஒருவன்.
முகத்தை சீர்  படுத்த சொன்னான் ஒருவன்.
கண்கள் கலக்கமுற்றிருப்பதாக
சீர்  படுத்த சொன்னான் ஒருவன்.
ஆடையை சீர்  படுத்த சொன்னான் ஒருவன்.
நடையை சீர்  படுத்த சொன்னான் ஒருவன்.
மற்றவர்களுக்கா வரைந்து
முடித்த ஓவியத்தில்
முழுமை பெறாமல் ஓவியமும்
ஓவியனின் கனவுகளும்.

Loading

சமூக ஊடகங்கள்

வறுமையும் வலியும்

என்றாவது உணர்ந்து
இருக்கிறீர்களா
பொருளற்று நண்பனை
சந்தித்த குசேலனின்
ஆழ்ந்த  மன வலிகளை.

Loading

சமூக ஊடகங்கள்

பழைய வாசனைகள்

மகள் மறைத்து
வைத்து விளையாடும்
புத்தக மயிலிறகின் விளையாட்டில்
தோன்றி மறைகின்றன
நான் தொலைத்து விட்ட
குழந்தைப்பருவங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

வாழ்விற்குப் பிறகுமான வலிகள்

காலனே,
கொஞ்சம் காலம் கடந்து வா.
புதைப்பதற்கு இடமும் அற்று
எரிப்பதற்கு மின்சாரமும் அற்ற
தேசத்தில் வாழ்கிறோம்.
மானம் கெட்ட தேசத்தில்
வாழ்வு மட்டும் அல்ல
மரணத்திற்கும் பின்னும் வலிதான்.

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!