நீண்ட நாட்களுக்கு பிறகு
மீண்டும் கடவுளுடன் நேசம்.
கழுத்தை திருப்பி கன்னத்திலான
மகளின் முத்தமும்
கவிதையின் தொடக்கத்திற்கான
மனைவியின் தொடர் வார்த்தைகளும்
தொடரக் காரணம் ஏன் என்றேன்.
புனரபி ஜனனம் புனரபி மரணம்
என்று கூறி இடம் அகன்றார்.
![]()
உருவேறத் திருவேறும்
ஒரு சிறந்த கணத்தில்
நிலம் பெறப்பட்டது.
கட்டிடம் உருவானது
கணப் பொழுதுகளில்.
அனைத்து பொழுதுகளிலும்
உறவினர் கூட்டம்.
களித்த பொழுதுகளையும்
கவிதை பொழுதுகளையும்
சந்தித்தது அவ்வீடு.
கால மாற்றத்தில்
கரைந்தன காரை சுவர்கள்.
நீண்ட நெடும் பயணத்திற்கு பிறகு
வீட்டின் சுவாசம்
அண்டப் பெருவெளியில்.
காலத்தின் சாட்ஷியாக
கனவுகளையும் கவிதைகளையும்
சுமந்து அவ்வீடு.
![]()
நீண்ட நாட்களுக்குப் பின்
நண்பர்களுடன் சந்திப்பு நிகழ்ந்தது.
வாழ்க்கை குறித்த எண்ணங்கள்.
நல்ல உணவிற்காக வாழ்கிறேன்
என்றான் ஒருவன்.
போகங்களை அனுபவிற்பதற்காக வாழ்கிறேன்
என்றான் ஒருவன்.
பொருள் ஈட்ட வாழ்கிறேன்
என்றான் ஒருவன்.
கற்று தெளிவதற்காக வாழ்கிறேன்
என்றான் ஒருவன்.
இறப்பதற்காக வாழ்கிறேன்
என்றான் ஒருவன்.
பதில் பெற்ற பொழுதுகளில்
கொப்பு விட்ட குரங்காய் மனமும் நானும்.
![]()
ஒரு முறை
எனக்கும் கடவுளுக்குமான
போட்டி சந்தோஷங்களை
பட்டியலிடுவதில் நிகழ்ந்தது.
தீர்ப்பு வழங்க சரசவாணி.
முதியவர்கள் உணவகங்களில்
ரசித்து உண்ணும் உணவானது,
தனது மகளின் முதல்
மூக்குத்தி அனுபவத்தை
அனுபவிக்கும் தாய்.
இசையை அனுபவிக்கும்
வாலிபனின் மனம்.
பட்டியல் தொடரவா என்று கூறி
வாய்பினை எனக்கு தந்தார்.
இரவின் கடைப் பொழுதுகளில்
வீடு திரும்புகையில்
விழித்திருந்து கன்னத்தில் கொடுக்கப்படும்
கடையவளின் முத்தமும்
காயத நினைவுகளும் என்றேன்.
சரசவாணியின் சிரிப்பு யாரை நோக்கி?
![]()