மகராப் பிரியை

எல்லா அப்பாக்களுக்கும்
தெரிந்துவிடுகிறது
எவரும் அறியாமல்
மகளைக்  மட்டும்
ரகசியமாய் காதலிக்க.

மகராப் பிரியை * – அம்பாள் நாமாவளி 

Loading

சமூக ஊடகங்கள்

நான் தொலைதல்

நீ, கிளி பொம்மையை வாங்கி
அதை பறக்க விட முற்பட்ட தருணங்களில்
தொலைந்திருந்தது
எனது இளமைக் காலங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

நீர்ப்பறவை

எவர் அறியக்கூடும்
மகளை அடித்த பிறகு
நீண்ட நேரம்
மௌனமாய் அழும்
தந்தையின் வலிகளை

Loading

சமூக ஊடகங்கள்

மனக் குறுக்கம்

உனக்கான பள்ளி வாகனத்தில்
தலையில் மல்லிகையின் வாசத்தோடு நீ.
எப்படி அழுது கொண்டு செல்வாயோ
என்ற நினைவோடு நான்.
வாகனத்தில் ஏறி தலையை வெளியே
தலையை நீட்டி கூறுகிறாய்.
‘நாளைக்கு யாத்திரி சொன்ன கதை மாதிரியே
இன்னைக்கும் சொல்லனும்’ என்கிறாய்.
நகர்ந்து செல்கிறது வாகனம்
நகராமல் இருக்கிறது நினைவுகள்.

Loading

சமூக ஊடகங்கள்

வார்த்தைகளின் ரசவாதம்

நீண்ட நாட்களுக்கான பிறகான
உரையாடலில் சந்தோஷம் பிறந்தது.
‘சாமி கொடுத்த வரம்’ நீ என்கிறேன்.
‘சாமி கண்ணத்தான் குத்தும்-
ன்னு அம்மா சொன்னாள்’ என்கிறாய்.
வரம் கொடுத்த தெய்வம்
வார்த்தைகளை இரைத்தலில்
வசமாகிப் போனது இதயம்.













Image – Internet

Loading

சமூக ஊடகங்கள்

தகப்பனின் சூல்

இரவினை இனிமையாக்க
ஒரு கதை சொல்வதாக ஆரம்பிக்கிறாய்.
‘ஒரு ஊர்ல ஒரு அம்மா அப்பாவாம்,
அவங்களுக்கு ஒரு குட்டிப் பொண்ணாம்,
அது ரொம்ப சமத்தாம்’
என்று கூறிப் புன்னைக்கிறாய்.
சூல் கொள்கிறது என் நினைவுகள்.

Loading

சமூக ஊடகங்கள்

லீலாவினோதினி

உணவுப் பரிமாற்றத்தில்
நடக்கிறது ஒரு உணர்வு பரிமாறம்.
‘ஒங்க அப்பன் பாட்டு எழுதறேன்னு
திரிறான். ஒழுங்கா திங்கச் சொல்லு’
என்கிறாள் உன் அன்னை.
‘அப்படீன்னா பாபா ப்ளாக்ஷீப் கூட தெரியுமா’
என்கிறாய்.
தொட்டுவிடம் தூரத்தில் சொர்க்கம்.

Loading

சமூக ஊடகங்கள்

இரவுகளின் நீட்சிமை

சுவற்றின் கூரையினில் ஒட்டியிருக்கும்
நட்சத்திரங்களைப் பார்த்தபடி
எனக்கு குளிர்காலம் மிகவும் பிடிக்கும் என்கிறாய்.
வியப்பினால் விழிகள் விரிவடைகின்றன எனக்கு
‘ஒரு போர்வையினில் செல்ல அப்பாவைக்
கட்டிக் கொண்டு தூங்கலாம் அல்லவா’
என்கிறாய்.
அன்று நீட்சிமை கொண்டது எனக்கான இரவு.

Loading

சமூக ஊடகங்கள்

மகா மாயா

‘ஏன் இப்பொழுது மழை
அடிக்கடி பெய்வதில்லை’ என்கிறாய்.
வினாக்களோடு என் விழிகள் உயர்வடைகின்றன.
‘காகிதக்கப்பல் செய்யக் கற்றுக் கொண்டேன்.
விடுவதற்கு நீர் வேண்டும்’ என்று
விழி நீரை இறைக்கிறாய்.
வெப்ப சலனத்தில் இடம் மாறுகின்றன
சந்தோஷ நீர் ஓடைகள் வாழ்வின் முழுமைக்கும்.

Loading

சமூக ஊடகங்கள்

யாத்திரை

மகள்
பாதி உறக்கத்தில்
விட்டுச் சென்ற
இரவு நேர கதைகளுக்காக
‘ம்’ சொல்ல காத்திருக்கின்றன
பொம்மைகள்.

Image – Internet

Loading

சமூக ஊடகங்கள்

காத்திருத்தலின் வலி

மகளின் எச்சிலால் ஆன
ஈர தலையனைகள்
நினைவூட்டுகின்றன,
நானும் ஓரு குழந்தையின்
சராசரி தந்தை என்று.

Loading

சமூக ஊடகங்கள்

கலைடாஸ்கோப்

களைப்போடு வீட்டிற்குள் நான்.
இரண்டு முறை சுற்றி வந்து
காற்றில் கைகளை மூடி
‘என்ன இருக்கிறது தெரியுமா’ என்று
என் கைகளை விரிக்க சொல்கிறாய்.
வினாக்களோடு விடுபடுகின்றன கைகள்.
பெரிய வண்ணத்துப் பூச்சியும்,
சில சிறிய வண்ணத்துப் பூச்சிக் கூட்டமும் என்கிறாய்.
வண்ணத்துப் பூச்சிகளின் இடமாறுதலில் தெரிகிறது,
நான் தொலைத்து விட்ட குழந்தைப் பருவங்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

மழை பெய்யும் காலம்

மழையினின் நனைந்து
வீட்டிற்குள் நுழைகிறேன்.
‘குடை எடுத்து போகமாட்டாயா’
என்று  கூறி
எனக்கே எனக்காக
வீட்டிற்குள் குடை பிடிக்கிறாய்.
மழை இடம் மாறி கண்ணுக்குள்.

Loading

சமூக ஊடகங்கள்

லோபாமுத்ரா

எல்லா அப்பாக்களுக்கும் தெரிந்துவிடுகிறது
மனைவியின் வார்த்தைகளை மறுதலித்தாலும்
மகளின் வார்த்தைகளை மறுக்க முடியாமல்
திணறுவதையும் அதன் பொருட்டான
சந்தோஷ தோல்விகளும்.

Loading

சமூக ஊடகங்கள்

விடுமுறை

உனக்கான பள்ளி                    விடுமுறை நாட்களில்
முத்தங்கள் இன்றி
காய்ந்து கிடக்கின்றன                     எனது கன்னங்கள்,
காயாமல் கிடக்கின்றன                  எனது நினைவுகள்.

Loading

சமூக ஊடகங்கள்

கதைக்கூற்று

அப்பா உனக்கு ஒரு திகில் கதை
சொல்லப் போகிறேன் என்கிறாய்.
திகைக்கும் எனது எண்ணம் தாண்டி
கதையை தொடங்குகிறாய்.
ஒரு ஊர்ல ஒரு அம்மா அப்பாவாம்.
அம்மா ஊமச்சியாம்
அப்பா செவிடனாம்.
என் இதழ் வழி வழியும்
புன்னகைக்கான காரணம் தெரியாமல் விழிக்கிறாய்.

Loading

சமூக ஊடகங்கள்

பிறந்தநாள் பரிசு

உன் பிறந்த நாளில்
என்ன தருவாய் என்கிறாய்.
கண்ணீரின் கனம் அடக்கி
எது வேண்டுமானாலும்  
என்பதை மாற்றி
முத்தம் என்கிறேன்.
பரவாயில்லை என்று வார்த்தைகளை
சிந்துகிறாய்.
வார்த்தைகளின் முடிவில்
அடங்கிய கனம் தாளாமல்
இதயத்திற்குள் இமயம்.

Loading

சமூக ஊடகங்கள்

தொடரும் என் ஜன்மங்கள்

ஒரு விடியலுக்கான
முன் இரவினின் கண் விழித்து
பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்லி
உனக்காக வீடும் காரும் வாங்கி
தருகிறேன் ஆனால் சில வருடம் கழித்து
என்று கூறி புன்னகைக்கிறாய்.
இமைகளில் பட்டுத் தெரிக்கும்
நீரினில் கரைகின்றன
தொடரும் என் ஜன்மங்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

ஆத்ம நிவேதனம்

உறங்க துவங்கும்
வினாடியில்
பிஞ்சு விரல்களால் என் மேல் எழுதி
என்ன எழுதினேன் என்கிறாய்.
சொர்க்கம் என்றேன்.
நீ விழித்த விழிப்பில்
பல ஜன்மங்களை நிறைவாக வாழ்ந்த
தந்தைகளின் வரிசையில்
முதன்மையாக நான்.

Loading

சமூக ஊடகங்கள்

பழைய வாசனைகள்

மகள் மறைத்து
வைத்து விளையாடும்
புத்தக மயிலிறகின் விளையாட்டில்
தோன்றி மறைகின்றன
நான் தொலைத்து விட்ட
குழந்தைப்பருவங்கள்

Loading

சமூக ஊடகங்கள்