![]()
Category: இளமைகள்
ஏமாப்பு
ஸகுண உபாசனை
நேர் எதிரில் முழு நிலா
நம் இருவருக்கும் எதிரில்.
பெரியதும் சிறியதுமான
கடல் அலைகள்
ஒன்றைத் தழுவி ஒன்று.
மணலை கைகளில் எடுத்து
குவித்து மீண்டும்
மணலில் விடுகிறாய்.
மெல்லிய காற்று
நம் இருவரையும் தொட்டுச் செல்கிறது
பேச்சை தொடவும் தொடரவும்
விரும்புகிறேன்.
உன்னைத் தழுவிச் செல்லும் காற்று
இடமிருந்து வலமாக
என்னைத் தழுவிச் செல்கிறது என்கிறேன்.
‘காற்றுக்கு ஏது இடமும் வலமும்’ என்கிறாய்.
பிறிதொன்றான தருணங்களில்
நாபிச் சொற்கள்
ஒன்றுகின்றன நாதத்தில்.
ஸகுண உபாசனை – இறைவனுக்கு உகந்த குணங்களை அறிந்து, இறை நம்மை அறிந்த உடன் அந்த குணங்களால் இறைமையை உபாசனை செய்யும் முறை.
புகைப்படம் : HarishKumar
புகைப்படம் : HarishKumar
![]()
ஆதி வீடு
திருவடி சார்பு
வெண்நிற மேகங்களுக்கு இடையில்
பால் நிலா சென்று மறைகிறது.
யாருமற்ற கடல் பரப்பிற்கு அருகினில்
நம் விளையாட்டுகள் தொடர்கின்றன.
நீ நீராகிறாய்
நானும் நீராகி உன்னைத் தொடர்கிறேன்.
நீ நிலமாகிறாய்
நானும் நிலமாகி உன் பாதம் தொடுகிறேன்.
நீ காற்றாகிறாய்
நானும் காற்றாகி உன்னைத் தொடர்கிறேன்.
நீ கனலாகிறாய்
நானும் கனலாகி உன்னைத் தொடர்கிறேன்.
நீ ஆகாயமாகிறாய்
நானும் ஆகாயமாகி உன்னைத் தொடர்கிறேன்.
பிறிதொரு காலங்களில்
மௌனத்தில் ஒன்றுகிறது
உன் கொலுசின் ஒலி
பிரபஞ்சத்தின் துடிப்புகள்
அடங்
கு
கின்
ற
ன.
ஓவியம் : Sumitha Sundaram
![]()
புறம் அறுத்தல்
விண் நோக்கி விழி வைத்து இருக்கும்
யாசகம் விரும்பா
யாசகன் ஒருவனை சந்தித்தேன்.
சிந்தனைகள் அற்று
நாணயம் ஒன்றை ஈகிறேன்.
பார்வையினில் பெரும் மாற்றங்கள் இல்லை.
சில நாணயங்களை ஈகிறேன்.
பார்வையினில் பெரும் மாற்றங்கள் இல்லை.
சில காகித நோட்டுக்களை ஈகிறேன்.
பார்வையினில் பெரும் மாற்றங்கள் இல்லை.
மதிப்பு மிக்க காகித நோட்டுக்களை ஈகிறேன்.
பார்வையினில் பெரும் மாற்றங்கள் இல்லை.
வியப்பால் எனக்கான சிந்தனைகள் விரிகின்றன.
‘பொருள் வரின் மகிழ்வில்லையா’ என்கிறேன்.
‘யாசகனுக்கு எதிலும் எப்பொழும் மகிழ்வு தான்’ என்கிறான்.
உயிரின் ஒலி அடங்கும் காலம் உடலில்
புகைப்படம் : SL Kumar
![]()
ஓய்வுறுதல்
சேதித்தல்
அடர்ந்த பெருங்காடு ஒன்றில்
பயணப்பட முற்படுகிறேன்.
சில மரங்களும் கொடிகளும்
பேசத் துவங்கி பின் தொடர்கின்றன.
சில மரங்களின் இலைகள் துளிர் விட ஆரம்பித்து இருகின்றன.
சில மரங்கள் பூத்து இருக்கின்றன.
சில மரங்கள் காய்ந்து இருக்கின்றன.
சில மரங்கள் வேரோடு சாய்ந்து இருக்கின்றன.
‘காண இயலா பெரும்காடு
கடந்திடவும் வழியில்லை
திரும்பி செல்லவும் காலமில்லை‘ என்கின்றன.
‘காலம் கடந்தவன்‘ என்கிறேன்
‘பயணப்பட்டுஎதைக் காண விழைகிறாய்‘ என்கின்றன.
‘பயணமே என் பணி‘ என்கிறேன்.
‘எங்கள் வாக்கினை மறுதலித்தவர்கள்
எங்களில் ஒருவராகி விடுவார்‘ என்கின்றன.
‘மௌனத்தில்வெற்றி கிட்டுவதில்லை‘
என்று கூறி பாதங்களை மாற்றி பதிய வைக்கிறேன்.
வெளிர் பச்சை நிற கொடி ஒன்று
என் கால்களை சுற்றத் துவங்குகிறது.
பின் தொடர்கின்றன கொடிகளும், மரங்களும்.
பிறிதொரு நாளில்
மற்றொருவன் பெரும் காட்டில்
பயணப்பட எத்தனிக்கிறான்.
அப்போது
மரங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகமாகி இருந்தது.
*சேதித்தல் – வெட்டுதல் – திருவந்தியார்மெய்கண்ட சாத்திரம்
புகைப்படம் : Karthik Pasupathi
புகைப்படம் : Karthik Pasupathi
![]()
தரித்தல்
மீதானப் பெருவெளி
மருத நில மொன்றில்
மனிதன் ஒருவன் எதிர்ப்படுகிறான்.
கருத்த மேனியுடன்
ஆடைகளும் கறுத்து காணப்படுகிறது.
பல ருத்ராட்ஷ மாலைகளில்
ஒன்று மட்டும் மிகவும் கருமை நிறமுடையதாய்.
ஸ்னேகமாய் புன்னைக்கிறான்.
கைகளை யாசிப்பது போல்
குவிக்கச் சொல்கிறான்.
தன் கைகளில் இருக்கும் நீரை
என் கைகளில் இடுகிறான்.
வெண்நிற மேகங்கள்
நீரில் பிரதிபலிக்கின்றன.
கைகளில் இருப்பது ‘நீரா அல்லது ஆகாயமா’ என்கிறான்.
விடை பகர துவங்குகையில்
தூரத்தில் நாய்கள் விளையாடத்
துவங்கி இருக்கின்றன.
மீதானப் பெருவெளி – ஞெயம் அளக்கப்படு பொருள்
புகைப்படம் : இணையம்
![]()
அகளம்
மேலாம் எழுத்து
பஞ்ச பூத கவிதை வரிசையில் – நெருப்பு
காலத்தின் சுழற்சியில்
நான் என்னில் இருந்து விலகுகிறேன்.
உடல் மட்டும் பிரகாசமாய் நெருப்பில்
எரிந்து கொண்டு இருக்கிறது.
தோழமையாய் ஒரு பேச்சினை
தொடங்குகிறது ஆதி நெருப்பு.
சுற்றிலும் மணி ஓசைகள் ஒலிக்கின்றன
‘உன் உருவாக்கத்திற்கு காரணம் நானே
என்னில் புனிதப்படாதவை எதுவும் இல்லை’ என்கிறது
சுற்றிலும் தாள வாத்தியங்கள் ஒலிக்கின்றன.
‘ஆதி பசியினை நீ அறிவாயா,
நெற்றிக்குள் சுடர் கொண்டவன்
இன்னுமா நீ அறியவில்லை என்கிறது
சுற்றிலும் வண்டுகள் ஒலிக்கின்றன.
பொருள்களை தூய்மை செய்வது என் பொருப்பு.
உலகப் பொருள்களில் நீ இருப்பதால் நீயும் என் பொருப்பு என்கிறது.
சுற்றிலும் சங்க நாதம் தொடர்கிறது.
இடம் பெயர்தலில் என் பங்கு முக்கியமானது என்கிறது.
சுடர் அடங்க தொடங்குகிறது.
தொடர்கிறது பிரணவ கார ஒலி.
முற்றுப் பெறுகிறது நீண்ட நெடும் பயணம்.
தொடங்குகிறது புதிய விதிமுறைகளுடன்
ஆட்டம் ஒன்று.
* மேலாம் எழுத்து – பரநாத ஒலி – திருமந்திரம் – 1212
புகைப்படம் : Virtualcitizen India
![]()
இறைச் சார்பு
உவாதி
பிஞ்சுக் கைகளால்
ரோஜாப் பூ ஒன்றினை
வரைந்து முடிக்கிறாய்.
பின் வரும் நிமிடங்களில்
அழத் தொடங்குகிறாய்.
காரணம் வினவுகிறேன்.
பூக்கள் வாசனை அற்று இருக்கின்றன என்கிறாய்.
மகளின் வார்த்தைகளின் முடிவில்
தொட்டுத் திரும்புகிறது
எனது இளமைக் காலங்கள்.
*உவாதி – த்யானிப்பவன். திருமந்திரம் – 1202
வடிவ அமைப்பு : சம்யுக்தா செந்தில்
![]()
பரப்பினன்
பஞ்ச பூத கவிதை வரிசையில் – காற்று
கனத்த மௌனம் கொண்ட
நிமிடம் ஒன்றில்
உடல் தழுவி சென்றது காற்று.
மெல்லிய குரலில் அவைகள்
பேசிக் கொள்ளத் துவங்கின.
‘நீ யார்’ என்கிறேன்.
‘நானே நீ. நான் அற்று நீ ஏது’ என்கிறது.
‘இது நாள் வரை அறியவில்லை உன்னை’ என்கிறேன்.
‘அறியப்படாததால் நான் அற்று நீயா’ என்கிறது.
‘உனக்கும் எனக்குமான உறவு
தொப்புள் கொடி உறவு’ என்கிறது
‘கனமற்று இருப்பதால் உங்களை அறிய முடியவில்லையா’ என்கிறேன்.
கணமற்று இருப்பதால் தானே அறிகிறாய் என்கின்றன.
‘யாவரும் உங்களை அறிவார்களா,
அறியும் தருணம் எது’ என வினாக்கள் விரைகின்றன.
தொலை தூர மயான காற்றில்
கலந்திருக்கிறது பிண வாடைகள்.
* பரப்பினன் – பரப்பினள் என்பதன் ஆண்பால் – ஞானிகளால் ஆராயப்பெற்ற பரந்த இடமாக விளங்குபவன், திருமந்திரம் – 1070
புகைப்படம் – இணையம்
![]()
அடையாளம்
பரவாதனை
மிகவும் சிறியதான உணவகத்தில்
விலைப் பட்டியல் பார்த்து
‘ஒரு சிங்கில் பூரி‘ என்கிறான் ஒருவன்.
அவனுக்கு ‘ஒரு பூரி செட்டும் ஒரு தோசையும்‘ என்கிறான்
அவன் நண்பன்.
இமை விலகா அவன் விழிநீரின் ஒசைகள்
என் காதுகளில் மட்டும்.
நிகழ்வு பற்றி எதுவும் அறியாமல்
விரைந்து செல்கிறது ‘ஆடி‘ காரொன்று.
*பரவாதனை – பரவாசனை – எல்லாம் சக்திமயமாக உணர்தல் – திருமந்திரம் 1174
புகைப்படம் : Karthik Pasupathi
![]()
அரவான்
காலங்களை ஒத்து
ஈரமாக இருக்கிறது நினைவுகள்.
எப்போதோ எவராலோ
உரைக்கப்பட்ட வார்த்தைகளை
நீ உணராமல் உரைத்திருக்கலாம்.
அப்போது நான் மட்டுமே அறிந்த
மௌனத்தின் உப்பு சுவைவை
நீ அறியாமல் இருக்கலாம்.
பிறிதொரு நாளில்
மீன் விற்பவளின் கைகளில் இருக்கும்
விசிறி காகிதமாய் அலைகின்றன உன் நினைவுகள்.
காகித விசிறிக்கா கட்டுப்படும் ஈக்கள்?
* அரவான் – மஹா பாரதப் போருக்கு முன் பலி கொடுக்கப்பட்ட மாபெரும் வீரன்
புகைப்படம் : R.s.s.K Clicks
![]()
தொடர் ஊர்வலம்
பிணங்களோடு எறியப்படும்
அன்று பூத்த பூக்களின் அடுத்த நிலை
என்னவாக இருக்கக் கூடும்?
புகைப்படம் : Ulaganathan Muthukumarasamy
![]()
மனோ மௌனம்
வாழ்வுக் கனவுகளில்
விழு திறக்க எத்தனிக்கிறேன்.
‘ஓடு, ஓடு, பூதம் வருகிறது‘ என்கிறாய்
உன் தேமதுரக் குரலால்.
வியப்பால் விழுகளை உருட்டி
‘எங்கே,எங்கே’ என்கிறேன்.
‘நான் தான் பூதம்
என்னைத் தெரியவில்லையா’
என்று கள்ளப் புன்னகை சிந்துகிறாய்
தேவதைகள் பூதங்களாய்
வேஷமிட்டு வரும் காலமிது.
மனோ மௌனம் – இறை தன்மையை கர்ப்பத்தில் அனுபவித்த நிலை
![]()



















